< Leviticus 3 >
1 “‘Bí ọrẹ ẹnìkan bá jẹ́ ọrẹ àlàáfíà, tí ó sì mú ẹran wá láti inú agbo màlúù yálà akọ tàbí abo, kí ó mú èyí tí kò ní àbùkù wá síwájú Olúwa.
௧“ஒருவன் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் பசுவானாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதை யெகோவாவுடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.
2 Kí ó gbé ọwọ́ rẹ̀ lé e lórí, kí ó sì pa á ní ẹnu-ọ̀nà àgọ́ àjọ. Nígbà náà ni àwọn ọmọ Aaroni tí í ṣe àlùfáà yóò wọ́n ẹ̀jẹ̀ ẹran náà yí pẹpẹ ká.
௨அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
3 Láti ara ọrẹ àlàáfíà ni kí ẹni náà ti mú ẹbọ tí a fi iná sun sí Olúwa, gbogbo ọ̀nà tí ó bo nǹkan inú ẹran náà àti gbogbo ọ̀rá tí ó so mọ́ wọn.
௩பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும்,
4 Kíndìnrín méjèèjì pẹ̀lú ọ̀rá ara rẹ̀ tí ń bẹ lẹ́bàá ìhà rẹ̀, àti gbogbo ọ̀rá tí ó bo ẹ̀dọ̀, kí ó yọ ọ́ jáde pẹ̀lú kíndìnrín.
௪இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக.
5 Nígbà náà ni àwọn ọmọ Aaroni yóò sun ún lórí pẹpẹ gẹ́gẹ́ bí ẹbọ sísun tí a fi iná sun, àní òórùn dídùn sí Olúwa.
௫அதை ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின் நெருப்பிலுள்ள கட்டைகளின்மேல் வைக்கப்பட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மேல் போட்டு எரிக்கக்கடவர்கள்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.
6 “‘Bí ó bá ṣe inú agbo ewúrẹ́ àti àgùntàn ni ó ti mú ọrẹ àlàáfíà wá fún Olúwa kí ó mú akọ tàbí abo tí kò ní àbùkù.
௬“அவன் யெகோவாவுக்குச் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதைச் செலுத்துவானாக.
7 Bí ó bá ṣe pé ọ̀dọ́-àgùntàn ni ó mú, kí ó mú un wá síwájú Olúwa.
௭அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து,
8 Kí ó gbé ọwọ́ rẹ̀ lé e lórí, kí ó sì pa á níwájú àgọ́ ìpàdé, kí àwọn ọmọ Aaroni wọ́n ẹ̀jẹ̀ ẹran náà yí pẹpẹ ká.
௮தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
9 Kí o sì mú wá nínú ẹbọ àlàáfíà náà, fún ẹbọ tí a fi iná ṣe sí Olúwa; ọ̀rá rẹ̀ àti gbogbo ìrù rẹ̀ tí ó ní ọ̀rá, òun ni kí o mú kúrò súnmọ́ egungun ẹ̀yìn àti ọ̀rá tí ó bo ìfun lórí; àti gbogbo ọ̀rá tí ń bẹ lára ìfun.
௯பின்பு அவன் சமாதானபலியிலே அதின் கொழுப்பையும், நடு எலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும் அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
10 Kíndìnrín méjèèjì pẹ̀lú ọ̀rá tí ń bẹ lẹ́bàá ìhà rẹ̀ àti ọ̀rá tí ó bo ẹ̀dọ̀, kí o yọ ọ́ jáde pẹ̀lú kíndìnrín.
௧0இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
11 Kí àlùfáà sun ún lórí pẹpẹ bí oúnjẹ ọrẹ tí a fi iná sun sí Olúwa.
௧௧அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்குச் செலுத்தும் தகன ஆகாரம்.
12 “‘Bí ó bá ṣe pé ewúrẹ́ ni ó mú, kí ó mú un wá síwájú Olúwa.
௧௨“அவன் செலுத்துவது வெள்ளாடாக இருக்குமானால், அவன் அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து,
13 Kí ó gbé ọwọ́ lé e lórí. Kí ó sì pa á ní iwájú àgọ́ ìpàdé. Nígbà náà ni àwọn ọmọ Aaroni yóò wọ́n ẹ̀jẹ̀ ẹran náà yí pẹpẹ ká.
௧௩அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
14 Lára ọrẹ tó mú wá, kí ó mú ẹbọ sísun fún Olúwa, gbogbo ọ̀rá tí ó bo nǹkan inú rẹ̀ àti ohun gbogbo tó so mọ́ ọn.
௧௪அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள் மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும்,
15 Kíndìnrín méjèèjì pẹ̀lú ọ̀rá ara rẹ̀ tí ń bẹ lẹ́bàá ìhà rẹ̀ àti ọ̀rá tí ó bo ẹ̀dọ̀, kí ó yọ ọ́ jáde pẹ̀lú kíndìnrín.
௧௫இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
16 Kí àlùfáà sun ún lórí pẹpẹ bí oúnjẹ, ọrẹ tí a fi iná sun, ní òórùn dídùn. Gbogbo ọ̀rá rẹ̀ jẹ́ ti Olúwa.
௧௬ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளை எரிக்கக்கடவன்; இது நறுமண வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் யெகோவாவுடையது.
17 “‘Èyí jẹ́ ìlànà láéláé fún àwọn ìran tó ń bọ̀, ní gbogbo ibi tí ẹ bá ń gbé, ẹ kò gbọdọ̀ jẹ ọ̀rá tàbí ẹ̀jẹ̀.’”
௧௭கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் சாப்பிடக்கூடாது; இது உங்களுடைய குடியிருப்புகள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருக்கும் என்று சொல் என்றார்.