< Leviticus 2 >
1 “‘Bí ẹnìkan bá mú ọrẹ ẹbọ ohun jíjẹ wá fún Olúwa ọrẹ rẹ̀ gbọdọ̀ jẹ́ ìyẹ̀fun dáradára, kí ó da òróró sí i, kí o sì fi tùràrí sí i,
௧“ஒருவன் உணவுபலியாகிய காணிக்கையைக் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டுமானால், அவனுடைய காணிக்கை மெல்லிய மாவாக இருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் ஊற்றி, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு,
2 kí ó sì gbé lọ fún àwọn ọmọ Aaroni tí í ṣe àlùfáà. Àlùfáà yóò bu ẹ̀kúnwọ́ kan nínú ìyẹ̀fun àti òróró náà, pẹ̀lú gbogbo tùràrí kí ó sì sun ún gẹ́gẹ́ bí ẹbọ ìrántí lórí pẹpẹ, ọrẹ tí a fi iná ṣe, àní òórùn dídùn sí Olúwa.
௨அதை ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் நன்றியின் அடையாளமாக எரிக்கக்கடவன்; அது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.
3 Ìyókù nínú ọrẹ ohun jíjẹ náà jẹ́ ti Aaroni àti àwọn ọmọ rẹ̀, ó jẹ́ ìpín tí ó mọ́ jùlọ nínú ọrẹ tí a fi iná sun sí Olúwa.
௩அந்த உணவுபலியில் மீதியாக இருப்பது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.
4 “‘Bí ẹ bá mú ọrẹ ohun jíjẹ, èyí tí a yan lórí ààrò iná, kí ó jẹ́ ìyẹ̀fun kíkúnná dáradára, àkàrà tí a ṣe láìní ìwúkàrà, tí a sì fi òróró pò àti àkàrà fẹ́lẹ́fẹ́lẹ́ tí a ṣe láìní ìwúkàrà èyí tí a fi òróró pò.
௪“நீ படைப்பது அடுப்பில் சமைக்கப்பட்ட உணவுபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்பட்ட புளிப்பில்லாத அதிரசங்களாகவோ, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளாகவோ இருப்பதாக.
5 Bí ọrẹ ẹbọ rẹ bá jẹ́ inú àwo pẹẹrẹ ni o ti ṣe ohun jíjẹ rẹ, kí ó jẹ́ ìyẹ̀fun dáradára tí a fi òróró pò, kò sì gbọdọ̀ ní ìwúkàrà.
௫நீ படைப்பது அடுப்பில் தட்டையான பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவுபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாக இருப்பதாக.
6 Rún un kí o sì da òróró sí i lórí, ọrẹ ohun jíjẹ ni.
௬அதைத் துண்டுதுண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் ஊற்றுவாயாக; இது ஒரு உணவுபலி.
7 Bí ọrẹ ẹbọ rẹ bá jẹ́ ẹbọ ohun jíjẹ, tí a yan nínú apẹ, ìyẹ̀fun dáradára ni kí o fi ṣè é pẹ̀lú òróró.
௭நீ படைப்பது அடுப்பில் பொரிக்கும் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு பலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக.
8 Mú ọrẹ ohun jíjẹ tí a fi àwọn nǹkan wọ̀nyí ṣe wá fún Olúwa gbé e fún àlùfáà, ẹni tí yóò gbe e lọ sí ibi pẹpẹ.
௮இப்படிச் செய்யப்பட்ட உணவுபலியைக் யெகோவாவுக்குச் செலுத்துவாயாக; அது ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படும்போது, அவன் அதைப் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து,
9 Àlùfáà yóò sì mú ẹbọ ìrántí nínú ọrẹ ohun jíjẹ yìí, yóò sì sun ún lórí pẹpẹ gẹ́gẹ́ bí ọrẹ tí a fi iná sun, àní òórùn dídùn sí Olúwa.
௯அந்த சமைக்கப்பட்ட உணவுபலியிலிருந்து ஆசாரியன் நன்றியின் அடையாளமாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.
10 Ìyókù nínú ọrẹ ohun jíjẹ yìí jẹ́ ti Aaroni àti àwọn ọmọ rẹ̀, ó jẹ́ èyí tí ó mọ́ jùlọ nínú ọrẹ tí a fi iná sun sí Olúwa.
௧0இந்த உணவுபலியில் மீதியானது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது.
11 “‘Gbogbo ọrẹ ohun jíjẹ tí ẹ bá mú wá fún Olúwa kò gbọdọ̀ ní ìwúkàrà nínú, nítorí pé ẹ kò gbọdọ̀ sun ohun wíwú tàbí oyin nínú ọrẹ tí ẹ fi iná sun sí Olúwa.
௧௧“நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எந்த உணவுபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவு உள்ளவைகளையும் தேன் உள்ளவைகளையும் யெகோவாவுக்குத் தகனபலியாக எரிக்கவேண்டாம்.
12 Ẹ lè mú wọn wá fún Olúwa gẹ́gẹ́ bí ọrẹ àkọ́so ṣùgbọ́n ẹ kò gbọdọ̀ mú wọn wá sórí pẹpẹ gẹ́gẹ́ bí òórùn dídùn.
௧௨முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவைகளைக் யெகோவாவுக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகளை நறுமண வாசனையாக எரிக்கக்கூடாது.
13 Ẹ fi iyọ̀ dun gbogbo ọrẹ ohun jíjẹ yín. Ẹ má ṣe aláìfi iyọ̀ májẹ̀mú Ọlọ́run yín sínú àwọn ọrẹ ohun jíjẹ yín, ẹ fi iyọ̀ sí gbogbo ọrẹ yín.
௧௩நீ படைக்கிற எந்த உணவுபலியிலும் உப்பு சேர்க்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் உணவுபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.
14 “‘Bí ẹ bá mú ọrẹ ohun jíjẹ ti àkọ́so oko yín wá fún Olúwa kí ẹ mú ọkà tuntun tí a fi iná yan.
௧௪“முதற்பலன்களை உணவுபலியாக நீ யெகோவாவுக்குச் செலுத்தவந்தால், புதிய பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் உணவுபலியாகக் கொண்டுவரக்கடவாய்.
15 Kí ẹ da òróró lé e lórí, kí ẹ sì fi tùràrí sí i, ó jẹ́ ọrẹ ohun jíjẹ.
௧௫அதின்மேல் எண்ணெய் ஊற்றி அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு உணவுபலி.
16 Àlùfáà yóò sun ẹbọ ìrántí lára ọkà àti òróró náà, pẹ̀lú gbogbo tùràrí gẹ́gẹ́ bí ọrẹ tí a fi iná sun sí Olúwa.
௧௬பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, நன்றியின் அடையாளமான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றுடன் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு செலுத்தும் தகனபலி.