< மாற்கு 16 >
1 ௧ ஓய்வுநாளுக்குப்பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்கு வாசனைத் திரவியங்களை வாங்கிக்கொண்டு.
ಅಥ ವಿಶ್ರಾಮವಾರೇ ಗತೇ ಮಗ್ದಲೀನೀ ಮರಿಯಮ್ ಯಾಕೂಬಮಾತಾ ಮರಿಯಮ್ ಶಾಲೋಮೀ ಚೇಮಾಸ್ತಂ ಮರ್ದ್ದಯಿತುಂ ಸುಗನ್ಧಿದ್ರವ್ಯಾಣಿ ಕ್ರೀತ್ವಾ
2 ௨ வாரத்தின் முதலாம்நாளின் அதிகாலையிலே சூரியன் உதிக்கிறபோது கல்லறைக்கு வந்து,
ಸಪ್ತಾಹಪ್ರಥಮದಿನೇಽತಿಪ್ರತ್ಯೂಷೇ ಸೂರ್ಯ್ಯೋದಯಕಾಲೇ ಶ್ಮಶಾನಮುಪಗತಾಃ|
3 ௩ கல்லறையின் வாசலில் இருக்கிற கல்லை நமக்காக யார் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
ಕಿನ್ತು ಶ್ಮಶಾನದ್ವಾರಪಾಷಾಣೋಽತಿಬೃಹನ್ ತಂ ಕೋಽಪಸಾರಯಿಷ್ಯತೀತಿ ತಾಃ ಪರಸ್ಪರಂ ಗದನ್ತಿ!
4 ௪ அந்தக் கல் மிகவும் பெரிதாக இருந்தது; அவர்கள் பார்த்தபோது, அந்தக் கல் தள்ளப்பட்டிருப்பத்தைப் பார்த்தார்கள்.
ಏತರ್ಹಿ ನಿರೀಕ್ಷ್ಯ ಪಾಷಾಣೋ ದ್ವಾರೋ ಽಪಸಾರಿತ ಇತಿ ದದೃಶುಃ|
5 ௫ அவர்கள் கல்லறைக்குள் சென்று, வெள்ளை அங்கி அணிந்த ஒரு வாலிபன் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பயந்தார்கள்.
ಪಶ್ಚಾತ್ತಾಃ ಶ್ಮಶಾನಂ ಪ್ರವಿಶ್ಯ ಶುಕ್ಲವರ್ಣದೀರ್ಘಪರಿಚ್ಛದಾವೃತಮೇಕಂ ಯುವಾನಂ ಶ್ಮಶಾನದಕ್ಷಿಣಪಾರ್ಶ್ವ ಉಪವಿಷ್ಟಂ ದೃಷ್ಟ್ವಾ ಚಮಚ್ಚಕ್ರುಃ|
6 ௬ அவன் அவர்களைப் பார்த்து: பயப்படாமல் இருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிரோடு எழுந்தார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம்.
ಸೋಽವದತ್, ಮಾಭೈಷ್ಟ ಯೂಯಂ ಕ್ರುಶೇ ಹತಂ ನಾಸರತೀಯಯೀಶುಂ ಗವೇಷಯಥ ಸೋತ್ರ ನಾಸ್ತಿ ಶ್ಮಶಾನಾದುದಸ್ಥಾತ್; ತೈ ರ್ಯತ್ರ ಸ ಸ್ಥಾಪಿತಃ ಸ್ಥಾನಂ ತದಿದಂ ಪಶ್ಯತ|
7 ௭ நீங்கள் அவருடைய சீடர்களிடமும் பேதுருவிடமும்போய்: உங்களுக்கு முன்னே அவர் கலிலேயாவிற்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைப் பார்ப்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
ಕಿನ್ತು ತೇನ ಯಥೋಕ್ತಂ ತಥಾ ಯುಷ್ಮಾಕಮಗ್ರೇ ಗಾಲೀಲಂ ಯಾಸ್ಯತೇ ತತ್ರ ಸ ಯುಷ್ಮಾನ್ ಸಾಕ್ಷಾತ್ ಕರಿಷ್ಯತೇ ಯೂಯಂ ಗತ್ವಾ ತಸ್ಯ ಶಿಷ್ಯೇಭ್ಯಃ ಪಿತರಾಯ ಚ ವಾರ್ತ್ತಾಮಿಮಾಂ ಕಥಯತ|
8 ௮ அவர்கள் பயந்து நடுங்கி, சீக்கிரமாக வெளியே வந்து, கல்லறையைவிட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமல் போனார்கள்.
ತಾಃ ಕಮ್ಪಿತಾ ವಿಸ್ತಿತಾಶ್ಚ ತೂರ್ಣಂ ಶ್ಮಶಾನಾದ್ ಬಹಿರ್ಗತ್ವಾ ಪಲಾಯನ್ತ ಭಯಾತ್ ಕಮಪಿ ಕಿಮಪಿ ನಾವದಂಶ್ಚ|
9 ௯ (note: The most reliable and earliest manuscripts do not include Mark 16:9-20.) வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு உயிரோடு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதலாக தரிசனமானார்.
(note: The most reliable and earliest manuscripts do not include Mark 16:9-20.) ಅಪರಂ ಯೀಶುಃ ಸಪ್ತಾಹಪ್ರಥಮದಿನೇ ಪ್ರತ್ಯೂಷೇ ಶ್ಮಶಾನಾದುತ್ಥಾಯ ಯಸ್ಯಾಃ ಸಪ್ತಭೂತಾಸ್ತ್ಯಾಜಿತಾಸ್ತಸ್ಯೈ ಮಗ್ದಲೀನೀಮರಿಯಮೇ ಪ್ರಥಮಂ ದರ್ಶನಂ ದದೌ|
10 ௧0 அவளிடமிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டுப்போய், இயேசுவுடன் இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கும்போது, அவர்களுக்கு அந்தச் செய்தியைச் சொன்னாள்.
ತತಃ ಸಾ ಗತ್ವಾ ಶೋಕರೋದನಕೃದ್ಭ್ಯೋಽನುಗತಲೋಕೇಭ್ಯಸ್ತಾಂ ವಾರ್ತ್ತಾಂ ಕಥಯಾಮಾಸ|
11 ௧௧ அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவள் இயேசுவைப் பார்த்தாள் என்றும் அவள் சொன்னபோது, இவர்கள் நம்பவில்லை.
ಕಿನ್ತು ಯೀಶುಃ ಪುನರ್ಜೀವನ್ ತಸ್ಯೈ ದರ್ಶನಂ ದತ್ತವಾನಿತಿ ಶ್ರುತ್ವಾ ತೇ ನ ಪ್ರತ್ಯಯನ್|
12 ௧௨ அதற்குப்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்திற்கு நடந்து போகிறபொழுது அவர்களுக்கு வேறு உருவத்தில் தரிசனமானார்.
ಪಶ್ಚಾತ್ ತೇಷಾಂ ದ್ವಾಯೋ ರ್ಗ್ರಾಮಯಾನಕಾಲೇ ಯೀಶುರನ್ಯವೇಶಂ ಧೃತ್ವಾ ತಾಭ್ಯಾಂ ದರ್ಶನ ದದೌ!
13 ௧௩ அவர்களும்போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.
ತಾವಪಿ ಗತ್ವಾನ್ಯಶಿಷ್ಯೇಭ್ಯಸ್ತಾಂ ಕಥಾಂ ಕಥಯಾಞ್ಚಕ್ರತುಃ ಕಿನ್ತು ತಯೋಃ ಕಥಾಮಪಿ ತೇ ನ ಪ್ರತ್ಯಯನ್|
14 ௧௪ அதற்குப்பின்பு பதினொருபேரும் சாப்பிடும்போது அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிரோடு எழுந்திருந்த அவரைப் பார்த்தவர்களை அவர்கள் நம்பாமல் போனதினால் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார்.
ಶೇಷತ ಏಕಾದಶಶಿಷ್ಯೇಷು ಭೋಜನೋಪವಿಷ್ಟೇಷು ಯೀಶುಸ್ತೇಭ್ಯೋ ದರ್ಶನಂ ದದೌ ತಥೋತ್ಥಾನಾತ್ ಪರಂ ತದ್ದರ್ಶನಪ್ರಾಪ್ತಲೋಕಾನಾಂ ಕಥಾಯಾಮವಿಶ್ವಾಸಕರಣಾತ್ ತೇಷಾಮವಿಶ್ವಾಸಮನಃಕಾಠಿನ್ಯಾಭ್ಯಾಂ ಹೇತುಭ್ಯಾಂ ಸ ತಾಂಸ್ತರ್ಜಿತವಾನ್|
15 ௧௫ பின்பு, அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள்.
ಅಥ ತಾನಾಚಖ್ಯೌ ಯೂಯಂ ಸರ್ವ್ವಜಗದ್ ಗತ್ವಾ ಸರ್ವ್ವಜನಾನ್ ಪ್ರತಿ ಸುಸಂವಾದಂ ಪ್ರಚಾರಯತ|
16 ௧௬ விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசிக்காதவனோ தண்டனைக்குள்ளாவான்.
ತತ್ರ ಯಃ ಕಶ್ಚಿದ್ ವಿಶ್ವಸ್ಯ ಮಜ್ಜಿತೋ ಭವೇತ್ ಸ ಪರಿತ್ರಾಸ್ಯತೇ ಕಿನ್ತು ಯೋ ನ ವಿಶ್ವಸಿಷ್ಯತಿ ಸ ದಣ್ಡಯಿಷ್ಯತೇ|
17 ௧௭ விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் என்னவென்றால்: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; புதிய மொழிகளைப் பேசுவார்கள்;
ಕಿಞ್ಚ ಯೇ ಪ್ರತ್ಯೇಷ್ಯನ್ತಿ ತೈರೀದೃಗ್ ಆಶ್ಚರ್ಯ್ಯಂ ಕರ್ಮ್ಮ ಪ್ರಕಾಶಯಿಷ್ಯತೇ ತೇ ಮನ್ನಾಮ್ನಾ ಭೂತಾನ್ ತ್ಯಾಜಯಿಷ್ಯನ್ತಿ ಭಾಷಾ ಅನ್ಯಾಶ್ಚ ವದಿಷ್ಯನ್ತಿ|
18 ௧௮ சர்ப்பங்களை எடுப்பார்கள்; மரணத்திற்குரிய எதைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; நோயாளிகளின்மேல் கரங்களை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சுகமடைவார்கள் என்றார்.
ಅಪರಂ ತೈಃ ಸರ್ಪೇಷು ಧೃತೇಷು ಪ್ರಾಣನಾಶಕವಸ್ತುನಿ ಪೀತೇ ಚ ತೇಷಾಂ ಕಾಪಿ ಕ್ಷತಿ ರ್ನ ಭವಿಷ್ಯತಿ; ರೋಗಿಣಾಂ ಗಾತ್ರೇಷು ಕರಾರ್ಪಿತೇ ತೇಽರೋಗಾ ಭವಿಷ್ಯನ್ತಿ ಚ|
19 ௧௯ இவ்விதமாக கர்த்தர் அவர்களோடு பேசினபின்பு, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார்.
ಅಥ ಪ್ರಭುಸ್ತಾನಿತ್ಯಾದಿಶ್ಯ ಸ್ವರ್ಗಂ ನೀತಃ ಸನ್ ಪರಮೇಶ್ವರಸ್ಯ ದಕ್ಷಿಣ ಉಪವಿವೇಶ|
20 ௨0 சீடர்கள் புறப்பட்டுப்போய், எல்லா இடங்களிலும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்கள் மூலம் கிரியைசெய்து, அவர்களால் நடந்த அற்புத அடையாளங்களினால் வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.
ತತಸ್ತೇ ಪ್ರಸ್ಥಾಯ ಸರ್ವ್ವತ್ರ ಸುಸಂವಾದೀಯಕಥಾಂ ಪ್ರಚಾರಯಿತುಮಾರೇಭಿರೇ ಪ್ರಭುಸ್ತು ತೇಷಾಂ ಸಹಾಯಃ ಸನ್ ಪ್ರಕಾಶಿತಾಶ್ಚರ್ಯ್ಯಕ್ರಿಯಾಭಿಸ್ತಾಂ ಕಥಾಂ ಪ್ರಮಾಣವತೀಂ ಚಕಾರ| ಇತಿ|