< கலாத்தியர் 4 >
1 ௧ பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், வாரிசானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாக இருந்தும், அவன் சிறுபிள்ளையாக இருக்கும் காலம்வரைக்கும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசம் இல்லை.
அஹம்’ வதா³மி ஸம்பத³தி⁴காரீ யாவத்³ பா³லஸ்திஷ்ட²தி தாவத் ஸர்வ்வஸ்வஸ்யாதி⁴பதி: ஸந்நபி ஸ தா³ஸாத் கேநாபி விஷயேண ந விஸி²ஷ்யதே
2 ௨ தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காப்பாளருக்கும் வீட்டு விசாரணைக்காரர்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.
கிந்து பித்ரா நிரூபிதம்’ ஸமயம்’ யாவத் பாலகாநாம்’ த⁴நாத்⁴யக்ஷாணாஞ்ச நிக்⁴நஸ்திஷ்ட²தி|
3 ௩ அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாக இருந்தகாலத்தில் இந்த உலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாக இருந்தோம்.
தத்³வத்³ வயமபி பா³ல்யகாலே தா³ஸா இவ ஸம்’ஸாரஸ்யாக்ஷரமாலாயா அதீ⁴நா ஆஸ்மஹே|
4 ௪ நாம் புத்திரசுவிகாரத்தை அடைவதற்காக நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,
அநந்தரம்’ ஸமயே ஸம்பூர்ணதாம்’ க³தவதி வ்யவஸ்தா²தீ⁴நாநாம்’ மோசநார்த²ம்
5 ௫ காலம் நிறைவேறினபோது, பெண்ணிடத்தில் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
அஸ்மாகம்’ புத்ரத்வப்ராப்த்யர்த²ஞ்சேஸ்²வர: ஸ்த்ரியா ஜாதம்’ வ்யவஸ்தா²யா அதி⁴நீபூ⁴தஞ்ச ஸ்வபுத்ரம்’ ப்ரேஷிதவாந்|
6 ௬ மேலும் நீங்கள் பிள்ளைகளாக இருக்கிறதினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடுவதற்காக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்களுடைய இருதயங்களில் அனுப்பினார்.
யூயம்’ ஸந்தாநா அப⁴வத தத்காரணாத்³ ஈஸ்²வர: ஸ்வபுத்ரஸ்யாத்மாநாம்’ யுஷ்மாகம் அந்த: கரணாநி ப்ரஹிதவாந் ஸ சாத்மா பித: பிதரித்யாஹ்வாநம்’ காரயதி|
7 ௭ ஆகவே, இனி நீ அடிமையாக இல்லாமல் அவருடைய பிள்ளையாக இருக்கிறாய்; நீ அவருடைய பிள்ளையென்றால், கிறிஸ்து மூலமாக தேவனுடைய வாரிசாகவும் இருக்கிறாய்.
அத இதா³நீம்’ யூயம்’ ந தா³ஸா: கிந்து: ஸந்தாநா ஏவ தஸ்மாத் ஸந்தாநத்வாச்ச க்²ரீஷ்டேநேஸ்²வரீயஸம்பத³தி⁴காரிணோ(அ)ப்யாத்⁴வே|
8 ௮ நீங்கள் தேவனை அறியாமல் இருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களாக இல்லாதவர்களுக்கு அடிமைகளாக இருந்தீர்கள்.
அபரஞ்ச பூர்வ்வம்’ யூயம் ஈஸ்²வரம்’ ந ஜ்ஞாத்வா யே ஸ்வபா⁴வதோ(அ)நீஸ்²வராஸ்தேஷாம்’ தா³ஸத்வே(அ)திஷ்ட²த|
9 ௯ இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலன் இல்லாததும் வெறுமையானதுமான அந்த வழிபாடுகளுக்கு நீங்கள் மீண்டும் திரும்பி, மீண்டும் அவைகளுக்கு அடிமைகளாவதற்கு விரும்புகிறது ஏன்?
இதா³நீம் ஈஸ்²வரம்’ ஜ்ஞாத்வா யதி³ வேஸ்²வரேண ஜ்ஞாதா யூயம்’ கத²ம்’ புநஸ்தாநி விப²லாநி துச்சா²நி சாக்ஷராணி ப்ரதி பராவர்த்திதும்’ ஸ²க்நுத²? யூயம்’ கிம்’ புநஸ்தேஷாம்’ தா³ஸா ப⁴விதுமிச்ச²த²?
10 ௧0 நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருடங்களையும் கடைபிடித்து வருகிறீர்களே.
யூயம்’ தி³வஸாந் மாஸாந் திதீ²ந் ஸம்’வத்ஸராம்’ஸ்²ச ஸம்மந்யத்⁴வே|
11 ௧௧ நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாகப் போனதோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.
யுஷ்மத³ர்த²ம்’ மயா ய: பரிஸ்²ரமோ(அ)காரி ஸ விப²லோ ஜாத இதி யுஷ்மாநத்⁴யஹம்’ பி³பே⁴மி|
12 ௧௨ சகோதரர்களே, என்னைப்போல மாறுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலும் ஆனேனே. எனக்கு நீங்கள் அநியாயம் எதுவும் செய்யவில்லை.
ஹே ப்⁴ராதர: , அஹம்’ யாத்³ரு’ஸோ²(அ)ஸ்மி யூயமபி தாத்³ரு’ஸா² ப⁴வதேதி ப்ரார்த²யே யதோ(அ)ஹமபி யுஷ்மத்துல்யோ(அ)ப⁴வம்’ யுஷ்மாபி⁴ ர்மம கிமபி நாபராத்³த⁴ம்’|
13 ௧௩ உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் என்னுடைய சரீர பலவீனத்தினிமித்தம் முதலாம்முறை உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தேன்.
பூர்வ்வமஹம்’ கலேவரஸ்ய தௌ³ர்ப்³ப³ல்யேந யுஷ்மாந் ஸுஸம்’வாத³ம் அஜ்ஞாபயமிதி யூயம்’ ஜாநீத²|
14 ௧௪ அப்படி இருந்தும், என் சரீரத்தில் இருக்கிற பெலவீனம் உங்களுக்கு சோதனையாக இருந்தாலும் நீங்கள் என்னை வெறுக்காமலும், தள்ளிவிடாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும் ஏற்றுக்கொண்டீர்கள்.
ததா³நீம்’ மம பரீக்ஷகம்’ ஸா²ரீரக்லேஸ²ம்’ த்³ரு’ஷ்ட்வா யூயம்’ மாம் அவஜ்ஞாய ரு’தீயிதவந்தஸ்தந்நஹி கிந்த்வீஸ்²வரஸ்ய தூ³தமிவ ஸாக்ஷாத் க்²ரீஷ்ட யீஸு²மிவ வா மாம்’ க்³ரு’ஹீதவந்த: |
15 ௧௫ அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்தபாக்கியம் எங்கே? உங்களுடைய கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கமுடியும் என்றால், அதையும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறேன்.
அதஸ்ததா³நீம்’ யுஷ்மாகம்’ யா த⁴ந்யதாப⁴வத் ஸா க்க க³தா? ததா³நீம்’ யூயம்’ யதி³ ஸ்வேஷாம்’ நயநாந்யுத்பாட்ய மஹ்யம்’ தா³தும் அஸ²க்ஷ்யத தர்ஹி தத³ப்யகரிஷ்யதேதி ப்ரமாணம் அஹம்’ த³தா³மி|
16 ௧௬ நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்கு எதிரியாக ஆனேனோ?
ஸாம்ப்ரதமஹம்’ ஸத்யவாதி³த்வாத் கிம்’ யுஷ்மாகம்’ ரிபு ர்ஜாதோ(அ)ஸ்மி?
17 ௧௭ அவர்கள் வைராக்கியத்தோடு உங்களைத் தேடுகிறார்கள்; ஆனாலும் நல்லமனதோடு அப்படிச் செய்யாமல், நீங்கள் என்னைவிட்டுவிட்டு, அவர்களை வைராக்கியத்தோடு பின்பற்றவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
தே யுஷ்மத்க்ரு’தே ஸ்பர்த்³த⁴ந்தே கிந்து ஸா ஸ்பர்த்³தா⁴ குத்ஸிதா யதோ யூயம்’ தாநதி⁴ யத் ஸ்பர்த்³த⁴த்⁴வம்’ தத³ர்த²ம்’ தே யுஷ்மாந் ப்ரு’த²க் கர்த்தும் இச்ச²ந்தி|
18 ௧௮ நல்லக் காரியத்திற்காக, நான் உங்களோடு இருக்கும்பொழுது மட்டுமில்லை, எப்பொழுதும் வைராக்கியம் கொள்வது நல்லதுதான்.
கேவலம்’ யுஷ்மத்ஸமீபே மமோபஸ்தி²திஸமயே தந்நஹி, கிந்து ஸர்வ்வதை³வ ப⁴த்³ரமதி⁴ ஸ்பர்த்³த⁴நம்’ ப⁴த்³ரம்’|
19 ௧௯ என் சிறுப்பிள்ளைகளே, கிறிஸ்து உங்களுக்குள் உருவாகும்வரைக்கும் உங்களுக்காக மீண்டும் கர்ப்பவேதனைப்படுகிறேன்;
ஹே மம பா³லகா: , யுஷ்மத³ந்த ர்யாவத் க்²ரீஷ்டோ மூர்திமாந் ந ப⁴வதி தாவத்³ யுஷ்மத்காரணாத் புந: ப்ரஸவவேத³நேவ மம வேத³நா ஜாயதே|
20 ௨0 உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறதினால், நான் இப்பொழுது உங்களிடம் வந்து, வேறுவிதமாகப் பேச விரும்புகிறேன்.
அஹமிதா³நீம்’ யுஷ்மாகம்’ ஸந்நிதி⁴ம்’ க³த்வா ஸ்வராந்தரேண யுஷ்மாந் ஸம்பா⁴ஷிதும்’ காமயே யதோ யுஷ்மாநதி⁴ வ்யாகுலோ(அ)ஸ்மி|
21 ௨௧ நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள்.
ஹே வ்யவஸ்தா²தீ⁴நதாகாங்க்ஷிண: யூயம்’ கிம்’ வ்யவஸ்தா²யா வசநம்’ ந க்³ரு’ஹ்லீத²?
22 ௨௨ ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையான பெண்ணுக்கும் மற்றொருவன் சுதந்திரமான பெண்ணுக்கும் பிறந்தவன்.
தந்மாம்’ வத³த| லிகி²தமாஸ்தே, இப்³ராஹீமோ த்³வௌ புத்ராவாஸாதே தயோரேகோ தா³ஸ்யாம்’ த்³விதீயஸ்²ச பத்ந்யாம்’ ஜாத: |
23 ௨௩ அடிமையானவளுக்குப் பிறந்தவன் சரீரத்தின்படி பிறந்தான், சுதந்திரமுள்ளவளுக்குப் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.
தயோ ர்யோ தா³ஸ்யாம்’ ஜாத: ஸ ஸா²ரீரிகநியமேந ஜஜ்ஞே யஸ்²ச பத்ந்யாம்’ ஜாத: ஸ ப்ரதிஜ்ஞயா ஜஜ்ஞே|
24 ௨௪ இவைகள் ஞான அர்த்தம் உள்ளவைகள்; அந்த இரண்டு பெண்களும் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையில் உண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகக் குழந்தைப் பெறுகிறது, அது ஆகார் என்பவள் தானே.
இத³மாக்²யாநம்’ த்³ரு’ஷ்டந்தஸ்வரூபம்’| தே த்³வே யோஷிதாவீஸ்²வரீயஸந்தீ⁴ தயோரேகா ஸீநயபர்வ்வதாத்³ உத்பந்நா தா³ஸஜநயித்ரீ ச ஸா து ஹாஜிரா|
25 ௨௫ ஆகார் என்பது அரபிதேசத்தில் உள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுது இருக்கிற எருசலேமுக்கு அடையாளம்; ஏனென்றால், இவள் தன் பிள்ளைகளோடு அடிமைப்பட்டிருக்கிறாளே.
யஸ்மாத்³ ஹாஜிராஸ²ப்³தே³நாரவதே³ஸ²ஸ்த²ஸீநயபர்வ்வதோ போ³த்⁴யதே, ஸா ச வர்த்தமாநாயா யிரூஸா²லம்புர்ய்யா: ஸத்³ரு’ஸீ²| யத: ஸ்வபா³லை: ஸஹிதா ஸா தா³ஸத்வ ஆஸ்தே|
26 ௨௬ மேலான எருசலேமோ சுதந்திரம் உள்ளவள், அவளே நம்மெல்லோருக்கும் தாயானவள்.
கிந்து ஸ்வர்கீ³யா யிரூஸா²லம்புரீ பத்நீ ஸர்வ்வேஷாம் அஸ்மாகம்’ மாதா சாஸ்தே|
27 ௨௭ அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, மகிழ்ச்சியாக எழும்பி ஆர்ப்பரி; கணவன் உள்ளவளைவிட மலடியான பெண்ணுக்கே அதிக பிள்ளைகள் உண்டு என்று எழுதியிருக்கிறது.
யாத்³ரு’ஸ²ம்’ லிகி²தம் ஆஸ்தே, "வந்த்⁴யே ஸந்தாநஹீநே த்வம்’ ஸ்வரம்’ ஜயஜயம்’ குரு| அப்ரஸூதே த்வயோல்லாஸோ ஜயாஸ²ப்³த³ஸ்²ச கீ³யதாம்’| யத ஏவ ஸநாதா²யா யோஷித: ஸந்ததே ர்க³ணாத்| அநாதா² யா ப⁴வேந்நாரீ தத³பத்யாநி பூ⁴ரிஸ²: || "
28 ௨௮ சகோதரர்களே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாக இருக்கிறோம்.
ஹே ப்⁴ராத்ரு’க³ண, இம்ஹாக் இவ வயம்’ ப்ரதிஜ்ஞயா ஜாதா: ஸந்தாநா: |
29 ௨௯ ஆனாலும் சரீரத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது.
கிந்து ததா³நீம்’ ஸா²ரீரிகநியமேந ஜாத: புத்ரோ யத்³வத்³ ஆத்மிகநியமேந ஜாதம்’ புத்ரம் உபாத்³ரவத் ததா²து⁴நாபி|
30 ௩0 அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுதந்திரமுள்ளவளுடைய மகனோடு வாரிசாக இருப்பதில்லை; ஆகவே, அடிமையானவளையும், அவளுடைய மகனையும் வெளியே தள்ளு என்று சொல்லுகிறது.
கிந்து ஸா²ஸ்த்ரே கிம்’ லிகி²தம்’? "த்வம் இமாம்’ தா³ஸீம்’ தஸ்யா: புத்ரஞ்சாபஸாரய யத ஏஷ தா³ஸீபுத்ர: பத்நீபுத்ரேண ஸமம்’ நோத்தராதி⁴காரீ ப⁴விய்யதீதி| "
31 ௩௧ இப்படியிருக்க, சகோதரர்களே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாக இல்லாமல், சுதந்திரமுள்ளவளுக்கே பிள்ளைகளாக இருக்கிறோம்.
அதஏவ ஹே ப்⁴ராதர: , வயம்’ தா³ஸ்யா: ஸந்தாநா ந பூ⁴த்வா பாத்ந்யா: ஸந்தாநா ப⁴வாம: |