< கலாத்தியர் 2 >
1 ௧ பதினான்கு வருடங்களுக்குப்பின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு, பர்னபாவோடு மீண்டும் எருசலேமுக்குப் போனேன்.
அநந்தரம்’ சதுர்த³ஸ²ஸு வத்ஸரேஷு க³தேஷ்வஹம்’ ப³ர்ணப்³பா³ ஸஹ யிரூஸா²லமநக³ரம்’ புநரக³ச்ச²ம்’, ததா³நோம்’ தீதமபி ஸ்வஸங்கி³நம் அகரவம்’|
2 ௨ நான் தேவ அறிவிப்பினாலே அங்குபோய், யூதரல்லாத மக்களுக்கு நான் பிரசங்கிக்கிற நற்செய்தியை அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்; ஆனாலும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகப் போகாதபடி சபையை நடத்துகிற தலைவர்களுக்கே தனிமையாக விளக்கிச் சொன்னேன்.
தத்காலே(அ)ஹம் ஈஸ்²வரத³ர்ஸ²நாத்³ யாத்ராம் அகரவம்’ மயா ய: பரிஸ்²ரமோ(அ)காரி காரிஷ்யதே வா ஸ யந்நிஷ்ப²லோ ந ப⁴வேத் தத³ர்த²ம்’ பி⁴ந்நஜாதீயாநாம்’ மத்⁴யே மயா கோ⁴ஷ்யமாண: ஸுஸம்’வாத³ஸ்தத்ரத்யேப்⁴யோ லோகேப்⁴யோ விஸே²ஷதோ மாந்யேப்⁴யோ நரேப்⁴யோ மயா ந்யவேத்³யத|
3 ௩ ஆனாலும் என்னோடு இருந்த தீத்து கிரேக்கனாக இருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுவதற்குக் கட்டாயப்படுத்தப்படவில்லை.
ததோ மம ஸஹசரஸ்தீதோ யத்³யபி யூநாநீய ஆஸீத் ததா²பி தஸ்ய த்வக்சே²தோ³(அ)ப்யாவஸ்²யகோ ந ப³பூ⁴வ|
4 ௪ கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு உண்டான சுதந்திரத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்குவதற்காக குறுக்குவழியாக நுழைந்த கள்ளச் சகோதரர்களினால் அப்படியானது.
யதஸ்²ச²லேநாக³தா அஸ்மாந் தா³ஸாந் கர்த்தும் இச்ச²வ: கதிபயா பா⁴க்தப்⁴ராதர: க்²ரீஷ்டேந யீஸு²நாஸ்மப்⁴யம்’ த³த்தம்’ ஸ்வாதந்த்ர்யம் அநுஸந்தா⁴தும்’ சாரா இவ ஸமாஜம்’ ப்ராவிஸ²ந்|
5 ௫ நற்செய்தியாகிய சத்தியம் உங்களிடம் மாறாமல் நிலைத்திருப்பதற்காக, நாங்கள் ஒருமணிநேரம் கூட அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.
அத: ப்ரக்ரு’தே ஸுஸம்’வாதே³ யுஷ்மாகம் அதி⁴காரோ யத் திஷ்டே²த் தத³ர்த²ம்’ வயம்’ த³ண்டை³கமபி யாவத்³ ஆஜ்ஞாக்³ரஹணேந தேஷாம்’ வஸ்²யா நாப⁴வாம|
6 ௬ அல்லாமலும் அங்கிருந்த சபைத் தலைவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் மனிதர்களிடம் பட்சபாதம் உள்ளவர் இல்லையே.
பரந்து யே லோகா மாந்யாஸ்தே யே கேசித்³ ப⁴வேயுஸ்தாநஹம்’ ந க³ணயாமி யத ஈஸ்²வர: கஸ்யாபி மாநவஸ்ய பக்ஷபாதம்’ ந கரோதி, யே ச மாந்யாஸ்தே மாம்’ கிமபி நவீநம்’ நாஜ்ஞாபயந்|
7 ௭ அதுமட்டுமல்லாமல், விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாக இருப்பதற்காக பேதுருவைப் பலப்படுத்தினவர், யூதரல்லாத மக்களுக்கு அப்போஸ்தலனாக இருப்பதற்காக என்னையும் பலப்படுத்தினதினால்,
கிந்து சி²ந்நத்வசாம்’ மத்⁴யே ஸுஸம்’வாத³ப்ரசாரணஸ்ய பா⁴ர: பிதரி யதா² ஸமர்பிதஸ்ததை²வாச்சி²ந்நத்வசாம்’ மத்⁴யே ஸுஸம்’வாத³ப்ரசாரணஸ்ய பா⁴ரோ மயி ஸமர்பித இதி தை ர்பு³பு³தே⁴|
8 ௮ விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக பேதுருவிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிப்பதற்காக எனக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டதென்று அவர்கள் பார்த்து;
யதஸ்²சி²ந்நத்வசாம்’ மத்⁴யே ப்ரேரிதத்வகர்ம்மணே யஸ்ய யா ஸ²க்தி: பிதரமாஸ்²ரிதவதீ தஸ்யைவ ஸா ஸ²க்தி ர்பி⁴ந்நஜாதீயாநாம்’ மத்⁴யே தஸ்மை கர்ம்மணே மாமப்யாஸ்²ரிதவதீ|
9 ௯ எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக நினைக்கப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனம் உள்ளவர்களுக்கும், நாங்கள் யூதரல்லாத மக்களுக்கும் பிரசங்கிப்பதற்காக, நெருங்கிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவிற்கும் வலது கரம் கொடுத்து,
அதோ மஹ்யம்’ த³த்தம் அநுக்³ரஹம்’ ப்ரதிஜ்ஞாய ஸ்தம்பா⁴ இவ க³ணிதா யே யாகூப்³ கைபா² யோஹந் சைதே ஸஹாயதாஸூசகம்’ த³க்ஷிணஹஸ்தக்³ரஹம்’ண விதா⁴ய மாம்’ ப³ர்ணப்³பா³ஞ்ச ஜக³து³: , யுவாம்’ பி⁴ந்நஜாதீயாநாம்’ ஸந்நிதி⁴ம்’ க³ச்ச²தம்’ வயம்’ சி²ந்நத்வசா ஸந்நிதி⁴ம்’ க³ச்சா²ம: ,
10 ௧0 ஏழைகளை நினைத்துக்கொள்ளச் சொன்னார்கள்; அப்படிச் செய்வதற்காக அதற்கு முன்னமே நானும் ஆவலாக இருந்தேன்.
கேவலம்’ த³ரித்³ரா யுவாப்⁴யாம்’ ஸ்மரணீயா இதி| அதஸ்ததே³வ கர்த்தும் அஹம்’ யதே ஸ்ம|
11 ௧௧ மேலும், பேதுரு அந்தியோகியாவிற்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமத்தினால், நான் அவனை முகமுகமாக எதிர்த்தேன்.
அபரம் ஆந்தியகி²யாநக³ரம்’ பிதர ஆக³தே(அ)ஹம்’ தஸ்ய தோ³ஷித்வாத் ஸமக்ஷம்’ தம் அப⁴ர்த்ஸயம்’|
12 ௧௨ எப்படியென்றால், யாக்கோபினிடமிருந்து சிலர் வருகிறதற்கு முன்பே அவன் யூதரல்லாத மக்களோடு சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனம் உள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.
யத: ஸ பூர்வ்வம் அந்யஜாதீயை: ஸார்த்³த⁴ம் ஆஹாரமகரோத் தத: பரம்’ யாகூப³: ஸமீபாத் கதிபயஜநேஷ்வாக³தேஷு ஸ சி²ந்நத்வங்மநுஷ்யேப்⁴யோ ப⁴யேந நிவ்ரு’த்ய ப்ரு’த²க்³ அப⁴வத்|
13 ௧௩ மற்ற யூதர்களும் அவனோடுகூட இணைந்து மாய்மாலம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாய்மாலத்தினாலே பர்னபாவும் ஈர்க்கப்பட்டான்.
ததோ(அ)பரே ஸர்வ்வே யிஹூதி³நோ(அ)பி தேந ஸார்த்³த⁴ம்’ கபடாசாரம் அகுர்வ்வந் ப³ர்ணப்³பா³ அபி தேஷாம்’ காபட்யேந விபத²கா³ம்யப⁴வத்|
14 ௧௪ இப்படி அவர்கள் நற்செய்தியின் சத்தியத்தின்படி சரியாக நடக்காததை நான் பார்த்தபோது, எல்லோருக்கும் முன்பாக நான் பேதுருவைப் பார்த்து சொன்னது என்னவென்றால்: யூதனாக இருக்கிற நீ யூதர்கள் முறைப்படி நடக்காமல், யூதரல்லாதவர்களின் முறைப்படி நடந்து கொண்டிருக்க, யூதரல்லாதோரை யூதர்கள் முறைப்படி நடக்கச்சொல்லி நீ எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?
ததஸ்தே ப்ரக்ரு’தஸுஸம்’வாத³ரூபே ஸரலபதே² ந சரந்தீதி த்³ரு’ஷ்ட்வாஹம்’ ஸர்வ்வேஷாம்’ ஸாக்ஷாத் பிதரம் உக்தவாந் த்வம்’ யிஹூதீ³ ஸந் யதி³ யிஹூதி³மதம்’ விஹாய பி⁴ந்நஜாதீய இவாசரஸி தர்ஹி யிஹூதி³மதாசரணாய பி⁴ந்நஜாதீயாந் குத: ப்ரவர்த்தயஸி?
15 ௧௫ யூதரல்லாதவர்களில் பிறந்த பாவிகளாக இல்லாமல், பிறப்பின்படி யூதர்களாக இருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவிற்குள் உள்ள விசுவாசத்தினாலேதவிர, நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே மனிதன் நீதிமானாக்கப்படுவது இல்லை என்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினால் இல்லை, கிறிஸ்துவிற்குள் உள்ள விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.
ஆவாம்’ ஜந்மநா யிஹூதி³நௌ ப⁴வாவோ பி⁴ந்நஜாதீயௌ பாபிநௌ ந ப⁴வாவ:
16 ௧௬ நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே எந்த மனிதனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.
கிந்து வ்யவஸ்தா²பாலநேந மநுஷ்ய: ஸபுண்யோ ந ப⁴வதி கேவலம்’ யீஸௌ² க்²ரீஷ்டே யோ விஸ்²வாஸஸ்தேநைவ ஸபுண்யோ ப⁴வதீதி பு³த்³த்⁴வாவாமபி வ்யவஸ்தா²பாலநம்’ விநா கேவலம்’ க்²ரீஷ்டே விஸ்²வாஸேந புண்யப்ராப்தயே க்²ரீஷ்டே யீஸௌ² வ்யஸ்²வஸிவ யதோ வ்யவஸ்தா²பாலநேந கோ(அ)பி மாநவ: புண்யம்’ ப்ராப்தும்’ ந ஸ²க்நோதி|
17 ௧௭ கிறிஸ்துவிற்குள் நீதிமான்களாக்கப்படுவதற்கு விரும்புகிற நாமும் பாவிகளாக இருப்போமென்றால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? இல்லையே.
பரந்து யீஸு²நா புண்யப்ராப்தயே யதமாநாவப்யாவாம்’ யதி³ பாபிநௌ ப⁴வாவஸ்தர்ஹி கிம்’ வக்தவ்யம்’? க்²ரீஷ்ட: பாபஸ்ய பரிசாரக இதி? தந்ந ப⁴வது|
18 ௧௮ நான் இடித்துப்போட்டவைகளையே நான் மீண்டும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனாக இருப்பேன்.
மயா யத்³ ப⁴க்³நம்’ தத்³ யதி³ மயா புநர்நிர்ம்மீயதே தர்ஹி மயைவாத்மதோ³ஷ: ப்ரகாஸ்²யதே|
19 ௧௯ தேவனுக்கென்று பிழைப்பதற்காக நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.
அஹம்’ யத்³ ஈஸ்²வராய ஜீவாமி தத³ர்த²ம்’ வ்யவஸ்த²யா வ்யவஸ்தா²யை அம்ரியே|
20 ௨0 கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன்; ஆனாலும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் இல்லை, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது சரீரத்தில் பிழைத்திருக்கிறதோ, என்மேல் அன்புவைத்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்மேல் உள்ள விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
க்²ரீஷ்டேந ஸார்த்³த⁴ம்’ க்ருஸே² ஹதோ(அ)ஸ்மி ததா²பி ஜீவாமி கிந்த்வஹம்’ ஜீவாமீதி நஹி க்²ரீஷ்ட ஏவ மத³ந்த ர்ஜீவதி| ஸாம்ப்ரதம்’ ஸஸ²ரீரேண மயா யஜ்ஜீவிதம்’ தா⁴ர்ய்யதே தத் மம த³யாகாரிணி மத³ர்த²ம்’ ஸ்வீயப்ராணத்யாகி³நி சேஸ்²வரபுத்ரே விஸ்²வஸதா மயா தா⁴ர்ய்யதே|
21 ௨௧ நான் தேவனுடைய கிருபையை வீணாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமென்றால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.
அஹமீஸ்²வரஸ்யாநுக்³ரஹம்’ நாவஜாநாமி யஸ்மாத்³ வ்யவஸ்த²யா யதி³ புண்யம்’ ப⁴வதி தர்ஹி க்²ரீஷ்டோ நிரர்த²கமம்ரியத|