< 1 தெசலோனிக்கேயர் 3 >
1 ஆகவே இந்தப் பிரிவை எங்களால் தாங்க முடியாதிருந்தபோது, நானும் சீலாவும் தனியே அத்தேனே பட்டணத்தில் இருந்துகொண்டு,
அதோ(அ)ஹம்’ யதா³ ஸந்தே³ஹம்’ புந: ஸோடு⁴ம்’ நாஸ²க்நுவம்’ ததா³நீம் ஆதீ²நீநக³ர ஏகாகீ ஸ்தா²தும்’ நிஸ்²சித்ய
2 தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புவது சிறந்தது எனத் தீர்மானித்தோம். அவன் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில், இறைவனுக்காக வேலைசெய்கிற எங்கள் உடன் ஊழியனும் சகோதரனுமாய் இருக்கிறான். உங்களை பெலப்படுத்தி, உங்கள் விசுவாசத்தில் உங்களை ஊக்குவிக்கவே நாங்கள் அவனை அனுப்பினோம்.
ஸ்வப்⁴ராதரம்’ க்²ரீஷ்டஸ்ய ஸுஸம்’வாதே³ ஸஹகாரிணஞ்சேஸ்²வரஸ்ய பரிசாரகம்’ தீமதி²யம்’ யுஷ்மத்ஸமீபம் அப்ரேஷயம்’|
3 உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற துன்பங்களால், உங்களில் ஒருவனும் நிலைகுலைந்து போகக்கூடாது என்பதற்காகவே அவனை அனுப்பிவைத்தோம். இப்படியான துன்பங்களுக்காகவே நாங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நீங்கள் நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
வர்த்தமாநை: க்லேஸை²: கஸ்யாபி சாஞ்சல்யம்’ யதா² ந ஜாயதே ததா² தே த்வயா ஸ்தி²ரீக்ரியந்தாம்’ ஸ்வகீயத⁴ர்ம்மமதி⁴ ஸமாஸ்²வாஸ்யந்தாஞ்சேதி தம் ஆதி³ஸ²ம்’|
4 நாங்கள் உங்களுடன் இருந்தபோது, நாம் துன்புறுத்தப்படுவோம் என்பதை, உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொன்னோம். அது அவ்விதமே நிகழ்ந்ததும் உங்களுக்குத் தெரியும்.
வயமேதாத்³ரு’ஸே² க்லேஸே² நியுக்தா ஆஸ்மஹ இதி யூயம்’ ஸ்வயம்’ ஜாநீத², யதோ(அ)ஸ்மாகம்’ து³ர்க³தி ர்ப⁴விஷ்யதீதி வயம்’ யுஷ்மாகம்’ ஸமீபே ஸ்தி²திகாலே(அ)பி யுஷ்மாந் அபோ³த⁴யாம, தாத்³ரு’ஸ²மேவ சாப⁴வத் தத³பி ஜாநீத²|
5 ஆகையால் உங்களைக்குறித்து அறியாமல், என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாததினாலே உங்கள் விசுவாசத்தைப்பற்றி அறிந்துகொள்ளும்படி, தீமோத்தேயுவை அனுப்பினேன். சோதனைக்காரன் ஏதாவது ஒருவிதத்தில் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தியிருக்கலாம் என்றும், அதனால் எங்களுடைய பிரயாசம் பயனற்றுப் போய்விட்டதோ என்றும் நான் பயந்தேன்.
தஸ்மாத் பரீக்ஷகேண யுஷ்மாஸு பரீக்ஷிதேஷ்வஸ்மாகம்’ பரிஸ்²ரமோ விப²லோ ப⁴விஷ்யதீதி ப⁴யம்’ ஸோடு⁴ம்’ யதா³ஹம்’ நாஸ²க்நுவம்’ ததா³ யுஷ்மாகம்’ விஸ்²வாஸஸ்ய தத்த்வாவதா⁴ரணாய தம் அப்ரேஷயம்’|
6 ஆனால் தீமோத்தேயு இப்பொழுதுதான் உங்களிடமிருந்து திரும்பி வந்திருக்கிறான். அவன் உங்களுடைய விசுவாசத்தைக்குறித்தும், அன்பைக்குறித்தும் நல்ல செய்தியே கொண்டுவந்திருக்கிறான். எங்களைக்குறித்த ஞாபகங்கள் உங்களுக்கு இனியவைகளாக இருக்கின்றன என்றும், நாங்கள் உங்களைக் காண ஆவலாயிருந்ததுபோல, நீங்களும் எங்களைக் காண ஆவலாய் இருக்கிறீர்கள் என்றும் அவன் எங்களுக்குச் சொன்னான்.
கிந்த்வது⁴நா தீமதி²யோ யுஷ்மத்ஸமீபாத்³ அஸ்மத்ஸந்நிதி⁴ம் ஆக³த்ய யுஷ்மாகம்’ விஸ்²வாஸப்ரேமணீ அத்⁴யஸ்மாந் ஸுவார்த்தாம்’ ஜ்ஞாபிதவாந் வயஞ்ச யதா² யுஷ்மாந் ஸ்மராமஸ்ததா² யூயமப்யஸ்மாந் ஸர்வ்வதா³ ப்ரணயேந ஸ்மரத² த்³ரஷ்டும் ஆகாங்க்ஷத்⁴வே சேதி கதி²தவாந்|
7 ஆகையால் பிரியமானவர்களே, எங்களுடைய கஷ்டம், துன்புறுத்துதல் மத்தியிலும், உங்களுடைய விசுவாசத்தைக் கேட்டு, நாங்கள் உற்சாகமடைந்தோம்.
ஹே ப்⁴ராதர: , வார்த்தாமிமாம்’ ப்ராப்ய யுஷ்மாநதி⁴ விஸே²ஷதோ யுஷ்மாகம்’ க்லேஸ²து³: கா²ந்யதி⁴ யுஷ்மாகம்’ விஸ்²வாஸாத்³ அஸ்மாகம்’ ஸாந்த்வநாஜாயத;
8 நீங்கள் கர்த்தரில் உறுதியாய் நிற்பதை அறிந்த பின்புதான், எங்களுக்கு உயிர்மூச்சே வந்தது.
யதோ யூயம்’ யதி³ ப்ரபா⁴வவதிஷ்ட²த² தர்ஹ்யநேந வயம் அது⁴நா ஜீவாம: |
9 உங்கள் நிமித்தம் நமது இறைவனுடைய முன்னிலையில் எங்களுக்கு உண்டாயிருக்கிற எல்லா மகிழ்ச்சிக்காகவும் நாங்கள் இறைவனுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதாது.
வயஞ்சாஸ்மதீ³யேஸ்²வரஸ்ய ஸாக்ஷாத்³ யுஷ்மத்தோ ஜாதேந யேநாநந்தே³ந ப்ரபு²ல்லா ப⁴வாமஸ்தஸ்ய க்ரு’த்ஸ்நஸ்யாநந்த³ஸ்ய யோக்³யரூபேணேஸ்²வரம்’ த⁴ந்யம்’ வதி³தும்’ கத²ம்’ ஸ²க்ஷ்யாம: ?
10 நாங்கள் மீண்டும் உங்களைச் சந்தித்து உங்கள் விசுவாசத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்ப்படுத்துவதற்காக, இரவும் பகலும் வெகு ஊக்கமாய் மன்றாடுகிறோம்.
வயம்’ யேந யுஷ்மாகம்’ வத³நாநி த்³ரஷ்டும்’ யுஷ்மாகம்’ விஸ்²வாஸே யத்³ அஸித்³த⁴ம்’ வித்³யதே தத் ஸித்³தீ⁴கர்த்துஞ்ச ஸ²க்ஷ்யாமஸ்தாத்³ரு’ஸ²ம்’ வரம்’ தி³வாநிஸ²ம்’ ப்ரார்த²யாமஹே|
11 இப்பொழுது நம்முடைய பிதாவாகிய இறைவன் தாமே, கர்த்தராகிய இயேசுவுடன் நாங்கள் உங்களிடத்தில் வருவதற்கான வழியை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பாராக.
அஸ்மாகம்’ தாதேநேஸ்²வரேண ப்ரபு⁴நா யீஸு²க்²ரீஷ்டேந ச யுஷ்மத்ஸமீபக³மநாயாஸ்மாகம்’ பந்தா² ஸுக³ம: க்ரியதாம்’|
12 எங்கள் அன்பு உங்களில் வளர்ந்து பெருகுவதுபோலவே, நீங்கள் ஒருவரில் ஒருவர் கொண்டுள்ள அன்பு, மற்றெல்லோரிடத்திலும் நிறைந்து பெருகும்படி கர்த்தர் உங்களுக்கு உதவிசெய்வாராக.
பரஸ்பரம்’ ஸர்வ்வாம்’ஸ்²ச ப்ரதி யுஷ்மாகம்’ ப்ரேம யுஷ்மாந் ப்ரதி சாஸ்மாகம்’ ப்ரேம ப்ரபு⁴நா வர்த்³த்⁴யதாம்’ ப³ஹுப²லம்’ க்ரியதாஞ்ச|
13 நம்முடைய கர்த்தராகிய இயேசு தம்முடைய எல்லாப் பரிசுத்தவான்களோடும் வரும்போது, நம்முடைய பிதாவாகிய இறைவனுக்கு முன்பாக நீங்கள் குற்றமற்றவர்களாகவும், பரிசுத்தர்களாகவும் இருக்கும்படி கர்த்தர் உங்கள் இருதயங்களைப் பெலப்படுத்துவாராக.
அபரமஸ்மாகம்’ ப்ரபு⁴ ர்யீஸு²க்²ரீஷ்ட: ஸ்வகீயை: ஸர்வ்வை: பவித்ரலோகை: ஸார்த்³த⁴ம்’ யதா³க³மிஷ்யதி ததா³ யூயம்’ யதா²ஸ்மாகம்’ தாதஸ்யேஸ்²வரஸ்ய ஸம்முகே² பவித்ரதயா நிர்தோ³ஷா ப⁴விஷ்யத² ததா² யுஷ்மாகம்’ மநாம்’ஸி ஸ்தி²ரீக்ரியந்தாம்’|