< மார்க: 1 >
1 ஈஸ்²வரபுத்ரஸ்ய யீஸு²க்²ரீஷ்டஸ்ய ஸுஸம்’வாதா³ரம்ப⁴: |
௧தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியின் ஆரம்பம்.
2 ப⁴விஷ்யத்³வாதி³நாம்’ க்³ரந்தே²ஷு லிபிரித்த²மாஸ்தே, பஸ்²ய ஸ்வகீயதூ³தந்து தவாக்³ரே ப்ரேஷயாம்யஹம்| க³த்வா த்வதீ³யபந்தா²நம்’ ஸ ஹி பரிஷ்கரிஷ்யதி|
௨“இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பேபோய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
3 "பரமேஸ²ஸ்ய பந்தா²நம்’ பரிஷ்குருத ஸர்வ்வத: | தஸ்ய ராஜபத²ஞ்சைவ ஸமாநம்’ குருதாது⁴நா| " இத்யேதத் ப்ராந்தரே வாக்யம்’ வத³த: கஸ்யசித்³ரவ: ||
௩கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி;
4 ஸஏவ யோஹந் ப்ராந்தரே மஜ்ஜிதவாந் ததா² பாபமார்ஜநநிமித்தம்’ மநோவ்யாவர்த்தகமஜ்ஜநஸ்ய கதா²ஞ்ச ப்ரசாரிதவாந்|
௪யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
5 ததோ யிஹூதா³தே³ஸ²யிரூஸா²லம்நக³ரநிவாஸிந: ஸர்வ்வே லோகா ப³ஹி ர்பூ⁴த்வா தஸ்ய ஸமீபமாக³த்ய ஸ்வாநி ஸ்வாநி பாபாந்யங்கீ³க்ரு’த்ய யர்த்³த³நநத்³யாம்’ தேந மஜ்ஜிதா ப³பூ⁴வு: |
௫அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும், யோவானிடம்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
6 அஸ்ய யோஹந: பரிதே⁴யாநி க்ரமேலகலோமஜாநி, தஸ்ய கடிப³ந்த⁴நம்’ சர்ம்மஜாதம், தஸ்ய ப⁴க்ஷ்யாணி ச ஸூ²ககீடா வந்யமதூ⁴நி சாஸந்|
௬யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான்.
7 ஸ ப்ரசாரயந் கத²யாஞ்சக்ரே, அஹம்’ நம்ரீபூ⁴ய யஸ்ய பாது³காப³ந்த⁴நம்’ மோசயிதுமபி ந யோக்³யோஸ்மி, தாத்³ரு’ஸோ² மத்தோ கு³ருதர ஏக: புருஷோ மத்பஸ்²சாதா³க³ச்ச²தி|
௭அவன்: என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார், அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை.
8 அஹம்’ யுஷ்மாந் ஜலே மஜ்ஜிதவாந் கிந்து ஸ பவித்ர ஆத்மாநி ஸம்’மஜ்ஜயிஷ்யதி|
௮நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான்.
9 அபரஞ்ச தஸ்மிந்நேவ காலே கா³லீல்ப்ரதே³ஸ²ஸ்ய நாஸரத்³க்³ராமாத்³ யீஸு²ராக³த்ய யோஹநா யர்த்³த³நநத்³யாம்’ மஜ்ஜிதோ(அ)பூ⁴த்|
௯அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
10 ஸ ஜலாது³த்தி²தமாத்ரோ மேக⁴த்³வாரம்’ முக்தம்’ கபோதவத் ஸ்வஸ்யோபரி அவரோஹந்தமாத்மாநஞ்ச த்³ரு’ஷ்டவாந்|
௧0அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார்.
11 த்வம்’ மம ப்ரிய: புத்ரஸ்த்வய்யேவ மமமஹாஸந்தோஷ இயமாகாஸீ²யா வாணீ ப³பூ⁴வ|
௧௧அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
12 தஸ்மிந் காலே ஆத்மா தம்’ ப்ராந்தரமத்⁴யம்’ நிநாய|
௧௨உடனே ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குப் போகும்படி ஏவினார்.
13 அத² ஸ சத்வாரிம்’ஸ²த்³தி³நாநி தஸ்மிந் ஸ்தா²நே வந்யபஸு²பி⁴: ஸஹ திஷ்ட²ந் ஸை²தாநா பரீக்ஷித: ; பஸ்²சாத் ஸ்வர்கீ³யதூ³தாஸ்தம்’ ஸிஷேவிரே|
௧௩அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.
14 அநந்தரம்’ யோஹநி ப³ந்த⁴நாலயே ப³த்³தே⁴ ஸதி யீஸு² ர்கா³லீல்ப்ரதே³ஸ²மாக³த்ய ஈஸ்²வரராஜ்யஸ்ய ஸுஸம்’வாத³ம்’ ப்ரசாரயந் கத²யாமாஸ,
௧௪யோவான் சிறைக்காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கம் செய்து:
15 கால: ஸம்பூர்ண ஈஸ்²வரராஜ்யஞ்ச ஸமீபமாக³தம்’; அதோஹேதோ ர்யூயம்’ மநாம்’ஸி வ்யாவர்த்தயத்⁴வம்’ ஸுஸம்’வாதே³ ச விஸ்²வாஸித|
௧௫காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது; மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார்.
16 தத³நந்தரம்’ ஸ கா³லீலீயஸமுத்³ரஸ்ய தீரே க³ச்ச²ந் ஸி²மோந் தஸ்ய ப்⁴ராதா அந்த்³ரியநாமா ச இமௌ த்³வௌ ஜநௌ மத்ஸ்யதா⁴ரிணௌ ஸாக³ரமத்⁴யே ஜாலம்’ ப்ரக்ஷிபந்தௌ த்³ரு’ஷ்ட்வா தாவவத³த்,
௧௬அவர் கலிலேயா கடலின் ஓரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்தார்.
17 யுவாம்’ மம பஸ்²சாதா³க³ச்ச²தம்’, யுவாமஹம்’ மநுஷ்யதா⁴ரிணௌ கரிஷ்யாமி|
௧௭இயேசு அவர்களைப் பார்த்து: என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
18 ததஸ்தௌ தத்க்ஷணமேவ ஜாலாநி பரித்யஜ்ய தஸ்ய பஸ்²சாத் ஜக்³மது: |
௧௮உடனே அவர்கள் தங்களுடைய வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
19 தத: பரம்’ தத்ஸ்தா²நாத் கிஞ்சித்³ தூ³ரம்’ க³த்வா ஸ ஸிவதீ³புத்ரயாகூப்³ தத்³ப்⁴ராத்ரு’யோஹந் ச இமௌ நௌகாயாம்’ ஜாலாநாம்’ ஜீர்ணமுத்³தா⁴ரயந்தௌ த்³ரு’ஷ்ட்வா தாவாஹூயத்|
௧௯அவர் அந்த இடத்தைவிட்டுச் சற்றுதூரம் சென்றபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவனுடைய சகோதரன் யோவானும் படகிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்து,
20 ததஸ்தௌ நௌகாயாம்’ வேதநபு⁴க்³பி⁴: ஸஹிதம்’ ஸ்வபிதரம்’ விஹாய தத்பஸ்²சாதீ³யது: |
௨0உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
21 தத: பரம்’ கப²ர்நாஹூம்நாமகம்’ நக³ரமுபஸ்தா²ய ஸ விஸ்²ராமதி³வஸே ப⁴ஜநக்³ரஹம்’ ப்ரவிஸ்²ய ஸமுபதி³தே³ஸ²|
௨௧பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, போதனை பண்ணினார்.
22 தஸ்யோபதே³ஸா²ல்லோகா ஆஸ்²சர்ய்யம்’ மேநிரே யத: ஸோத்⁴யாபகாஇவ நோபதி³ஸ²ந் ப்ரபா⁴வவாநிவ ப்ரோபதி³தே³ஸ²|
௨௨அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால் அவருடைய போதனையைக்குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
23 அபரஞ்ச தஸ்மிந் ப⁴ஜநக்³ரு’ஹே அபவித்ரபூ⁴தேந க்³ரஸ்த ஏகோ மாநுஷ ஆஸீத்| ஸ சீத்ஸ²ப்³த³ம்’ க்ரு’த்வா கத²யாஞ்சகே
௨௩அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான்.
24 போ⁴ நாஸரதீய யீஸோ² த்வமஸ்மாந் த்யஜ, த்வயா ஸஹாஸ்மாகம்’ க: ஸம்ப³ந்த⁴: ? த்வம்’ கிமஸ்மாந் நாஸ²யிதும்’ ஸமாக³த: ? த்வமீஸ்²வரஸ்ய பவித்ரலோக இத்யஹம்’ ஜாநாமி|
௨௪அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா நீர் வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமாகக் கத்தினான்.
25 ததா³ யீஸு²ஸ்தம்’ தர்ஜயித்வா ஜகா³த³ தூஷ்ணீம்’ ப⁴வ இதோ ப³ஹிர்ப⁴வ ச|
௨௫அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்.
26 தத: ஸோ(அ)பவித்ரபூ⁴தஸ்தம்’ ஸம்பீட்³ய அத்யுசைஸ்²சீத்க்ரு’த்ய நிர்ஜகா³ம|
௨௬உடனே அந்த அசுத்தஆவி அவனை அலைக்கழித்து, அதிக சத்தம்போட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது.
27 தேநைவ ஸர்வ்வே சமத்க்ரு’த்ய பரஸ்பரம்’ கத²யாஞ்சக்ரிரே, அஹோ கிமித³ம்’? கீத்³ரு’ஸோ²(அ)யம்’ நவ்ய உபதே³ஸ²: ? அநேந ப்ரபா⁴வேநாபவித்ரபூ⁴தேஷ்வாஜ்ஞாபிதேஷு தே ததா³ஜ்ஞாநுவர்த்திநோ ப⁴வந்தி|
௨௭எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடு அசுத்தஆவிகளுக்குக் கட்டளைக் கொடுக்கிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
28 ததா³ தஸ்ய யஸோ² கா³லீலஸ்²சதுர்தி³க்ஸ்த²ஸர்வ்வதே³ஸா²ந் வ்யாப்நோத்|
௨௮எனவே, அவரைப்பற்றின புகழ் கலிலேயா நாடு முழுவதும் பரவியது.
29 அபரஞ்ச தே ப⁴ஜநக்³ரு’ஹாத்³ ப³ஹி ர்பூ⁴த்வா யாகூப்³யோஹந்ப்⁴யாம்’ ஸஹ ஸி²மோந ஆந்த்³ரியஸ்ய ச நிவேஸ²நம்’ ப்ரவிவிஸு²: |
௨௯உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள்.
30 ததா³ பிதரஸ்ய ஸ்²வஸ்²ரூர்ஜ்வரபீடி³தா ஸ²ய்யாயாமாஸ்த இதி தே தம்’ ஜ²டிதி விஜ்ஞாபயாஞ்சக்ரு: |
௩0அங்கே சீமோனுடைய மாமியார் ஜூரத்தோடு படுத்திருந்தாள்; உடனே அவர்கள் அவளைப்பற்றி அவருக்குச் சொன்னார்கள்.
31 தத: ஸ ஆக³த்ய தஸ்யா ஹஸ்தம்’ த்⁴ரு’த்வா தாமுத³ஸ்தா²பயத்; ததை³வ தாம்’ ஜ்வரோ(அ)த்யாக்ஷீத் தத: பரம்’ ஸா தாந் ஸிஷேவே|
௩௧அவர் அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
32 அதா²ஸ்தம்’ க³தே ரவௌ ஸந்த்⁴யாகாலே ஸதி லோகாஸ்தத்ஸமீபம்’ ஸர்வ்வாந் ரோகி³ணோ பூ⁴தத்⁴ரு’தாம்’ஸ்²ச ஸமாநிந்யு: |
௩௨மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது, எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
33 ஸர்வ்வே நாக³ரிகா லோகா த்³வாரி ஸம்’மிலிதாஸ்²ச|
௩௩பட்டணத்து மக்கள் எல்லோரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.
34 தத: ஸ நாநாவித⁴ரோகி³ணோ ப³ஹூந் மநுஜாநரோகி³ணஸ்²சகார ததா² ப³ஹூந் பூ⁴தாந் த்யாஜயாஞ்சகார தாந் பூ⁴தாந் கிமபி வாக்யம்’ வக்தும்’ நிஷிஷேத⁴ ச யதோஹேதோஸ்தே தமஜாநந்|
௩௪பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகளுக்கு, அவர் யார் என்று தெரிந்திருந்ததால், அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை.
35 அபரஞ்ச ஸோ(அ)திப்ரத்யூஷே வஸ்துதஸ்து ராத்ரிஸே²ஷே ஸமுத்தா²ய ப³ஹிர்பூ⁴ய நிர்ஜநம்’ ஸ்தா²நம்’ க³த்வா தத்ர ப்ரார்த²யாஞ்சக்ரே|
௩௫அவர் அதிகாலையில், இருட்டோடு எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
36 அநந்தரம்’ ஸி²மோந் தத்ஸங்கி³நஸ்²ச தஸ்ய பஸ்²சாத்³ க³தவந்த: |
௩௬சீமோனும் அவனோடுகூட இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,
37 தது³த்³தே³ஸ²ம்’ ப்ராப்ய தமவத³ந் ஸர்வ்வே லோகாஸ்த்வாம்’ ம்ரு’க³யந்தே|
௩௭அவரைப் பார்த்தபோது: எல்லோரும் உம்மைத் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
38 ததா³ ஸோ(அ)கத²யத் ஆக³ச்ச²த வயம்’ ஸமீபஸ்தா²நி நக³ராணி யாம: , யதோ(அ)ஹம்’ தத்ர கதா²ம்’ ப்ரசாரயிதும்’ ப³ஹிராக³மம்|
௩௮அவர்களை அவர் பார்த்து: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும், எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள்; இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;
39 அத² ஸ தேஷாம்’ கா³லீல்ப்ரதே³ஸ²ஸ்ய ஸர்வ்வேஷு ப⁴ஜநக்³ரு’ஹேஷு கதா²: ப்ரசாரயாஞ்சக்ரே பூ⁴தாநத்யாஜயஞ்ச|
௩௯கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
40 அநந்தரமேக: குஷ்டீ² ஸமாக³த்ய தத்ஸம்முகே² ஜாநுபாதம்’ விநயஞ்ச க்ரு’த்வா கதி²தவாந் யதி³ ப⁴வாந் இச்ச²தி தர்ஹி மாம்’ பரிஷ்கர்த்தும்’ ஸ²க்நோதி|
௪0அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடம் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்கு விருப்பமானால் என்னைச் சுகப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
41 தத: க்ரு’பாலு ர்யீஸு²: கரௌ ப்ரஸார்ய்ய தம்’ ஸ்பஷ்ட்வா கத²யாமாஸ
௪௧இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பம் உண்டு, சுத்தமாகு என்றார்.
42 மமேச்சா² வித்³யதே த்வம்’ பரிஷ்க்ரு’தோ ப⁴வ| ஏதத்கதா²யா: கத²நமாத்ராத் ஸ குஷ்டீ² ரோகா³ந்முக்த: பரிஷ்க்ரு’தோ(அ)ப⁴வத்|
௪௨இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது, அவன் சுகம் பெற்றுக்கொண்டான்.
43 ததா³ ஸ தம்’ விஸ்ரு’ஜந் கா³ட⁴மாதி³ஸ்²ய ஜகா³த³
௪௩அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: நீ இதை யாருக்கும் சொல்லாமல் இருக்க எச்சரிக்கையாக இரு;
44 ஸாவதா⁴நோ ப⁴வ கதா²மிமாம்’ கமபி மா வத³; ஸ்வாத்மாநம்’ யாஜகம்’ த³ர்ஸ²ய, லோகேப்⁴ய: ஸ்வபரிஷ்க்ரு’தே: ப்ரமாணதா³நாய மூஸாநிர்ணீதம்’ யத்³தா³நம்’ தது³த்ஸ்ரு’ஜஸ்வ ச|
௪௪ஆனாலும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி அவர்களுக்கு நீ சுகம் பெற்றதின் சாட்சியாக காணிக்கை செலுத்து என்று உறுதியாகச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.
45 கிந்து ஸ க³த்வா தத் கர்ம்ம இத்த²ம்’ விஸ்தார்ய்ய ப்ரசாரயிதும்’ ப்ராரேபே⁴ தேநைவ யீஸு²: புந: ஸப்ரகாஸ²ம்’ நக³ரம்’ ப்ரவேஷ்டும்’ நாஸ²க்நோத் ததோஹேதோர்ப³ஹி: காநநஸ்தா²நே தஸ்யௌ; ததா²பி சதுர்த்³தி³க்³ப்⁴யோ லோகாஸ்தஸ்ய ஸமீபமாயயு: |
௪௫ஆனால், அவனோ புறப்பட்டுப்போய்; இந்த விஷயங்களை எல்லோருக்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். எனவே, அவர் வெளிப்படையாகப் பட்டணத்திற்குள் செல்லமுடியாமல், வெளியே வனாந்திரமான இடங்களில் தங்கியிருந்தார்; எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் அவரிடம் வந்தார்கள்.