< லூக: 1 >
1 ப்ரத²மதோ யே ஸாக்ஷிணோ வாக்யப்ரசாரகாஸ்²சாஸந் தே(அ)ஸ்மாகம்’ மத்⁴யே யத்³யத் ஸப்ரமாணம்’ வாக்யமர்பயந்தி ஸ்ம
௧மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாக நம்புகிற காரியங்களை,
2 தத³நுஸாரதோ(அ)ந்யேபி ப³ஹவஸ்தத்³வ்ரு’த்தாந்தம்’ ரசயிதும்’ ப்ரவ்ரு’த்தா: |
௨ஆரம்பமுதல் கண்கூடாகப் பார்த்து வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்து சரித்திரம் எழுத அநேகம்பேர் முயற்சித்தனர்.
3 அதஏவ ஹே மஹாமஹிமதி²யபி²ல் த்வம்’ யா யா: கதா² அஸி²க்ஷ்யதா²ஸ்தாஸாம்’ த்³ரு’ட⁴ப்ரமாணாநி யதா² ப்ராப்நோஷி
௩ஆகவே, ஆரம்பமுதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்து அறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட காரியங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும் என்று,
4 தத³ர்த²ம்’ ப்ரத²மமாரப்⁴ய தாநி ஸர்வ்வாணி ஜ்ஞாத்வாஹமபி அநுக்ரமாத் ஸர்வ்வவ்ரு’த்தாந்தாந் துப்⁴யம்’ லேகி²தும்’ மதிமகார்ஷம்|
௪அவைகளை சரியாக ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது எனக்கு நல்லதாகத் தோன்றியது.
5 யிஹூதா³தே³ஸீ²யஹேரோத்³நாமகே ராஜத்வம்’ குர்வ்வதி அபீ³யயாஜகஸ்ய பர்ய்யாயாதி⁴காரீ ஸிக²ரியநாமக ஏகோ யாஜகோ ஹாரோணவம்’ஸோ²த்³ப⁴வா இலீஸே²வாக்²யா
௫யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்த சகரியா என்னும் பெயர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி ஆரோனுடைய சந்ததியில் ஒருத்தி, அவளுடைய பெயர் எலிசபெத்து.
6 தஸ்ய ஜாயா த்³வாவிமௌ நிர்தோ³ஷௌ ப்ரபோ⁴: ஸர்வ்வாஜ்ஞா வ்யவஸ்தா²ஸ்²ச ஸம்’மந்ய ஈஸ்²வரத்³ரு’ஷ்டௌ தா⁴ர்ம்மிகாவாஸ்தாம்|
௬அவர்கள் இருவரும் கர்த்தர் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாக நடந்து, தேவனுக்குமுன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள்.
7 தயோ: ஸந்தாந ஏகோபி நாஸீத், யத இலீஸே²வா ப³ந்த்⁴யா தௌ த்³வாவேவ வ்ரு’த்³தா⁴வப⁴வதாம்|
௭எலிசபெத்து மலடியாக இருந்தபடியால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் முதிர்வயதானவர்களாகவும் இருந்தார்கள்.
8 யதா³ ஸ்வபர்ய்யாநுக்ரமேண ஸிக²ரிய ஈஸ்²வாஸ்ய ஸமக்ஷம்’ யாஜகீயம்’ கர்ம்ம கரோதி
௮அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய முறைமைகளின்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,
9 ததா³ யஜ்ஞஸ்ய தி³நபரிபாய்யா பரமேஸ்²வரஸ்ய மந்தி³ரே ப்ரவேஸ²காலே தூ⁴பஜ்வாலநம்’ கர்ம்ம தஸ்ய கரணீயமாஸீத்|
௯ஆசாரிய ஊழிய முறைகளின்படி அவன் தேவாலயத்திற்குச் சென்று தூபம் காட்டுகிறதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
10 தத்³தூ⁴பஜ்வாலநகாலே லோகநிவஹே ப்ரார்த²நாம்’ கர்தும்’ ப³ஹிஸ்திஷ்ட²தி
௧0தூபம் காட்டுகிற நேரத்திலே மக்களெல்லோரும் கூட்டமாக வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
11 ஸதி ஸிக²ரியோ யஸ்யாம்’ வேத்³யாம்’ தூ⁴பம்’ ஜ்வாலயதி தத்³த³க்ஷிணபார்ஸ்²வே பரமேஸ்²வரஸ்ய தூ³த ஏக உபஸ்தி²தோ த³ர்ஸ²நம்’ த³தௌ³|
௧௧அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
12 தம்’ த்³ரு’ஷ்ட்வா ஸிக²ரிய உத்³விவிஜே ஸ²ஸ²ங்கே ச|
௧௨சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான்.
13 ததா³ ஸ தூ³தஸ்தம்’ ப³பா⁴ஷே ஹே ஸிக²ரிய மா பை⁴ஸ்தவ ப்ரார்த²நா க்³ராஹ்யா ஜாதா தவ பா⁴ர்ய்யா இலீஸே²வா புத்ரம்’ ப்ரஸோஷ்யதே தஸ்ய நாம யோஹந் இதி கரிஷ்யஸி|
௧௩கர்த்தருடைய தூதன் அவனைப் பார்த்து: சகரியாவே, பயப்படாதே, உன் விண்ணப்பம் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவனுக்கு யோவான் என்று பெயர் இடுவாயாக.
14 கிஞ்ச த்வம்’ ஸாநந்த³: ஸஹர்ஷஸ்²ச ப⁴விஷ்யஸி தஸ்ய ஜந்மநி ப³ஹவ ஆநந்தி³ஷ்யந்தி ச|
௧௪உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
15 யதோ ஹேதோ: ஸ பரமேஸ்²வரஸ்ய கோ³சரே மஹாந் ப⁴விஷ்யதி ததா² த்³ராக்ஷாரஸம்’ ஸுராம்’ வா கிமபி ந பாஸ்யதி, அபரம்’ ஜந்மாரப்⁴ய பவித்ரேணாத்மநா பரிபூர்ண:
௧௫அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான்.
16 ஸந் இஸ்ராயேல்வம்’ஸீ²யாந் அநேகாந் ப்ரபோ⁴: பரமேஸ்²வரஸ்ய மார்க³மாநேஷ்யதி|
௧௬அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
17 ஸந்தாநாந் ப்ரதி பித்ரு’ணாம்’ மநாம்’ஸி த⁴ர்ம்மஜ்ஞாநம்’ ப்ரத்யநாஜ்ஞாக்³ராஹிணஸ்²ச பராவர்த்தயிதும்’, ப்ரபோ⁴: பரமேஸ்²வரஸ்ய ஸேவார்த²ம் ஏகாம்’ ஸஜ்ஜிதஜாதிம்’ விதா⁴துஞ்ச ஸ ஏலியரூபாத்மஸ²க்திப்ராப்தஸ்தஸ்யாக்³ரே க³மிஷ்யதி|
௧௭பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான மக்களை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்த, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உள்ளவனாக கர்த்தருக்கு முன்னே நடப்பான் என்றான்.
18 ததா³ ஸிக²ரியோ தூ³தமவாதீ³த் கத²மேதத்³ வேத்ஸ்யாமி? யதோஹம்’ வ்ரு’த்³தோ⁴ மம பா⁴ர்ய்யா ச வ்ரு’த்³தா⁴|
௧௮அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எப்படி அறிவேன்; நான் முதிர்வயதானவனாக இருக்கிறேன், என் மனைவியும் வயதானவளாக இருக்கிறாளே என்றான்.
19 ததோ தூ³த: ப்ரத்யுவாச பஸ்²யேஸ்²வரஸ்ய ஸாக்ஷாத்³வர்த்தீ ஜிப்³ராயேல்நாமா தூ³தோஹம்’ த்வயா ஸஹ கதா²ம்’ க³தி³தும்’ துப்⁴யமிமாம்’ ஸு²ப⁴வார்த்தாம்’ தா³துஞ்ச ப்ரேஷித: |
௧௯தேவதூதன் அவனுக்கு மறுமொழியாக: நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
20 கிந்து மதீ³யம்’ வாக்யம்’ காலே ப²லிஷ்யதி தத் த்வயா ந ப்ரதீதம் அத: காரணாத்³ யாவதே³வ தாநி ந ஸேத்ஸ்யந்தி தாவத் த்வம்’ வக்தும்’மஸ²க்தோ மூகோ ப⁴வ|
௨0இதோ, குறித்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசிக்காதபடியால் இவைகள் நிறைவேறும் நாள்வரை நீ பேசமுடியாமல் ஊமையாக இருப்பாய் என்றான்.
21 ததா³நீம்’ யே யே லோகா: ஸிக²ரியமபைக்ஷந்த தே மத்⁴யேமந்தி³ரம்’ தஸ்ய ப³ஹுவிலம்பா³த்³ ஆஸ்²சர்ய்யம்’ மேநிரே|
௨௧மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
22 ஸ ப³ஹிராக³தோ யதா³ கிமபி வாக்யம்’ வக்துமஸ²க்த: ஸங்கேதம்’ க்ரு’த்வா நி: ஸ²ப்³த³ஸ்தஸ்யௌ ததா³ மத்⁴யேமந்தி³ரம்’ கஸ்யசித்³ த³ர்ஸ²நம்’ தேந ப்ராப்தம் இதி ஸர்வ்வே பு³பு³தி⁴ரே|
௨௨அவன் வெளியே வந்தபோது மக்களிடத்தில் பேச முடியாமலிருந்தான்; எனவே தேவாலயத்தில் அவன் ஒரு தரிசனத்தைப் பார்த்தான் என்று அறிந்துகொண்டார்கள். அவன் ஊமையாக இருந்தபடியால் அவர்களுக்கு சைகைகாட்டினான்.
23 அநந்தரம்’ தஸ்ய ஸேவநபர்ய்யாயே ஸம்பூர்ணே ஸதி ஸ நிஜகே³ஹம்’ ஜகா³ம|
௨௩அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டிற்குப்போனான்.
24 கதிபயதி³நேஷு க³தேஷு தஸ்ய பா⁴ர்ய்யா இலீஸே²வா க³ர்ப்³ப⁴வதீ ப³பூ⁴வ
௨௪அதற்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பந்தரித்து: மக்கள் மத்தியில் எனக்கு உண்டாயிருந்த அவமானத்தை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் இரக்கம் வைத்து,
25 பஸ்²சாத் ஸா பஞ்சமாஸாந் ஸம்’கோ³ப்யாகத²யத் லோகாநாம்’ ஸமக்ஷம்’ மமாபமாநம்’ க²ண்ட³யிதும்’ பரமேஸ்²வரோ மயி த்³ரு’ஷ்டிம்’ பாதயித்வா கர்ம்மேத்³ரு’ஸ²ம்’ க்ரு’தவாந்|
௨௫எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள்.
26 அபரஞ்ச தஸ்யா க³ர்ப்³ப⁴ஸ்ய ஷஷ்டே² மாஸே ஜாதே கா³லீல்ப்ரதே³ஸீ²யநாஸரத்புரே
௨௬எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில்,
27 தா³யூதோ³ வம்’ஸீ²யாய யூஷப்²நாம்நே புருஷாய யா மரியம்நாமகுமாரீ வாக்³த³த்தாஸீத் தஸ்யா: ஸமீபம்’ ஜிப்³ராயேல் தூ³த ஈஸ்²வரேண ப்ரஹித: |
௨௭தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள்.
28 ஸ க³த்வா ஜகா³த³ ஹே ஈஸ்²வராநுக்³ரு’ஹீதகந்யே தவ ஸு²ப⁴ம்’ பூ⁴யாத் ப்ரபு⁴: பரமேஸ்²வரஸ்தவ ஸஹாயோஸ்தி நாரீணாம்’ மத்⁴யே த்வமேவ த⁴ந்யா|
௨௮அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
29 ததா³நீம்’ ஸா தம்’ த்³ரு’ஷ்ட்வா தஸ்ய வாக்யத உத்³விஜ்ய கீத்³ரு’ஸ²ம்’ பா⁴ஷணமித³ம் இதி மநஸா சிந்தயாமாஸ|
௨௯அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
30 ததோ தூ³தோ(அ)வத³த் ஹே மரியம் ப⁴யம்’ மாகார்ஷீ: , த்வயி பரமேஸ்²வரஸ்யாநுக்³ரஹோஸ்தி|
௩0தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய்.
31 பஸ்²ய த்வம்’ க³ர்ப்³ப⁴ம்’ த்⁴ரு’த்வா புத்ரம்’ ப்ரஸோஷ்யஸே தஸ்ய நாம யீஸு²ரிதி கரிஷ்யஸி|
௩௧இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.
32 ஸ மஹாந் ப⁴விஷ்யதி ததா² ஸர்வ்வேப்⁴ய: ஸ்²ரேஷ்ட²ஸ்ய புத்ர இதி க்²யாஸ்யதி; அபரம்’ ப்ரபு⁴: பரமேஸ்²வரஸ்தஸ்ய பிதுர்தா³யூத³: ஸிம்’ஹாஸநம்’ தஸ்மை தா³ஸ்யதி;
௩௨அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
33 ததா² ஸ யாகூபோ³ வம்’ஸோ²பரி ஸர்வ்வதா³ ராஜத்வம்’ கரிஷ்யதி, தஸ்ய ராஜத்வஸ்யாந்தோ ந ப⁴விஷ்யதி| (aiōn )
௩௩அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn )
34 ததா³ மரியம் தம்’ தூ³தம்’ ப³பா⁴ஷே நாஹம்’ புருஷஸங்க³ம்’ கரோமி தர்ஹி கத²மேதத் ஸம்ப⁴விஷ்யதி?
௩௪அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள்.
35 ததோ தூ³தோ(அ)கத²யத் பவித்ர ஆத்மா த்வாமாஸ்²ராயிஷ்யதி ததா² ஸர்வ்வஸ்²ரேஷ்ட²ஸ்ய ஸ²க்திஸ்தவோபரி சா²யாம்’ கரிஷ்யதி ததோ ஹேதோஸ்தவ க³ர்ப்³பா⁴த்³ ய: பவித்ரபா³லகோ ஜநிஷ்யதே ஸ ஈஸ்²வரபுத்ர இதி க்²யாதிம்’ ப்ராப்ஸ்யதி|
௩௫தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்.
36 அபரஞ்ச பஸ்²ய தவ ஜ்ஞாதிரிலீஸே²வா யாம்’ ஸர்வ்வே ப³ந்த்⁴யாமவத³ந் இதா³நீம்’ ஸா வார்த்³த⁴க்யே ஸந்தாநமேகம்’ க³ர்ப்³பே⁴(அ)தா⁴ரயத் தஸ்ய ஷஷ்ட²மாஸோபூ⁴த்|
௩௬இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம்.
37 கிமபி கர்ம்ம நாஸாத்⁴யம் ஈஸ்²வரஸ்ய|
௩௭தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான்.
38 ததா³ மரியம் ஜகா³த³, பஸ்²ய ப்ரபே⁴ரஹம்’ தா³ஸீ மஹ்யம்’ தவ வாக்யாநுஸாரேண ஸர்வ்வமேதத்³ க⁴டதாம்; அநநதரம்’ தூ³தஸ்தஸ்யா: ஸமீபாத் ப்ரதஸ்தே²|
௩௮அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.
39 அத² கதிபயதி³நாத் பரம்’ மரியம் தஸ்மாத் பர்வ்வதமயப்ரதே³ஸீ²யயிஹூதா³யா நக³ரமேகம்’ ஸீ²க்⁴ரம்’ க³த்வா
௩௯அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய்,
40 ஸிக²ரியயாஜகஸ்ய க்³ரு’ஹம்’ ப்ரவிஸ்²ய தஸ்ய ஜாயாம் இலீஸே²வாம்’ ஸம்போ³த்⁴யாவத³த்|
௪0சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41 ததோ மரியம: ஸம்போ³த⁴நவாக்யே இலீஸே²வாயா: கர்ணயோ: ப்ரவிஷ்டமாத்ரே ஸதி தஸ்யா க³ர்ப்³ப⁴ஸ்த²பா³லகோ நநர்த்த| தத இலீஸே²வா பவித்ரேணாத்மநா பரிபூர்ணா ஸதீ
௪௧எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
42 ப்ரோச்சைர்க³தி³துமாரேபே⁴, யோஷிதாம்’ மத்⁴யே த்வமேவ த⁴ந்யா, தவ க³ர்ப்³ப⁴ஸ்த²: ஸி²ஸு²ஸ்²ச த⁴ந்ய: |
௪௨அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
43 த்வம்’ ப்ரபோ⁴ர்மாதா, மம நிவேஸ²நே த்வயா சரணாவர்பிதௌ, மமாத்³ய ஸௌபா⁴க்³யமேதத்|
௪௩என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்!
44 பஸ்²ய தவ வாக்யே மம கர்ணயோ: ப்ரவிஷ்டமாத்ரே ஸதி மமோத³ரஸ்த²: ஸி²ஸு²ராநந்தா³ந் நநர்த்த|
௪௪இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.
45 யா ஸ்த்ரீ வ்யஸ்²வஸீத் ஸா த⁴ந்யா, யதோ ஹேதோஸ்தாம்’ ப்ரதி பரமேஸ்²வரோக்தம்’ வாக்யம்’ ஸர்வ்வம்’ ஸித்³த⁴ம்’ ப⁴விஷ்யதி|
௪௫விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
46 ததா³நீம்’ மரியம் ஜகா³த³| த⁴ந்யவாத³ம்’ பரேஸ²ஸ்ய கரோதி மாமகம்’ மந: |
௪௬அப்பொழுது மரியாள்: “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது.
47 மமாத்மா தாரகேஸே² ச ஸமுல்லாஸம்’ ப்ரக³ச்ச²தி|
௪௭என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
48 அகரோத் ஸ ப்ரபு⁴ ர்து³ஷ்டிம்’ ஸ்வதா³ஸ்யா து³ர்க³திம்’ ப்ரதி| பஸ்²யாத்³யாரப்⁴ய மாம்’ த⁴ந்யாம்’ வக்ஷ்யந்தி புருஷா: ஸதா³|
௪௮தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள்.
49 ய: ஸர்வ்வஸ²க்திமாந் யஸ்ய நாமாபி ச பவித்ரகம்’| ஸ ஏவ ஸுமஹத்கர்ம்ம க்ரு’தவாந் மந்நிமித்தகம்’|
௪௯வல்லமையுடைய தேவன் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமானது.
50 யே பி³ப்⁴யதி ஜநாஸ்தஸ்மாத் தேஷாம்’ ஸந்தாநபம்’க்திஷு| அநுகம்பா ததீ³யா ச ஸர்வ்வதை³வ ஸுதிஷ்ட²தி|
௫0அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
51 ஸ்வபா³ஹுப³லதஸ்தேந ப்ராகாஸ்²யத பராக்ரம: | மந: குமந்த்ரணாஸார்த்³த⁴ம்’ விகீர்ய்யந்தே(அ)பி⁴மாநிந: |
௫௧அவர் தம்முடைய கரங்களினாலே வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் சிதறிப்போகப்பண்ணினார்.
52 ஸிம்’ஹாஸநக³தால்லோகாந் ப³லிநஸ்²சாவரோஹ்ய ஸ: | பதே³ஷூச்சேஷு லோகாம்’ஸ்து க்ஷுத்³ராந் ஸம்’ஸ்தா²பயத்யபி|
௫௨ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
53 க்ஷுதி⁴தாந் மாநவாந் த்³ரவ்யைருத்தமை: பரிதர்ப்ய ஸ: | ஸகலாந் த⁴நிநோ லோகாந் விஸ்ரு’ஜேத்³ ரிக்தஹஸ்தகாந்|
௫௩பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக அனுப்பிவிட்டார்.
54 இப்³ராஹீமி ச தத்³வம்’ஸே² யா த³யாஸ்தி ஸதை³வ தாம்’| ஸ்ம்ரு’த்வா புரா பித்ரு’ணாம்’ நோ யதா² ஸாக்ஷாத் ப்ரதிஸ்²ருதம்’| (aiōn )
௫௪நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn )
55 இஸ்ராயேல்ஸேவகஸ்தேந ததோ²பக்ரியதே ஸ்வயம்’||
௫௫அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு உதவி செய்தார்” என்றாள்.
56 அநந்தரம்’ மரியம் ப்ராயேண மாஸத்ரயம் இலீஸே²வயா ஸஹோஷித்வா வ்யாகு⁴ய்ய நிஜநிவேஸ²நம்’ யயௌ|
௫௬மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.
57 தத³நந்தரம் இலீஸே²வாயா: ப்ரஸவகால உபஸ்தி²தே ஸதி ஸா புத்ரம்’ ப்ராஸோஷ்ட|
௫௭எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
58 தத: பரமேஸ்²வரஸ்தஸ்யாம்’ மஹாநுக்³ரஹம்’ க்ரு’தவாந் ஏதத் ஸ்²ருத்வா ஸமீபவாஸிந: குடும்பா³ஸ்²சாக³த்ய தயா ஸஹ முமுதி³ரே|
௫௮கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.
59 ததா²ஷ்டமே தி³நே தே பா³லகஸ்ய த்வசம்’ சே²த்தும் ஏத்ய தஸ்ய பித்ரு’நாமாநுரூபம்’ தந்நாம ஸிக²ரிய இதி கர்த்துமீஷு: |
௫௯எட்டாவது நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ண அவர்கள் எல்லோரும் கூடிவந்து, குழந்தையின் தகப்பனுடைய பெயராகிய சகரியா என்ற பெயரையே குழந்தைக்கும் வைக்க விரும்பினார்கள்.
60 கிந்து தஸ்ய மாதாகத²யத் தந்ந, நாமாஸ்ய யோஹந் இதி கர்த்தவ்யம்|
௬0அப்பொழுது எலிசெபெத்து: “அப்படி வேண்டாம், குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்கவேண்டும் என்றாள்.
61 ததா³ தே வ்யாஹரந் தவ வம்’ஸ²மத்⁴யே நாமேத்³ரு’ஸ²ம்’ கஸ்யாபி நாஸ்தி|
௬௧அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி,
62 தத: பரம்’ தஸ்ய பிதரம்’ ஸிக²ரியம்’ ப்ரதி ஸங்கேத்ய பப்ரச்சு²: ஸி²ஸோ²: கிம்’ நாம காரிஷ்யதே?
௬௨சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
63 தத: ஸ ப²லகமேகம்’ யாசித்வா லிலேக² தஸ்ய நாம யோஹந் ப⁴விஷ்யதி| தஸ்மாத் ஸர்வ்வே ஆஸ்²சர்ய்யம்’ மேநிரே|
௬௩அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி,” இவன் பெயர் யோவான்,” என்று எழுதினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
64 தத்க்ஷணம்’ ஸிக²ரியஸ்ய ஜிஹ்வாஜாட்³யே(அ)பக³தே ஸ முக²ம்’ வ்யாதா³ய ஸ்பஷ்டவர்ணமுச்சார்ய்ய ஈஸ்²வரஸ்ய கு³ணாநுவாத³ம்’ சகார|
௬௪உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான்.
65 தஸ்மாச்சதுர்தி³க்ஸ்தா²: ஸமீபவாஸிலோகா பீ⁴தா ஏவமேதா: ஸர்வ்வா: கதா² யிஹூதா³யா: பர்வ்வதமயப்ரதே³ஸ²ஸ்ய ஸர்வ்வத்ர ப்ரசாரிதா: |
௬௫அதினால் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும் பயம் உண்டானது. மேலும் யூதேயா மலைநாடு முழுவதும் இந்தச் செய்தி பரவி, இதைக்குறித்து அதிகமாகப் பேசப்பட்டது.
66 தஸ்மாத் ஸ்²ரோதாரோ மந: ஸு ஸ்தா²பயித்வா கத²யாம்ப³பூ⁴வு: கீத்³ரு’ஸோ²யம்’ பா³லோ ப⁴விஷ்யதி? அத² பரமேஸ்²வரஸ்தஸ்ய ஸஹாயோபூ⁴த்|
௬௬இதைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் தங்களுடைய மனதிலே நடந்தவைகளை நினைத்து, இந்தக் குழந்தை வளர்ந்து எப்படிப்பட்ட காரியங்களைச் செய்யுமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தக் குழந்தையோடு இருந்தது.
67 ததா³ யோஹந: பிதா ஸிக²ரிய: பவித்ரேணாத்மநா பரிபூர்ண: ஸந் ஏதாத்³ரு’ஸ²ம்’ ப⁴விஷ்யத்³வாக்யம்’ கத²யாமாஸ|
௬௭அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
68 இஸ்ராயேல: ப்ரபு⁴ ர்யஸ்து ஸ த⁴ந்ய: பரமேஸ்²வர: | அநுக்³ரு’ஹ்ய நிஜால்லோகாந் ஸ ஏவ பரிமோசயேத்|
௬௮“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
69 விபக்ஷஜநஹஸ்தேப்⁴யோ யதா² மோச்யாமஹே வயம்’| யாவஜ்ஜீவஞ்ச த⁴ர்ம்மேண ஸாரல்யேந ச நிர்ப⁴யா: |
௬௯அவர் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
70 ஸேவாமஹை தமேவைகம் ஏதத்காரணமேவ ச| ஸ்வகீயம்’ ஸுபவித்ரஞ்ச ஸம்’ஸ்ம்ரு’த்ய நியமம்’ ஸதா³|
௭0தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn )
71 க்ரு’பயா புருஷாந் பூர்வ்வாந் நிகஷார்தா²த்து ந: பிது: | இப்³ராஹீம: ஸமீபே யம்’ ஸ²பத²ம்’ க்ரு’தவாந் புரா|
௭௧உங்களுடைய சத்துருக்களின் கைகளில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியம் செய்யவும் கட்டளையிடுவேன் என்று,
72 தமேவ ஸப²லம்’ கர்த்தம்’ ததா² ஸ²த்ருக³ணஸ்ய ச| ரு’தீயாகாரிணஸ்²சைவ கரேப்⁴யோ ரக்ஷணாய ந: |
௭௨அவர் நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
73 ஸ்ரு’ஷ்டே: ப்ரத²மத: ஸ்வீயை: பவித்ரை ர்பா⁴விவாதி³பி⁴: | (aiōn )
௭௩ஆதிமுதல் கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தேவன் சொன்னபடியே,
74 யதோ²க்தவாந் ததா² ஸ்வஸ்ய தா³யூத³: ஸேவகஸ்ய து|
௭௪தமது மக்களைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களிடம் இருந்தும், நம்மைப் பகைக்கிற எல்லோருடைய கைகளில் இருந்தும், நம்மை இரட்சிப்பதற்காக,
75 வம்’ஸே² த்ராதாரமேகம்’ ஸ ஸமுத்பாதி³தவாந் ஸ்வயம்|
௭௫தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பினார்.
76 அதோ ஹே பா³லக த்வந்து ஸர்வ்வேப்⁴ய: ஸ்²ரேஷ்ட² ஏவ ய: | தஸ்யைவ பா⁴விவாதீ³தி ப்ரவிக்²யாதோ ப⁴விஷ்யஸி| அஸ்மாகம்’ சரணாந் க்ஷேமே மார்கே³ சாலயிதும்’ ஸதா³| ஏவம்’ த்⁴வாந்தே(அ)ர்த²தோ ம்ரு’த்யோஸ்²சா²யாயாம்’ யே து மாநவா: |
௭௬என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
77 உபவிஷ்டாஸ்து தாநேவ ப்ரகாஸ²யிதுமேவ ஹி| க்ரு’த்வா மஹாநுகம்பாம்’ ஹி யாமேவ பரமேஸ்²வர: |
௭௭நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய மக்களுக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னே நடந்துபோவாய்.
78 ஊர்த்³வ்வாத் ஸூர்ய்யமுதா³ய்யைவாஸ்மப்⁴யம்’ ப்ராதா³த்து த³ர்ஸ²நம்’| தயாநுகம்பயா ஸ்வஸ்ய லோகாநாம்’ பாபமோசநே|
௭௮இருளிலும், மரண பயத்திலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கவும்,
79 பரித்ராணஸ்ய தேப்⁴யோ ஹி ஜ்ஞாநவிஸ்²ராணநாய ச| ப்ரபோ⁴ ர்மார்க³ம்’ பரிஷ்கர்த்தும்’ தஸ்யாக்³ராயீ ப⁴விஷ்யஸி||
௭௯நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அந்த இரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய சூரியன் நம்மிடம் வந்திருக்கிறது” என்றான்.
80 அத² பா³லக: ஸ²ரீரேண பு³த்³த்⁴யா ச வர்த்³தி⁴துமாரேபே⁴; அபரஞ்ச ஸ இஸ்ராயேலோ வம்’ஸீ²யலோகாநாம்’ ஸமீபே யாவந்ந ப்ரகடீபூ⁴தஸ்தாஸ்தாவத் ப்ராந்தரே ந்யவஸத்|
௮0அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலனடைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படையாக உபதேசிக்கும் நாள் வரும்வரைக்கும் வனாந்திரங்களிலே வாழ்ந்து வந்தான்.