< မာရ္ကး 15 >
1 အထ ပြဘာတေ သတိ ပြဓာနယာဇကား ပြာဉ္စ ဥပါဓျာယား သရွွေ မန္တြိဏၑ္စ သဘာံ ကၖတွာ ယီၑုံ ဗန္ဓယိတွ ပီလာတာချသျ ဒေၑာဓိပတေး သဝိဓံ နီတွာ သမရ္ပယာမာသုး၊
௧அதிகாலையிலே, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, காவலர்கள் இயேசுவின் கரங்களைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்புக்கொடுத்தார்கள்.
2 တဒါ ပီလာတသ္တံ ပၖၐ္ဋဝါန် တွံ ကိံ ယိဟူဒီယလောကာနာံ ရာဇာ? တတး သ ပြတျုက္တဝါန် သတျံ ဝဒသိ၊
௨பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
3 အပရံ ပြဓာနယာဇကာသ္တသျ ဗဟုၐု ဝါကျေၐု ဒေါၐမာရောပယာဉ္စကြုး ကိန္တု သ ကိမပိ န ပြတျုဝါစ၊
௩பிரதான ஆசாரியர்கள் இயேசுவின்மேல் அதிகமாகக் குற்றங்களைச் சுமத்தினார்கள். அவரோ அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை.
4 တဒါနီံ ပီလာတသ္တံ ပုနး ပပြစ္ဆ တွံ ကိံ နောတ္တရယသိ? ပၑျဲတေ တွဒွိရုဒ္ဓံ ကတိၐု သာဓျေၐု သာက္ၐံ ဒဒတိ၊
௪அப்பொழுது பிலாத்து மீண்டும் அவரைப் பார்த்து: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, அதற்கு நீ பதில் ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
5 ကန္တု ယီၑုသ္တဒါပိ နောတ္တရံ ဒဒေါ် တတး ပီလာတ အာၑ္စရျျံ ဇဂါမ၊
௫இயேசுவோ அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.
6 အပရဉ္စ ကာရာဗဒ္ဓေ ကသ္တိံၑ္စိတ် ဇနေ တန္မဟောတ္သဝကာလေ လောကဲ ရျာစိတေ ဒေၑာဓိပတိသ္တံ မောစယတိ၊
௬பண்டிகைநாட்களில், காவலில் உள்ள யாரை விடுதலையாக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலைபண்ணுவது பிலாத்துவிற்கு வழக்கமாக இருந்தது.
7 ယေ စ ပူရွွမုပပ္လဝမကာရ္ၐုရုပပ္လဝေ ဝဓမပိ ကၖတဝန္တသ္တေၐာံ မဓျေ တဒါနောံ ဗရဗ္ဗာနာမက ဧကော ဗဒ္ဓ အာသီတ်၊
௭கலவரம்பண்ணி அந்தக் கலவரத்திலே கொலைசெய்து, அதற்காகக் காவலில் அடைக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.
8 အတော ဟေတေား ပူရွွာပရီယာံ ရီတိကထာံ ကထယိတွာ လောကာ ဥစ္စဲရုဝန္တး ပီလာတသျ သမက္ၐံ နိဝေဒယာမာသုး၊
௮மக்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கேட்கத்தொடங்கினார்கள்.
9 တဒါ ပီလာတသ္တာနာစချော် တရှိ ကိံ ယိဟူဒီယာနာံ ရာဇာနံ မောစယိၐျာမိ? ယုၐ္မာဘိး ကိမိၐျတေ?
௯பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து.
10 ယတး ပြဓာနယာဇကာ ဤရ္ၐျာတ ဧဝ ယီၑုံ သမာရ္ပယန္နိတိ သ ဝိဝေဒ၊
௧0அவர்களைப் பார்த்து: நான் யூதர்களுடைய ராஜாவை உங்களுக்கு விடுதலை செய்யவேண்டுமா? என்று கேட்டான்.
11 ကိန္တု ယထာ ဗရဗ္ဗာံ မောစယတိ တထာ ပြာရ္ထယိတုံ ပြဓာနယာဇကာ လောကာန် ပြဝရ္တ္တယာမာသုး၊
௧௧பரபாசைத் தங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கேட்கச்சொல்லி, பிரதான ஆசாரியர்கள் மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
12 အထ ပီလာတး ပုနး ပၖၐ္ဋဝါန် တရှိ ယံ ယိဟူဒီယာနာံ ရာဇေတိ ဝဒထ တသျ ကိံ ကရိၐျာမိ ယုၐ္မာဘိး ကိမိၐျတေ?
௧௨பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து: அப்படியானால், யூதர்களுடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.
13 တဒါ တေ ပုနရပိ ပြောစ္စဲး ပြောစုသ္တံ ကြုၑေ ဝေဓယ၊
௧௩அவனைச் சிலுவையில் அறையும் என்று மீண்டும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
14 တသ္မာတ် ပီလာတး ကထိတဝါန် ကုတး? သ ကိံ ကုကရ္မ္မ ကၖတဝါန်? ကိန္တု တေ ပုနၑ္စ ရုဝန္တော ဝျာဇဟြုသ္တံ ကြုၑေ ဝေဓယ၊
௧௪அதற்கு பிலாத்து: ஏன்? இவன் என்னக் குற்றம் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று அதிகமாகக் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
15 တဒါ ပီလာတး သရွွာလ္လောကာန် တောၐယိတုမိစ္ဆန် ဗရဗ္ဗာံ မောစယိတွာ ယီၑုံ ကၑာဘိး ပြဟၖတျ ကြုၑေ ဝေဒ္ဓုံ တံ သမရ္ပယာမ္ဗဘူဝ၊
௧௫அப்பொழுது பிலாத்து மக்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாக, பரபாசை அவர்களுக்காக விடுதலைசெய்து, இயேசுவை சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
16 အနန္တရံ သဲနျဂဏော'ဋ္ဋာလိကာမ် အရ္ထာဒ် အဓိပတေ ရ္ဂၖဟံ ယီၑုံ နီတွာ သေနာနိဝဟံ သမာဟုယတ်၊
௧௬அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து,
17 ပၑ္စာတ် တေ တံ ဓူမလဝရ္ဏဝသ္တြံ ပရိဓာပျ ကဏ္ဋကမုကုဋံ ရစယိတွာ ၑိရသိ သမာရောပျ
௧௭சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து:
18 ဟေ ယိဟူဒီယာနာံ ရာဇန် နမသ္ကာရ ဣတျုက္တွာ တံ နမသ္ကရ္တ္တာမာရေဘိရေ၊
௧௮யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,
19 တသျောတ္တမာင်္ဂေ ဝေတြာဃာတံ စကြုသ္တဒ္ဂါတြေ နိၐ္ဌီဝဉ္စ နိစိက္ၐိပုး, တထာ တသျ သမ္မုခေ ဇာနုပါတံ ပြဏောမုး
௧௯அவர் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
20 ဣတ္ထမုပဟသျ ဓူမြဝရ္ဏဝသ္တြမ် ဥတ္တာရျျ တသျ ဝသ္တြံ တံ ပရျျဓာပယန် ကြုၑေ ဝေဒ္ဓုံ ဗဟိရ္နိနျုၑ္စ၊
௨0அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
21 တတး ပရံ သေကန္ဒရသျ ရုဖသျ စ ပိတာ ၑိမောန္နာမာ ကုရီဏီယလောက ဧကး ကုတၑ္စိဒ် ဂြာမာဒေတျ ပထိ ယာတိ တံ တေ ယီၑေား ကြုၑံ ဝေါဎုံ ဗလာဒ် ဒဓ္နုး၊
௨௧சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள்.
22 အထ ဂုလ္ဂလ္တာ အရ္ထာတ် ၑိရးကပါလနာမကံ သ္ထာနံ ယီၑုမာနီယ
௨௨கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய்,
23 တေ ဂန္ဓရသမိၑြိတံ ဒြာက္ၐာရသံ ပါတုံ တသ္မဲ ဒဒုး ကိန္တု သ န ဇဂြာဟ၊
௨௩வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
24 တသ္မိန် ကြုၑေ ဝိဒ္ဓေ သတိ တေၐာမေကဲကၑး ကိံ ပြာပ္သျတီတိ နိရ္ဏယာယ
௨௪அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள்.
25 တသျ ပရိဓေယာနာံ ဝိဘာဂါရ္ထံ ဂုဋိကာပါတံ စကြုး၊
௨௫அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள்.
26 အပရမ် ဧၐ ယိဟူဒီယာနာံ ရာဇေတိ လိခိတံ ဒေါၐပတြံ တသျ ၑိရဦရ္ဒွွမ် အာရောပယာဉ္စကြုး၊
௨௬அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள்.
27 တသျ ဝါမဒက္ၐိဏယော ရ္ဒွေါ် စော်ရော် ကြုၑယော ရွိဝိဓာတေ၊
௨௭இயேசுவோடு, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு திருடர்களைச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
28 တေနဲဝ "အပရာဓိဇနဲး သာရ္ဒ္ဓံ သ ဂဏိတော ဘဝိၐျတိ," ဣတိ ၑာသ္တြောက္တံ ဝစနံ သိဒ္ဓမဘူတ၊
௨௮அக்கிரமம் செய்கிறவர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினால் நிறைவேறியது.
29 အနန္တရံ မာရ္ဂေ ယေ ယေ လောကာ ဂမနာဂမနေ စကြုသ္တေ သရွွ ဧဝ ၑိရာံသျာန္ဒောလျ နိန္ဒန္တော ဇဂဒုး, ရေ မန္ဒိရနာၑက ရေ ဒိနတြယမဓျေ တန္နိရ္မ္မာယက,
௨௯அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே.
30 အဓုနာတ္မာနမ် အဝိတွာ ကြုၑာဒဝရောဟ၊
௩0உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள்.
31 ကိဉ္စ ပြဓာနယာဇကာ အဓျာပကာၑ္စ တဒွတ် တိရသ္ကၖတျ ပရသ္ပရံ စစက္ၐိရေ ဧၐ ပရာနာဝတ် ကိန္တု သွမဝိတုံ န ၑက္နောတိ၊
௩௧அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி: இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை.
32 ယဒီသြာယေလော ရာဇာဘိၐိက္တသ္တြာတာ ဘဝတိ တရှျဓုနဲန ကြုၑာဒဝရောဟတု ဝယံ တဒ် ဒၖၐ္ဋွာ ဝိၑွသိၐျာမး; ကိဉ္စ ယော် လောကော် တေန သာရ္ဒ္ဓံ ကြုၑေ 'ဝိဓျေတာံ တာဝပိ တံ နိရ္ဘရ္တ္သယာမာသတုး၊
௩௨நாம் பார்த்து விசுவாசிக்க, இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவருடன் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை அவமதித்தார்கள்.
33 အထ ဒွိတီယယာမာတ် တၖတီယယာမံ ယာဝတ် သရွွော ဒေၑး သာန္ဓကာရောဘူတ်၊
௩௩நண்பகல் தொடங்கி மாலை மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருள் உண்டாயிருந்தது.
34 တတသ္တၖတီယပြဟရေ ယီၑုရုစ္စဲရဝဒတ် ဧလီ ဧလီ လာမာ ၑိဝက္တနီ အရ္ထာဒ် "ဟေ မဒီၑ မဒီၑ တွံ ပရျျတျာက္ၐီး ကုတော ဟိ မာံ?"
௩௪மாலை மூன்று மணியளவில், இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று அதிகச் சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம்.
35 တဒါ သမီပသ္ထလောကာနာံ ကေစိတ် တဒွါကျံ နိၑမျာစချုး ပၑျဲၐ ဧလိယမ် အာဟူယတိ၊
௩௫அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
36 တတ ဧကော ဇနော ဓာဝိတွာဂတျ သ္ပဉ္ဇေ 'မ္လရသံ ပူရယိတွာ တံ နဍာဂြေ နိဓာယ ပါတုံ တသ္မဲ ဒတ္တွာဝဒတ် တိၐ္ဌ ဧလိယ ဧနမဝရောဟယိတုမ် ဧတိ န ဝေတိ ပၑျာမိ၊
௩௬ஒருவன் ஓடி, கடல் காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான்.
37 အထ ယီၑုရုစ္စဲး သမာဟူယ ပြာဏာန် ဇဟော်၊
௩௭இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
38 တဒါ မန္ဒိရသျ ဇဝနိကောရ္ဒွွာဒဓးရျျန္တာ ဝိဒီရ္ဏာ ဒွိခဏ္ဍာဘူတ်၊
௩௮அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேலே இருந்து கீழே வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
39 ကိဉ္စ ဣတ္ထမုစ္စဲရာဟူယ ပြာဏာန် တျဇန္တံ တံ ဒၖၐ္ဒွါ တဒြက္ၐဏာယ နိယုက္တော ယး သေနာပတိရာသီတ် သောဝဒတ် နရောယမ် ဤၑွရပုတြ ဣတိ သတျမ်၊
௩௯அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைப் பார்த்தபோது: உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன் என்றான்.
40 တဒါနီံ မဂ္ဒလီနီ မရိသမ် ကနိၐ္ဌယာကူဗော ယောသေၑ္စ မာတာနျမရိယမ် ၑာလောမီ စ ယား သ္တြိယော
௪0சில பெண்களும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரோடு சென்று, அவருக்கு ஊழியம் செய்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
41 ဂါလီလ္ပြဒေၑေ ယီၑုံ သေဝိတွာ တဒနုဂါမိနျော ဇာတာ ဣမာသ္တဒနျာၑ္စ ယာ အနေကာ နာရျော ယီၑုနာ သာရ္ဒ္ဓံ ယိရူၑာလမမာယာတာသ္တာၑ္စ ဒူရာတ် တာနိ ဒဒၖၑုး၊
௪௧அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த மற்ற பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.
42 အထာသာဒနဒိနသျာရ္ထာဒ် ဝိၑြာမဝါရာတ် ပူရွွဒိနသျ သာယံကာလ အာဂတ
௪௨ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாக இருந்தபடியால், மாலைநேரத்தில்.
43 ဤၑွရရာဇျာပေက္ၐျရိမထီယယူၐဖနာမာ မာနျမန္တြီ သမေတျ ပီလာတသဝိဓံ နိရ္ဘယော ဂတွာ ယီၑောရ္ဒေဟံ ယယာစေ၊
௪௩மதிப்புமிக்கஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய ராஜ்யத்தின் வருகைக்காக காத்திருந்த யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
44 ကိန္တု သ ဣဒါနီံ မၖတး ပီလာတ ဣတျသမ္ဘဝံ မတွာ ၑတသေနာပတိမာဟူယ သ ကဒါ မၖတ ဣတိ ပပြစ္ဆ၊
௪௪அவர் இவ்வளவு சீக்கிரமாக மரித்துவிட்டார் என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைத்து: அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மரித்தது உண்மையா என்று கேட்டான்.
45 ၑတသေမနာပတိမုခါတ် တဇ္ဇ္ဉာတွာ ယူၐဖေ ယီၑောရ္ဒေဟံ ဒဒေါ်၊
௪௫நூற்றுக்கு அதிபதியின் மூலம் அதைத் தெரிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பிடம் கொடுத்தான்.
46 ပၑ္စာတ် သ သူက္ၐ္မံ ဝါသး ကြီတွာ ယီၑေား ကာယမဝရောဟျ တေန ဝါသသာ ဝေၐ္ဋာယိတွာ ဂိရော် ခါတၑ္မၑာနေ သ္ထာပိတဝါန် ပါၐာဏံ လောဌယိတွာ ဒွါရိ နိဒဓေ၊
௪௬அவன்போய், மெல்லிய போர்வையை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் போர்வையிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி வைத்தான்.
47 ကိန္တု ယတြ သောသ္ထာပျတ တတ မဂ္ဒလီနီ မရိယမ် ယောသိမာတၖမရိယမ် စ ဒဒၖၑတၖး၊
௪௭அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.