< গালাতিনঃ 1 >

1 মনুষ্যেভ্যো নহি মনুষ্যৈৰপি নহি কিন্তু যীশুখ্ৰীষ্টেন মৃতগণমধ্যাৎ তস্যোত্থাপযিত্ৰা পিত্ৰেশ্ৱৰেণ চ প্ৰেৰিতো যোঽহং পৌলঃ সোঽহং
மனிதர்களாலும் இல்லை, மனிதர்கள் மூலமாகவும் இல்லை, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின பிதாவாகிய தேவனாலும் அப்போஸ்தலனாக இருக்கிற பவுலாகிய நானும்,
2 মৎসহৱৰ্ত্তিনো ভ্ৰাতৰশ্চ ৱযং গালাতীযদেশস্থাঃ সমিতীঃ প্ৰতি পত্ৰং লিখামঃ|
என்னோடு இருக்கிற சகோதரர்கள் எல்லோரும், கலாத்தியா நாட்டில் உள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது:
3 পিত্ৰেশ্ৱৰেণাস্মাংক প্ৰভুনা যীশুনা খ্ৰীষ্টেন চ যুষ্মভ্যম্ অনুগ্ৰহঃ শান্তিশ্চ দীযতাং|
பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக;
4 অস্মাকং তাতেশ্ৱৰেস্যেচ্ছানুসাৰেণ ৱৰ্ত্তমানাৎ কুৎসিতসংসাৰাদ্ অস্মান্ নিস্তাৰযিতুং যো (aiōn g165)
அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (aiōn g165)
5 যীশুৰস্মাকং পাপহেতোৰাত্মোৎসৰ্গং কৃতৱান্ স সৰ্ৱ্ৱদা ধন্যো ভূযাৎ| তথাস্তু| (aiōn g165)
அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
6 খ্ৰীষ্টস্যানুগ্ৰহেণ যো যুষ্মান্ আহূতৱান্ তস্মান্নিৱৃত্য যূযম্ অতিতূৰ্ণম্ অন্যং সুসংৱাদম্ অন্ৱৱৰ্ত্তত তত্ৰাহং ৱিস্মযং মন্যে|
உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாகவிட்டு, வேறொரு வித்தியாசமான நற்செய்திக்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;
7 সোঽন্যসুসংৱাদঃ সুসংৱাদো নহি কিন্তু কেচিৎ মানৱা যুষ্মান্ চঞ্চলীকুৰ্ৱ্ৱন্তি খ্ৰীষ্টীযসুসংৱাদস্য ৱিপৰ্য্যযং কৰ্ত্তুং চেষ্টন্তে চ|
வேறொரு நற்செய்தி இல்லையே; சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற விரும்புகிறார்கள்.
8 যুষ্মাকং সন্নিধৌ যঃ সুসংৱাদোঽস্মাভি ৰ্ঘোষিতস্তস্মাদ্ অন্যঃ সুসংৱাদোঽস্মাকং স্ৱৰ্গীযদূতানাং ৱা মধ্যে কেনচিদ্ যদি ঘোষ্যতে তৰ্হি স শপ্তো ভৱতু|
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைத்தவிர, நாங்களோ அல்லது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனோ, வேறொரு நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.
9 পূৰ্ৱ্ৱং যদ্ৱদ্ অকথযাম, ইদানীমহং পুনস্তদ্ৱৎ কথযামি যূযং যং সুসংৱাদং গৃহীতৱন্তস্তস্মাদ্ অন্যো যেন কেনচিদ্ যুষ্মৎসন্নিধৌ ঘোষ্যতে স শপ্তো ভৱতু|
முன்பே சொன்னதுபோல மீண்டும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைத்தவிர வேறொரு நற்செய்தியை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.
10 ১০ সাম্প্ৰতং কমহম্ অনুনযামি? ঈশ্ৱৰং কিংৱা মানৱান্? অহং কিং মানুষেভ্যো ৰোচিতুং যতে? যদ্যহম্ ইদানীমপি মানুষেভ্যো ৰুৰুচিষেয তৰ্হি খ্ৰীষ্টস্য পৰিচাৰকো ন ভৱামি|
௧0இப்பொழுது மனிதனுடையதா, தேவனுடையதா? யாருடைய அங்கீகாரத்தைத் தேடுகிறேன்? மனிதனைப் பிரியப்படுத்தப் பார்க்கிறேனா? நான் இன்னும் மனிதனைப் பிரியப்படுத்துகிறவனாக இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் இல்லையே.
11 ১১ হে ভ্ৰাতৰঃ, মযা যঃ সুসংৱাদো ঘোষিতঃ স মানুষান্ন লব্ধস্তদহং যুষ্মান্ জ্ঞাপযামি|
௧௧மேலும், சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி மனிதர்களுடைய யோசனையினால் உண்டானது இல்லையென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
12 ১২ অহং কস্মাচ্চিৎ মনুষ্যাৎ তং ন গৃহীতৱান্ ন ৱা শিক্ষিতৱান্ কেৱলং যীশোঃ খ্ৰীষ্টস্য প্ৰকাশনাদেৱ|
௧௨நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, மனிதனிடமிருந்து கற்றதும் இல்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
13 ১৩ পুৰা যিহূদিমতাচাৰী যদাহম্ আসং তদা যাদৃশম্ আচৰণম্ অকৰৱম্ ঈশ্ৱৰস্য সমিতিং প্ৰত্যতীৱোপদ্ৰৱং কুৰ্ৱ্ৱন্ যাদৃক্ তাং ৱ্যনাশযং তদৱশ্যং শ্ৰুতং যুষ্মাভিঃ|
௧௩நான் யூதமதத்தில் இருந்தபோது என்னுடைய நடத்தையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் அதிகமாக துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி;
14 ১৪ অপৰঞ্চ পূৰ্ৱ্ৱপুৰুষপৰম্পৰাগতেষু ৱাক্যেষ্ৱন্যাপেক্ষাতীৱাসক্তঃ সন্ অহং যিহূদিধৰ্ম্মতে মম সমৱযস্কান্ বহূন্ স্ৱজাতীযান্ অত্যশযি|
௧௪என் மக்களில் என் வயதுள்ள அநேகரைவிட யூதமதத்தில் தேறினவனாக, என் முற்பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக அதிக பக்திவைராக்கியம் உள்ளவனாக இருந்தேன்.
15 ১৫ কিঞ্চ য ঈশ্ৱৰো মাতৃগৰ্ভস্থং মাং পৃথক্ কৃৎৱা স্ৱীযানুগ্ৰহেণাহূতৱান্
௧௫அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,
16 ১৬ স যদা মযি স্ৱপুত্ৰং প্ৰকাশিতুং ভিন্নদেশীযানাং সমীপে ভযা তং ঘোষযিতুঞ্চাভ্যলষৎ তদাহং ক্ৰৱ্যশোণিতাভ্যাং সহ ন মন্ত্ৰযিৎৱা
௧௬தம்முடைய குமாரனை நான் யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியாக அறிவிப்பதற்கு, அவரை எனக்குள் வெளிப்படுத்த விருப்பமாக இருந்தபோது, உடனே நான் சரீரத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும்;
17 ১৭ পূৰ্ৱ্ৱনিযুক্তানাং প্ৰেৰিতানাং সমীপং যিৰূশালমং ন গৎৱাৰৱদেশং গতৱান্ পশ্চাৎ তৎস্থানাদ্ দম্মেষকনগৰং পৰাৱৃত্যাগতৱান্|
௧௭எனக்கு முன்பே எருசலேமில் அப்போஸ்தலர்களாக இருந்தவர்களிடம் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மீண்டும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.
18 ১৮ ততঃ পৰং ৱৰ্ষত্ৰযে ৱ্যতীতেঽহং পিতৰং সম্ভাষিতুং যিৰূশালমং গৎৱা পঞ্চদশদিনানি তেন সাৰ্দ্ধম্ অতিষ্ঠং|
௧௮மூன்று வருடங்களுக்குப்பின்பு, பேதுருவைப் பார்ப்பதற்காக நான் எருசலேமுக்குப்போய், அவனோடுகூட பதினைந்து நாட்கள் தங்கியிருந்தேன்.
19 ১৯ কিন্তু তং প্ৰভো ৰ্ভ্ৰাতৰং যাকূবঞ্চ ৱিনা প্ৰেৰিতানাং নান্যং কমপ্যপশ্যং|
௧௯கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத்தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் பார்க்கவில்லை.
20 ২০ যান্যেতানি ৱাক্যানি মযা লিখ্যন্তে তান্যনৃতানি ন সন্তি তদ্ ঈশ্ৱৰো জানাতি|
௨0நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய் இல்லை என்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாகச் சொல்லுகிறேன்.
21 ২১ ততঃ পৰম্ অহং সুৰিযাং কিলিকিযাঞ্চ দেশৌ গতৱান্|
௨௧பின்பு, சீரியா சிலிசியா நாடுகளுக்குச் சென்றேன்.
22 ২২ তদানীং যিহূদাদেশস্থানাং খ্ৰীষ্টস্য সমিতীনাং লোকাঃ সাক্ষাৎ মম পৰিচযমপ্ৰাপ্য কেৱলং জনশ্ৰুতিমিমাং লব্ধৱন্তঃ,
௨௨மேலும் யூதேயா நாட்டிலே கிறிஸ்துவிற்குள்ளான சபைமக்களுக்கு அறிமுகம் இல்லாதவனாக இருந்தேன்.
23 ২৩ যো জনঃ পূৰ্ৱ্ৱম্ অস্মান্ প্ৰত্যুপদ্ৰৱমকৰোৎ স তদা যং ধৰ্ম্মমনাশযৎ তমেৱেদানীং প্ৰচাৰযতীতি|
௨௩முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கப்பார்த்த விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமட்டும் அவர்கள் கேள்விப்பட்டு,
24 ২৪ তস্মাৎ তে মামধীশ্ৱৰং ধন্যমৱদন্|
௨௪எனக்காக தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

< গালাতিনঃ 1 >