< 1 Timoteus 4 >

1 Men Ånden sier med tydelige ord at i de kommende tider skal nogen falle fra troen, idet de holder sig til forførende ånder og djevlers lærdommer
ஆனாலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.
2 ved hykleri av falske lærere, som er brennemerket i sin egen samvittighet,
திருமணம் செய்யக்கூடாது என்றும்,
3 som forbyder å gifte sig og byder å avholde sig fra mat, den Gud har skapt til å nytes med takk av dem som tror og har lært sannheten å kjenne.
விசுவாசிகளும், சத்தியத்தை அறிந்தவர்களும் நன்றி செலுத்தி அனுபவிக்கும்படி தேவன் படைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்றும் அந்தப் பொய்யர்கள் கட்டளையிடுவார்கள்.
4 For all Guds skapning er god, og intet er å forkaste når det mottas med takk;
தேவன் படைத்தவைகள் அனைத்தும் நல்லதாக இருக்கிறது; நன்றியோடு ஏற்றுக்கொள்ளப்படுமானால் ஒன்றும் தள்ளப்படவேண்டியது இல்லை.
5 for det helliges ved Guds ord og bønn.
அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.
6 Når du lærer brødrene dette, da er du en god Kristi Jesu tjener, idet du nærer dig med troens og den gode lærdoms ord som du har fulgt.
இவைகளை நீ சகோதரர்களுக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நல்லபோதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல ஊழியக்காரனாக இருப்பாய்.
7 Men vis fra dig de vanhellige og kjerringaktige eventyr; øv dig derimot i gudsfrykt!
சீர்கேடும், கிழவிகள் பேச்சுமாக இருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கானவைகளை முயற்சிபண்ணு.
8 For den legemlige øvelse er nyttig til lite, men gudsfrykten er nyttig til alt; den har løfte for det liv som nu er, og for det som kommer.
சரீரமுயற்சி கொஞ்சம் பிரயோஜனமுள்ளது; ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப்பின்பு வரும் ஜீவனுக்கும் உள்ள வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
9 Det er et troverdig ord og fullt verd å motta.
இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதி உள்ளதாக இருக்கிறது.
10 For derfor arbeider vi og lider hån, fordi vi har satt vårt håp til den levende Gud, som er alle menneskers frelser, mest deres som tror.
௧0இதற்காகவே பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
11 Dette skal du byde og lære.
௧௧இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
12 La ingen forakte dig for din ungdoms skyld, men vær et forbillede for de troende, i tale, i ferd, i kjærlighet, i tro, i renhet!
௧௨உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி, நீ உன் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு.
13 Legg vinn på oplesningen av Skriften, på formaningen, på læren, inntil jeg kommer!
௧௩நான் வரும்வரைக்கும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாக இரு.
14 Vanskjøtt ikke den nådegave som er i dig, som blev dig gitt ved profetiske ord med håndspåleggelse av de eldste.
௧௪சபை மூப்பர்களாகிய சங்கத்தினர்கள் உன்மேல் கரங்களை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக்குறித்து அசதியாக இருக்கவேண்டாம்.
15 Tenk på dette, lev i dette, forat din fremgang kan bli åpenbar for alle!
௧௫உன்னுடைய வளர்ச்சி எல்லோருக்கும் தெரியும்படி இவைகளையே நீ சிந்தித்து, இவைகளில் நிலைத்திரு.
16 Gi akt på dig selv og på læren, hold ved med det! for når du det gjør, da skal du frelse både dig selv og dem som hører dig.
௧௬உன்னைக்குறித்தும், உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு, இவைகளில் நிலைகொண்டிரு, நீ இப்படிச் செய்தால், உன்னையும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.

< 1 Timoteus 4 >