< 1 Timoteus 2 >
1 Jeg formaner altså fremfor alle ting at det gjøres bønner, påkallelser, forbønner, takksigelser for alle mennesker,
௧நான் முதலாவது சொல்லுகிற புத்தி என்னவென்றால், எல்லா மனிதருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் நன்றிசெலுத்துதலையும் செய்யவேண்டும்;
2 for konger og alle dem som er i høi verdighet, forat vi kan leve et rolig og stille liv i all gudsfrykt og sømmelighet.
௨நாம் எல்லாப் பக்தியோடும், நல்லொழுக்கத்தோடும், சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை வாழும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள எல்லோருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
3 For dette er godt og tekkelig for Gud, vår frelser,
௩நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாக இருக்கிறது.
4 han som vil at alle mennesker skal bli frelst og komme til sannhets erkjennelse.
௪எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார்.
5 For det er én Gud og én mellemmann imellem Gud og mennesker, mennesket Kristus Jesus,
௫தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
6 han som gav sig selv til en løsepenge for alle, et vidnesbyrd i sin tid,
௬எல்லோரையும் மீட்பதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த மனிதனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
7 og for dette blev jeg satt til forkynner og apostel - jeg sier sannhet, jeg lyver ikke - en lærer for hedningene i tro og sannhet.
௭இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதோர்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
8 Jeg vil altså at mennene på hvert sted skal bede så at de opløfter hellige hender, uten vrede og trette;
௮அன்றியும், ஆண்கள் கோபமும், வாக்குவாதமும் இல்லாமல் பரிசுத்தமான கரங்களை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டும் என்று விரும்புகிறேன்.
9 likeså og at kvinnene skal pryde sig med sømmelig klædning, i tukt og ære, ikke med fletninger og gull eller perler eller kostelig klædebon,
௯பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல்,
10 men som det sømmer sig for kvinner som bekjenner sig til gudsfrykt, med gode gjerninger.
௧0தகுதியான ஆடையினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற பெண்களுக்குரிய நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
11 En kvinne skal la sig lære i stillhet, med all lydighet;
௧௧பெண் என்பவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாக இருந்து, அமைதியோடு கற்றுக்கொள்ளவேண்டும்.
12 men jeg tillater ikke en kvinne å være lærer eller å være mannens herre, hun skal være i stillhet.
௧௨உபதேசம்பண்ணவும், ஆணின்மேல் அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான் அனுமதி கொடுப்பது இல்லை; அவள் அமைதியாக இருக்கவேண்டும்.
13 For Adam blev skapt først, derefter Eva,
௧௩ஏனென்றால், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
14 og Adam blev ikke dåret, men kvinnen blev dåret og falt i overtredelse;
௧௪மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
15 men hun skal bli frelst gjennem sin barnefødsel, såfremt de blir i tro og kjærlighet og helliggjørelse med tuktighet.
௧௫அப்படி இருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், குழந்தைப் பெறுவதினாலே காக்கப்படுவாள்.