< मत्तय 20 >
1 “स्वर्गना राज्य त्या घरमालकना मायक शे; जो आपला द्राक्षमयामा रोजी मजुर लावाकरता सकायमा बाहेर निंघना.”
௧பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது; அவன் தன் திராட்சைத்தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.
2 अनी त्यानी रोजनी मजुरी एक चांदिना शिक्का ठराईन मजुरसले द्राक्षमयामा धाडी दिधं.
௨வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத்தோட்டத்திற்கு அனுப்பினான்.
3 मंग तो जवळपास नऊ वाजाले घरना बाहेर गया, तवय त्यानी काही जणसले बजारमा रिकामं उभं दखं.
௩காலை ஒன்பதுமணியளவில் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து:
4 तो त्यासले बोलना, तुम्हीन बी द्राक्षमयामा जा, जी मजुरी व्हई ती मी तुमले दिसु; अनी त्या गयात.
௪நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.
5 मंग जवळपास बारा वाजता अनं तिन वाजता तो बाहेर गया तवय पण त्यानी तसच करं.
௫மறுபடியும், நண்பகல் பன்னிரண்டுமணிக்கும், மூன்றுமணிக்கும் அவன்போய் அப்படியே செய்தான்.
6 जवळपास पाच वाजाले तो बाहेर गया, तवय आखो कित्येक जणसले रिकाम उभं दखं. तवय त्यानी त्यासले ईचारं, तुम्हीन पुरा दिन का बर आठे रिकामा उभा राहेल शेतस?
௬ஐந்துமணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
7 त्या त्याले बोलणात, आमले कोणी कामवर लाय नही म्हणीन त्यानी त्यासले सांगं, तुम्हीन बी मना द्राक्षमयामा जा.
௭அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றார்கள். அவன் அவர்களைப் பார்த்து: நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.
8 मंग संध्याकायले द्राक्षमयाना मालकनी त्याना कारभारीले सांगं, मजुरसले बलाई आनं अनी शेवटला मजुरसपाईन सुरवात करीसन पहिला मजुरपावत त्यासले मजुरी दे.
௮மாலைநேரத்தில், திராட்சைத்தோட்டத்தின் எஜமான் தன் நிர்வாகியைப் பார்த்து: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முதலில் வந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான்.
9 तवय जवळपास संध्याकायना पाच वाजता ज्यासले कामवर लायल व्हतं त्यासले पुरा रोज एक चांदीना शिक्का भेटना.
௯அப்பொழுது ஐந்துமணியளவில் சேர்க்கப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.
10 मंग पहिला मजुर वनात अनी आपले त्यासनापेक्षा जास्त मजुरी भेटी अस त्यासले वाटणं, पण त्यासले बी तेवढाच रोज भेटना.
௧0முந்தி சேர்க்கப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று நினைத்தார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.
11 तो त्यासनी लेवानंतर त्या मालकबद्दल कुरकुर करीसन बोलणात,
௧௧வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானைப் பார்த்து:
12 ह्या शेवटलासनी एकच तास काम करा अनी आम्हीन दिनभर ऊनतान्हमा कष्ट करात तरी तुम्हीन आमले अनी त्यासले मायकच रोज दिधा.
௧௨பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணிநேரம்மட்டும் வேலைசெய்தார்கள்; பகலின் பாடுகளையும் வெயிலின் வெப்பத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
13 तवय त्यानी मजुरसमधला एकले उत्तर दिधं, अरे दोस्त, मी तुनावर अन्याय नही करा. हाईच मजुरीमा दिनभर काम करानं, हाई आपलं ठरेल व्हतं ना.
௧௩அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக: நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு வெள்ளிக்காசுக்குச் சம்மதிக்கவில்லையா?
14 जे तुले भेटेल शे ते लिसन निंघी जाय; जेवढं तुले तेवढं शेवटनासले पण देवानं अशी मनी ईच्छा शे.
௧௪உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோல பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம்.
15 जे मनं शे त्यानं मी मना मर्जीप्रमाणे करसु, मी कोणा बांधायेल शे का? मनं उदार वागनं तुना डोयामा येस का?
௧௫என்னுடையதை என் விருப்பப்படிச்செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாராளமனமுடையனாக இருக்கிறபடியால், நீ பொறாமைகொள்ளலாமா என்றான்.
16 याप्रमाणेच शेवटला त्या पहिला अनी पहिला त्या शेवटला व्हतीन.
௧௬இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராகவும், முந்தினோர் பிந்தினோராகவும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
17 यरूशलेमले जातांना येशुनी वाटमा त्याना बारा शिष्यसले एकांतमा लई जाईन सांगं,
௧௭இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடர்களையும் தனியே அழைத்து:
18 दखा, आपण यरूशलेमले जाई राहिनुत; मनुष्यना पोऱ्याले मुख्य याजक अनं शास्त्री यासना हवाले करतीन, त्या त्याले मरणदंडसाठे दोषी ठरावतीन.
௧௮இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து,
19 त्या त्यानी थट्टा कराले, फटका माराले अनं क्रुसखांबवर खियाले त्याले गैरयहूदीसना हवाले करतीन अनी तिन दिनमा तो परत जिवत व्हई.
௧௯அவரைப் பரிகாசம்பண்ணவும், சாட்டையினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
20 तवय जब्दीना पोऱ्यासनी माय तिना पोऱ्याससंगे येशुकडे गई अनी त्याना पाया पडीसन त्याले एक ईनंती करी
௨0அப்பொழுது, செபெதேயுவின் குமாரர்களுடைய தாய் தன் குமாரர்களோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும் என்றாள்.
21 येशुनी तिले ईचारं, तुले काय पाहिजे? ती त्याले बोलनी, तुना राज्यमा मना ह्या दोन्ही पोऱ्यासमाधला एकले उजवीकडे अनी दुसराले तुना डावीकडे बसाडं, अशी मनी ईच्छा शे.
௨௧அவர் அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரர்களாகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்காரும்படி அருள்செய்யவேண்டும் என்றாள்.
22 येशुनी तिले उत्तर दिधं की, तुम्हीन काय मांगी राहीनात तुमले समजत नही. जो प्याला मी पेवाव शे तो तुमले पिता ई का त्या त्याले बोलनात, पिता ई.
௨௨இயேசு மறுமொழியாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் இடத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.
23 त्यानी त्यासले सांगं, मना प्याला तुम्हीन पिशात हाई खरं, पण मना उजवीकडे अनं डावीकडे बसाना अधिकार देनं मनाकडे नही शे, तर ज्यासनाकरता मना बापनी हाई जागा तयार करेल शे, हाई त्यासनाकरता शे.
௨௩அவர் அவர்களைப் பார்த்து: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் இடத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்காரும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
24 हाई गोष्ट ऐकीन दहा शिष्यसले त्या दोन्ही भाऊसना राग वना.
௨௪மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபமடைந்தார்கள்.
25 येशुनी त्यासले बलाईसन सांगं, गैरयहूदीसमा अधिकारी प्रभुत्व चालाडतस अनं मोठा लोके बी अधिकार गाजाडतस हाई तुमले माहीत शे.
௨௫அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: யூதரல்லாதவர்களுடைய தலைவர்கள் அவர்களை இறுமாப்பாக ஆளுகிறார்கள் என்றும், அதிகாரமுடைய மனிதர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
26 पण तुमनामा तसं व्हवाले नको; म्हणीन तुमनामा ज्याले कोणले श्रेष्ठ होणं शे, त्यानी पहिले तुमना सेवक व्हवाले पाहिजे.
௨௬உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.
27 अनी तुमनामा ज्याले पहिला व्हवानी ईच्छा शे, त्यानी तुमना दास व्हवाले पाहिजे.
௨௭உங்களில் எவனாவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.
28 यामुये मनुष्यना पोऱ्या सेवा करी लेवाले नही तर सेवा कराले अनी बराच लोकसना पापनं मोल म्हणीन आपला जीव देवाले येल शे.
௨௮அப்படியே, மனிதகுமாரனும் பணிவிடை பெரும்படி வராமல், பணிவிடைசெய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
29 मंग त्या यरीहो शहरतीन जाई राहींतात तवय लोकसनी मोठी गर्दी त्यासना मांगे चाली राहींती.
௨௯அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகும்போது, திரளான மக்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.
30 तवय दखा, वाटवर बशेल दोन आंधयासनी येशु जवळतीन जाई राहीना, हाई ऐकीन, त्या वरडीसन बोलणात, “प्रभु, अहो दावीदना पोऱ्या, आमनावर दया करा.”
௩0அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
31 तवय त्यासले लोकसनी वरडू नका अस धमकाडं, पण त्या जास्तच वरडीन बोलु लागणात, “प्रभु, अहो दावीदना पोऱ्या! आमनावर दया करा.”
௩௧அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாகக் கூப்பிட்டார்கள்.
32 येशुनी ऊभं राहीसन त्यासले बलाईन सांगं, “मी तुमनाकरता काय करू अशी तुमनी ईच्छा शे?”
௩௨இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.
33 त्या बोलणात, “प्रभुजी, आमनी ईच्छा शे की, आमना डोया उघडी जावोत.”
௩௩அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்களுடைய கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.
34 तवय येशुले त्यासनी किव वनी त्यानी त्यासना डोयाले स्पर्श करा; तवय त्यासले लगेच दखावु लागनं, अनी त्या त्याना मांगे चालु लागणात.
௩௪இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.