< Psalms 93 >
1 Olúwa ń jẹ ọba, ọláńlá ni ó wọ̀ ní aṣọ; ọláńlá ni Olúwa wọ̀ ní aṣọ àti ìhámọ́ra rẹ̀ pẹ̀lú agbára. Ó fi ìdí ayé múlẹ̀; kò sì le è yí.
௧யெகோவா ஆளுகை செய்கிறார், மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.
2 Ìjọba rẹ̀ wà láti ọjọ́ pípẹ́; ìwọ wà títí ayérayé.
௨உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது; நீர் என்றென்றும் இருக்கிறீர்.
3 A ti gbé òkun sókè, Olúwa, òkun ti gbé ohùn wọn sókè; òkun ti gbé rírú omi wọn sókè.
௩யெகோவாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.
4 Ó ni ògo ju àrá omi ńlá lọ, ó ni ògo ju òkun rírú lọ Olúwa ga ní ògo.
௪திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட, கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
5 Ẹ̀rí rẹ̀ dúró ṣinṣin; ìwà mímọ́ ni ó fi ṣe ilé rẹ̀ lọ́ṣọ̀ọ́ fún ọjọ́ àìlópin, Olúwa.
௫உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.