< Numbers 6 >
2 “Sọ fún àwọn ọmọ Israẹli pé, ‘Bí ọkùnrin tàbí obìnrin kan bá jẹ́ ẹ̀jẹ́ pàtàkì, ẹ̀jẹ́ ìyara-ẹni-sọ́tọ̀ sí Olúwa nípa àìgé irun orí (Nasiri),
௨“நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: “ஆணோ பெண்ணோ யெகோவாக்கென்று விரதம் செய்து கொண்டவர்களாக இருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையை செய்தால்,
3 irú ẹni bẹ́ẹ̀ gbọdọ̀ yàgò fún wáìnì tàbí ọtí líle, ọtí wáìnì kíkan àti àwọn ohun mímu mìíràn tó bá kan. Kò gbọdọ̀ mu èso àjàrà tàbí kí ó jẹ èso àjàrà tútù tàbí gbígbẹ.
௩அப்படிப்பட்டவன் திராட்சைரசத்தையும் மதுபானத்தையும் விலக்கவேண்டும்; அவன் திராட்சைரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சைரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடிக்காமலும், திராட்சைப்பழங்களையோ திராட்சைவற்றல்களையோ சாப்பிடாமலும்,
4 Níwọ́n ìgbà tí ó sì jẹ́ Nasiri, ní kò gbọdọ̀ jẹ ohunkóhun tí a fi èso àjàrà ṣe, ìbá à ṣe kóró tàbí èèpo rẹ̀.
௪தான் நசரேயனாக இருக்கும் நாளெல்லாம் திராட்சைச்செடி விதைமுதல் தோல்வரை உள்ளவைகளினால் செய்யப்பட்ட எதையும் சாப்பிடாமலும் இருக்கவேண்டும்.
5 “‘Ní gbogbo ìgbà ẹ̀jẹ́ ìyàsọ́tọ̀ rẹ̀ yìí, kí abẹ kankan má ṣe kàn án ní orí. Ó gbọdọ̀ jẹ́ mímọ́ títí tí àkókò ìyàsọ́tọ̀ rẹ̀ sí Olúwa yóò fi pé; ó gbọdọ̀ jẹ́ kí irun orí rẹ̀ gùn.
௫“அவன் நசரேய விரதமிருக்கும் நாட்களெல்லாம் சவரகன் கத்தி அவனுடைய தலையின்மேல் படக்கூடாது; அவன் யெகோவாக்கென்று விரதமிருக்கும் காலம் நிறைவேறும்வரை பரிசுத்தமாக இருந்து, தன்னுடைய தலைமுடியை வளரவிடவேண்டும்.
6 “‘Ní gbogbo àkókò ìyàsọ́tọ̀ rẹ̀ sí Olúwa kò gbọdọ̀ súnmọ́ òkú ènìyàn.
௬அவன் யெகோவாவுக்கென்று விரதமிருக்கும் நாட்களெல்லாம் யாதொரு பிரேதத்தின் அருகில் போகக்கூடாது.
7 Ìbá à ṣe òkú baba, àti ìyá rẹ̀, ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin tàbí obìnrin tàbí àbúrò rẹ̀, kò gbọdọ̀ sọ ara rẹ̀ di aláìmọ́ nítorí wọn, nítorí pé àmì ìyàsọ́tọ̀ rẹ̀ sí Ọlọ́run wà ní orí rẹ̀.
௭அவன் தன்முடைய தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவனுடைய தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன்னுடைய தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலோ சகோதரியினாலோ தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாது.
8 Ní gbogbo àsìkò ìyàsọ́tọ̀ rẹ̀ yìí, ó jẹ́ mímọ́ sí Olúwa.
௮அவன் நசரேயனாக இருக்கும் நாட்களெல்லாம் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருப்பான்.
9 “‘Bí ẹnìkan bá kú ní ọ̀dọ̀ rẹ̀ ní òjijì, tí ó sì ba irun rẹ̀ tó yà sọ́tọ̀ jẹ́; ó gbọdọ̀ gé irun rẹ̀ ní ọjọ́ ìwẹ̀nùmọ́ rẹ̀ èyí tí í ṣe ọjọ́ keje.
௯“அவனருகில் ஒருவன் திடீரென மரணமடைந்ததால், நசரேய விரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதென்றால், அவன் தன்னுடைய சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன்னுடைய தலைமுடியைச் சிரைத்துக்கொண்டு,
10 Ní ọjọ́ kẹjọ, yóò mú àdàbà méjì àti ọmọ ẹyẹlé méjì wá sọ́dọ̀ àlùfáà ní ẹnu-ọ̀nà àgọ́ ìpàdé.
௧0எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையோ இரண்டு புறாக்குஞ்சுகளையோ ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடம் கொண்டுவரவேண்டும்.
11 Àlùfáà yóò fi ọ̀kan rú ẹbọ ẹ̀ṣẹ̀ àti èkejì fún ẹbọ sísun láti fi ṣe ètùtù fún un nítorí pé ó ti ṣẹ̀ nípa wíwà níbi tí òkú ènìyàn wà. Yóò sì ya orí rẹ̀ sí mímọ́ ní ọjọ́ náà gan an.
௧௧அப்பொழுது ஆசாரியன் ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, பிணத்தினால் அவனுக்கு உண்டான தீட்டை நிவிர்த்திசெய்து, அவனுடைய தலையை அந்தநாளில் பரிசுத்தப்படுத்தவேண்டும்.
12 Ó gbọdọ̀ ya ara rẹ̀ sọ́tọ̀ sí Olúwa fún àkókò ìyàsọ́tọ̀ rẹ̀, ó sì gbọdọ̀ mú akọ ọ̀dọ́-àgùntàn ọlọ́dún kan wá gẹ́gẹ́ bí ọrẹ ẹ̀bi. Kò sì ní í ka àwọn ọjọ́ ìyàsọ́tọ̀ rẹ̀ ti tẹ́lẹ̀ nítorí pé ó tí ba ara rẹ̀ jẹ́ ní àkókò ìyàsọ́tọ̀ rẹ̀.
௧௨அவன் திரும்பவும் தன்னுடைய விரதநாட்களைக் யேகோவாக்கென்று காத்து, ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரவேண்டும்; அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதால் சென்ற நாட்கள் வீணாகும்.
13 “‘Èyí ni òfin fún Nasiri nígbà tí àkókò ìyàsọ́tọ̀ rẹ̀ bá pé. Wọn ó mu wá sí ẹnu-ọ̀nà àgọ́ ìpàdé.
௧௩“நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதமிருக்கும் நாட்கள் நிறைவேறின அன்றைக்கே, அவன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே வந்து,
14 Níbẹ̀ ni yóò ti mú ọrẹ wá fún Olúwa, akọ ọ̀dọ́-àgùntàn ọlọ́dún kan tí kò ní àbùkù fún ẹbọ sísun àti ẹgbọrọ-àgùntàn ọlọ́dún kan, tí kò ní àbùkù fún ẹbọ ẹ̀ṣẹ̀, àgbò kan tí kò ní àbùkù fún ọrẹ àlàáfíà,
௧௪சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், பாவநிவாரணபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும்,
15 pẹ̀lú ọrẹ ohun jíjẹ àti ọrẹ ohun mímu, apẹ̀rẹ̀ àkàrà tí a kò fi ìwúkàrà ṣe, àkàrà tí a fi ìyẹ̀fun dáradára pò mọ́ òróró àti àkàrà fẹ́lẹ́fẹ́lẹ́ tí a fi òróró sọjọ̀ lé lórí.
௧௫ஒரு கூடையில் எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் யெகோவாவுக்குத் தன்னுடைய காணிக்கையாகச் செலுத்தவேண்டும்.
16 “‘Àlùfáà yóò gbé gbogbo rẹ̀ wá síwájú Olúwa, yóò sì rú ẹbọ ẹ̀ṣẹ̀ àti ẹbọ sísun.
௧௬அவைகளை ஆசாரியன் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரணபலியையும் அவனுடைய சர்வாங்கதகனபலியையும் செலுத்தி,
17 Àlùfáà yóò fi àgbò náà rú ẹbọ àlàáfíà sí Olúwa, pẹ̀lú apẹ̀rẹ̀ àkàrà tí kò ní ìwúkàrà; yóò rú ẹbọ ohun jíjẹ àti ọrẹ ohun mímu.
௧௭ஆட்டுக்கடாவைக் கூடையில் இருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் யெகோவாவுக்குச் சமாதான பலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைக்கவேண்டும்.
18 “‘Nígbà náà ni Nasiri náà yóò fá irun ìyàsọ́tọ̀ rẹ̀ ní ẹnu-ọ̀nà àgọ́ ìpàdé. Yóò fi irun náà sínú iná tó wà lábẹ́ ẹbọ àlàáfíà.
௧௮அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன்னுடைய தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன்னுடைய தலைமுடியை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடவேண்டும்.
19 “‘Lẹ́yìn tí Nasiri bá ti fá irun ìyàsọ́tọ̀ rẹ̀ tan, àlùfáà yóò mú apá àgbò bíbọ̀, àkàrà aláìwú kan àti àkàrà fẹ́lẹ́fẹ́lẹ́ tí kò ní ìwúkàrà láti inú apẹ̀rẹ̀ yóò sì kó gbogbo rẹ̀ lé e lọ́wọ́.
௧௯நசரேயன் பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமுடியைச் சிரைத்துக்கொண்டபின்பு, ஆசாரியன் ஆட்டுக்கடாவினுடைய வேகவைக்கப்பட்ட ஒரு முன்னந்தொடையையும், கூடையில் இருக்கிறவைகளிலே புளிப்பில்லாத ஒரு அதிரசத்தையும் புளிப்பில்லாத ஒரு அடையையும் எடுத்து, அவனுடைய உள்ளங்கைகளில் வைத்து,
20 Àlùfáà yóò fi gbogbo rẹ̀ níwájú Olúwa gẹ́gẹ́ bí ẹbọ fífì, wọ́n jẹ́ mímọ́, wọ́n sì jẹ́ ti àlùfáà pẹ̀lú igẹ̀ tí a fì àti itan tí wọ́n mú wá. Lẹ́yìn èyí, Nasiri náà lè mu wáìnì.
௨0அவைகளைக் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்; அது அசைவாட்டப்பட்ட மார்புப்பகுதியோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும், ஆசாரியனைச் சேரும்; அது பரிசுத்தமானது. பின்பு நசரேயன் திராட்சைரசம் குடிக்கலாம்.
21 “‘Èyí ni òfin Nasiri tó jẹ́ ẹ̀jẹ́, ọrẹ rẹ̀ sí Olúwa, yóò wà ní ìbámu pẹ̀lú ìyàsọ́tọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí Nasiri, ní àfikún sí àwọn ohun mìíràn tó lágbára láti mú wá. Ó gbọdọ̀ mú ẹ̀jẹ́ tó jẹ́ ṣe gẹ́gẹ́ bí òfin Nasiri.’”
௨௧“பொருத்தனைசெய்த நசரேயனுக்கும், அவன் தன்னுடைய கைக்கு உதவுகிறதைத்தவிர, தன் நசரேய விரதத்திற்காக யெகோவாவுக்குச் செலுத்தும் காணிக்கையின் பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன்னுடைய பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்றபடி செய்து முடிக்கவேண்டும் என்று சொல் என்றார்.
௨௨பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
23 “Sọ fún Aaroni àti àwọn ọmọ rẹ̀ pé, ‘Báyìí ni kí ẹ ṣe máa súre fún àwọn ọmọ Israẹli. Ẹ sọ fún wọn pé,
௨௩“நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:
24 “‘“Kí Olúwa bùkún un yín, kí ó sì pa yín mọ́.
௨௪“யெகோவா உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காப்பார்.
25 Kí Olúwa kí o mú ojú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí i yín lára. Kí ó sì ṣàánú fún un yín.
௨௫“யெகோவா தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கச்செய்து, உன்மேல் கிருபையாக இருபாராக.
26 Kí Olúwa bojú wò yín, kí ó sì fún un yín ní àlàáfíà.”’
௨௬“யெகோவா தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடுவார், என்பதே.
27 “Báyìí ni wọn ó ṣe fi orúkọ mi sára àwọn ọmọ Israẹli, Èmi ó sì bùkún wọn.”
௨௭“இந்த விதமாக அவர்கள் என்னுடைய நாமத்தை இஸ்ரவேல் மக்கள்மேல் கூறவேண்டும்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்” என்றார்.