< Numbers 5 >
2 “Pàṣẹ fún àwọn ọmọ Israẹli pé kí wọn ó lé ẹnikẹ́ni tó bá ní ẹ̀tẹ̀, ìtújáde ara ní oríṣìíríṣìí tàbí ẹni tó jẹ́ aláìmọ́ nípa fífọwọ́ kan òkú.
௨“குஷ்டரோகிகள் யாவரையும், கசியும் புண்ணுள்ள யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் முகாமிலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிடு.
3 Irú ẹni bẹ́ẹ̀ yálà ọkùnrin tàbí obìnrin, ẹ lé wọn jáde kúrò nínú ibùdó kí wọn má ba à ba ibùdó wọn jẹ́ níbi tí èmi ń gbé láàrín wọn.”
௩ஆண்பிள்ளையானாலும் பெண்பிள்ளையானாலும் அப்படிப்பட்டவர்களை நீங்கள் விலக்கி, நான் வாசம்செய்கிற தங்களுடைய முகாம்களை அவர்கள் தீட்டுப்படுத்தாதபடி, நீங்கள் அவர்களை முகாமிற்கு வெளியே அனுப்பிவிடவேண்டும் என்றார்.
4 Àwọn ọmọ Israẹli sì ṣe bẹ́ẹ̀; wọ́n lé wọn jáde kúrò nínú ibùdó. Wọn ṣe gẹ́gẹ́ bí Olúwa ti sọ fún Mose.
௪யெகோவா மோசேக்குச் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்கள் செய்து, அவர்களை முகாமிற்கு வெளியே அனுப்பிவிட்டார்கள்.
௫மேலும் யெகோவா மோசேயை நோக்கி:
6 “Sọ fún àwọn ọmọ Israẹli: ‘Nígbà tí ọkùnrin kan tàbí obìnrin kan bá ṣẹ̀ ara wọn lọ́nà kan tàbí òmíràn, tí wọ́n sì ṣe àìṣòótọ́ sí Olúwa, ẹni náà jẹ̀bi.
௬“நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு ஆணோ பெண்ணோ, யெகோவாவுடைய கட்டளையை மீறி மனிதர்கள் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால்,
7 Ó gbọdọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí ó sẹ̀. Ó gbọdọ̀ san ẹ̀san rẹ̀ ní ojú owó, kí ó sì fi ìdámárùn-ún rẹ̀ lé e, kí ó sì fi fún ẹni tí òun jẹ̀bi rẹ̀.
௭அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிடவேண்டும்; அப்படிப்பட்டவன் தான் செய்த குற்றத்தினால் அபராதத்தின் முதலோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, தான் குற்றஞ்செய்தவனுக்குச் செலுத்தவேண்டும்.
8 Ṣùgbọ́n bí irú ẹni bẹ́ẹ̀ kò bá ní ìbátan tí ó súnmọ́ ọn tí ó lè ṣe àtúnṣe àṣìṣe rẹ̀ náà fún, àtúnṣe náà jẹ́ ti Olúwa, ẹ sì gbọdọ̀ ko fún àlùfáà pẹ̀lú àgbò tí a fi ṣe ètùtù fún ẹni náà.
௮அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாமலிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், யெகோவாவுக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும்.
9 Gbogbo ọrẹ ohun mímọ́ tí àwọn ọmọ Israẹli bá mú wá fún àlùfáà jẹ́ tirẹ̀.
௯இஸ்ரவேல் மக்கள் ஏறெடுத்துப் படைக்கும்படி, ஆசாரியனிடத்தில் கொண்டுவருகிற எல்லாப் பரிசுத்தமான படைப்பும் அவனுடையதாக இருக்கும்.
10 Ọrẹ ohun mímọ́ ẹnìkọ̀ọ̀kan jẹ́ ti òun nìkan, ṣùgbọ́n ohunkóhun tó bá fún àlùfáà yóò jẹ́ ti àlùfáà.’”
௧0ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான பொருட்கள் அவனுடையதாக இருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்.
11 Olúwa sọ fún Mose wí pé,
௧௧யெகோவா மோசேயை நோக்கி:
12 “Bá àwọn ọmọ Israẹli sọ̀rọ̀ kí o sọ fún wọn pé, ‘Bí ìyàwó ọkùnrin kan bá yapa tó sì ṣe àìṣòótọ́ sí i,
௧௨“நீ இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுடைய மனைவி பிறர்முகம் பார்த்து, கணவனுக்குத் துரோகம்செய்து,
13 nípa mímú kí ọkùnrin mìíràn bá a lòpọ̀ tí ó sì fi èyí pamọ́ fún ọkọ rẹ̀, tí a kò si gbá a mú nínú ìwà àìmọ́ rẹ̀ (nítorí pé kò sí ẹlẹ́rìí àti pé wọn kò ká a mọ́ nígbà tí ó ń dẹ́ṣẹ̀ náà).
௧௩ஒருவனோடு உறவு கொண்டிருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாக இருந்தும், அவளுடைய கணவன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும்,
14 Ṣùgbọ́n tí ẹ̀mí owú jíjẹ bá bà lé ọkọ rẹ̀ dé bi pé ó ń funra sí ìyàwó rẹ̀ yìí tí ìyàwó rẹ̀ sì wà ní àìmọ́ nítòótọ́, tàbí tí ẹ̀mí owú bá bà lé ọkùnrin kan tó sì ń jowú ìyàwó rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ó wà ní mímọ́,
௧௪எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவனுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன்னுடைய மனைவியின்மேல் பகைகொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் பகைகொண்டிருந்தாலும்,
15 nígbà náà ni ọkùnrin yìí yóò mú ìyàwó rẹ̀ lọ sọ́dọ̀ àlùfáà. Ọkùnrin náà yóò sì mú ọrẹ tí a yàn fún obìnrin náà, ìdámẹ́wàá òsùwọ̀n efa ìyẹ̀fun barle. Kò gbọdọ̀ da òróró sí i, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ fi tùràrí dídùn sí i nítorí pé ẹbọ ohun jíjẹ fún owú ni, èyí ti n mú ẹ̀ṣẹ̀ wá sí ìrántí.
௧௫அந்தக் கணவன் தன்னுடைய மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவளுக்காக ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கவேண்டும்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாக இருப்பதால், அதின்மேல் எண்ணெய் ஊற்றாமலும் தூபவர்க்கம் போடாமலும் இருக்கவேண்டும்.
16 “‘Àlùfáà yóò sì mú un wá síwájú Olúwa.
௧௬“ஆசாரியன் அவளைச் சமீபத்தில் அழைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தி,
17 Àlùfáà yóò sì bu erùpẹ̀ ilẹ̀ àgọ́ sínú omi mímọ́ tó bù láti ìkòkò amọ̀.
௧௭ஒரு மண்பானையிலே பரிசுத்த தண்ணீர் ஊற்றி, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த தண்ணீரில்போட்டு,
18 Lẹ́yìn èyí, àlùfáà yóò mú obìnrin náà dúró níwájú Olúwa yóò sì tú irun orí obìnrin náà lé e lọ́wọ́, èyí ni ẹbọ ohun jíjẹ ti owú, àlùfáà fúnra rẹ̀ yóò sì gbé omi kíkorò tí ń mú ègún lọ́wọ́.
௧௮பெண்ணைக் யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தி, அவளுடைய முக்காட்டை நீக்கி, எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை அவளுடைய உள்ளங்கையிலே வைக்கவேண்டும்; சாபகாரணமான கசப்பான தண்ணீர் ஆசாரியன் கையில் இருக்கவேண்டும்.
19 Àlùfáà yóò sì mú obìnrin náà búra, yóò wí pé, “Bí ọkùnrin mìíràn kò bá bá ọ lòpọ̀, tí ó kò sì yapa, tí o kò sì di aláìmọ́ níwọ̀n ìgbà tí ó wà lábẹ́ àṣẹ ọkọ rẹ̀, a jẹ́ pé omi kíkorò tí ń mú ègún wá yìí kò ní ṣe ọ́ níbi.
௧௯பின்பு ஆசாரியன் அவளை ஆணையிட வைத்து: ஒருவனும் உன்னோடு உறவுகொள்ளாமலும், உன்னுடைய கணவனுக்கு கீழ்பட்டிருக்கிற நீ தீட்டுப்படும்படி பிறர்முகம் பார்க்காமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான தண்ணீரின் தோஷத்திற்கு நீங்கலாக இருப்பாய்.
20 Ṣùgbọ́n tí ìwọ bá ti yapa kúrò lọ́dọ̀ ọkọ rẹ, tí o bá ti ba ara rẹ jẹ́ nípa jíjẹ́ kí ọkùnrin tí kì í ṣe ọkọ rẹ bá ọ lòpọ̀,”
௨0உன்னுடைய கணவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து, உன்னுடைய கணவனைத்தவிர அந்நியனோடு உறவுகொண்டு தீட்டுப்பட்டிருப்பாயானால்,
21 nígbà náà ni àlùfáà yóò mú obìnrin náà búra, yóò sọ fún obìnrin náà pé, “Kí Olúwa sọ ọ́ di ẹni ègún àti ẹni ìbáwí láàrín àwọn ènìyàn rẹ nípa mímú kí itan rẹ jẹrà, kí ikùn rẹ̀ sì wú.
௨௧யெகோவா உன்னுடைய இடுப்பு சூம்பவும், உன்னுடைய வயிறு வீங்கவும்செய்து, உன்னை உன்னுடைய மக்களுக்குள்ளே சாபமும் ஆணையிடும் அடையாளமாகவும் வைப்பாராக.
22 Ǹjẹ́ kí omi yìí tí ń mú ègún wá wọ inú ara rẹ, kí ó mú ikùn rẹ̀ wú, kí ó sì mú itan rẹ̀ jẹrà dànù.” “‘Obìnrin náà yóò sì wí pé, “Àmín. Bẹ́ẹ̀ ni kó rí.”
௨௨சாபகாரணமான இந்த தண்ணீர் உன்னுடைய வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் செய்யும்படி, உன்னுடைய குடலுக்குள் போகவேண்டும் என்கிற சாபவார்த்தையாலே பெண்ணை ஆணையிடவைத்துச் சொல்வானாக. அதற்கு அந்தப் பெண்: ஆமென், ஆமென், என்று சொல்லவேண்டும்.
23 “‘Nígbà náà ni àlùfáà yóò kọ ègún yìí sínú ìwé kíká, yóò sì sìn ín sínú omi kíkorò náà.
௨௩“பின்பு ஆசாரியன் இந்தச் சாபவார்த்தைகளை ஒரு சீட்டில் எழுதி, அவைகளைக் கசப்பான தண்ணீரால் கழுவிப்போட்டு,
24 Àlùfáà yóò sì mú kí obìnrin náà mu omi kíkorò tí ń mú ègún wá yìí, omi náà yóò wọ inú rẹ̀ yóò sì fa ìrora kíkorò fún obìnrin náà bí ó bá jẹ̀bi.
௨௪சாபகாரணமான அந்தக் கசப்பான தண்ணீரை அவள் குடிக்கும்படிச் செய்வான்; அப்பொழுது சாபகாரணமான அந்த தண்ணீர் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும்.
25 Àlùfáà yóò gba ọrẹ ohun jíjẹ owú náà lọ́wọ́ rẹ̀, yóò fì í síwájú Olúwa, yóò sì mú iná sórí pẹpẹ.
௨௫பின்பு ஆசாரியன் எரிச்சலின் காணிக்கையை அந்த பெண்ணின் கையிலிருந்து வாங்கி, அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டி, பீடத்தின்மேல் செலுத்தி,
26 Àlùfáà yóò bu ẹ̀kúnwọ́ kan nínú ọrẹ ohun jíjẹ náà, yóò sun ún lórí pẹpẹ gẹ́gẹ́ bí ẹbọ ìrántí lẹ́yìn tí ó ti mú kí obìnrin náà mu omi.
௨௬ஞாபகக்குறியாக அதிலே ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, பீடத்தின்மேல் தகனித்து, பின்பு பெண்ணுக்கு அந்த தண்ணீரைக்குடிக்கும்படி கொடுக்கவேண்டும்.
27 Bí ó bá ti mú obìnrin yìí mu omi náà, bí ó bá sì jẹ́ pé obìnrin náà ti ba ara rẹ̀ jẹ́, tí ó sì ṣe àìṣòótọ́ sí ọkọ rẹ̀, omi tí ń mú ègún wá, yóò wọ ara rẹ̀, yóò fa ìrora kíkorò fún un, ikùn rẹ̀ yóò wú, itan rẹ̀ yóò sì jẹrà dànù, yóò sì di ẹni ègún láàrín àwọn ènìyàn rẹ̀.
௨௭அந்த தண்ணீரைக் குடிக்கச் செய்த பின்பு சம்பவிப்பதாவது: அவள் தீட்டுப்பட்டு, தன்னுடைய கணவனுக்குத் துரோகம்செய்திருந்தால், சாபகாரணமான அந்த தண்ணீர் அவளுக்குள் நுழைந்து கசப்புண்டானதால், அவளுடைய வயிறு வீங்கி, அவளுடைய இடுப்பு சூம்பும்; இப்படியே அந்தப் பெண் தன்னுடைய மக்களுக்குள்ளே சாபமாக இருப்பாள்.
28 Ṣùgbọ́n tó bá jẹ́ pé obìnrin náà kò ba ara rẹ̀ jẹ́, tó sì jẹ́ mímọ́, yóò bọ́ nínú ẹ̀bi, yóò sì le bímọ.
௨௮அந்தப் பெண் தீட்டுப்படாமல் சுத்தமாக இருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பமடையக்கூடியவளாக இருப்பாள்.
29 “‘Èyí ni òfin owú jíjẹ nígbà tí obìnrin tó wà lábẹ́ ọkọ bá ṣe a ṣe má ṣe, tí ó bá ba ara rẹ̀ jẹ́,
௨௯“ஒரு பெண் தன்னுடைய கணவனைத்தவிர அந்நிய ஆணோடு சேர்ந்து தீட்டுப்பட்டதால் உண்டான எரிச்சலுக்கும்,
30 tàbí nígbà tí ẹ̀mí owú jíjẹ bá bà lé ọkùnrin kan nítorí pé ó funra sí ìyàwó rẹ̀. Àlùfáà yóò mú obìnrin náà dúró níwájú Olúwa yóò sì ṣe gẹ́gẹ́ bí òfin ti wí fún un.
௩0கணவன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன்னுடைய மனைவியின்மேல் அடைந்த பொறாமைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் யெகோவாவுடைய சந்நிதியில் தன்னுடைய மனைவியை நிறுத்தவேண்டும்; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யவேண்டும்.
31 Ara ọkọ rẹ̀ mọ́ nínú ẹ̀ṣẹ̀ yìí ṣùgbọ́n obìnrin náà yóò ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ rẹ̀.’”
௩௧கணவன் அக்கிரமத்திற்கு நீங்கலாக இருப்பான்; அப்படிப்பட்டப் பெண்ணோ, தன்னுடைய அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல்” என்றார்.