< Esther 7 >

1 Ọba àti Hamani sì lọ sí àpèjẹ pẹ̀lú Esteri ayaba,
அப்படியே அரசனும், ஆமானும் எஸ்தர் அரசியுடன் விருந்து உண்ணப் போனார்கள்.
2 bí wọ́n sì ṣe ń mu wáìnì ní ọjọ́ kejì yìí, ọba sì tún béèrè pé, “Esteri ayaba, kí ni ẹ̀bẹ̀ rẹ? A ó sì fi fún ọ. Kí ni ìbéèrè rẹ? Bí ó tilẹ̀ jẹ́ ìdajì ìjọba à mi, n ó fi fún ọ.”
அந்த இரண்டாம் நாளில் அவர்கள் திராட்சை இரசத்தைக் குடித்துக் கொண்டிருக்கையில், அரசன் திரும்பவும், “எஸ்தர் அரசியே, உனது விண்ணப்பம் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும். உனது வேண்டுகோள் என்ன? அது அரசில் பாதியாயிருந்தாலும் அது உனக்குக் கொடுக்கப்படும்” என்றான்.
3 Nígbà náà ni ayaba Esteri dáhùn, “Bí èmi bá rí ojúrere rẹ, ìwọ ọba, bí ó bá sì tẹ́ ọláńlá à rẹ lọ́rùn, fún mi ní ẹ̀mí mi, èyí ni ẹ̀bẹ̀ mi. Kí o sì pa àwọn ènìyàn mi mọ́—èyí ni ìbéèrè mi.
அப்பொழுது எஸ்தர் அரசி விடையாக, “அரசே உம்மிடம் எனக்குத் தயவு கிடைத்திருந்தால், உமக்குப் பிரியமாயிருந்தால் என் உயிரை எனக்குத் தாரும், இதுவே எனது விண்ணப்பம். எனது மக்களைத் தப்புவியும், இதுவே எனது வேண்டுகோள்.
4 Nítorí a ti ta èmi àti àwọn ènìyàn mi fún àwọn tí yóò pa wá run, à ti ṣe ìdájọ́ wa fún pípa àti píparẹ́. Bí a bá tilẹ̀ tà wá bí ẹrúkùnrin àti ẹrúbìnrin, ǹ bá dákẹ́, nítorí irú ìpọ́njú bẹ́ẹ̀ kò tó èyí tí à ń yọ ọba lẹ́nu sí.”
ஏனெனில் நானும் எனது மக்களும் அழிவுக்கும், கொலைக்கும், நாசத்திற்கும் விற்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் ஆணும் பெண்ணும் அடிமைகளாக விற்கப்பட்டிருந்தால்கூட நான் பேசாமல் இருந்திருப்பேன். ஏனெனில், அப்படியான ஒரு துன்பம் அரசரை கஷ்டப்படுத்துவதற்கு ஏற்ற காரணமாய் இருந்திருக்காது” என்றாள்.
5 Ọba Ahaswerusi bi Esteri ayaba léèrè pé, “Ta a ni ẹni náà? Níbo ni ẹni náà wà tí kò bẹ̀rù láti ṣe irú nǹkan bẹ́ẹ̀?”
அகாஸ்வேரு அரசன் எஸ்தர் அரசியிடம், “யார் அவன்? இப்படியான காரியத்தைச் செய்யத் துணிந்த அவன் எங்கே?” என்று கேட்டான்.
6 Esteri sọ wí pé, “Alátakò àti ọ̀tá náà ni Hamani aláìníláárí yìí.” Nígbà náà ni Hamani wárìrì níwájú ọba àti ayaba.
அதற்கு எஸ்தர், “அந்த விரோதியும், பகைவனும் இந்த கொடிய ஆமானே” என்றாள். அப்பொழுது ஆமான், அரசனுக்கும் அரசிக்கும் முன்பாகத் திகிலடைந்தான்.
7 Ọba sì dìde pẹ̀lú ìbínú, ó fi wáìnì sílẹ̀ ó sì jáde lọ sí àgbàlá ààfin. Ṣùgbọ́n nígbà tí Hamani, ti rí i dájú pé ọba ti pinnu láti pa òun, ó dúró lẹ́yìn láti bẹ Esteri ayaba nítorí ẹ̀mí rẹ̀.
அரசன் கடுங்கோபத்துடன் எழுந்து தனது திராட்சை இரசத்தை வைத்துவிட்டு, வெளியே அரண்மனைத் தோட்டத்துக்குப் போனான். ஆனால் ஆமான், தனது தலைவிதியை அரசன் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டான் என உணர்ந்து, தனது உயிருக்காக எஸ்தர் அரசியிடம் மன்றாடும்படி அங்கேயே நின்றான்.
8 Bí ọba ṣe padà dé láti àgbàlá ààfin wá sí gbọ̀ngàn àsè náà, Hamani ṣubú sórí àga tí Esteri ayaba fẹ̀yìn tì. Ọba sì pariwo pé, “Yóò ha tún tẹ́ ayaba níbí yìí, nínú ilé, ní ojú mi bí?” Ní kété tí ọba sọ ọ̀rọ̀ yìí jáde, wọ́n da aṣọ bo Hamani lójú.
அரண்மனைத் தோட்டத்திலிருந்து அரசன் விருந்து மண்டபத்துக்குத் திரும்பிவந்தபோது, எஸ்தர் சாய்ந்திருந்த இருக்கையின்மேல் ஆமான் விழுவதைக் கண்டான். அப்பொழுது அரசன், “அரசி என்னுடன் வீட்டில் இருக்கும்போதே இவன் அவளைப் பலாத்காரம் பண்ணப் பார்க்கிறானோ?” என்றான். இந்த வார்த்தை அரசனுடைய வாயிலிருந்து புறப்பட்ட உடனேயே ஆமானுடைய முகத்தை மூடினார்கள்.
9 Nígbà náà Harbona ọ̀kan nínú àwọn ìwẹ̀fà tó ń dúró níwájú ọba, sọ wí pé, “Igi tí ó ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà marunlélaadọrin ni Hamani ti rì sí ẹ̀gbẹ́ ilé e rẹ̀. Ó ṣe é fún Mordekai, ẹni tí ó sọ̀rọ̀ jáde láti ṣe ìrànlọ́wọ́ fún ọba.” Ọba wí pé, ẹ so ó rọ̀ sórí i rẹ́!
அப்பொழுது அரசனுக்கு ஏவல் வேலைசெய்த அதிகாரிகளில் ஒருவனான அற்போனா என்பவன் அரசனிடம், “எழுபத்தைந்து அடி உயரமான ஒரு தூக்கு மரம் ஆமானின் வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிறது. அவன் அதை அரசனுக்கு உதவிசெய்வதற்காகப் பேசிய மொர்தெகாய்க்கென செய்துவைத்திருந்தான்” என்றான். அப்பொழுது அரசன், “அவனை அதில் தூக்கிப் போடுங்கள்” என்றான்.
10 Wọ́n sì so Hamani sórí igi tí ó ti pèsè sílẹ̀ fún Mordekai, ìbínú ọba sì rọ̀.
அப்படியே அவர்கள், மொர்தெகாய்க்காக ஆமான் ஆயத்தம் பண்ணிய தூக்குமரத்திலே ஆமானைத் தூக்கிலிட்டார்கள். அப்பொழுது அரசனின் கோபம் தணிந்தது.

< Esther 7 >