< 2 Samuel 14 >

1 Joabu ọmọ Seruiah sì kíyèsi i, pé ọkàn ọba sì fà sí Absalomu.
ராஜாவின் இருதயம் அப்சலோமின் மேல் இன்னும் நினைவாக இருக்கிறதைச் செருயாவின் மகன் யோவாப் கண்டு,
2 Joabu sì ránṣẹ́ sí Tekoa, ó sì mú ọlọ́gbọ́n obìnrin kan láti ibẹ̀ wá, ó sì wí fún un pé, “Èmi bẹ̀ ọ́, ṣe bí ẹni tí ń ṣọ̀fọ̀, kí o sì fi aṣọ ọ̀fọ̀ sára, kí o má sì ṣe fi òróró pa ara, kí o sì dàbí obìnrin ti ó ti ń ṣọ̀fọ̀ fún òkú lọ́jọ́ púpọ̀.
அவன் தெக்கோவா பட்டணத்தில் இருக்கிற புத்தியுள்ள ஒரு பெண்ணை அழைத்து: நீ துக்கம் கொண்டாடுகிறவளைப்போல, துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொண்டு, எண்ணெய் பூசாமல், இறந்து போனவனுக்காக அநேகநாட்கள் துக்கம் கொண்டாடுகிற பெண்ணைப்போலக் காண்பித்து,
3 Kí o sì tọ ọba wá, kí o sọ fún un gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí.” Joabu sì fi ọ̀rọ̀ sí lẹ́nu.
ராஜாவிடம் போய், அவரை நோக்கி: இவ்வாறாகச் சொல் என்று அவள் சொல்லவேண்டிய வார்த்தைகளை யோவாப் அவளிடம் சொன்னான்.
4 Nígbà tí obìnrin àrá Tekoa sì ń fẹ́ sọ̀rọ̀ fún ọba, ó wólẹ̀, ó dojúbolẹ̀, o sí bu ọlá fún un, o sì wí pé, “Ọba, gbà mi.”
அப்படியே தெக்கோவா ஊரைச்சேர்ந்த அந்த பெண் ராஜாவோடு பேசப்போய், தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே, இரட்சியும் என்றாள்.
5 Ọba sì bi í léèrè pé, “Kín ni o ṣe ọ́?” Òun sì dáhùn wí pé, “Nítòótọ́ opó ni èmi ń ṣe, ọkọ mi sì kú.
ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, அவள்: நான் ஒரு விதவை, என்னுடைய கணவன் இறந்துபோனான்.
6 Ìránṣẹ́bìnrin rẹ̀ sì ti ní ọmọkùnrin méjì, àwọn méjèèjì sì jọ jà lóko, kò sì si ẹni tí yóò là wọ́n, èkínní sì lu èkejì, ó sì pa á.
உமது அடியாளுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் வெளியிலே சண்டையிட்டு, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான்.
7 Sì wò ó, gbogbo ìdílé dìde sí ìránṣẹ́bìnrin rẹ̀, wọ́n sì wí pé, ‘Fi ẹni tí ó pa arákùnrin rẹ fún wa, àwa ó sì pa á ní ipò ẹ̀mí arákùnrin rẹ̀ tí ó pa, àwa ó sì pa àrólé náà run pẹ̀lú.’ Wọn ó sì pa iná mi tí ó kù, wọn kì yóò sì fi orúkọ tàbí ẹni tí ó kú sílẹ̀ fún ọkọ mi ní ayé.”
வம்சத்தார்கள் எல்லோரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாக எழும்பி, தன்னுடைய சகோதரனைக் கொன்று போட்டவனை எங்களிடம் ஒப்புவி; அவன் கொன்ற அவனுடைய சகோதரனுடைய உயிருக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்; ஒரே வாரிசாக இருந்தாலும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள். இப்படி என் கணவனின் பெயரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடி, எனக்கு இன்னும் மீதியாக இருக்கிற கடைசியாக எரிகிற சிறு நெருப்பையும் அணைத்துப்போட மனதாக இருக்கிறார்கள் என்றாள்.
8 Ọba sì wí fún obìnrin náà pé, “Lọ sí ilé rẹ̀, èmi ó sì kìlọ̀ nítorí rẹ.”
ராஜா அந்தப் பெண்ணைப் பார்த்து: நீ உன்னுடைய வீட்டுக்குப் போ, உன்னுடைய காரியத்தைக் குறித்து கட்டளை கொடுப்பேன் என்றான்.
9 Obìnrin ará Tekoa náà sì wí fún ọba pé, “Olúwa mi, ọba, jẹ́ kí ẹ̀ṣẹ̀ náà wà lórí mi, àti lórí ìdílé baba mí; kí ọba àti ìtẹ́ rẹ̀ ó jẹ́ aláìlẹ́bi.”
பின்னும் அந்தத் தெக்கோவாவூர் பெண் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, ராஜாவின் மேலும் அவருடைய சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடி, அந்தப் பழி என்மேலும் என்னுடைய தகப்பன் குடும்பத்தின்மேலும் சுமரட்டும் என்றாள்.
10 Ọba sì wí pé, “Ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ sí ọ, mú ẹni náà tọ̀ mí wá, òun kì yóò sì tọ́ ọ mọ́.”
௧0அதற்கு ராஜா: உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடம் கொண்டுவா; அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாமல் இருப்பான் என்றான்.
11 Ó sì wí pé, “Èmi bẹ̀ ọ́ jẹ́ kí ọba ó rántí Olúwa Ọlọ́run rẹ̀, kí olùgbẹ̀san ẹ̀jẹ̀ má ṣe ní ipá láti ṣe ìparun, kí wọn o má bá a pa ọmọ mi!” Òun sì wí pé, “Bí Olúwa ti ń bẹ láààyè ọ̀kan nínú irun orí ọmọ rẹ ki yóò bọ sílẹ̀.”
௧௧பின்னும் அவள்: இரத்தப்பழி வாங்குகிறவர்கள் தீங்கு செய்து, என்னுடைய மகனை அழிக்கப் பெருகாதபடி, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய யெகோவாவை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உன் மகனுடைய தலைமுடியில் ஒன்றும் தரையில் விழுவதில்லை என்று யெகோவாவின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
12 Obìnrin náà sì wí pé, “Èmí bẹ̀ ọ́, jẹ́ kí ìránṣẹ́bìnrin rẹ sọ̀rọ̀ kan fún olúwa mi ọba.” Òun si wí pé, “Máa wí.”
௧௨அப்பொழுது அந்த பெண்: ராஜாவான என்னுடைய ஆண்டவனோடு உமது அடியாள் ஒரு வார்த்தை சொல்ல அனுமதி வேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான்.
13 Obìnrin náà sì wí pé, “Nítorí kín ni ìwọ sì ṣe ro irú nǹkan yìí sí àwọn ènìyàn Ọlọ́run? Nítorí pé ní sísọ nǹkan yìí ọba ní ẹ̀bi, nítorí pé ọba kò mú ìsáǹsá rẹ̀ bọ̀ wá ilé.
௧௩அப்பொழுது அந்தப் பெண்: பின்னே ஏன் தேவனுடைய மக்களுக்கு எதிராக இப்படிப்பட்ட நினைவை நீர் கொண்டிருக்கிறீர், துரத்தப்பட்ட தம்முடைய மகனை ராஜா திரும்ப அழைக்காததாலே, ராஜா இப்பொழுது சொன்ன வார்த்தையால் குற்றமுள்ளவரைப்போல் இருக்கிறார்.
14 Nítorí pé àwa ó sá à kú, a ó sì dàbí omi tí a tú sílẹ̀ tí a kò sì lè ṣàjọ mọ́; nítorí bí Ọlọ́run kò ti gbà ẹ̀mí rẹ̀, ó sì ti ṣe ọ̀nà kí a má bá a lé ìsáǹsá rẹ̀ kúrò lọ́dọ̀ rẹ.
௧௪நாம் மரிப்பது நிச்சயம், திரும்பச் சேர்க்கக்கூடாதபடி, தரையிலே சிந்தப்படுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல், துரத்தப்பட்டவன் முழுவதும் தம்மைவிட்டு விலக்க முடியாமலிருக்கும் நினைவுகளை நினைக்கிறார்.
15 “Ǹjẹ́ nítorí náà ni èmi sì ṣe wá sọ nǹkan yìí fún olúwa mi ọba, bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ènìyàn ti dẹ́rùbà mí; ìránṣẹ́bìnrin rẹ sì wí pé, ‘Ǹjẹ́ èmi ó sọ fún ọba; ó lè rí bẹ́ẹ̀ pé ọba yóò ṣe ìfẹ́ ìránṣẹ́bìnrin rẹ̀ fún un.
௧௫இப்பொழுதும் நான் என்னுடைய ஆண்டவனாகிய ராஜாவோடு இந்த வார்த்தையைப் பேசவந்த காரணம் என்னவென்றால்: மக்கள் எனக்குப் பயமுண்டாக்கியதால், நான் ராஜாவோடு பேசவந்தேன்; ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வார் என்று உமது அடியாளான நான் நினைத்ததாலும் வந்தேனே தவிர வேறொன்றுமில்லை.
16 Nítorí pé ọba ò gbọ́, láti gbà ìránṣẹ́bìnrin rẹ sílẹ̀ lọ́wọ́ ọkùnrin náà tí ó ń fẹ́ gé èmi àti ọmọ mi pẹ̀lú kúrò nínú ilẹ̀ ìní Ọlọ́run.’
௧௬என்னையும் என்னுடைய மகனையும் ஒன்றாக தேவனுடைய சுதந்தரத்திலிருந்து நீக்கி, அழிக்க நினைக்கிற மனிதனுடைய கைக்குத் தமது அடியாளை தப்புவிக்கும்படி ராஜா கேட்பார்.
17 “Ìránṣẹ́bìnrin rẹ̀ sì wí pé, ‘Ǹjẹ́ ọ̀rọ̀ ọba olúwa mi yóò sì jásí ìtùnú; nítorí bí angẹli Ọlọ́run bẹ́ẹ̀ ni olúwa mi ọba láti mọ rere àti búburú: Olúwa Ọlọ́run rẹ yóò sì wà pẹ̀lú rẹ.’”
௧௭ராஜாவான என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாக இருக்கும் என்று உமது அடியாளான நான் நினைத்தேன்; நன்மையையும் தீமையையும் கேட்கும்படி, ராஜாவான என்னுடைய ஆண்டவன் தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; இதற்காக உம்முடைய தேவனாகிய யெகோவா உம்மோடு இருக்கிறார் என்றாள்.
18 Ọba sì dáhùn, ó sì wí fún obìnrin náà pé, “Má ṣe fi nǹkan tí èmi ó béèrè lọ́wọ́ rẹ pamọ́ fún mi, èmi bẹ̀ ọ́.” Obìnrin náà wí pé, “Jẹ́ kí olúwa mi ọba máa wí?”
௧௮அப்பொழுது ராஜா அந்தப் பெண்ணுக்கு பதிலாக: நான் உன்னிடம் கேட்கும் காரியத்தை நீ எனக்கு மறைக்க வேண்டாம் என்றான். அதற்கு அந்தப் பெண் பதிலாக, ராஜாவான என்னுடைய ஆண்டவர் சொல்லட்டும் என்றாள்.
19 Ọba sì wí pé, “Ọwọ́ Joabu kò ha wà pẹ̀lú rẹ nínú gbogbo èyí?” Obìnrin náà sì dáhùn ó sì wí pé, “Bí ẹ̀mí rẹ ti ń bẹ láààyè, olúwa mi ọba, kò sí ìyípadà sí ọwọ́ ọ̀tún, tàbí sí ọwọ́ òsì nínú gbogbo èyí tí olúwa mi ọba ti wí, nítorí pé Joabu ìránṣẹ́ rẹ, òun ni ó rán mi, òun ni ó sì fi gbogbo ọ̀rọ̀ wọ̀nyí sí ìránṣẹ́bìnrin rẹ lẹ́nu.
௧௯அப்பொழுது ராஜா: இதற்கெல்லாம் யோவாப் உனக்கு உதவியாக இருக்கவில்லையா என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண் பதிலாக, ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் சொன்னவைகளைவிட்டு வலது பக்கத்திலாவது இடது பக்கத்திலாவது விலகுவதற்கு ஒருவராலும் முடியாது என்று ராஜாவான என் ஆண்டவனுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; உமது அடியானாகிய யோவாப் தான் இதை எனக்குக் கற்பித்து, அவனே இந்த எல்லா வார்த்தைகளையும் உமது அடியாளின் வாயிலிருந்து சொல்ல வைத்தான்.
20 Láti mú irú ọ̀rọ̀ wọ̀nyí wá ni Joabu ìránṣẹ́ rẹ ṣe ṣe nǹkan yìí: olúwa mi sì gbọ́n, gẹ́gẹ́ bí ọgbọ́n angẹli Ọlọ́run, láti mọ gbogbo nǹkan tí ń bẹ̀ ní ayé.”
௨0நான் இந்தக் காரியத்தை விளக்கிப் பேசுவதற்கு உமது அடியானாகிய யோவாப் அதற்குக் காரணமாக இருந்தான்; ஆனாலும் தேசத்தில் நடக்கிறதையெல்லாம் அறிய, என் ஆண்டவனுடைய ஞானம் தேவதூதனுடைய ஞானத்தைப்போல் இருக்கிறது என்றாள்.
21 Ọba sì wí fún Joabu pé, “Wò ó, èmi ó ṣe nǹkan yìí, nítorí náà lọ, kí o sì mú ọmọdékùnrin náà Absalomu padà wá.”
௨௧அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் வாலிபனைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.
22 Joabu sì wólẹ̀ ó dojú rẹ̀ bolẹ̀, ó sì tẹríba fún un, ó sì súre fún ọba. Joabu sì wí pé, “Lónìí ni ìránṣẹ́ rẹ mọ̀ pé, èmi rí oore-ọ̀fẹ́ gbà lójú rẹ, olúwa mi, ọba, nítorí pé ọba ṣe ìfẹ́ ìránṣẹ́ rẹ̀.”
௨௨அப்பொழுது யோவாப் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி, ராஜாவை வாழ்த்தி, ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததால், என்னுடைய ஆண்டவனாகிய ராஜாவின் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.
23 Joabu sì dìde, ó sì lọ sí Geṣuri, ó sì mú Absalomu wá sí Jerusalẹmu.
௨௩பின்பு யோவாப் எழுந்து, கெசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமிற்கு அழைத்துக்கொண்டு வந்தான்.
24 Ọba sì wí pé, “Jẹ́ kí ó yípadà lọ sí ilé rẹ̀, má ṣe jẹ́ kí ó rí ojú mi.” Absalomu sì yípadà sí ilé rẹ̀, kò sì rí ojú ọba.
௨௪ராஜா: அவன் என்னுடைய முகத்தைப் பார்க்கவேண்டியதில்லை; தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும் என்றான்; அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப்போனான்.
25 Kó sì sí arẹwà kan ní gbogbo Israẹli tí à bá yìn bí Absalomu: láti àtẹ́lẹsẹ̀ rẹ̀ títí dé àtàrí rẹ̀ kò sí àbùkù kan lára rẹ̀.
௨௫இஸ்ரவேலர்கள் அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல் அழகுள்ளவனும் புகழப்பட்டவனும் இல்லை; உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை அவனில் ஒரு குறையும் இல்லாமல் இருந்தது.
26 Nígbà tí ó bá sì rẹ́ irun orí rẹ̀ (nítorí pé lọ́dọọdún ni òun máa ń rẹ́ ẹ. Nígbà tí ó bá wúwo fún un, òun a sì máa rẹ́ ẹ) òun sì wọn irun orí rẹ̀, ó sì jásí igba ṣékélì nínú òsùwọ̀n ọba.
௨௬அவன் தன்னுடைய தலைமுடி தனக்குப் பாரமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் சிரைத்துக்கொள்ளுவான்; சிரைக்கும்போது, அவனுடைய தலைமுடி ராஜாவுடைய அளவின்படி இருநூறு சேக்கல் எடையாக இருக்கும்.
27 A sì bí ọmọkùnrin mẹ́ta fún Absalomu àti ọmọbìnrin kan ti orúkọ rẹ̀ ń jẹ́ Tamari: òun sì jẹ́ obìnrin tí ó lẹ́wà lójú.
௨௭அப்சலோமுக்கு மூன்று மகன்களும், தாமார் என்னும் பெயர்கொண்ட ஒரு மகளும் பிறந்தார்கள்; இவள் மிக அழகான பெண்ணாக இருந்தாள்.
28 Absalomu sì gbé ni ọdún méjì ní Jerusalẹmu kò sì rí ojú ọba.
௨௮அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருடங்கள் எருசலேமிலே குடியிருந்தான்.
29 Absalomu sì ránṣẹ́ sí Joabu, láti rán an sí ọba, ṣùgbọ́n òun kò fẹ́ wá sọ́dọ̀ rẹ̀; ó sì ránṣẹ́ lẹ́ẹ̀kejì òun kò sì fẹ́ wá.
௨௯ஆகையால் அப்சலோம் யோவாபை ராஜாவிடம் அனுப்பும்படி அழைப்பு கொடுத்தான்; அவனோ அவனிடம் வரமாட்டேன் என்றான்; இரண்டாம்முறையும் அவன் அழைப்பு கொடுத்தான்; அவன் வரமாட்டேன் என்றான்.
30 Ó sì wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé, “Wò ó, oko Joabu gbé ti èmi, ó sì ní ọkà barle níbẹ̀; ẹ lọ kí ẹ sì ti iná bọ̀ ọ́.” Àwọn ìránṣẹ́ Absalomu sì tiná bọ oko náà.
௩0அப்பொழுது அவன் தன்னுடைய வேலைக்காரர்களைப் பார்த்து: இதோ என்னுடைய நிலத்திற்கு அருகில் யோவாபின் நிலம் இருக்கிறது; அதிலே அவனுக்கு வாற்கோதுமை விளைந்திருக்கிறது; நீங்கள் போய் அதிலே தீயைக்கொளுத்திப் போடுங்கள் என்றான்; அப்படியே அப்சலோமின் வேலைக்காரர்கள் அந்த நிலத்தில் தீயைக் கொளுத்திப்போட்டார்கள்.
31 Joabu sì dìde, ó sì tọ Absalomu wá ní ilé, ó sì wí fún un pé, “Èéṣe tí àwọn ìránṣẹ́ rẹ̀ fi tiná bọ oko mi?”
௩௧அப்பொழுது யோவாப் எழுந்து, அப்சலோமின் வீட்டிற்குள் போய், என்னுடைய நிலத்தை உம்முடைய வேலைக்காரர்கள் தீயைக் கொளுத்திப்போட்டது என்ன என்று அவனைக் கேட்டான்.
32 Absalomu sì dá Joabu lóhùn pé, “Wò ó, èmi ránṣẹ́ sí ọ, wí pé, ‘Wá níhìn-ín yìí, èmi ó sì rán ọ lọ sọ́dọ̀ ọba, láti béèrè pé, “Kí ni èmi ti Geṣuri wá si? Ìbá sàn fún mí bí ó ṣe pé èmi wà lọ́hùn ún síbẹ̀!”’ Ǹjẹ́ nísinsin yìí jẹ́ kí èmi lọ síwájú ọba bí ó bá sì ṣe ẹ̀bi ń bẹ nínú mi, kí ó pa mí.”
௩௨அப்சலோம் யோவாபைப் பார்த்து: இதோ, நான் ஏன் கெசூரிலிருந்து வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவிடம் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பு கொடுத்தேன்; இப்போதும் நான் ராஜாவின் முகத்தைப் பார்க்கட்டும்; என்மேல் குற்றம் இருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான்.
33 Joabu sì tọ ọba wá, ó sì rò fún un: ó sì ránṣẹ́ pe Absalomu, òun sì wá sọ́dọ̀ ọba, ó tẹríba fún un, ó sì dojú rẹ̀ bolẹ̀ níwájú ọba, ọba sì fi ẹnu ko Absalomu lẹ́nu.
௩௩யோவாப் ராஜாவிடம் போய், அதை அவனுக்கு அறிவித்தபோது, அப்சலோமிற்கு அழைப்பு கொடுத்தான்; அவன் ராஜாவிடம் வந்து, ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.

< 2 Samuel 14 >