< 2 Samuel 11 >
1 Lẹ́yìn ìgbà tí ọdún yípo, ní àkókò ìgbà tí àwọn ọba máa ń jáde ogun, Dafidi sì rán Joabu, àti àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú rẹ̀, àti gbogbo Israẹli; wọ́n sì pa àwọn ọmọ Ammoni, wọ́n sì dó ti Rabba. Dafidi sì jókòó ní Jerusalẹmu.
௧அடுத்த வருடம் ராஜாக்கள் வழக்கமாக யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடு தன்னுடைய வீரர்களையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் இராணுவத்தை அழிக்கவும், ரப்பாவை முற்றுகையிடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.
2 Ó sì ṣe, ní ìgbà àṣálẹ́ kan, Dafidi sì dìde ní ibùsùn rẹ̀, ó sì ń rìn lórí òrùlé ilé ọba, láti orí òrùlé náà ni ó sì rí obìnrin kan tí ó ń wẹ̀ ara rẹ̀; obìnrin náà sì ṣe arẹwà lójú láti wò.
௨ஒருநாள் மாலையில் தாவீது தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து, அரண்மனை மாடியின்மேல் உலாவிக்கொண்டிருக்கும்போது, குளிக்கிற ஒரு பெண்ணை மாடியின் மேலிருந்து பார்த்தான்; அந்த பெண் மிக அழகுள்ளவளாக இருந்தாள்.
3 Dafidi sì ránṣẹ́ ó sì béèrè obìnrin náà. Ẹnìkan sì wí pé, “Èyí ha kọ́ ni Batṣeba, ọmọbìnrin Eliamu, aya Uriah ará Hiti.”
௩அப்பொழுது தாவீது, அந்த பெண் யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் மகளும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள்.
4 Dafidi sì rán àwọn ìránṣẹ́, ó sì mú un; ó sì wọ inú ilé tọ̀ ọ́ lọ, ó sì bá a dàpọ̀, nígbà tí ó sì wẹ ara rẹ̀ mọ́ tán, ó sì padà lọ sí ilé rẹ̀.
௪அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்; அவள் அவனிடம் வந்தபோது, அவளோடு உறவுகொண்டான்; பின்பு அவள் தன்னுடைய தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குப் போனாள்.
5 Obìnrin náà sì lóyún, ó sì ránṣẹ́ ó sì sọ fún Dafidi, ó sì wí pé, “Èmi ti lóyún.”
௫அந்தப் பெண் கர்ப்பமடைந்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.
6 Dafidi sì ránṣẹ́ sí Joabu, pé, “Rán Uriah ará Hiti sí mi.” Joabu sì rán Uriah sí Dafidi.
௬அப்பொழுது தாவீது: ஏத்தியனான உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினிடம் ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதிடம் அனுப்பினான்.
7 Nígbà tí Uriah sì dé ọ̀dọ̀ rẹ̀, Dafidi sì bi í léèrè báwo ni Joabu ti ṣe àti àlàáfíà àwọn ènìyàn náà, àti bí ogun náà ti ń ṣe.
௭உரியா அவனிடம் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, மக்கள் சுகமாக இருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான்.
8 Dafidi sì wí fún Uriah pé, “Sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ, kí o sì wẹ ẹsẹ̀ rẹ.” Uriah sì jáde kúrò ní ilé ọba, oúnjẹ láti ọ̀dọ̀ ọba wá sì tọ̀ ọ́ lẹ́yìn.
௮பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன்னுடைய வீட்டிற்குப் போய், கால்களை கழுவு என்றான்; உரியா ராஜாவின் அரண்மனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவிடமிருந்து ராஜ உணவு அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.
9 Ṣùgbọ́n Uriah sun ní ẹnu-ọ̀nà ilé ọba lọ́dọ̀ gbogbo ìránṣẹ́ olúwa rẹ̀, kò sì sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀.
௯ஆனாலும் உரியா தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், ராஜ அரண்மனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லா வீரர்களோடும் படுத்துக்கொண்டிருந்தான்.
10 Nígbà tí wọ́n sì sọ fún Dafidi pé, “Uriah kò sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀,” Dafidi sì wí fún Uriah pé, “Ṣe bí ọ̀nà àjò ni ìwọ ti wá? Èéha ti ṣe tí ìwọ kò fi sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ.”
௧0உரியா தன்னுடைய வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன்னுடைய வீட்டிற்குப் போகாமல் இருக்கிறது என்ன என்று கேட்டான்.
11 Uriah sì wí fún Dafidi pé, “Àpótí ẹ̀rí, àti Israẹli, àti Juda jókòó nínú àgọ́; àti Joabu olúwa mi, àti àwọn ìránṣẹ́ olúwa mi wà ní ibùdó ní pápá, èmi ó ha lọ sí ilé mi, láti jẹ àti láti mu, àti láti bá obìnrin mi sùn? Bí ìwọ bá wà láààyè, àti bí ẹ̀mí rẹ́ si ti ń bẹ láààyè, èmi kì yóò ṣe nǹkan yìí.”
௧௧உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என்னுடைய ஆண்டவனான யோவாபும் என்னுடைய ஆண்டவனின் வீரர்களும் வெளியிலே முகாமிட்டிருக்கும்போது, நான் சாப்பிடுவதற்கும், குடிக்கிறதற்கும், என்னுடைய மனைவியோடு உறங்கவும், என்னுடைய வீட்டிற்குள் நுழைவேனா? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடையபேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.
12 Dafidi sì wí fún Uriah pé, “Sì dúró níhìn-ín lónìí, lọ́la èmi ó sì jẹ́ kí ìwọ ó lọ.” Uriah sì dúró ní Jerusalẹmu ní ọjọ́ náà, àti ọjọ́ kejì.
௧௨அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயே இரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான்.
13 Dafidi sì pè é, ó sì jẹ, ó sì mú nítorí rẹ̀; ó sì mu kí ọtí pa á; òun sì jáde ní alẹ́ lọ sí ibùsùn rẹ̀ lọ́dọ̀ àwọn ìránṣẹ́ olúwa rẹ̀, kò sì sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀.
௧௩தாவீது அவனைத் தனக்கு முன்பாக சாப்பிட்டுக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனுக்கு போதை உண்டாக்கினான்; ஆனாலும் அவன் தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், மாலையில் தன்னுடைய ஆண்டவனின் வீரர்களோடு தன்னுடைய படுக்கையிலே படுத்துக்கொண்டான்.
14 Ó sì ṣe ní òwúrọ̀, Dafidi sì kọ̀wé sí Joabu, ó fi rán Uriah.
௧௪காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.
15 Ó sì kọ sínú ìwé pé, “Fi Uriah síwájú ibi tí ogun gbé le, kí ẹ sì fàsẹ́yìn, kí wọn lè kọlù ú, kí ó sì kú.”
௧௫அந்தக் கடிதத்திலே கடுமையாக யுத்தம் நடக்கிற இடத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டப்பட்டு சாகும்படி, அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.
16 Ó sì ṣe nígbà tí Joabu ṣe àkíyèsí ìlú náà, ó sì yan Uriah sí ibi kàn ní ibi tí òun mọ̀ pé àwọn alágbára ọkùnrin ń bẹ níbẹ̀.
௧௬அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சுற்றி காவல்போட்டிருக்கும்போது பெலசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.
17 Àwọn ọkùnrin ìlú náà sì jáde wá, wọ́n sì bá Joabu jà, díẹ̀ sì ṣubú nínú àwọn ènìyàn náà nínú àwọn ìránṣẹ́ Dafidi, Uriah ará Hiti sì kú pẹ̀lú.
௧௭பட்டணத்தின் மனிதர்கள் புறப்பட்டுவந்து யோவாபோடு யுத்தம் செய்யும்போது, தாவீதின் வீரர்களான மக்களில் சிலர் விழுந்து இறந்தார்கள்; ஏத்தியனான உரியாவும் இறந்தான்.
18 Joabu sì ránṣẹ́ ó sì ro gbogbo nǹkan ogun náà fún Dafidi.
௧௮அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க தூதர்களை அனுப்பி,
19 Ó sì pàṣẹ fún ìránṣẹ́ náà pé, “Nígbà tí ìwọ bá sì parí àti máa ro gbogbo nǹkan ogun náà fún ọba.
௧௯தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லி முடிந்தபோது,
20 Bí ó bá ṣe pé, ìbínú ọba bá ru, ti òun sì wí fún ọ pé, ‘Èéṣe tí ẹ̀yin fi súnmọ́ ìlú náà láti bá wọn jà, ẹ̀yin kò mọ̀ pé wọn ó tafà láti orí odi wá.
௨0ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டணத்திற்கு இத்தனை அருகில் போய் யுத்தம் செய்யவேண்டியது என்ன? மதிலின் மேல் நின்று அம்பு எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?
21 Ta ni ó pa Abimeleki ọmọ Jerubu-Beṣeti? Kì í ṣe obìnrin ni ó yí òkúta-ọlọ lù ú láti orí odi wá, tí ó sì kú ní Tebesi? Èéha ti rí tí ẹ̀yin fi súnmọ́ odi náà? Ìwọ yóò sì wí fún un pé, Uriah ìránṣẹ́ rẹ ará Hiti kú pẹ̀lú.’”
௨௧எருப்பேசேத்தினுடைய மகன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை மதிலின் மேலிருந்து ஒரு மாவரைக்கும் கல்லின் துண்டை அவன்மேல் போட்டதால் அல்லவோ அவன் இறந்தான்; நீங்கள் மதிலிற்கு இவ்வளவு அருகில் போனது என்ன என்று உன்னோடு சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய வீரனான உரியா என்னும் ஏத்தியனும் இறந்தான் என்று சொல் என்றான்.
22 Ìránṣẹ́ náà sì lọ, ó sì wá, ó sì jẹ́ gbogbo iṣẹ́ tí Joabu rán an fún Dafidi.
௨௨அந்த ஆள் போய், நுழைந்து, யோவாப் தன்னிடம் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து,
23 Ìránṣẹ́ náà sì wí fún Dafidi pé, “Nítòótọ́ àwọn ọkùnrin náà lágbára jù wá lọ, wọ́n sì jáde tọ̀ wá wá ní pápá, àwa sì tẹ̀lé wọn títí wọ́n fi dé ẹ̀yìn odi.
௨௩தாவீதைப் பார்த்து; அந்த மனிதர்கள் மேலோங்கி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்வரை அவர்களைத் துரத்தினோம்.
24 Àwọn tafàtafà sì ta sí ìránṣẹ́ rẹ láti orí odi wá, díẹ̀ nínú àwọn ìránṣẹ́ ọba sì kú, ìránṣẹ́ rẹ̀ Uriah ará Hiti sì kú pẹ̀lú.”
௨௪அப்பொழுது வில்வீரர்கள் மதிலின் மேலிருந்து உம்முடைய வீரர்களின்மேல் அம்பு எய்ததால், ராஜாவின் வீரர்களில் சிலர் இறந்தார்கள்; உம்முடைய வீரனான உரியா என்னும் ஏத்தியனும் இறந்தான் என்றான்.
25 Dafidi sì wí fún ìránṣẹ́ náà pé, “Báyìí ni ìwọ yóò wí fún Joabu pé, ‘Má ṣe jẹ́ kí nǹkan yìí burú ní ojú rẹ, nítorí pé idà a máa pa lọ́tùn ún lósì, mú ìjà rẹ le sí ìlú náà, kí o sì bì í ṣubú.’ Kí ìwọ sì mú un lọ́kàn le.”
௨௫அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடம் போய், இந்தக் காரியத்தைப்பற்றிக் கலங்கவேண்டாம்; பட்டயம் ஒருமுறை ஒருவனையும், மற்றொருமுறை வேறொருவனையும் தாக்கும்; நீ யுத்தத்தைப் பலக்கச்செய்து, பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனைத் தைரியப்படுத்து என்றான்.
26 Nígbà tí aya Uriah sì gbọ́ pé Uriah ọkọ rẹ̀ kú, ó sì ṣọ̀fọ̀ nítorí ọkọ rẹ̀.
௨௬தன்னுடைய கணவனான உரியா இறந்தான் என்று அவனுடைய மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன்னுடைய கணவனுக்காக துக்கம் கொண்டாடினாள்.
27 Nígbà tí ìṣọ̀fọ̀ náà sì kọjá tan, Dafidi sì ránṣẹ́, o sì mú un wá sí ilé rẹ̀, ó sì di aya rẹ̀, ó sì bí ọmọkùnrin kan fún un, ṣùgbọ́n nǹkan náà tí Dafidi ṣe burú níwájú Olúwa.
௨௭துக்கநாள் முடிந்தபின்பு, தாவீது அவளை வரவழைத்து, தன்னுடைய வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி, அவனுக்கு ஒரு மகனைப்பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் யெகோவாவுக்கு மனவருத்தமாக இருந்தது.