< 1 Samuel 22 >

1 Dafidi sì kúrò níbẹ̀, ó sì sá sí ihò Adullamu; nígbà tí àwọn arákùnrin rẹ̀ àti ìdílé baba rẹ̀ sì gbọ́, wọ́n sì sọ̀kalẹ̀ tọ̀ ọ́ wá níbẹ̀.
தாவீது அந்த இடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் குகைக்குப் போனான்; அதை அவன் சகோதரர்களும் அவன் தகப்பன் வீட்டார்கள் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்திற்குப் போனார்கள்.
2 Olúkúlùkù ẹni tí ó tí wà nínú ìpọ́njú, àti olúkúlùkù ẹni tí ó ti jẹ gbèsè, àti olúkúlùkù ẹni tí ó wà nínú ìbànújẹ́, sì kó ara wọn jọ sọ́dọ̀ rẹ̀, òun sì jẹ́ olórí wọn; àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ sì tó ìwọ̀n irinwó ọmọkùnrin.
ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடு கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் படியாக ஏறக்குறைய 400 பேர் அவனோடு இருந்தார்கள்.
3 Dafidi sì ti ibẹ̀ náà lọ sí Mispa tí Moabu: ó sì wí fún ọba Moabu pé, “Jẹ́ kí baba àti ìyá mi, èmi bẹ̀ ọ́ wá bá ọ gbé, títí èmi yóò fi mọ ohun ti Ọlọ́run yóò ṣe fún mi.”
தாவீது அந்த இடத்தைவிட்டு மோவாபியர்களைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியும் வரை, என்னுடைய தகப்பனும் என்னுடைய தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயை செய்யும் என்று சொல்லி,
4 Ó sì mú wọn wá síwájú ọba Moabu; wọ́n sì bá á gbé ní gbogbo ọjọ́ tí Dafidi fi wà nínú ihò náà.
அவர்களை மோவாபின் ராஜாவிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்; தாவீது கோட்டையில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள்.
5 Gadi wòlíì sí wí fún Dafidi pé, “Ma ṣe gbé inú ihò náà, yẹra, kí o sí lọ sí ilẹ̀ Juda.” Nígbà náà ni Dafidi sì yẹra, ó sì lọ sínú igbó Hereti.
பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் கோட்டையில் இருக்காமல் யூதா தேசத்திற்குப் புறப்பட்டு வாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிற்கு போனான்.
6 Saulu si gbọ́ pé a rí Dafidi àti àwọn ọkùnrin tí ó wà lọ́dọ̀ rẹ̀; Saulu sì ń bẹ ní Gibeah lábẹ́ igi tamariski ní Rama; ọ̀kọ̀ rẹ̀ sì ń bẹ lọ́wọ́ rẹ̀, àti gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ sì dúró tì í.
தாவீதும் அவனோடிருந்த மனிதர்களும் காணப்பட்ட செய்தியை சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் தன்னைச் சூழ்ந்து நிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும்போது,
7 Nígbà náà ni Saulu wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ tí ó dúró tì í, pé, “Ǹjẹ́ ẹ gbọ́ ẹ̀yin ará Benjamini, ọmọ Jese yóò ha fún olúkúlùkù yín ni oko ọgbà àjàrà bí? Kí ó sì sọ gbogbo yin dì olórí ẹgbẹẹgbẹ̀rún àti olórí ọ̀rọ̀ọ̀rún bí?
சவுல் தன்னுடைய அருகில் நிற்கிற தன் ஊழியக்காரர்களைப் பார்த்து: பென்யமீன் மக்களே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் எல்லோருக்கும் வயல்களையும் திராட்சைத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லோரையும் ஆயிரத்திற்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ?
8 Tí gbogbo yín di ìmọ̀lù sí mi, tí kò sì sí ẹnìkan tí ó sọ létí mi pé, ọmọ mi ti bá ọmọ Jese mulẹ̀, bẹ́ẹ̀ ni kó sì sí ẹnìkan nínú yín tí ó ṣàánú mi, tí ó sì sọ ọ́ létí mi pé, ọmọ mi mú kí ìránṣẹ́ mi dìde sí mi láti ba dè mí, bí ó ti rí lónìí.”
நீங்களெல்லோரும் எனக்கு எதிராக சதி செய்தது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கை செய்யும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவன் கூட இல்லையா? இந்த நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிசெய்ய, என்னுடைய மகன் என்னுடைய வேலைக்காரனை எனக்கு விரோதமாக தூண்டிவிட்டானே என்றான்.
9 Doegi ará Edomu tí a fi jẹ olórí àwọn ìránṣẹ́ Saulu, sì dáhùn wí pé, “Èmi rí ọmọ Jese, ó wá sí Nobu, sọ́dọ̀ Ahimeleki ọmọ Ahitubu.
அப்பொழுது சவுலின் ஊழியக்காரர்களோடு நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பதிலாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் மகனான அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன்.
10 Òun sì béèrè lọ́dọ̀ Olúwa fún un, ó sì fún un ní oúnjẹ, ó sí fún un ni idà Goliati ará Filistini.”
௧0இவன் அவனுக்காகக் யெகோவாவிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு ஆகாரம் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.
11 Ọba sì ránṣẹ́ pe Ahimeleki àlùfáà, ọmọ Ahitubu àti gbogbo ìdílé baba rẹ̀, àwọn àlùfáà tí ó wà ni Nobu: gbogbo wọn ni ó sì wá sọ́dọ̀ ọba.
௧௧அப்பொழுது ராஜா: அகிதூபின் மகனான அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டார்களாகிய எல்லா ஆசாரியர்களையும் அழைத்தான்; அவர்கள் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்.
12 Saulu sì wí pé, “Ǹjẹ́ gbọ́, ìwọ ọmọ Ahitubu.” Òun sì wí pé, “Èmi nìyìí olúwa mi.”
௧௨அப்பொழுது சவுல்: அகிதூபின் மகனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என்னுடைய ஆண்டவனே என்றான்.
13 Saulu sì wí fún un pé, “Kí ni ó dé tí ẹ̀yin fi ṣọ̀tẹ̀ sí mi, ìwọ àti ọmọ Jese, tí ìwọ fi fún un ní àkàrà, àti idà, àti ti ìwọ fi béèrè fún un lọ́dọ̀ Ọlọ́run kí òun lè dìde sí mi, láti ba dè mí, bí ó ti rí lónìí.”
௧௩அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாக சதிசெய்து, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிசெய்ய அவன் எனக்கு எதிராக எழும்பும்படி, நீ அவனுக்கு ரொட்டியும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.
14 Ahimeleki sì dá ọba lóhùn, ó sì wí pé, “Ta ni ó jẹ́ olóòtítọ́ nínú gbogbo àwọn ìránṣẹ́ rẹ bí Dafidi, ẹni tí ó jẹ́ àna ọba, ẹni tí ó ń gbọ́ tìrẹ, tí ó sì ni ọlá ní ilé rẹ.
௧௪அகிமெலேக் ராஜாவுக்குப் பதிலாக: உம்முடைய எல்லா ஊழியக்காரர்களிலும் தாவீதைப் போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்து வருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்?
15 Òní lèmi ó ṣẹ̀ṣẹ̀ máa béèrè lọ́wọ́ Ọlọ́run fún un bí? Kí èyí jìnnà sí mi: kí ọba má ṣe ka nǹkan kan sí ìránṣẹ́ rẹ̀ lọ́rùn, tàbí sí gbogbo ìdílé baba mi: nítorí pé ìránṣẹ́ rẹ̀ kò mọ̀kan nínú gbogbo nǹkan yìí, díẹ̀ tàbí púpọ̀.”
௧௫இன்றையதினம் அவனுக்காக தேவனிடத்தில் வேண்டுதல் செய்யத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாவது என்னுடைய தகப்பன் வீட்டார்களில் எவன் மேலாவது குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்ததில்லை என்றான்.
16 Ọba sì wí pé, “Ahimeleki, kíkú ni ìwọ yóò kú, ìwọ àti gbogbo ìdílé baba rẹ̀.”
௧௬ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன்னுடைய தகப்பன் வீட்டார்கள் அனைவரும் நிச்சயமாக சாகவேண்டும் என்றான்.
17 Ọba sì wí fún àwọn aṣáájú ti máa ń sáré níwájú ọba, tí ó dúró tì í pé, “Yípadà kí ẹ sì pa àwọn àlùfáà Olúwa; nítorí pé ọwọ́ wọn wà pẹ̀lú Dafidi, àti nítorí pé wọ́n mọ ìgbà tí òun sá, wọn kò sì sọ ọ́ létí mi.” Ṣùgbọ́n àwọn ìránṣẹ́ ọba kò sì jẹ́ fi ọwọ́ wọn lé àwọn àlùfáà Olúwa láti pa wọ́n.
௧௭பின்பு ராஜா தன்னருகில் நிற்கிற காவலர்களை பார்த்து: நீங்கள் போய், யெகோவாவுடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது; அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும், அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான்; ராஜாவின் வேலைக்காரர்களோ, யெகோவாவுடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை.
18 Ọba sì wí fún Doegi pé, “Ìwọ yípadà, kí o sì pa àwọn àlùfáà!” Doegi ará Edomu sì yípadà, ó sì kọlu àwọn àlùfáà, ó sì pa wọ́n ní ọjọ́ náà, àrùnlélọ́gọ́rin ènìyàn ti ń wọ aṣọ ọ̀gbọ̀ efodu.
௧௮அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல் நூல் ஏபோத்தை அணிந்திருக்கும் 85 பேரை அன்றையதினம் கொன்றான்.
19 Ó sì fi ojú idà pa ara Nobu, ìlú àwọn àlùfáà náà àti ọkùnrin àti obìnrin, ọmọ wẹ́wẹ́, àti àwọn tí ó wà lẹ́nu ọmú, àti màlúù, àti kẹ́tẹ́kẹ́tẹ́, àti àgùntàn.
௧௯ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும், கைக் குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் கூர்மையான பட்டயத்தால் வெட்டிப்போட்டான்.
20 Ọ̀kan nínú àwọn ọmọ Ahimeleki ọmọ Ahitubu tí a ń pè ní Abiatari sì bọ́; ó sì sá àsálà tọ Dafidi lọ.
௨0அகிதூபின் மகனான அகிமெலேக்கின் மகன்களில் அபியத்தார் என்னும் பெயருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் இடத்திற்கு ஓடிப்போய்,
21 Abiatari sì fihan Dafidi pé Saulu pa àwọn àlùfáà Olúwa tán.
௨௧சவுல் யெகோவாவுடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.
22 Dafidi sì wí fún Abiatari pé, “Èmi ti mọ̀ ní ọjọ́ náà, nígbà tí Doegi ará Edomu ti wà níbẹ̀ pé, nítòótọ́ yóò sọ fún Saulu: nítorí mi ni a ṣe pa gbogbo ìdílé baba rẹ.
௨௨அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்ததாலே, அவன் எப்படியாகிலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன்னுடைய தகப்பன் வீட்டார்களாகிய எல்லோருடைய மரணத்திற்கும் காரணம் நானே.
23 Ìwọ jókòó níhìn-ín lọ́dọ̀ mi, má ṣe bẹ̀rù, nítorí pé ẹni ti ń wá ẹ̀mí mi, ó ń wá ẹ̀mí rẹ, ṣùgbọ́n lọ́dọ̀ mi ni ìwọ ó wà ní àìléwu.”
௨௩நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் உயிரை வாங்கத்தேடுகிறவனே உன்னுடைய உயிரையும் வாங்கத்தேடுகிறான்; நீ என்னுடைய ஆதரவிலே இரு என்றான்.

< 1 Samuel 22 >