< 1 Kings 15 >
1 Ní ọdún kejìdínlógún ìjọba Jeroboamu ọmọ Nebati, Abijah jẹ ọba lórí Juda,
௧நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் 18 ஆம் வருடத்திலே அபியாம் யூதா தேசத்திற்கு ராஜாவாகி,
2 ó sì jẹ ọba ní ọdún mẹ́ta ní Jerusalẹmu. Orúkọ ìyá rẹ̀ sì ni Maaka, ọmọbìnrin Absalomu.
௨மூன்று வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.
3 Ó sì rìn nínú gbogbo ẹ̀ṣẹ̀ tí baba rẹ̀ ti dá ṣáájú rẹ̀; ọkàn rẹ̀ kò sì pé pẹ̀lú Olúwa Ọlọ́run rẹ̀, gẹ́gẹ́ bí ọkàn Dafidi baba ńlá rẹ̀ ti ṣe.
௩தன்னுடைய தகப்பன் தன் காலத்திற்குமுன்பு செய்த எல்லாப் பாவங்களிலும் தானும் நடந்தான்; அவனுடைய இருதயம் அவனுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன்னுடைய தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உத்தமமாக இருக்கவில்லை.
4 Ṣùgbọ́n, nítorí i Dafidi Olúwa Ọlọ́run rẹ̀ fún un ní ìmọ́lẹ̀ kan ní Jerusalẹmu nípa gbígbé ọmọ rẹ̀ ró láti jẹ ọba ní ipò rẹ̀ àti láti fi ìdí Jerusalẹmu múlẹ̀.
௪ஆனாலும் தாவீதுக்காக அவனுடைய தேவனாகிய யெகோவா, அவனுக்குப் பிறகு அவனுடைய மகனை எழும்பச்செய்வதாலும், எருசலேமை நிலைநிறுத்துவதாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார்.
5 Nítorí tí Dafidi ṣe èyí tí ó dára ní ojú Olúwa, tí kò sì kùnà láti pa gbogbo èyí tí Olúwa pàṣẹ fún un mọ́ ní ọjọ́ ayé rẹ̀ gbogbo; bí kò ṣe ní kìkì ọ̀ràn Uriah ará Hiti.
௫தாவீது ஏத்தியனான உரியாவின் காரியம் ஒன்றுதவிர யெகோவா தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடு இருந்த நாட்களெல்லாம் ஒன்றையும் விட்டுவிலகாமல், அவருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.
6 Ogun sì wà láàrín Rehoboamu àti Jeroboamu ní gbogbo ọjọ́ ayé Abijah.
௬ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
7 Ní ti ìyókù ìṣe Abijah, àti gbogbo èyí tí ó ṣe, a kò ha kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Juda? Ogun sì wà láàrín Abijah àti Jeroboamu.
௭அபியாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளெல்லாம் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
8 Abijah sì sùn pẹ̀lú àwọn baba rẹ̀, a sì sin ín ní ìlú Dafidi. Asa ọmọ rẹ̀ sì jẹ ọba ní ipò rẹ̀.
௮அபியாம் இறந்தபின்பு அவனுடைய முன்னோர்களோடு, அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய மகனாகிய ஆசா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
9 Ní ogún ọdún Jeroboamu ọba Israẹli, Asa jẹ ọba lórí Juda,
௯இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் 20 ஆம் வருடத்திலே ஆசா யூதா தேசத்திற்கு ராஜாவாகி,
10 Ó sì jẹ ọba ní Jerusalẹmu ní ọdún mọ́kànlélógójì. Orúkọ ìyá ńlá rẹ̀ sì ni Maaka, ọmọbìnrin Absalomu.
௧041 வருடங்கள் எருசலேமில் அரசாட்சி செய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.
11 Asa sì ṣe èyí tí ó dára lójú Olúwa, bí Dafidi baba rẹ̀ ti ṣe.
௧௧ஆசா தன்னுடைய தகப்பனாகிய தாவீதைப்போல் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
12 Ó sì mú àwọn ọkùnrin alágbèrè ojúbọ òrìṣà kúrò ní ilẹ̀ náà, ó sì kó gbogbo ère tí àwọn baba rẹ̀ ti ṣe kúrò.
௧௨அவன் ஆண் விபசாரக்காரர்களை தேசத்திலிருந்து அகற்றி, தன்னுடைய முன்னோர்கள் ஏற்படுத்தின அருவருப்பான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி,
13 Ó sì mú Maaka ìyá ńlá rẹ̀ kúrò láti máa ṣe ayaba, nítorí tí ó yá ère kan fún Aṣerah òrìṣà rẹ̀. Asa sì ké ère náà lulẹ̀, ó sì jó o ní àfonífojì Kidironi.
௧௩தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை ஏற்படுத்தின தன்னுடைய தாயாகிய மாகாளையும் ராணியாக இல்லாதபடி விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா அழித்து, கீதரோன் ஆற்றின் அருகில் சுட்டெரித்துப்போட்டான்.
14 Ṣùgbọ́n kò mú àwọn ibi gíga kúrò, síbẹ̀ ọkàn Asa pé pẹ̀lú Olúwa ní ọjọ́ ayé rẹ̀ gbogbo.
௧௪மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடு இருந்த நாட்களெல்லாம் அவனுடைய இருதயம் யெகோவாவோடு இணைந்திருந்தது.
15 Ó sì mú wúrà àti fàdákà àti àwọn ohun èlò tí òun àti baba rẹ̀ ti yà sí mímọ́ wọ ilé Olúwa.
௧௫தன்னுடைய தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிப்பொருட்களையும் அவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்தான்.
16 Ogun sì wà láàrín Asa àti Baaṣa ọba Israẹli ní gbogbo ọjọ́ ayé wọn.
௧௬ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
17 Baaṣa, ọba Israẹli sì gòkè lọ sí Juda, ó sì kọ́ Rama láti má jẹ́ kí ẹnikẹ́ni jáde tàbí wọlé tọ Asa ọba lọ.
௧௭ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடம் போக்குவரத்தாக இல்லாதபடி, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்.
18 Nígbà náà ni Asa mú gbogbo fàdákà àti wúrà tí ó kù nínú ìṣúra ilé Olúwa àti ìṣúra ilé ọba. Ó sì fi lé àwọn ìránṣẹ́ rẹ̀ lọ́wọ́, ó sì rán wọn lọ sí ọ̀dọ̀ Beni-Hadadi ọmọ Tabrimoni, ọmọ Hesioni ọba Siria tí ó ń gbé ní Damasku.
௧௮அப்பொழுது ஆசா யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரண்மனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன்னுடைய வேலைக்காரர்கள் மூலம் தமஸ்குவில் வாழ்ந்த எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் மகன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவிற்குக் கொடுத்தனுப்பி:
19 Ó sì wí pé, “Jẹ́ kí májẹ̀mú kí ó wà láàrín èmi àti ìwọ, bí ó sì ti wà láàrín baba mi àti baba rẹ. Wò ó, Èmi rán ọrẹ fàdákà àti wúrà sí ọ. Ǹjẹ́ nísinsin yìí, da májẹ̀mú rẹ pẹ̀lú Baaṣa, ọba Israẹli, kí ó lè lọ kúrò lọ́dọ̀ mi.”
௧௯எனக்கும் உமக்கும் என்னுடைய தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாக வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படி, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச்சொன்னான்.
20 Beni-Hadadi gba ti Asa ọba, ó sì rán àwọn alágbára olórí ogun rẹ̀ sí àwọn ìlú Israẹli. Ó sì ṣẹ́gun Ijoni, Dani àti Abeli-Beti-Maaka, àti gbogbo Kinnereti pẹ̀lú gbogbo ilẹ̀ Naftali.
௨0பெனாதாத், ராஜாவாகிய ஆசாவின் சொல்லைக்கேட்டு, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பி, ஈயோனையும், தாணையும் பெத்மாக்கா என்னும் ஆபேலையும் கின்னரேத் அனைத்தையும் நப்தலியின் முழு தேசத்தையும் தோற்கடித்தான்.
21 Nígbà tí Baaṣa sì gbọ́ èyí, ó sì ṣíwọ́ kíkọ́ Rama, ó sì lọ kúrò sí Tirsa.
௨௧பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதைவிட்டு திர்சாவில் இருந்துவிட்டான்.
22 Nígbà náà ni Asa ọba kéde ká gbogbo Juda, kò dá ẹnìkan sí, wọ́n sì kó òkúta Rama kúrò àti igi rẹ̀, tí Baaṣa fi kọ́lé. Asa ọba sì fi wọ́n kọ́ Geba ti Benjamini àti Mispa.
௨௨அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லோரும் போய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர அறிவிப்புகொடுத்து; அவைகளால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
23 Ní ti ìyókù gbogbo ìṣe Asa, àti gbogbo agbára rẹ̀, àti gbogbo ohun tí ó ṣe, àti àwọn ìlú tí ó kọ́, a kò ha kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Juda? Ṣùgbọ́n, ní ìgbà ogbó rẹ̀, ààrùn ṣe é ní ẹsẹ̀ rẹ̀.
௨௩ஆசாவின் மற்ற எல்லா செயல்பாடுகளும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவைகளும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி வந்திருந்தது.
24 Asa sì sùn pẹ̀lú àwọn baba rẹ̀, a sì sin ín pẹ̀lú àwọn baba rẹ̀ ní ìlú Dafidi baba rẹ̀. Jehoṣafati ọmọ rẹ̀ sì jẹ ọba ní ipò rẹ̀.
௨௪ஆசா இறந்தபின்பு தன்னுடைய முன்னோர்களோடு, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய யோசபாத் அவனுடைய இடத்திலே ராஜாவானான்.
25 Nadabu ọmọ Jeroboamu sì jẹ ọba lórí Israẹli ní ọdún kejì Asa ọba Juda, ó sì jẹ ọba lórí Israẹli ní ọdún méjì.
௨௫யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருடத்திலே யெரொபெயாமின் மகனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, இரண்டு வருடம் இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்தான்.
26 Ó sì ṣe búburú níwájú Olúwa, ó sì rìn ní ọ̀nà baba rẹ̀ àti nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, èyí tí ó mú Israẹli dá.
௨௬அவன் யெகோவாவுடைய பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தன்னுடைய தகப்பனுடைய வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான்.
27 Baaṣa ọmọ Ahijah ti ilé Isakari sì dìtẹ̀ sí i, Baaṣa sì kọlù ú ní Gibetoni, ìlú àwọn ará Filistini, nígbà tí Nadabu àti gbogbo Israẹli dó ti Gibetoni.
௨௭இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் மகனான பாஷா, அவனுக்கு எதிராகக் சதிசெய்து, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தர்களுக்கு இருந்த கிபெத்தோனை முற்றுகை இட்டிருக்கும்போது, பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்.
28 Baaṣa sì pa Nadabu ní ọdún kẹta Asa ọba Juda, ó sì jẹ ọba ní ipò rẹ̀.
௨௮பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் அரசாட்சியின் வருடத்திலே அவனைக் கொன்றுபோட்டபின்பு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
29 Ó sì ṣe, bí ó sì ti bẹ̀rẹ̀ sí ní jẹ ọba ó pa gbogbo ilé Jeroboamu, kò sì ku ẹnìkan tí ń mí fún Jeroboamu, ṣùgbọ́n ó run gbogbo wọn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa, tí ó sọ nípa ọwọ́ ìránṣẹ́ rẹ̀ Ahijah ará Ṣilo.
௨௯அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யச்செய்ததுமான பாவங்களினாலும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு உண்டாக்கின கோபத்தினாலும், யெகோவா சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே,
30 Nítorí ẹ̀ṣẹ̀ tí Jeroboamu ti ṣẹ̀ àti tí ó mú Israẹli ṣẹ̀, àti nítorí tí ó ti mú Olúwa Ọlọ́run Israẹli bínú.
௩0அவன் ராஜாவானபின்பு அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை.
31 Ní ti ìyókù ìṣe Nadabu àti gbogbo ohun tí ó ṣe, a kò ha kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Israẹli?
௩௧நாதாபின் மற்ற செயல்பாடுகளும் அவன் செய்தவைகளும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
32 Ogun sì wà láàrín Asa àti Baaṣa ọba Israẹli ní gbogbo ọjọ́ wọn.
௩௨ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
33 Ní ọdún kẹta Asa ọba Juda, Baaṣa ọmọ Ahijah sì jẹ ọba lórí gbogbo Israẹli ní Tirsa, ó sì jẹ ọba ní ọdún mẹ́rìnlélógún.
௩௩யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருட அரசாட்சியிலே அகியாவின் மகனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி 24 வருடங்கள் ஆண்டு,
34 Ó sì ṣe búburú níwájú Olúwa, ó sì rìn ní ọ̀nà Jeroboamu àti nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, èyí tí ó ti mú Israẹli ṣẹ̀.
௩௪யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான்.