< Sáng Thế 34 >
1 Nàng Đi-na, con gái của Lê-a sanh cho Gia-cốp, đi ra thăm bọn con gái của xứ đó.
௧லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற மகளாகிய தீனாள், தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.
2 Si-chem, con trai Hê-mô, người Hê-vít, hoàng tử xứ đó, thấy nàng, thì cướp đi, nằm với nàng và làm điếm nhục nàng.
௨அவளை ஏவியனான ஏமோரின் மகனும் அந்த தேசத்தின் இளவரசனுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடு உறவுகொண்டு, அவளைத் தீட்டுப்படுத்தினான்.
3 Tâm hồn chàng vấn-vít cùng Đi-na, con gái Gia-cốp, thương mến con gái tơ đó, lấy lời ngon ngọt nói cùng nàng.
௩அவனுடைய மனம், யாக்கோபின் மகளாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அவளுடைய மனதிற்கு இன்பமாகப் பேசினான்.
4 Si-chem nói cùng Hê-mô, cha mình, rằng: Hãy cho tôi con gái nầy làm vợ.
௪சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: “இந்தப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும்” என்று சொன்னான்.
5 Vả, Gia-cốp hay được rằng chàng làm hư danh giá Đi-na, con gái mình, nhưng các con trai mình mắc ở ngoài đồng cùng súc vật, nên người làm thinh đến khi họ trở về.
௫தன் மகளாகிய தீனாளை அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவனுடைய மகன்கள் அவனுடைய மந்தையினிடத்தில் வயல்வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வரும்வரைக்கும் யாக்கோபு பேசாமலிருந்தான்.
6 Lúc đó, Hê-mô, cha Si-chem, đến cùng Gia-cốp đặng nói chuyện cùng người.
௬அந்தநேரத்தில் சீகேமின் தகப்பனாகிய ஏமோர் புறப்பட்டு, யாக்கோபோடு பேசும்படி அவனிடத்திற்கு வந்தான்.
7 Các con trai Gia-cốp ở ngoài đồng trở về, vừa hay được việc ấy, bèn nổi nóng và giận lắm, vì việc ô danh mà Si-chem đã xui cho họ Y-sơ-ra-ên, nằm cùng con gái của Gia-cốp, là việc chẳng bao giờ nên làm.
௭யாக்கோபின் மகன்கள் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வயல்வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் மகளோடு உறவுகொண்டு, செய்யத்தகாத புத்திகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர்கள் மனம்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்.
8 Hê-mô nói cùng họ rằng: Tâm hồn Si-chem, con trai tôi, đã dan-díu cùng con gái các ông; xin hãy gả nàng cho nó làm vợ.
௮ஏமோர் அவர்களோடு பேசி: “என் மகனாகிய சீகேமின் மனது உங்கள் மகளின்மேல் பற்றுதலாயிருக்கிறது; அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள்.
9 Hãy kết sui-gia cùng nhau; các ông gả con gái cho chúng tôi, rồi cưới các con gái chúng tôi lại.
௯நீங்கள் எங்களோடு சம்பந்தங்கலந்து, உங்கள் மகள்களை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் மகள்களை உங்களுக்குக் கொண்டு,
10 Hãy ở cùng chúng tôi; xứ sẵn dành cho các ông; hãy ở, buôn bán và dựng cơ nghiệp tại đó.
௧0எங்களோடு குடியிருங்கள்; தேசம் உங்களுக்கு முன்பாக இருக்கிறது; இதில் குடியிருந்து, வியாபாரம்செய்து, பொருள் சம்பாதித்து, அதைக் கையாண்டுகொண்டிருங்கள்” என்றான்.
11 Si-chem thưa cùng cha và các anh em của người con gái rằng: Xin cho tôi được ơn trước mặt các ông, và điều chi các ông nói, tôi xin nạp cho.
௧௧சீகேமும், அவளுடைய தகப்பனையும், சகோதரர்களையும் நோக்கி: “உங்களுடைய கண்களில் எனக்கு தயவு கிடைக்கவேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்;
12 Xin hãy đòi một lễ cưới cho lớn, sính nghi cho cao, tôi xin nạp theo y lời các ông nói; nhưng hãy gả con gái đó cho tôi làm vợ.
௧௨பெண்ணுக்குக் கொடுக்கவேண்டியவைகளையும் வெகுமதிகளையும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும்” என்றான்.
13 Các con trai Gia-cốp đáp lại cùng Si-chem và Hê-mô, cha chàng, cùng dùng mưu nói chuyện với họ, vì Si-chem đã làm mất danh giá của Đi-na, em gái mình.
௧௩அப்பொழுது யாக்கோபின் மகன்கள் தங்கள் சகோதரியாகிய தீனாளை சீகேம் என்பவன் தீட்டுப்படுத்தினதால், அவனுக்கும் அவனுடைய தகப்பனாகிய ஏமோருக்கும் தந்திரமான மறுமொழியாக:
14 Các người ấy nói rằng: Gả em gái chúng tôi cho ai chẳng chịu phép cắt bì, ấy là một việc chúng tôi làm không được, vì sẽ là một nỗi nhuốc nhơ cho chúng tôi vậy.
௧௪“விருத்தசேதனமில்லாத மனிதனுக்கு நாங்கள் எங்களுடைய சகோதரியைக் கொடுக்கமுடியாது; அது எங்களுக்கு அவமானமாயிருக்கும்.
15 Chúng tôi sẽ nhận lời các ông được, là khi nào các ông trở nên giống như chúng tôi, tức là mọi người nam chịu phép cắt bì;
௧௫நீங்களும், உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டு எங்களைப்போல் ஆவீர்களானால், நாங்கள் சம்மதித்து,
16 vậy, chúng tôi sẽ gả con gái chúng tôi cho các ông, và sẽ cưới con gái các ông lại; đoạn ta sẽ ở chung nhau, thành ra một dân mà thôi.
௧௬உங்களுக்கு எங்கள் மகள்களைக் கொடுத்து, உங்கள் மகள்களை எங்களுக்குக் கொண்டு, உங்களோடு குடியிருந்து, ஒரே ஜனமாக இருப்போம்.
17 Còn nếu không khứng nghe theo lời, và không chịu phép cắt bì, thì chúng tôi bắt con gái lại và đi ở nơi khác.
௧௭விருத்தசேதனம் செய்துகொள்வதற்கு சம்மதிக்கவில்லை என்றால், நாங்கள் எங்களுடைய மகளை அழைத்துக்கொண்டு போய்விடுவோம்” என்று சொன்னார்கள்.
18 Bao nhiêu lời họ nói làm cho đẹp dạ Hê-mô và Si-chem, con trai người.
௧௮அவர்களுடைய வார்த்தைகள் ஏமோருக்கும் ஏமோரின் மகனாகிய சீகேமுக்கும் நன்றாகத் தோன்றியது.
19 Chàng trẻ tuổi đó không ngần ngại các việc họ đã định, vì con gái của Gia-cốp đẹp lòng chàng. Vả, chàng đây là một người quí trọng hơn mọi người trong nhà cha mình.
௧௯அந்த வாலிபன் யாக்கோபுடைய மகளின்மேல் பிரியம் வைத்திருந்ததால், அந்தக் காரியத்தைச் செய்ய அவன் தாமதம்செய்யவில்லை. அவன் தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாக இருந்தான்.
20 Vậy, Hê-mô và Si-chem, con trai người, đi đến cửa thành mình, nói cùng dân trong thành như vầy:
௨0ஏமோரும் அவனுடைய மகன் சீகேமும் தங்கள் பட்டணத்து வாசலில் வந்து, தங்கள் பட்டணத்து மனிதர்களுடன் பேசி:
21 Các người đó ăn ở hòa thuận giữa vòng chúng ta; vậy cho họ ở trong xứ đặng buôn bán. Nầy, xứ cũng rộng cho họ ở; chúng ta sẽ cưới con gái họ làm vợ, và gả các con gái chúng ta lại.
௨௧“இந்த மனிதர் நம்முடன் சமாதானமாயிருக்கிறார்கள்; ஆகவே, அவர்கள் இந்தத் தேசத்தில் குடியிருந்து, இதிலே வியாபாரம் செய்யட்டும்; அவர்களும் குடியிருக்கிறதற்கு தேசம் விசாலமாக இருக்கிறது; அவர்களுடைய மகள்களை நமக்கு மனைவிகளாகக் கொண்டு, நம்முடைய மகள்களை அவர்களுக்குக் கொடுப்போம்.
22 Nhưng họ bằng lòng ở cùng chúng ta đặng thành một dân, miễn khi nào các người nam trong bọn mình phải chịu phép cắt bì chính như mọi người nam của họ vậy.
௨௨அந்த மனிதர் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாயிருக்கிறது போல, நம்மிலுள்ள ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டால், அவர்கள் ஏகஜனமாக நம்மோடு குடியிருக்கச் சம்மதிப்பார்கள்.
23 Thế thì, há rằng các súc vật, các tài sản và các bầy của họ sẽ chẳng thuộc về chúng ta sao? thôi, ta hãy nhận theo họ điều đó đi, để họ ở chung cùng chúng ta.
௨௩அவர்களுடைய ஆடுமாடுகள், சொத்துக்கள், மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா? அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே குடியிருப்பார்கள்” என்று சொன்னார்கள்.
24 Mọi người đi ra cửa thành mình đều nghe theo lời Hê-mô và Si-chem, con trai người, và hết thảy người nam đi ra cửa thành mình đều chịu phép cắt bì.
௨௪அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவனுடைய சொல்லையும், அவனுடைய மகனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
25 Đến ngày thứ ba, khi mọi người đang đau đớn, thì hai con trai Gia-cốp, là Si-mê-ôn và Lê-vi, anh nàng Đi-na, cầm mỗi người một thanh gươm, thừa khi ai nấy yên ổn, xông vào thành giết hết thảy người nam.
௨௫மூன்றாம் நாளில் அவர்களுக்கு வலி அதிகமானபோது, யாக்கோபின் மகன்களும் தீனாளின் சகோதரர்களுமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டுபேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாகப் பட்டணத்தின்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் அனைவரையும் கொன்றுபோட்டார்கள்.
26 Hai người lại lấy gươm giết Hê-mô và Si-chem, con trai người, đem nàng Đi-na ra khỏi nhà Si-chem, rồi đi.
௨௬ஏமோரையும், அவனுடைய மகன் சீகேமையும் பட்டயத்தால் கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
27 Vì cớ họ làm mất danh giá em gái mình, nên các con trai Gia-cốp xông vào những xác chết và phá cướp thành;
௨௭மேலும், யாக்கோபின் மற்ற மகன்கள் வெட்டப்பட்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு,
28 bắt các bầy chiên, bò, lừa, cùng vật chi trong thành và ngoài đồng;
௨௮அவர்களுடைய ஆடுமாடுகளையும், கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் அனைத்தையும்,
29 cướp đem đi hết tài vật, các con trẻ và đàn bà, cùng mọi vật chi ở trong nhà vậy.
௨௯அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் பெண்களையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.
30 Gia-cốp bèn nói cùng Si-mê-ôn và Lê-vi rằng: Bay xui cho tao bối rối, làm cho dân xứ nầy, là người Ca-na-an và người Phê-rê-sít, oán ghét tao vậy. Tao đây, chỉ có ít người; nếu họ hiệp lại đánh tao, thì chắc tao và nội nhà đều bị tàn hại.
௩0அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: “இந்த தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கச்செய்தீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாக ஒன்றுசேர்ந்து, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே” என்றான்.
31 Đáp rằng: Chúng tôi nỡ chịu người ta đãi em gái chúng tôi như con đĩ sao?
௩௧அதற்கு அவர்கள்: “எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ” என்றார்கள்.