< Mác 5 >
1 Ðức Chúa Jêsus cùng môn đồ qua đến bờ biển bên kia, trong miền Giê-ra-sê.
௧பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையில் உள்ள கதரேனருடைய நாட்டிற்கு வந்தார்கள்.
2 Ngài mới ở trên thuyền bước xuống, tức thì có một người bị tà ma ám từ nơi mồ mả đi ra đến trước mặt Ngài.
௨அவர் படகில் இருந்து இறங்கினவுடனே, அசுத்தஆவியுள்ள ஒரு மனிதன் கல்லறைகளில் இருந்து அவருக்கு எதிராகவந்தான்.
3 Người thường ở nơi mồ mả, dẫu dùng xiềng sắt cũng chẳng ai cột trói được nữa;
௩அவன் கல்லறைகளிலே குடியிருந்து வந்தான்; அவனைச் சங்கிலிகளினால் கட்டவும் ஒருவனுக்கும் முடியவில்லை.
4 vì nhiều lần người bị cùm chơn hoặc bị xiềng, rồi bẻ xiềng tháo cùm, không ai có sức trị được.
௪அவன் பலமுறை விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டும், சங்கிலிகளைத் தகர்த்து, விலங்குகளை உடைத்துப்போடுவான்; அவனை அடக்க ஒருவனுக்கும் முடியவில்லை.
5 Người cứ ở nơi mồ mả và trên núi, ngày đêm kêu la và lấy đá đánh bầm mình.
௫அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, சத்தம்போட்டு, கல்லுகளினால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
6 Người thấy Ðức Chúa Jêsus ở đằng xa, chạy lại sấp mình xuống trước mặt Ngài,
௬அவன் இயேசுவைத் தூரத்திலே பார்த்தபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு:
7 mà kêu lớn rằng: Hỡi Ðức Chúa Jêsus, Con Ðức Chúa Trời rất cao, tôi với Ngài có sự gì chăng? Tôi nhơn danh Ðức Chúa Trời mà khẩn cầu Ngài, xin đừng làm khổ tôi.
௭இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தவேண்டாம் என்று தேவனுடைய பெயரில் உம்மைக் கேட்டுக்கொள்ளுகிறேன் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான்.
8 Vì Ðức Chúa Jêsus vừa phán cùng nó rằng: Hỡi tà ma, phải ra khỏi người nầy.
௮ஏனென்றால், அவர் அவனைப் பார்த்து: அசுத்தஆவியே, இந்த மனிதனைவிட்டு வெளியே போ என்று சொல்லியிருந்தார்.
9 Ngài lại hỏi rằng: Mầy tên gì? Thưa rằng: Tên tôi là Quân đội; vì chúng tôi đông.
௯அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: உன் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகர் இருப்பதினால் என் பெயர் லேகியோன் என்று சொல்லி,
10 Nó lại van xin Ngài đừng đuổi chúng nó ra khỏi miền đó.
௧0தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடவேண்டாம் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான்.
11 Vả, chỗ đó, tại trên núi, có một bầy heo đông đương ăn.
௧௧அப்பொழுது, அந்த இடத்தில் மலையின் அருகில் அநேக பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது.
12 Các quỉ cầu xin Ngài rằng: Xin khiến chúng tôi đến với bầy heo ấy, để chúng tôi nhập vào chúng nó. Ðức Chúa Jêsus cho phép.
௧௨அந்தப் பிசாசுகள் அவரைப் பார்த்து: பன்றிகளுக்குள்ளே போக, அவைகளுக்குள் எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
13 Các tà ma ra khỏi người đó, bèn nhập vào bầy heo từ trên bực cao vụt đâm đầu xuống biển. Có độ hai ngàn con heo chết chìm cả dưới biển.
௧௩இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்தஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போனது; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்துபோனது.
14 Nhưng kẻ chăn heo trốn, đồn tin nầy ra khắp trong thành và trong nhà quê;
௧௪பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது நடந்தவைகளைப் பார்ப்பதற்காக மக்கள் புறப்பட்டு;
15 dân sự đổ ra đặng xem điều đã xảy đến. Vậy, chúng đến cùng Ðức Chúa Jêsus, thấy người đã bị nhiều quỉ ám, đang ngồi, mặc quần áo, trí khôn bình tĩnh, thì sợ hãi lắm.
௧௫இயேசுவிடம் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் புத்தி தெளிந்து, உடை அணிந்து, உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, பயந்தார்கள்.
16 Những người đã thấy việc đó, thuật cho họ nghe chuyện đã xảy đến cho kẻ bị quỉ ám và bầy heo.
௧௬பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் நடந்தவைகளைப் பார்த்தவர்களும் அவர்களுக்கு விளக்கமாகச் சொன்னார்கள்.
17 Chúng bèn xin Ngài ra khỏi địa phận mình.
௧௭அப்பொழுது தங்களுடைய எல்லைகளைவிட்டுப் போகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
18 Lúc Ngài đương bước vào thuyền, người trước đã bị quỉ ám xin ở lại với Ngài.
௧௮அப்படியே அவர் படகில் ஏறும்பொழுது, பிசாசு பிடித்திருந்தவன், இயேசுவோடு வருவதற்கு தனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
19 Nhưng Ðức Chúa Jêsus không cho, phán rằng: Hãy về nhà ngươi, nơi bạn hữu ngươi, mà thuật lại cho họ điều lớn lao thể nào Chúa đã làm cho ngươi, và Ngài đã thương xót ngươi cách nào.
௧௯இயேசு அவனுக்கு அனுமதி கொடுக்காமல்: நீ உன் குடும்பத்தாரிடம் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு மனமிறங்கி, உனக்குச் செய்தவைகளை எல்லாம் அவர்களுக்குச் சொல் என்று சொன்னார்.
20 Vậy, người đi, đồn ra trong xứ Ðê-ca-bô-lơ những điều lớn lao thể nào mà Ðức Chúa Jêsus đã làm cho mình; ai nấy đều lấy làm lạ.
௨0அப்படியே அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளை எல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தப்படுத்தினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
21 Khi Ðức Chúa Jêsus lại xuống thuyền qua bờ bên kia, có đoàn dân đông nhóm họp chung quanh Ngài. Ngài đứng trên bờ biển.
௨௧இயேசு படகில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்தில் இருந்தபோது, அநேக மக்கள் அவரிடம் கூடிவந்தார்கள்.
22 Bấy giờ, có một người trong những người cai nhà hội, tên là Giai ru, đến, thấy Ðức Chúa Jêsus, bèn gieo mình nơi chơn Ngài;
௨௨அப்பொழுது, ஜெப ஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து:
23 nài xin mà rằng: Con gái nhỏ tôi gần chết; xin Chúa đến, đặt tay trên nó, đặng nó lành mạnh và sống.
௨௩என் மகள் மரணவேதனைப்படுகிறாள், அவள் சுகமடைய, நீர் வந்து, அவள்மேல் உமது கரங்களை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான்.
24 Ðức Chúa Jêsus đi với người; đoàn dân đông cùng đi theo và lấn ép Ngài.
௨௪அவர் அவனோடுகூட போனார். அநேக மக்கள் அவருக்குப் பின்னேசென்று, அவரை நெருக்கினார்கள்.
25 vả, tại đó có một người đờn bà bị bịnh mất huyết đã mười hai năm,
௨௫அப்பொழுது பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே அவதிப்பட்ட ஒரு பெண்,
26 bấy lâu chịu khổ sở trong tay nhiều thầy thuốc, hao tốn hết tiền của, mà không thấy đỡ gì; bịnh lại càng nặng thêm.
௨௬அநேக வைத்தியர்களால் அதிகமாக வருத்தப்பட்டு, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவு செய்தும், கொஞ்சம்கூட குணமாகாமல் அதிகமாக வருத்தப்படுகிறபொழுது,
27 Người đã nghe tin về Ðức Chúa Jêsus, bèn lẩn vào đằng sau giữa đám đông, mà rờ áo Ngài.
௨௭இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு: நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகம் பெறுவேன் என்று சொல்லி;
28 Vì người nói rằng: Nếu ta chỉ rờ đến áo Ngài mà thôi, thì ta sẽ được lành.
௨௮மக்கள் கூட்டத்தின் உள்ளே அவருக்குப் பின்பக்கத்தில் வந்து, அவருடைய ஆடையைத் தொட்டாள்.
29 Cùng một lúc ấy, huyết lậu liền cầm lại; người nghe trong mình đã được lành bịnh.
௨௯உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது; அந்த வேதனை நீங்கி சுகம் பெற்றதை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.
30 Tức thì Ðức Chúa Jêsus tự biết có sức mạnh đã ra từ mình, bèn xây lại giữa đám đông mà hỏi rằng: Ai đã rờ áo ta?
௩0உடனே இயேசு தம்மிடம் இருந்து வல்லமை புறப்பட்டுப் போனதைத் தமக்குள் அறிந்து, மக்கள்கூட்டத்தில் திரும்பி: என் ஆடைகளைத் தொட்டது யார் என்று கேட்டார்.
31 Môn đồ thưa rằng: Thầy thấy đám đông lấn ép thầy, thº§y còn hỏi rằng: Ai rṀ- đến ta?
௩௧அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அநேக மக்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் பார்த்தும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.
32 Ngài nhìn chung quanh mình để xem người đã làm điều đó.
௩௨இதைச் செய்தவளைப் பார்க்க அவர் சுற்றிலும் பார்த்தார்.
33 Người đờn bà biết sự đã xảy đến cho mình, bèn run sợ đến gieo mình dưới chơn Ngài, tỏ hết tình thật.
௩௩தன்னிடம் நடந்ததை அறிந்த அந்தப் பெண் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மைகளை எல்லாம் அவருக்குச் சொன்னாள்.
34 Ðức Chúa Jêsus phán rằng: Hỡi con gái ta, đức tin con đã cứu con; hãy đi cho bình an và được lành bịnh.
௩௪அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடு போய், உன் வேதனை நீங்கி, சுகமாக இரு என்றார்.
35 Ðương khi Ngài còn phán, có kẻ đến từ nhà người cai nhà hội mà nói với người rằng: Con gái ông đã chết rồi; còn phiền Thầy làm chi?
௩௫அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய மகள் மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறாய் என்றார்கள்.
36 Nhưng Ðức Chúa Jêsus chẳng màng đến lời ấy, phán cùng cai nhà hội rằng: Ðừng sợ, chỉ tin mà thôi.
௩௬அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெப ஆலயத்தலைவனைப் பார்த்து: பயப்படாதே, விசுவாசம் உள்ளவனாக இரு என்று சொல்லி;
37 Ngài chẳng cho ai theo mình, trừ ra Phi -e-rơ, Gia-cơ, và Giăng là em là Gia-cơ.
௩௭வேறுயாரையும் தம்மோடு சேர்த்துக்கொள்ளாமல், பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோனார்;
38 Khi đã đến nhà người cai nhà hội, Ngài thấy chúng làm om sòm, kẻ khóc người kêu lớn tiếng.
௩௮ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிற்கு வந்து, அங்கே சத்தமிடுகிற மக்களையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு,
39 Vào nhà rồi, Ngài phán cùng chúng rằng: Sao các ngươi làm ồn ào và khóc lóc vậy? Ðứa trẻ chẳng phải chết, song nó ngủ.
௩௯உள்ளே சென்று: நீங்கள் சத்தமிட்டு அழுகிறது ஏன்? பிள்ளை மரிக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார்.
40 Chúng nhạo báng Ngài. Ngài bèn đuổi chúng ra hết, đem cha mẹ đứa trẻ với những kẻ theo Ngài, cùng vào chỗ nó nằm.
௪0அதற்காக அவரைப் பார்த்து சிரித்தார்கள். எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடு வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளை இருந்த அறைக்குள் சென்று,
41 Ngài nắm tay nó mà phán rằng: Ta-li-tha Cu-mi; nghĩa là: Hỡi con gái nhỏ, ta truyền cho mầy, hãy chờ dậy.
௪௧பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு; சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம்.
42 Tức thì đứa gái chờ dậy mà bước đi, vì đã lên mười hai tuổi. Chúng rất lấy làm lạ.
௪௨உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாக இருந்தாள். அவர்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
43 Ngài cấm ngặt chúng đừng cho ai biết sự ấy, và truyền cho đứa trẻ ăn.
௪௩அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்குச் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுங்கள் என்று சொன்னார்.