< Các Thủ Lãnh 2 >
1 Vả, thiên sứ của Ðức Giê-hô-va đi lên từ Ghinh-ganh đến Bô-kim, và nói rằng: Ta đã đem các ngươi đi lên khỏi xứ Ê-díp-tô, dẫn vào xứ ta đã thề ban cho tổ phụ các ngươi. Ta đã phán: Ta sẽ chẳng hề hủy giao ước ta đã lập cùng các ngươi;
௧யெகோவாவுடைய தூதன் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்து, உங்களுடைய பிதாக்களுக்கு வாக்குக்கொடுத்த தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடு செய்த என்னுடைய உடன்படிக்கையை நான் ஒருபோதும் முறித்துப்போடுவதில்லை என்றும்,
2 còn các ngươi, chớ lập giao ước cùng dân xứ nầy; hãy phá hủy bàn thờ của chúng nó. Song các ngươi không có vâng theo lời phán của ta. Tại sao các ngươi đã làm điều đó?
௨நீங்கள் இந்த தேசத்தில் குடியிருக்கிறவர்களோடு உடன்படிக்கைசெய்யாமல், அவர்களுடைய பலிபீடங்களை இடித்துவிடவேண்டும் என்றும் சொன்னேன்; ஆனாலும் என்னுடைய சொல்லைக் கேட்காமல்போனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?
3 Ta cũng có phán: Ta sẽ chẳng đuổi dân ấy khỏi trước mặt các ngươi, song chúng nó sẽ ở bên các ngươi, và các thần chúng nó sẽ thành một cái bẫy cho các ngươi.
௩ஆகவே, நான் அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்.
4 Thiên sứ của Ðức Giê-hô-va vừa nói dứt lời nầy cho cả dân Y-sơ-ra-ên, thì cả dân sự bèn cất tiếng lên khóc.
௪யெகோவாவுடைய தூதன் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் மக்கள் அனைவரிடமும் சொல்லும்போது, மக்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.
5 Chúng gọi tên chỗ đó là Bô-kim, và dâng tế lễ cho Ðức Giê-hô-va tại đó.
௫அந்த இடத்திற்கு போகீம் என்று பெயரிட்டு, அங்கே யெகோவா வுக்குப் பலிசெலுத்தினார்கள்.
6 Khi Giô-suê đã cho dân sự về, thì mọi người Y-sơ-ra-ên, ai nấy đều đi vào sản nghiệp mình, đặng nhận lấy xứ.
௬யோசுவா இஸ்ரவேல் மக்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாகத்திற்குப் போனார்கள்.
7 Dân sự phục sự Ðức Giê-hô-va trong trọn đời Giô-suê và trọn đời các trưởng lão còn sống lâu hơn Giô-suê, là những kẻ đã thấy các công việc lớn lao mà Ðức Giê-hô-va đã làm ra vì Y-sơ-ra-ên.
௭யோசுவாவின் எல்லா நாட்களிலும் யெகோவா இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய செயல்களையெல்லாம் பார்த்தவர்களும், யோசுவாவிற்குப் பின்பு உயிரோடு இருந்தவர்களுமாகிய மூப்பர்களின் எல்லா நாட்களிலும் மக்கள் யெகோவாவைத் தொழுது கொண்டார்கள்.
8 Ðoạn, Giô-suê, con trai của Nun, tôi tớ của Ðức Giê-hô-va, qua đời, tuổi được một trăm mười;
௮நூனின் மகனான யோசுவா என்னும் யெகோவாவின் ஊழியக்காரன் 110 வயதுள்ளவனாக இறந்துபோனான்.
9 người ta chôn người trong địa phận về sản nghiệp người, tại Thim-nát-Hê-re trên núi Ép-ra-im, về phía bắc núi Ga-ách.
௯அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கில் இருக்கிற அவனுடைய சுதந்திரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்செய்தார்கள்.
10 Hết thảy người đời ấy cũng được tiếp về tổ phụ mình; rồi một đời khác nổi lên, chẳng biết Ðức Giê-hô-va, cũng chẳng biết các điều Ngài đã làm nhơn vì Y-sơ-ra-ên.
௧0அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களோடு சேர்க்கப்பட்டப்பின்பு, யெகோவாவையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த செய்கைகளையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின்பு எழும்பியது.
11 Bấy giờ dân Y-sơ-ra-ên làm ác trước mặt Ðức Giê-hô-va, hầu việc các thần tượng của Ba-anh,
௧௧அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்கு தீமையானதைச் செய்து, பாகால்களைத் தொழுது,
12 bỏ Giê-hô-va Ðức Chúa Trời của tổ phụ mình, là Ðấng đã đem họ ra khỏi xứ Ê-díp-tô; họ tin theo các thần khác của những dân tộc xung quanh, quì lạy các thần đó và chọc giận Ðức Giê-hô-va.
௧௨தங்களுடைய முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச் செய்த அவர்களுடைய தேவனாகிய யெகோவாவைவிட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களுடைய தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிப்போய், அவைகளைத் தொழுதுகொண்டு, யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்.
13 Vậy, chúng nó bỏ Ðức Giê-hô-va, hầu việc Ba-anh và Át-tạt-tê.
௧௩அவர்கள் யெகோவாவைவிட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் தொழுதுகொண்டார்கள்.
14 Cơn thạnh nộ của Ðức Giê-hô-va nổi phừng lên cùng Y-sơ-ra-ên, Ngài phó chúng vào tay của kẻ cướp bóc, và chúng nó bóc lột họ; Ngài bán Y-sơ-ra-ên cho các kẻ thù nghịch chung quanh, và Y-sơ-ra-ên không còn thế chống cự nổi được trước kẻ thù nghịch mình.
௧௪அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபம்கொண்டவராகி, அவர்கள் அதற்குப்பின்பு தங்கள் எதிரிகளுக்கு முன்பாக நிற்கமுடியாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர்களுடைய கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்களுடைய எதிரிகளின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
15 Bất luận chúng đi đến đâu, tay của Ðức Giê-hô-va vẫn nghịch cùng chúng đặng giáng họa cho, y như Ðức Giê-hô-va đã phán và đã thề cùng chúng. Chúng bị cơn hoạn nạn lớn lao thay.
௧௫யெகோவா அவர்களுக்கு வாக்கு செய்தபடி, அவர்கள் புறப்பட்டுப்போகிற இடங்களெல்லாம் யெகோவாவுடைய கரம் தீமைக்கென்றே அவர்களுக்கு எதிராக இருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
16 Song Ðức Giê-hô-va dấy lên những quan xét giải cứu chúng khỏi tay kẻ cướp bóc.
௧௬யெகோவா நியாயாதிபதிகளை எழும்பச்செய்தார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை விலக்கி காப்பாற்றினார்கள்.
17 Nhưng chúng cũng không nghe các quan xét vì chúng hành dâm cùng các thần khác, và quì lạy trước mặt các thần ấy. Chúng vội xây bỏ con đường mà tổ phụ mình đã đi, chẳng bắt chước theo tổ phụ vâng giữ các điều răn của Ðức Giê-hô-va.
௧௭அவர்கள் தங்களுடைய நியாயாதிபதிகளின் சொல்லைக் கேட்காமல், அந்நிய தெய்வங்களுக்குத் தங்களை விலைமாதர்களைப்போல ஒப்புக்கொடுத்து, அவைகளைத் தொழுதுகொண்டார்கள்; தங்களுடைய பிதாக்கள் யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, பிதாக்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.
18 Vả, khi Ðức Giê-hô-va dấy lên các quan xét cho Y-sơ-ra-ên, thì Ðức Giê-hô-va ở cùng quan xét đó, và trọn đời quan xét, Ngài giải cứu Y-sơ-ra-ên khỏi tay kẻ thù nghịch mình; vì Ðức Giê-hô-va lấy lòng thương xót họ tại cớ những tiếng rên siếc mà họ thở ra trước mặt những kẻ hà hiếp và làm tức tối mình.
௧௮யெகோவா அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பச்செய்கிறபோது, யெகோவா நியாயாதிபதியோடு இருந்து அந்த நியாயாதிபதி வாழ்ந்த நாட்களிலெல்லாம் அவர்களுடைய எதிரிகளின் கைக்கு அவர்களை விலக்கி காப்பாற்றிவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினால் தவிக்கிறதினாலே, யெகோவா துக்கப்படுவார்.
19 Kế sau, khi quan xét qua đời rồi, Y-sơ-ra-ên lại làm ác hơn các tổ phụ mình, tin theo các thần khác, hầu việc và thờ lạy trước mặt các thần ấy: Y-sơ-ra-ên không khứng chừa bỏ việc làm ác hay là lối cố chấp của họ.
௧௯நியாயாதிபதி மரித்தவுடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி, பணிவிடை செய்யவும், தொழுதுகொள்ளவும், தங்களுடைய பிதாக்களைவிட இழிவாக நடந்து, தங்களுடைய தீய செய்கைகளையும் தங்களுடைய முரட்டாட்டமான வழிகளையும் விடாதிருப்பார்கள்.
20 Bởi cớ đó, cơn thạnh nộ của Ðức Giê-hô-va nổi phừng lên cùng Y-sơ-ra-ên, và Ngài phán rằng: Vì dân tộc nầy có bội nghịch giao ước của ta đã truyền cho tổ phụ chúng nó, và vì chúng nó không có nghe lời phán ta,
௨0ஆகையால் யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபம்கொண்டவராகி: இந்த மக்கள் தங்களுடைய பிதாக்களுக்கு நான் கற்பித்த என்னுடைய உடன்படிக்கையை மீறி என்னுடைய சொல்லைக் கேட்காமல் போனதினால்,
21 nên về phần ta, ta cũng chẳng đuổi khỏi trước mặt chúng nó một dân nào mà Giô-suê để lại khi người qua đời.
௨௧யோசுவா இறந்தபின்பு விட்டுப்போன தேசங்களில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன்.
22 Ta sẽ dùng các dân tộc đó thử thách Y-sơ-ra-ên, để xem thử chúng nó có giữ và đi theo đường của Ðức Giê-hô-va, như tổ phụ chúng nó chăng.
௨௨அவர்களுடைய பிதாக்கள் யெகோவாவின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படி, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலை சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.
23 Ấy vậy, Ðức Giê-hô-va để cho các dân tộc nầy ở lại trong xứ, không vội đuổi chúng nó đi, và cũng không phó chúng nó vào tay Giô-suê.
௨௩அதற்காகக் யெகோவா அந்த தேசங்களை யோசுவாவுடைய கையில் ஒப்புக்கொடுக்காமலும், அவைகளை சீக்கிரமாகத் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.