< Rô-ma 15 >
1 Dù có lòng tin vững mạnh, chúng ta cũng không nên làm thỏa lòng mình, nhưng phải lưu tâm nâng đỡ người kém đức tin.
௧அன்றியும், பலம் உள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாக நடக்காமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.
2 Mỗi chúng ta phải làm vui lòng anh chị em mình, để giúp ích và xây dựng cho họ.
௨நம்மில் ஒவ்வொருவனும் அயலகத்தானுக்கு பக்திவளர்ச்சிக்குரிய நன்மையை உண்டாக்குவதற்காக அவனுக்குப் பிரியமாக நடக்கவேண்டும்.
3 Vì ngay cả Chúa Cứu Thế cũng không làm thỏa lòng mình như Thánh Kinh đã viết: “Tôi hứng chịu mọi lời sỉ nhục của kẻ thù nghịch Chúa.”
௩கிறிஸ்துவும் தமக்கே பிரியமாக நடக்காமல்: உம்மை அவமதிக்கிறவர்களுடைய அவமானங்கள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.
4 Tất cả những lời ghi chép trong Thánh Kinh cốt để dạy dỗ an ủi chúng ta, rèn luyện tính kiên nhẫn và đem lại cho chúng ta niềm hy vọng tràn đầy vì lời hứa của Đức Chúa Trời được thực hiện.
௪தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும், ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாவதற்காக, முன்பே எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
5 Cầu xin Đức Chúa Trời, Đấng ban kiên nhẫn và an ủi, cho anh chị em sống trong tinh thần hợp nhất theo gương Chúa Cứu Thế Giê-xu,
௫நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவதற்காக,
6 để anh chị em một lòng, một tiếng nói tôn vinh Đức Chúa Trời là Cha của Chúa chúng ta là Chúa Cứu Thế Giê-xu.
௬பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஒரே சிந்தை உள்ளவர்களாக இருக்க உங்களுக்கு தயவு செய்வாராக.
7 Vậy, anh chị em hãy tiếp nhận nhau như Chúa Cứu Thế đã tiếp nhận chúng ta, để Đức Chúa Trời được tôn vinh.
௭எனவே, தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.
8 Tôi xin thưa, Chúa Cứu Thế đã đến phục vụ giữa người Do Thái để chứng tỏ đức chân thật của Đức Chúa Trời là thực hiện lời hứa với tổ phụ họ.
௮மேலும், முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்குவதற்காக, தேவனுடைய சத்தியத்தினால் இயேசுகிறிஸ்து விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு ஊழியக்காரர் ஆனார் என்றும்;
9 Chúa cũng đến cho các dân ngoại để họ ca ngợi Đức Chúa Trời vì nhân từ của Ngài, như tác giả Thi Thiên đã ghi: “Vì thế, tôi sẽ tôn vinh Chúa giữa dân ngoại; tôi sẽ ca ngợi Danh Ngài.”
௯“யூதரல்லாத மக்களும் இரக்கம் பெற்றதினால் தேவனை மகிமைப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறேன். அப்படியே: இதனால் நான் யூதரல்லாத மக்களுக்குள்ளே உம்மை அறிக்கைசெய்து, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன்” என்று எழுதியிருக்கிறது.
10 Có lời chép: “Hỡi dân ngoại hãy chung vui với dân Chúa.”
௧0மேலும், யூதரல்லாத மக்களே, அவருடைய மக்களுடன் சேர்ந்து களிகூருங்கள் என்கிறார்.
11 Và: “Tất cả dân ngoại, hãy tôn vinh Chúa Hằng Hữu. Tất cả dân tộc trên đất, hãy ngợi tôn Ngài.”
௧௧மேலும், யூதரல்லாத மக்களே, எல்லோரும் கர்த்த்தரை துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் புகழுங்கள்” என்றும் சொல்லுகிறார்.
12 Tiên tri Y-sai cũng đã nói: “Hậu tự nhà Gie-sê sẽ xuất hiện để cai trị các dân ngoại. Họ sẽ đặt hy vọng nơi Ngài.”
௧௨மேலும், “ஈசாயின் வேரும் யூதரல்லாத மக்களை ஆளுகை செய்கிற ஒருவர் தோன்றுவார்; அவரிடம் யூதரல்லாத மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்” என்று ஏசாயா சொல்லுகிறான்.
13 Cầu xin Đức Chúa Trời, là nguồn hy vọng, cho anh chị em tràn ngập vui mừng và bình an khi anh chị em tin cậy Ngài, nhờ đó lòng anh chị em chứa chan hy vọng do quyền năng của Chúa Thánh Linh.
௧௩பரிசுத்த ஆவியானவரின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருக, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவிதமான சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.
14 Thưa anh chị em, tôi biết chắc anh chị em thừa hảo tâm và kiến thức nên có thể tự khuyên bảo lẫn nhau.
௧௪என் சகோதரர்களே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், எல்லா அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாக இருக்கிறீர்கள் என்று நானும் உங்களைக்குறித்து நிச்சயித்திருக்கிறேன்.
15 Tuy nhiên, viết cho anh chị em, tôi nhấn mạnh một vài điều chỉ để nhắc nhở anh chị em. Bởi ơn phước Đức Chúa Trời đã dành cho tôi,
௧௫அப்படியிருந்தும், சகோதரர்களே, யூதரல்லாதவர்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படி, நான் தேவனுடைய நற்செய்தி ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாக இருந்து யூதரல்லாதவர்களுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாவதற்கு,
16 tôi được chọn làm sứ giả của Chúa Cứu Thế giữa các dân ngoại để công bố Phúc Âm của Đức Chúa Trời. Nhờ đó, các dân tộc ấy được dâng lên cho Đức Chúa Trời như một lễ vật vui lòng Ngài do Chúa Thánh Linh thánh hóa.
௧௬தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக இவைகளை நான் அதிக தைரியமாக எழுதினேன்.
17 Vì thế, tôi lấy làm vinh dự được phục vụ Đức Chúa Trời, nhờ Chúa Cứu Thế Giê-xu.
௧௭எனவே, நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மை பாராட்டமுடியும்.
18 Tôi chẳng dám nói điều gì ngoài việc Chúa Cứu Thế đã dùng tôi dìu dắt dân ngoại trở về đầu phục Đức Chúa Trời qua lời giảng và những việc tôi làm giữa họ.
௧௮யூதரல்லாதவர்களை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணுவதற்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியானவரின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு செய்தவைகளைத்தவிர வேறொன்றையும் சொல்ல நான் துணியவில்லை.
19 Họ tin bởi quyền năng của các dấu lạ, phép mầu, và bởi quyền năng của Thánh Linh Đức Chúa Trời. Nhờ thế, tôi đã chu toàn nhiệm vụ truyền bá Phúc Âm của Chúa Cứu Thế từ Giê-ru-sa-lem cho đến I-ly-ri.
௧௯இப்படி எருசலேமிலிருந்து ஆரம்பித்து, இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் நற்செய்தியைப் பூரணமாகப் பிரசங்கம் செய்திருக்கிறேன்.
20 Vì ước nguyện của tôi là công bố Phúc Âm tại những miền chưa nghe Danh Chúa Cứu Thế, để khỏi xây dựng trên nền tảng của người khác.
௨0மேலும் அவருடைய செய்தியை அறியாமல் இருந்தவர்கள் பார்ப்பார்கள் என்றும், கேள்விப்படாமல் இருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்றும் எழுதியிருக்கிறபடியே,
21 Như Thánh Kinh dạy: “Người chưa được thông báo về Chúa sẽ thấy Ngài, và người chưa nghe sẽ hiểu Ngài.”
௨௧நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாமல் கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்படாத இடங்களில் நற்செய்தியை அறிவிக்கும்படி விரும்புகிறேன்.
22 Cũng vì lý do ấy, tôi bị ngăn trở nhiều lần, chưa đến thăm anh chị em.
௨௨உங்களிடம் வருவதற்கு இதினாலே அநேகமுறை தடைபட்டேன்.
23 Nhưng hiện nay, công tác tại miền này đã xong. Theo lòng mong mỏi đến thăm anh chị em từ nhiều năm nay,
௨௩இப்பொழுது இந்தப் பகுதிகளிலே எனக்கு இடம் இல்லதாதினாலும், உங்களிடம் வரும்படி அநேக வருடமாக எனக்கு அதிக விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
24 tôi hy vọng trong chuyến đi Tây Ban Nha, sẽ ghé thăm anh chị em cho thỏa lòng mong ước, rồi anh chị em lại tiễn tôi lên đường.
௨௪நான் ஸ்பானியா தேசத்திற்கு பயணம்செய்யும்போது உங்களிடம் வந்து, உங்களைப் பார்க்கவும், உங்களிடம் கொஞ்சம் திருப்தியடைந்தபின்பு, அந்த இடத்திற்கு உங்களால் நான் வழியனுப்பப்படவும், எனக்கு நேரம் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறேன்.
25 Nhưng trước khi tôi đến, tôi phải lên Giê-ru-sa-lem để trao tặng phẩm cho các tín hữu.
௨௫இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்வதற்காக நான் எருசலேமுக்குப் பயணம் செய்ய இருக்கிறேன்.
26 Vì Hội Thánh ở Ma-xê-đoan và A-chai đã vui lòng quyên góp để giúp các tín hữu túng thiếu tại Giê-ru-sa-lem.
௨௬மக்கெதோனியாவிலும், அகாயாவிலும் உள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற ஏழைகளுக்கு சில பொருளுதவிகளைச் செய்ய விருப்பமாக இருக்கிறார்கள்;
27 Họ vui vẻ làm việc này vì tự biết mình thật sự mắc nợ. Từ khi dân ngoại được tín hữu Giê-ru-sa-lem chia sẻ phước hạnh tâm linh, họ tự thấy có bổn phận chia sớt lại của cải vật chất.
௨௭இப்படிச்செய்வது நல்லதென்று நினைத்தார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாகவும் இருக்கிறார்கள். எப்படியென்றால், யூதரல்லாதவர்கள் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீர நன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாக இருக்கிறார்களே.
28 Sau khi hoàn thành công tác, trao xong mọi phẩm vật quyên trợ, tôi sẽ lên đường đến thăm anh chị em trong chuyến đi Tây Ban Nha.
௨௮இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாக ஒப்புவித்தப்பின்பு, உங்களுடைய ஊர்வழியாக ஸ்பானியாவிற்குப் போவேன்.
29 Chắc chắn khi tôi đến, Chúa Cứu Thế sẽ ban phước lành dồi dào cho anh chị em.
௨௯நான் உங்களிடம் வரும்போது கிறிஸ்துவினுடைய நற்செய்தியின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடு வருவேன் என்று அறிந்திருக்கிறேன்.
30 Thưa anh chị em, tôi nài khuyên anh chị em trong Danh của Chúa chúng ta là Chúa Cứu Thế Giê-xu và do tình yêu thương trong Chúa Thánh Linh, hãy cùng tôi hết sức khẩn nguyện Đức Chúa Trời,
௩0மேலும் சகோதரர்களே, தேவ விருப்பத்தினாலே நான் சந்தோஷத்தோடு உங்களிடம் வந்து உங்களோடு ஓய்வெடுப்பதற்காக,
31 xin Ngài cho tôi tránh thoát cạm bẫy hãm hại của người không tin Chúa Cứu Thế ở xứ Giu-đê, cho công việc tôi tại Giê-ru-sa-lem được anh em tín hữu vui lòng chấp nhận.
௩௧யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படுவதற்காகவும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மஉதவிகள் அவர்களால் அங்கீகரிக்கப்படுவதற்காகவும்,
32 Trong ý muốn của Chúa, tôi sẽ đến thăm anh chị em cách vui vẻ, và chúng ta cùng được khích lệ.
௩௨நீங்கள் தேவனை நோக்கி செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடு சேர்ந்து போராடவேண்டும் என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியானவருடைய அன்பினாலும், உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
33 Cầu xin Đức Chúa Trời bình an ở với tất cả anh chị em. A-men.
௩௩சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடும் இருப்பாராக. ஆமென்.