< Khải Huyền 11 >
1 Sau đó tôi nhận được cây thước giống như cây gậy, với lời dặn bảo: “Hãy đứng dậy đo Đền Thờ của Đức Chúa Trời và bàn thờ cùng đếm những người thờ phượng.
௧பின்பு கைத்தடி போன்ற ஒரு அளவுகோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னைப் பார்த்து: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார்.
2 Còn sân ngoài Đền Thờ thì đừng đo, vì đã giao cho các dân tộc, họ sẽ dày xéo thành thánh trong bốn mươi hai tháng.
௨ஆலயத்திற்கு வெளியே இருக்கிற முற்றம் யூதரல்லாதவர்களுக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளக்கவேண்டாம்; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதங்கள்வரைக்கும் மிதிப்பார்கள்.
3 Ta sẽ trao quyền cho hai nhân chứng của Ta; họ sẽ mặc vải thô và nói tiên tri suốt 1.260 ngày.”
௩என்னுடைய இரண்டு சாட்சிகளும் துக்கத்திற்கான சாக்கு ஆடை அணிந்துகொண்டவர்களாக, ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள்வரை தீர்க்கதரிசனம் சொல்லுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
4 Hai tiên tri là hai cây ô-liu, cũng là hai giá đèn đứng trước mặt Chúa của hoàn vũ.
௪பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.
5 Nếu có ai định làm hại họ, lửa từ miệng họ sẽ phun ra tiêu diệt kẻ thù. Bất cứ ai muốn hại họ đều bị giết sạch.
௫ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த நினைத்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய எதிராளிகளை அழிக்கும்; யாராவது அவர்களைச் சேதப்படுத்த நினைத்தால், அவனும் அப்படியே கொல்லப்படவேண்டும்.
6 Họ được quyền đóng trời lại, để mưa không rơi xuống trong ba năm rưỡi, là thời gian họ nói tiên tri. Họ cũng có quyền hóa nước thành máu, và gieo tai họa trên mặt đất bao nhiêu tùy ý.
௬அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற நாட்களிலே மழைபெய்யாதபடி வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டியபோதெல்லாம் பூமியை எல்லாவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு.
7 Khi họ đã hoàn tất lời chứng, con thú từ vực thẳm lên sẽ giao tranh với họ, chiến thắng và giết họ đi. (Abyssos )
௭அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (Abyssos )
8 Thây họ sẽ phơi ngoài đường phố Giê-ru-sa-lem, còn gọi bóng là “Sô-đôm” hay “Ai Cập,” cũng là nơi Chúa của họ chịu đóng đinh trên cây thập tự.
௮அவர்களுடைய உடல்கள், நம்முடைய கர்த்தர் சிலுவையிலே அறையப்பட்ட மகா நகரத்தின் வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் அடையாளமாகச் சொல்லப்படும்.
9 Người thuộc mọi dân tộc, dòng giống, ngôn ngữ, và quốc gia sẽ kéo đến xem thi thể của họ trong ba ngày rưỡi, chẳng ai được phép chôn cất.
௯மக்களிலும், கோத்திரங்களிலும், பல மொழிக்காரர்களும், பல தேசங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாட்கள்வரை பார்ப்பார்கள், ஆனால், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்க அனுமதிக்கமாட்டார்கள்.
10 Mọi người trên thế giới sẽ mừng rỡ vì hai người đã bị sát hại. Người ta ăn mừng, tặng quà cho nhau, vì hai tiên tri ấy đã khuấy động lương tâm mọi người.
௧0அந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் மக்களை வேதனைப்படுத்தினதினால் அவர்களுக்காக பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.
11 Sau ba ngày rưỡi, sinh khí từ Đức Chúa Trời nhập vào hai người, họ vùng đứng dậy. Mọi người đến xem đều quá khiếp sợ.
௧௧மூன்றரை நாட்களுக்குப்பின்பு தேவனிடத்தில் இருந்து ஜீவ சுவாசம் அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் கால் ஊன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு அதிக பயம் உண்டானது.
12 Hai tiên tri nghe tiếng gọi lớn từ trời: “Lên đây!” Họ cưỡi mây lên trời trước mắt kẻ thù.
௧௨இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து அவர்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய எதிராளிகள் அவர்களைப் பார்த்தார்கள்.
13 Ngay giờ đó, một trận động đất dữ dội tiêu diệt một phần mười thành phố, làm 7.000 người thiệt mạng. Những người sống sót đều kinh hoàng và tôn vinh Đức Chúa Trời trên trời.
௧௩அந்த நேரத்திலே பூமி அதிகமாக அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது; மனிதர்களில் ஏழாயிரம்பேர் பூமி அதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதி இருந்தவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
14 Khổ nạn thứ hai đã qua, nhưng kìa, khổ nạn thứ ba sắp đến.
௧௪இரண்டாம் ஆபத்து கடந்துபோனது; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாக வருகிறது.
15 Thiên sứ thứ bảy thổi kèn, liền có tiếng nói vang dội từ trời: “Cả thế giới từ nay thuộc Vương Quốc của Chúa chúng ta và Đấng Cứu Thế của Ngài, Ngài sẽ cai trị mãi mãi.” (aiōn )
௧௫ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. (aiōn )
16 Hai mươi bốn trưởng lão ngồi trên ngai trước mặt Đức Chúa Trời, quỳ xuống thờ lạy Ngài.
௧௬அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்களுடைய சிங்காசனங்கள்மேல் அமர்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து:
17 Và họ thưa: “Chúng con xin dâng lời cảm tạ Ngài, lạy Chúa là Đức Chúa Trời, Đấng Toàn Năng, Đấng hiện có, đã có, và còn đời đời, vì Ngài đã sử dụng quyền năng lớn lao và đã bắt đầu cai trị.
௧௭“இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக் கொண்டு ராஜ்யங்களை ஆளுகிறீர்.
18 Các dân tộc đều nổi giận, nhưng cơn đoán phạt của Chúa đã đến. Đây là lúc Chúa xét xử người chết và tưởng thưởng cho đầy tớ Ngài, là các tiên tri và thánh đồ, cùng mọi người kính sợ Danh Chúa, từ nhỏ đến lớn. Cũng là lúc Chúa hủy diệt những ai đã phá hoại thế giới.”
௧௮தேசத்தின் மக்கள் கோபித்துக்கொண்டார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் வந்தது; மரித்தவர்கள் நியாயத்தீர்ப்பு அடைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரர்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாக இருந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பலன் கொடுப்பதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் நேரம்வந்தது” என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
19 Bấy giờ, Đền Thờ Đức Chúa Trời trên trời mở cửa, để lộ hòm giao ước bên trong Đền Thờ. Lại có chớp nhoáng, sấm sét vang rền, động đất và mưa đá dữ dội.
௧௯அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமி அதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டானது.