< Thánh Thi 42 >
1 (Giáo huấn ca của con cháu Cô-ra, soạn cho nhạc trưởng) Như nai khát khao tìm suối nước, linh hồn con mơ ước Đức Chúa Trời.
௧கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல். மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
2 Hồn linh con khao khát Đấng Vĩnh Sinh, bao giờ con được đi gặp Chúa?
௨என்னுடைய ஆத்துமா தேவன்மேல், உயிருள்ள தேவன்மேலேயே தாகமாக இருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?
3 Thức ăn của con ngày đêm là dòng lệ, khi kẻ thù suốt ngày mỉa mai: “Đức Chúa Trời của ngươi ở đâu?”
௩உன்னுடைய தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என்னுடைய கண்ணீரே எனக்கு உணவானது.
4 Nhớ xưa con cùng cả đoàn người hành hương đến nhà Đức Chúa Trời, giữa những tiếng hoan ca cảm tạ, người dự lễ đông vui! Giờ nhớ lại những điều ấy lòng con tan nát xót xa.
௪முன்னே நான் பண்டிகையை அனுசரிக்கிற மக்களோடு கூட நடந்து, கூட்டத்தின் சந்தோஷமும் துதியுமான சத்தத்தோடு தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என்னுடைய உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.
5 Hồn ta hỡi, sao còn buồn bã? Sao còn bối rối trong ta? Cứ hy vọng nơi Đức Chúa Trời! Ta sẽ còn ngợi tôn Chúa— Đấng Cứu Rỗi và Đức Chúa Trời của ta!
௫என்னுடைய ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பிற்காக நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
6 Khi hồn con thất vọng, con nhớ Chúa, dù ở Giô-đan, Núi Hẹt-môn, hay Núi Mi-sa, con vẫn nhớ Ngài.
௬என் தேவனே, என்னுடைய ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.
7 Vực thẳm gọi nhau trong thác lũ ầm ầm, sóng thần lớp lớp phủ tràn thân xác.
௭உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் பேரலைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.
8 Tình thương Chúa Hằng Hữu vẫn phủ con khi ngày đến, và ban đêm, con dâng tiếng ngợi ca Ngài, như lời nguyện cầu Đức Chúa Trời của đời con.
௮ஆகிலும் யெகோவா பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இரவுநேரத்திலே அவரைப் பாடும் பாட்டு என்னுடைய வாயிலிருக்கிறது; என் உயிருள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்.
9 Con kêu khóc: “Lạy Đức Chúa Trời, Vầng Đá của con. Sao Ngài nỡ quên con? Sao con phải đau buồn vì kẻ thù áp đảo?”
௯நான் என்னுடைய கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.
10 Xương cốt con như gãy vụn. Họ suốt ngày mỉa mai: “Đức Chúa Trời ngươi ở đâu?”
௧0உன் தேவன் எங்கே என்று என் எதிரிகள் நாள்தோறும் என்னோடு சொல்லி, என்னை நிந்திப்பது என்னுடைய எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.
11 Hồn ta hỡi, sao còn buồn bã? Sao mãi bối rối trong ta? Ta sẽ đặt hy vọng nơi Đức Chúa Trời! Ta sẽ còn ngợi tôn Chúa— Đấng Cứu Rỗi và Đức Chúa Trời của ta!
௧௧என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.