< Thánh Thi 29 >
1 (Thơ của Đa-vít) Ngợi tôn Chúa Hằng Hữu, hỡi các con của Đức Chúa Trời; hãy ngợi tôn Chúa Hằng Hữu vì vinh quang và quyền năng Ngài.
௧தாவீதின் பாடல். தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
2 Ngợi tôn Chúa Hằng Hữu vì vinh quang của Danh Ngài. Hãy thờ phượng Chúa Hằng Hữu trong hào quang của thánh khiết Ngài.
௨யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.
3 Tiếng Chúa Hằng Hữu vang dội trên các dòng nước. Đức Chúa Trời của vinh quang vang rền như sấm. Chúa Hằng Hữu nổi sấm sét trên nước lũ.
௩யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
4 Tiếng Chúa Hằng Hữu đầy quyền năng; tiếng Chúa Hằng Hữu quá oai nghiêm.
௪யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.
5 Tiếng Chúa Hằng Hữu bẻ gãy cây hương nam; phải, tiếng Chúa Hằng Hữu làm gãy nát cây bá hương Li-ban.
௫யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
6 Ngài khiến núi Li-ban nhảy như bò con; Ngài khiến núi Si-ri-ôn nhảy như bê rừng.
௬அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும், சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.
7 Tiếng Chúa Hằng Hữu phát chớp nhoáng.
௭யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.
8 Tiếng Chúa Hằng Hữu khiến chấn động vùng hoang mạc; Chúa Hằng Hữu chấn động hoang mạc Ca-đe.
௮யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்; யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.
9 Tiếng Chúa Hằng Hữu vặn đổ cây sồi, làm cho cây rừng trụi lá. Trong Đền Thờ Ngài, tất cả tung hô: “Vinh quang!”
௯யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும் யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
10 Chúa Hằng Hữu ngự trên nước lụt, Chúa Hằng Hữu cai trị trên ngôi vua muôn đời.
௧0யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்; யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார்.
11 Chúa Hằng Hữu ban sức mạnh cho dân Ngài. Chúa Hằng Hữu ban phước bình an cho họ.
௧௧யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்; யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.