< Châm Ngôn 17 >
1 Thà một miếng bánh khô mà thuận thảo, còn hơn nhà đầy thịt tế lễ mà xung đột.
௧சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம்.
2 Chủ để nô lệ khôn ngoan quản trị đứa con ngỗ nghịch cho nó đồng hưởng gia tài giữa các anh em.
௨புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான்.
3 Lửa dùng thử bạc, thử vàng, Chúa Hằng Hữu thử lòng người.
௩வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.
4 Người làm ác thích nghe lời phỉnh dối; người giả trá mê theo lời xảo quyệt.
௪தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
5 Ai chế giễu người nghèo, xúc phạm Đấng Tạo Hóa; ai vui mừng thấy người bị nạn sẽ bị hình phạt.
௫ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
6 Cháu chắt là vương miện của người già; tổ phụ là vinh dự cho con cháu.
௬பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே.
7 Lời trang nhã không xứng người ngu; bậc lãnh tụ không nói câu xảo trá.
௭மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது.
8 Của hối lộ như cái bùa trong tay người cầu cạnh; đi đến đâu hắn cũng được thành công!
௮லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்; அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
9 Bỏ qua lỗi cho nhau đem lại tình yêu mến, nhắc lại mãi lỗi lầm làm phân rẽ bạn bè.
௯குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
10 Một lời quở trách thức tỉnh người khôn, hơn cả trăm roi đánh người ngu muội.
௧0மூடனை நூறடி அடிப்பதைவிட, புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும்.
11 Người hung ác chỉ thích nổi loạn, sứ giả bạo tàn sẽ đi dẹp nó.
௧௧தீயவன் கலகத்தையே தேடுகிறான்; கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
12 Thà đương đầu với gấu cái mất con, còn hơn gặp người dại nổi khùng.
௧௨தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட, குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல்.
13 Người nỡ lấy ác báo thiện, chẳng hề thoát hậu quả khốc hại.
௧௩நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.
14 Tranh chấp khởi đầu như khơi nguồn nước chảy, thà nên dứt lời trước khi cãi lộn.
௧௪சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு.
15 Tha cho người có tội và lên án người vô tội— cả hai đều ghê tởm trước mặt Chúa Hằng Hữu.
௧௫துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.
16 Người khờ ôm bạc đi học khôn, lòng không chuyên, bạc cũng vô hiệu.
௧௬ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
17 Tình thân hữu bền chặt mãi mãi, nghĩa anh em quý lúc khổ nguy.
௧௭நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
18 Người dại dột bảo lãnh vội vàng, đem ách giữa đàng mang vào cổ.
௧௮புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான்.
19 Ai ưa tranh cạnh chuốc điều tội ác; phô trương cửa đẹp rước họa vô nhà.
௧௯விவாதப்பிரியன் பாவப்பிரியன்; தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
20 Lòng xảo trá không hề thành đạt; lưỡi gian ngoa rước lấy họa tai.
௨0மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
21 Con khờ khạo làm cha phiền lụy; người ưu sầu, vì con cái khùng điên.
௨௧மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
22 Niềm vui thỏa như thang thuốc bổ, nỗi thảm sầu phá hoại tủy xương.
௨௨மனமகிழ்ச்சி நல்ல மருந்து; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும்.
23 Người tham nhũng nhận hối lộ vụng trộm, làm cán cân công lý lệch nghiêng.
௨௩துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான்.
24 Người khôn sáng đeo đuổi khôn ngoan, mắt người dại nhìn chân trời góc bể.
௨௪ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும்.
25 Con khờ dại làm buồn lòng cha và gây đắng cay cho mẹ đã sinh nó.
௨௫மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
26 Phạt vạ người vô tội và trừng phạt viên chức thanh liêm, cả hai đều không đúng.
௨௬நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
27 Người khôn ngoan thường ít lời; người thông sáng biết tự chủ.
௨௭அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
28 Biết im lặng, dại cũng thành khôn; biết kiềm chế miệng lưỡi được xem là sáng suốt.
௨௮பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.