< Lu-ca 8 >
1 Sau đó, Chúa Giê-xu đi khắp các thành phố, làng mạc, công bố Phúc Âm về Nước của Đức Chúa Trời. Mười hai sứ đồ cùng đi với Ngài.
௧பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பயணம்செய்து, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைச் சொல்லி பிரசங்கித்து வந்தார். பன்னிரண்டு சீடர்களும் அவரோடு இருந்தார்கள்.
2 Nhiều phụ nữ từng được Chúa đuổi quỷ, chữa bệnh, cũng đi theo Ngài. Trong số đó có Ma-ri Ma-đơ-len, người được Chúa giải thoát khỏi bảy quỷ;
௨பொல்லாத ஆவிகளிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் விடுவித்து சுகமாக்கப்பட்ட சில பெண்களும், ஏழு பிசாசுகளின் தொல்லையிலிருந்து விடுதலைபெற்ற மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
3 Gian-nơ, vợ Chu-xa, quản lý hoàng cung Hê-rốt; Su-danh, và nhiều bà khác nữa, đã dâng tiền ủng hộ Chúa Giê-xu và các môn đệ.
௩ஏரோதின் மேலாளரான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்களுடைய ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்துகொண்டுவந்த பல பெண்கள் அவரோடு இருந்தார்கள்.
4 Một đoàn dân đông từ nhiều thành phố kéo nhau đến tụ họp chung quanh Chúa Giê-xu. Ngài dạy họ ẩn dụ này:
௪எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மக்கள்கூட்டம் அவரிடத்தில் வந்தவுடன், அவர் உவமையாகச் சொன்னது:
5 “Một người ra đồng gieo lúa. Khi vãi hạt giống, có hạt rơi trên đường mòn, bị người ta dẫm lên, rồi chim ăn sạch.
௫விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கும்போது சில விதைகள் வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைச் சாப்பிட்டுச் சென்றன.
6 Có hạt rơi nhằm lớp đất mỏng phủ trên đá, cây mọc lên khô héo ngay, vì thiếu hơi ẩm.
௬சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோனது.
7 Có hạt rơi vào giữa bụi gai, bị gai mọc lên chặn nghẹt.
௭சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
8 Nhưng hạt gieo vào đất tốt, lớn lên kết quả gấp trăm lần.” Khi nói những lời này, Chúa gọi lớn: “Ai có tai để nghe, hãy lắng nghe!”
௮சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கூறினார்.
9 Các môn đệ xin Chúa giải thích ý nghĩa ẩn dụ.
௯அப்பொழுது அவருடைய சீடர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
10 Chúa đáp: “Đức Chúa Trời cho các con hiểu huyền nhiệm về Nước của Đức Chúa Trời. Nhưng Ta dùng ẩn dụ để dạy những người khác để ứng nghiệm lời Thánh Kinh đã chép: ‘Họ nhìn mà không thấy. Họ nghe mà không hiểu.’
௧0அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
11 Đây là ý nghĩa của ẩn dụ: Hạt giống là Đạo Đức Chúa Trời.
௧௧“அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
12 Những hạt rơi trên đường mòn là Đạo gieo vào lòng người cứng cỏi, bị ma quỷ đến cướp đi, không cho họ tin nhận để được cứu.
௧௨வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.
13 Hạt giống rơi nơi lớp đất mỏng phủ trên đá tượng trưng cho người nghe Đạo liền vui lòng tiếp nhận, nhưng quá hời hợt, mầm sống không vào sâu trong lòng. Khi bị cám dỗ, họ liền bỏ Đạo.
௧௩கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமட்டும் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.
14 Hạt giống rơi nhằm bụi gai là những người nghe Đạo nhưng mãi lo âu về đời này, ham mê phú quý và lạc thú trần gian, làm cho Đạo bị nghẹt ngòi, nên họ không thể giúp người khác tin nhận Phúc Âm.
௧௪முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், உலகத்திற்குரிய கவலைகளினாலும் செல்வத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடுக்காமல் இருக்கிறார்கள்.
15 Hạt giống gieo vào đất tốt là những người thành tâm vâng phục, nghe Đạo liền tin nhận và kiên tâm phổ biến cho nhiều người cùng tin.”
௧௫நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள்.
16 “Không ai thắp đèn rồi đậy kín, nhưng đem đặt trên giá đèn để soi sáng mọi người trong nhà.
௧௬ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடிவைக்கமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவும் மாட்டான்; உள்ளே நுழைகிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
17 Chẳng có gì che kín mãi, tất cả các điều bí mật sẽ bị phơi bày trước ánh sáng.
௧௭வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளியேவராத மறைபொருளுமில்லை.
18 Vậy hãy thận trọng về cách các con nghe, vì ai có sẽ được cho thêm, còn ai không có, dù tưởng mình có gì cũng bị mất luôn.”
௧௮ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.
19 Mẹ và các em của Chúa Giê-xu đến tìm Ngài, nhưng đông người quá, không đến gần Ngài được.
௧௯அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் வந்தார்கள் மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது, ஆதலால் அவர் அருகில் செல்லமுடியாமல் இருந்தது.
20 Có người thưa với Chúa: “Mẹ và các em Thầy đang chờ bên ngoài, muốn gặp Thầy.”
௨0அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
21 Chúa Giê-xu đáp: “Mẹ và em Ta là những người nghe và làm theo lời Đức Chúa Trời.”
௨௧அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக்கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரர்களுமாக இருக்கிறார்கள் என்றார்.
22 Một hôm, Chúa Giê-xu bảo các môn đệ: “Chúng ta hãy qua bên kia bờ hồ.” Vậy, họ bước vào thuyền và chèo đi.
௨௨பின்பு ஒருநாள் அவர் தமது சீடர்களோடு படகில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள்.
23 Khi thuyền đang chạy, Chúa Giê-xu nằm ngủ. Thình lình, một cơn bão nổi lên, nước tràn vào thuyền thật nguy ngập.
௨௩படகில் பயணம்செய்துகொண்டு இருக்கும்போது இயேசு தூங்கிவிட்டார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்களுடைய படகு தண்ணீரினால் நிறைந்து ஆபத்து ஏற்பட்டது.
24 Các môn đệ đến đánh thức Ngài dậy, hớt hải thưa: “Thầy ơi, chúng ta chết mất!” Chúa Giê-xu thức dậy quở sóng gió. Sóng gió liền ngưng; biển lặng yên.
௨௪அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, சாகப்போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் தண்ணீரின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டானது.
25 Chúa hỏi các môn đệ: “Đức tin các con ở đâu?” Mọi người đều kinh ngạc, sợ hãi bảo nhau: “Người là ai, mà có quyền lực bảo sóng gió phải vâng lời Người!”
௨௫அவர் அவர்களை நோக்கி: உங்களுடைய விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
26 Thuyền cập bến vùng Ga-đa-ren, phía Đông biển Ga-li-lê.
௨௬பின்பு கலிலேயாவிற்கு எதிரான கதரேனருடைய நாட்டைச் சேர்ந்தார்கள்.
27 Chúa vừa lên bờ, một người bị quỷ ám trong thành đến gặp Ngài. Từ lâu, anh sống lang thang ngoài nghĩa địa, không nhà cửa, không quần áo.
௨௭அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாகப் பிசாசுகள் பிடித்தவனும், ஆடையணியாதவனும், வீட்டில் தங்காமல் கல்லறைகளிலே தங்கினவனுமாக இருந்த அந்தப் பட்டணத்து மனிதன் ஒருவன் அவருக்கு எதிராகவந்தான்.
28 Vừa thấy Chúa và nghe Ngài ra lệnh đuổi quỷ, anh hét lớn, quỳ xuống trước mặt Ngài, kêu la: “Giê-xu, Con Đức Chúa Trời Chí Cao, Ngài định làm gì tôi? Tôi van Ngài đừng hành hạ tôi!”
௨௮அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தமாகச் சொன்னான்.
29 Trước kia quỷ thường điều khiển anh, dù anh bị còng tay xiềng chân, quỷ cũng xúi anh bẻ còng bứt xiềng, chạy vào hoang mạc.
௨௯அந்த அசுத்தஆவி அவனைவிட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி பலகாலமாக அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்திரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
30 Chúa Giê-xu hỏi: “Mầy tên gì?” Đáp: “Quân Đoàn”—vì có rất nhiều quỷ ở trong người ấy.
௩0இயேசு அவனை நோக்கி: உன் பெயர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பெயரைச் சொன்னான்.
31 Bọn quỷ năn nỉ Chúa đừng đuổi chúng xuống vực sâu. (Abyssos )
௩௧தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (Abyssos )
32 Trên sườn núi có bầy heo đông đang ăn, bọn quỷ xin Chúa cho chúng nhập vào bầy heo. Vậy Chúa Giê-xu cho phép.
௩௨அந்த இடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார்.
33 Chúng liền ra khỏi người bị ám, nhập vào bầy heo. Bầy heo đua nhau lao đầu qua bờ đá rơi xuống biển, chết chìm tất cả.
௩௩அப்படியே பிசாசுகள் அந்த மனிதனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மரித்தன.
34 Bọn chăn heo liền chạy vào thành phố và thôn xóm gần đó báo tin.
௩௪அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
35 Dân chúng đổ ra xem. Họ đến gần Chúa, thấy người vốn bị quỷ ám, áo quần tươm tất, trí óc tỉnh táo, đang ngồi dưới chân Chúa Giê-xu, thì khiếp sợ.
௩௫அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி மக்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனிதன் ஆடை அணிந்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
36 Những người chứng kiến việc đuổi quỷ thuật lại mọi chi tiết.
௩௬பிசாசுகள் பிடித்திருந்தவன் சுகமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
37 Quá kinh hãi, tất cả dân chúng vùng Ga-đa-ren xin Chúa Giê-xu đi nơi khác. Vậy, Chúa Giê-xu xuống thuyền trở qua bờ bên kia.
௩௭அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் எல்லோரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படகில் ஏறி, திரும்பிப்போனார்.
38 Người vốn bị quỷ ám xin đi theo. Nhưng Chúa Giê-xu không cho, Ngài bảo:
௩௮பிசாசுகள் நீங்கின மனிதன் அவரோடுகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
39 “Hãy về nhà, thuật lại những việc lạ lùng Đức Chúa Trời đã làm cho con.” Người ấy đi khắp thành phố công bố việc lớn lao Chúa Giê-xu đã làm cho mình.
௩௯இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டிற்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் சொல் என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான்.
40 Trở lại bờ bên kia, Chúa Giê-xu được dân chúng đón tiếp, vì họ chờ đợi Ngài.
௪0இயேசு திரும்பிவந்தபோது மக்களெல்லோரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்.
41 Giai-ru, viên quản lý hội đường đến quỳ dưới chân Chúa Giê-xu, khẩn khoản mời Ngài về nhà,
௪௧அப்பொழுது ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பெயருள்ள ஒருவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே மகள் மரணவேதனையில் இருந்தபடியால்,
42 vì đứa con gái duy nhất của ông lên mười hai tuổi đang hấp hối. Khi đi đường, dân chúng chen lấn chung quanh Chúa.
௪௨தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகும்பொழுது மக்கள்கூட்டம் அவரை நெருக்கினார்கள்.
43 Trong đám đông có một phụ nữ bị bệnh rong huyết mười hai năm, đã chạy chữa nhiều thầy lắm thuốc, nhưng không lành.
௪௩அப்பொழுது பன்னிரண்டு வருடமாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டு, தன் சொத்துக்களையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சுகமாக்கப்படாமலிருந்த ஒரு பெண்,
44 Bà đến sau lưng Chúa, sờ trôn áo Ngài, lập tức huyết cầm lại.
௪௪அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது.
45 Chúa Giê-xu hỏi: “Ai sờ đến Ta vậy?” Không thấy ai nhận, Phi-e-rơ lên tiếng: “Thưa Thầy, biết bao nhiêu người đang chen lấn quanh Thầy mà!”
௪௫அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லோரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
46 Nhưng Chúa Giê-xu đáp: “Có người vừa sờ áo Ta, vì Ta biết có quyền lực trong Ta phát ra.”
௪௬அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
47 Biết không thể giấu được nữa, người phụ nữ run rẩy đến quỳ trước mặt Chúa, thưa thật giữa công chúng tại sao mình đã sờ áo Chúa và lập tức được lành.
௪௭அப்பொழுது அந்த பெண் தான் மறைந்திருக்கவில்லை என்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சுகமானதையும் எல்லா மக்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
48 Chúa phán: “Con ơi, đức tin con đã chữa cho con lành. Hãy về nhà bình an!”
௪௮அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.
49 Khi Chúa còn đang nói, người nhà Giai-ru đến báo tin: “Con gái ông chết rồi, đừng làm phiền Thầy nữa!”
௪௯அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய மகள் மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான்.
50 Nghe tin ấy, Chúa Giê-xu bảo Giai-ru: “Đừng sợ, cứ vững lòng tin, con ông sẽ được lành.”
௫0இயேசு அதைக்கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாக இரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
51 Đến nhà, Chúa Giê-xu không cho ai vào, ngoài Phi-e-rơ, Gia-cơ, Giăng, và cha mẹ cô bé.
௫௧அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும்தவிர வேறொருவரையும் உள்ளே வர அனுமதிக்காமல்,
52 Cả nhà đang than khóc kêu la, nhưng Chúa phán: “Đừng khóc nữa! Em bé chỉ ngủ chứ không chết đâu!”
௫௨எல்லோரும் அழுது அவளைக்குறித்துத் துக்கப்படுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என்றார்.
53 Nhưng đám đông quay lại chế nhạo Ngài, vì biết cô bé đã chết rồi.
௫௩அவள் மரித்துப்போனாளென்று அவர்களுக்கு தெரிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
54 Chúa nắm tay cô bé, gọi: “Dậy đi, con!”
௫௪எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
55 Cô bé sống lại, liền đứng dậy. Chúa Giê-xu bảo cho nó ăn.
௫௫அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரம் கொடுங்கள் என்றார்.
56 Cha mẹ cô bé quá ngạc nhiên, nhưng Chúa dặn đừng nói cho ai biết.
௫௬அவளுடைய தாயும் தகப்பனும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.