< Các Thủ Lãnh 8 >
1 Lúc ấy người Ép-ra-im hỏi Ghi-đê-ôn: “Tại sao ông đối xử với chúng tôi như vậy? Sao ông không gọi chúng tôi ngày ông khởi binh đánh Ma-đi-an?” Và họ trách móc Ghi-đê-ôn nặng nề.
௧அப்பொழுது எப்பிராயீம் மனிதர்கள் அவனை நோக்கி: நீ மீதியானியர்கள்மேல் யுத்தம் செய்யப்போகிறபோது, எங்களை அழைக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று, அவனோடு கடுமையாக வாக்குவாதம்செய்தார்கள்.
2 Nhưng Ghi-đê-ôn đáp: “Những gì tôi làm có thể sánh với anh em sao? Cả mùa nho của người A-bi-ê-xe cũng không bằng nho mót trong vườn người Ép-ra-im.
௨அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியர்களின் திராட்சை பழத்தின் முழு அறுவடையை விட, எப்பிராயீமர்களின் மீதியான அறுவடை அதிகம் அல்லவா?
3 Đức Chúa Trời đã cho anh em bắt được Ô-rép và Xê-ép là hai thủ lĩnh của Ma-đi-an, công của anh em lớn lắm, chúng tôi đâu có công trạng gì sánh nổi?” Nghe thế, họ mới nguôi giận.
௩தேவன் உங்கள் கையிலே மீதியானியர்களின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன் மேலிருந்த அவர்களுடைய கோபம் நீங்கினது.
4 Ghi-đê-ôn qua Sông Giô-đan với 300 quân, dù mệt mỏi lắm, nhưng vẫn đuổi theo quân địch.
௪கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், களைப்பாக இருந்தும் (எதிரியை) பின்தொடர்ந்தார்கள்.
5 Đến Su-cốt, ông yêu cầu dân chúng: “Xin cấp cho quân ta một ít bánh, vì họ đói lả, trong khi đó tôi phải đuổi theo hai vua Ma-đi-an là Xê-bách và Xanh-mu-na.”
௫அவன் சுக்கோத்தின் மனிதர்களை நோக்கி: என்னோடிருக்கிற மக்களுக்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் களைப்பாக இருக்கிறார்கள், நான் மீதியானியர்களின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.
6 Nhưng các thủ lãnh người Su-cốt đáp: “Hãy bắt Xê-bách và Xanh-mu-na trước, rồi chúng tôi sẽ đem bánh cho quân của ông ăn.”
௬அதற்குச் சுக்கோத்தின் பிரபுக்கள்: உன் ராணுவத்திற்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன்னுடைய கைவசம் வந்ததோ என்றார்கள்.
7 Ghi-đê-ôn đáp: “Thế thì khi Chúa Hằng Hữu cho ta bắt được Xê-bách và Xanh-mu-na, ta sẽ trở lại, rồi lấy gai hoang mạc đánh xé thịt các người ra.”
௭அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: யெகோவா சேபாவையும் சல்முனாவையும் என்னுடைய கையில் ஒப்புக்கொடுக்கும்போது, உங்கள் சரீரத்தை வனாந்திரத்தின் நெரிஞ்சில்முட்களால் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,
8 Rồi ông tiếp tục đến Phê-ni-ên, ông cũng hỏi xin bánh cho quân, nhưng cũng nhận được câu trả lời giống như vậy.
௮அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப் போய், அந்த ஊர்க்காரர்களிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனிதர்கள் பதில் சொன்னபடியே பெனூவேலின் மனிதர்களும் அவனுக்குச் சொன்னார்கள்.
9 Ông nói với người Phê-ni-ên: “Khi ta chiến thắng trở về, ta sẽ phá đổ cái tháp này.”
௯அப்பொழுது அவன், பெனூவேலின் மனிதர்களைப் பார்த்து: நான் சமாதானத்தோடு திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.
10 Lúc ấy Xê-bách, Xanh-mu-na, và quân lính đang đóng ở Ca-co với 15.000 quân—đó là tàn quân của các dân miền đông, vì có đến 120.000 người có tài cầm gươm đã tử trận.
௧0சேபாவும் சல்முனாவும் அவர்களோடு அவர்களுடைய படைகளும் ஏறக்குறைய 15,000 பேர் கர்கோரில் இருந்தார்கள்; பட்டயம் உருவத்தக்கவர்கள் 1,20,000 பேர் விழுந்தபடியால், கிழக்குப்பகுதி மக்கள் எல்லா ராணுவத்திலும் இவர்கள் மட்டும் மீதியாக இருந்தார்கள்.
11 Ghi-đê-ôn theo đường của bọn du mục ở phía đông Nô-bách và Giô-bê-ha, bất ngờ tấn công địch quân.
௧௧கிதியோன் கூடாரங்களில் குடியிருக்கிறவர்கள் வழியாக நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கில் போய், அந்த ராணுவம் பயமில்லை என்று இருந்தபோது, அதை முறியடித்தான்.
12 Xê-bách và Xanh-mu-na, hai vua Ma-đi-an, chạy trốn; Ghi-đê-ôn đuổi theo bắt được, còn quân của hai vua ấy bị đánh tan.
௧௨சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியர்களின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, ராணுவம் முழுவதையும் கலங்கடித்தான்.
13 Chiến thắng xong, Ghi-đê-ôn theo đường đèo Hê-re quay về.
௧௩யோவாசின் மகனான கிதியோன் யுத்தம்செய்து, சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது,
14 Ông bắt một thanh niên người Su-cốt và bắt người này viết ra tên của bảy mươi bảy người lãnh đạo Su-cốt.
௧௪சுக்கோத்தின் மனிதர்களில் ஒரு வாலிபனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான்; அவன் சுக்கோத்தின் பிரபுக்களும் அதின் மூப்பர்களுமாகிய 77 மனிதர்களின் பேரை அவனுக்கு எழுதிக்கொடுத்தான்.
15 Ghi-đê-ôn trở lại Su-cốt và nói với các thủ lãnh: “Đây là Xê-bách và Xanh-mu-na. Khi trước chúng tôi đến đây, các người có mắng ta, rằng: ‘Hãy bắt Xê-bách và Xanh-mu-na trước, rồi chúng tôi sẽ đem bánh cho quân của ông ăn.’”
௧௫அவன் சுக்கோத்து ஊர்க்காரர்களிடத்தில் வந்து: இதோ, களைத்திருக்கிற உன் மனிதர்களுக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன்னுடைய கைவசம் வந்ததோ என்று நீங்கள் என்னை நிந்தித்துச் சொன்ன சேபாவும் சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி,
16 Rồi Ghi-đê-ôn bắt các trưởng lão của thành, cho họ một bài học, dùng gai gốc hoang mạc đánh phạt một trận.
௧௬பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் நெரிஞ்சில்முட்களை கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனிதர்களுக்குப் புத்திவரச்செய்து,
17 Ông cũng phá đổ tháp Phê-ni-ên và giết tất cả trai tráng trong thành.
௧௭பெனூவேலின் கோபுரத்தை இடித்து, அந்த ஊர் மனிதர்களையும் கொன்றுபோட்டான்.
18 Ghi-đê-ôn hỏi Xê-bách và Xanh-mu-na: “Những người bị các ngươi giết ở Tha-bô hình dáng như thế nào?” Họ đáp: “Họ trông giống như ông, như các hoàng tử vậy.”
௧௮பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்றுபோட்ட அந்த மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போல் இருந்தான் என்றார்கள்.
19 Ghi-đê-ôn nói: “Họ là anh em ta, là con của mẹ ta. Thật như Chúa Hằng Hữu Hằng Sống, ta sẽ không giết các người nếu các người không giết họ.”
௧௯அப்பொழுது அவன்: அவர்கள் என்னுடைய சகோதரர்களும் என்னுடைய தாயின் பிள்ளைகளுமாக இருந்தார்கள்; அவர்களை உயிரோடே வைத்திருந்தீர்களானால். உங்களைக் கொல்லாதிருப்பேன் என்று யெகோவாவின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,
20 Rồi quay sang Giê-the, con trưởng nam mình, ông nói: “Hãy giết họ đi!” Nhưng Giê-the sợ nên không dám rút gươm, vì cậu chỉ là một thiếu niên.
௨0தன்னுடைய மூத்தமகனான யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் தான் இளைஞனானபடியால் பயந்து தன்னுடைய பட்டயத்தை உருவாமல் இருந்தான்.
21 Xê-bách và Xanh-mu-na nói với Ghi-đê-ôn: “Hãy là một người đàn ông! Tự ông hãy giết chúng tôi đi!” Vậy Ghi-đê-ôn giết Xê-bách và Xanh-mu-na, rồi lấy những vật hình trăng lưỡi liềm đeo nơi cổ lạc đà của họ.
௨௧அப்பொழுது சேபாவும் சல்முனாவும்: நீரே எழுந்து எங்களைக் கொல்லும்; மனிதன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த பொன்னால் அலங்கரிக்கப்பட்ட பிறை வடிவமான ஆபரணங்களை எடுத்துக்கொண்டான்.
22 Người Ít-ra-ên nói với Ghi-đê-ôn: “Xin cai trị chúng tôi! Vì ông và con cháu ông đã giải cứu chúng tôi khỏi quyền lực Ma-đi-an.”
௨௨அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர்கள் கைக்கு தப்புவித்தபடியால் நீரும் உம்முடைய மகனும், உம்முடைய மகனின் மகனும், எங்களை ஆண்டுகொள்ளக்கடவீர்கள் என்றார்கள்.
23 Nhưng Ghi-đê-ôn từ chối: “Tôi và con tôi sẽ không quản trị Ít-ra-ên đâu. Chính Chúa Hằng Hữu sẽ cai trị anh em!
௨௩அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என்னுடைய மகனும் உங்களை ஆளமாட்டான்; யெகோவாவே உங்களை ஆளுவாராக என்றான்.
24 Tuy nhiên, tôi xin anh em một điều: Hãy đem cho tôi các vòng đeo tai anh em lấy được của địch.” (Quân địch là người Ích-ma-ên, tất cả đều đeo vòng vàng nơi tai.)
௨௪பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலர்களாக இருந்தபடியால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.
25 Họ đáp: “Chúng tôi sẵn lòng!” Rồi họ trải một cái áo ra, bỏ tất cả vòng vàng thu được vào đó.
௨௫இஸ்ரவேலர்கள்: சந்தோஷமாகக் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு துணியை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.
26 Tổng số vàng nặng tương đương với 19,4 ký, không kể các vòng cổ, đồ trang sức, áo màu tím của các vua Ma-đi-an mặc, cùng đồ đeo nơi cổ lạc đà họ cưỡi.
௨௬பிறை வடிவிலான ஆபரணங்களும், ஆரங்களும், மீதியானியர்களின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த விலையுயர்ந்த ஊதா நிற ஆடைகளும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சங்கலிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாக இருந்தது.
27 Ghi-đê-ôn dùng vàng ấy làm thành một ê-phót để tại Óp-ra, thành ông đang ở. Người Ít-ra-ên kính thờ ê-phót ấy, và nó trở thành nguyên nhân gây cho Ghi-đê-ôn và gia đình ông vấp ngã.
௨௭அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன்னுடைய ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைத் தொழுதுகொண்டதால் விபசாரம் செய்தவர்களானார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியானது.
28 Vậy, Ma-đi-an bị Ít-ra-ên trấn áp, không còn ngất đầu lên được. Và đất nước Ít-ra-ên được thái bình trong bốn mươi năm, trong đời Ghi-đê-ôn.
௨௮இப்படியாக மீதியானியர்கள் திரும்ப தலை தூக்காதபடி, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் 40 வருடங்கள் அமைதியாக இருந்தது.
29 Ghi-đê-ôn, con Giô-ách, quay về nhà mình.
௨௯யோவாசின் மகனான யெருபாகால் (கிதியோனின் மற்றொரு பெயர்) போய், தன்னுடைய வீட்டிலே வாழ்ந்து வந்தான்.
30 Ông có bảy mươi con trai, vì nhiều vợ.
௩0கிதியோனுக்கு அநேகம் மனைவிகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான மகன்கள் எழுபதுபேர்.
31 Ông còn có vợ bé ở Si-chem, bà này cũng sinh được một con trai tên là A-bi-mê-léc.
௩௧சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு என்று பெயரிட்டான்.
32 Ghi-đê-ôn qua đời vào lúc tuổi cao, được chôn trong mộ của cha mình là Giô-ách, tại Óp-ra, địa phận của đại tộc A-bi-ê-xe.
௩௨பின்பு யோவாசின் மகனான கிதியோன் நல்ல முதிர்வயதிலே இறந்து, ஒப்ராவிலே தன்னுடைய தகப்பனான யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்.
33 Nhưng Ghi-đê-ôn vừa chết đi, người Ít-ra-ên trở lại phạm tội tà dâm bởi thờ cúng Ba-anh, chọn Ba-anh Bê-rít làm thần mình.
௩௩கிதியோன் இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பவும் பாகால்களைத் தொழுதுகொண்டதால் விபசாரம் செய்தவர்களாகி, பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.
34 Họ không còn nhớ đến Chúa Hằng Hữu, Đức Chúa Trời, Đấng đã giải cứu họ khỏi tay quân thù sống chung quanh.
௩௪இஸ்ரவேல் மக்கள் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லா எதிரிகளின் கைகளிலிருந்தும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய யெகோவாவை நினைக்காமலும்,
35 Họ cũng không tỏ lòng thuận thảo với gia đình Giê-ru Ba-anh (tức Ghi-đê-ôn), không nhớ ơn ông gì nữa bất kể những điều tốt đẹp ông đã làm cho Ít-ra-ên.
௩௫கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்குச் செய்த எல்லா நன்மைகளுக்குத்தகுந்த தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.