< I-sai-a 20 >

1 Vào năm khi Vua Xạc-gôn, nước A-sy-ri, sai thống tướng đánh chiếm Phi-li-tin, thành Ách-đốt,
சேனாதிபதி தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்திற்கு வந்து, அஸ்தோத்தின்மேல் போர்செய்து, அதைப் பிடித்த வருடத்திலே,
2 Chúa Hằng Hữu phán với Y-sai, con A-mốt: “Hãy cởi bao gai và bỏ giày.” Y-sai vâng lời phán dạy rồi ở trần và đi chân không.
யெகோவா ஆமோத்சின் மகனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் இடுப்பிலிருக்கிற சணலாடையை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற காலணிகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடந்தான்.
3 Chúa Hằng Hữu phán: “Y-sai, đầy tớ Ta, đã ở trần và đi chân không suốt ba năm. Đây là dấu hiệu—là điềm nghịch mà Ta sẽ giáng trên Ai Cập và Ê-thi-ô-pi.
அப்பொழுது யெகோவா: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்று வருடத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடக்கிறதுபோல,
4 Vua A-sy-ri sẽ bắt các tù binh Ai Cập và Ê-thi-ô-pi. Vua ấy sẽ bắt họ đều phải trần truồng và đi chân không, từ trẻ đến già, để hạ nhục Ai Cập.
அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய வாலிபர்களையும் முதியோரையும், ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக எகிப்தியருக்கு வெட்கமுண்டாக, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.
5 Rồi người Phi-li-tin sẽ khiếp sợ và hổ thẹn, vì họ đã dựa vào quyền lực của Ê-thi-ô-pi và kiêu hãnh về liên minh của họ tại Ai Cập!
அப்பொழுது இந்தக் கடற்கரைக்குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:
6 Họ sẽ nói: ‘Nếu điều này xảy ra cho Ai Cập, thì có cơ hội nào cho chúng ta? Chúng ta đã dựa vào Ai Cập để bảo vệ chúng ta khỏi tay vua A-sy-ri.’”
இதோ, அசீரிய ராஜாவின் முகத்திற்குத் தப்புவதற்காக நாங்கள் நம்பி, உதவிக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்வார்கள் என்றார்.

< I-sai-a 20 >