< Sáng Thế 8 >

1 Đức Chúa Trời không quên Nô-ê và các loài sinh vật ở với ông trong tàu. Ngài khiến cơn gió thổi ngang qua mặt nước, nước lụt liền rút xuống.
தேவன் நோவாவையும், அவனுடன் கப்பலிலிருந்த அனைத்து காட்டுமிருகங்களையும், அனைத்து நாட்டுமிருகங்களையும் நினைவுகூர்ந்து, பூமியின்மேல் காற்றை வீசச்செய்தார். அப்பொழுது தண்ணீர் குறையத் தொடங்கியது.
2 Các mạch nước dưới đất và các nguồn nước trên trời ngưng lại, cơn mưa liền dứt.
ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோனது.
3 Sau 150 ngày ngập lụt, nước hạ xuống, và dần dần rút khỏi mặt đất.
தண்ணீர் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; 150 நாட்களுக்குப்பின்பு தண்ணீர் குறைந்தது.
4 Năm tháng sau, chiếc tàu mắc cạn trên núi A-ra-rát.
ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே கப்பல் அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கினது.
5 Nước cứ hạ dần. Cho đến hai tháng rưỡi sau, các đỉnh núi mới ló dạng.
பத்தாம் மாதம்வரைக்கும் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
6 Sau bốn mươi ngày, Nô-ê mở cửa sổ trên tàu
40 நாட்களுக்குப் பிறகு, நோவா தான் கப்பலில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
7 và thả một con quạ ra ngoài; nó bay lui bay tới cho đến khi nước rút khô trên đất.
ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டு பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாக இருந்தது.
8 Nô-ê cũng thả một con chim bồ câu, để xem nước rút khỏi mặt đất chưa.
பின்பு பூமியின்மேல் தண்ணீர் குறைந்து போயிற்றோ என்று தெரிந்துகொள்ளும்படி, ஒரு புறாவை வெளியே விட்டான்.
9 Khi bồ câu không tìm được chỗ đáp xuống, nó liền bay trở về tàu với Nô-ê, vì mực nước còn cao. Nô-ê đưa tay đỡ lấy bồ câu và đưa vào tàu.
பூமியின்மேலெங்கும் தண்ணீர் இருந்ததினால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் கிடைக்காததால், திரும்பிக் கப்பலிலே அவனிடத்திற்கு வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகக் கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான்.
10 Đợi bảy ngày nữa, Nô-ê lại thả bồ câu ra khỏi tàu.
௧0பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, மறுபடியும் புறாவைக் கப்பலிலிருந்து வெளியே விட்டான்.
11 Đến chiều, bồ câu bay về, trong mỏ ngậm một lá ô-liu vừa mới ngắt. Nô-ê biết nước đã rút khỏi mặt đất.
௧௧அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்திற்கு வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதனால் நோவா பூமியின்மேல் தண்ணீர் குறைந்துபோயிற்று என்று தெரிந்து கொண்டான்.
12 Bảy ngày sau, Nô-ê lại thả bồ câu ra, nhưng lần này bồ câu không trở lại.
௧௨பின்னும் ஏழு நாட்களுக்குப் பிறகு, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.
13 Vào ngày đầu tiên của năm mới, mười tháng rưỡi từ khi cơn nước lụt bắt đầu, Nô-ê được 601 tuổi, ông mở cửa tàu nhìn ra và thấy nước đã rút cạn.
௧௩அவனுக்கு 601 வயதாகும் வருடத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போயிற்று; நோவா கப்பலின் மேல் அடுக்கை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் தண்ணீர் இல்லாதிருந்தது.
14 Hai tháng sau, cuối cùng đất cũng khô!
௧௪இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.
15 Đức Chúa Trời phán cùng Nô-ê:
௧௫அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:
16 “Con và gia đình hãy ra khỏi tàu.
௧௬“நீயும், உன்னோடுகூட உன்னுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் கப்பலைவிட்டுப் புறப்படுங்கள்.
17 Con cũng thả các sinh vật đã ở với con, nào loài chim, loài thú, và loài bò sát, để chúng sinh sôi nẩy nở và tăng thêm nhiều trên mặt đất.”
௧௭உன்னிடத்தில் இருக்கிற அனைத்துவித உயிரினங்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற அனைத்து பிராணிகளையும் உன்னோடு வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாக ஈன்றெடுத்து, பூமியின்மேல் பலுகிப் பெருகட்டும்” என்றார்.
18 Nô-ê cùng vợ, các con, và các dâu đều ra khỏi tàu.
௧௮அப்பொழுது நோவாவும், அவனுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் வெளியே வந்தார்கள்.
19 Tất cả các loài thú, loài chim, và loài bò sát sống trên mặt đất cũng ra khỏi tàu với Nô-ê.
௧௯பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து மிருகங்களும், ஊருகிற அனைத்து பிராணிகளும், அனைத்து பறவைகளும் வகைவகையாகக் கப்பலிலிருந்து வெளியே வந்தன.
20 Nô-ê lập bàn thờ cho Chúa Hằng Hữu, và ông bắt các loài thú và chim tinh sạch để dâng làm của lễ thiêu trên bàn thờ.
௨0அப்பொழுது நோவா யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சுத்தமான அனைத்து மிருகங்களிலும், சுத்தமான அனைத்து பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.
21 Chúa Hằng Hữu hưởng lấy mùi thơm và tự nhủ: “Ta chẳng bao giờ nguyền rủa đất nữa, cũng chẳng tiêu diệt mọi loài sinh vật như Ta đã làm, vì ngay lúc tuổi trẻ, loài người đã có khuynh hướng xấu trong lòng.
௨௧சுகந்த வாசனையைக் யெகோவா முகர்ந்தார். அப்பொழுது யெகோவா: “இனி நான் மனிதனுக்காக பூமியை சபிப்பதில்லை; மனிதனுடைய இருதயத்தின் நினைவுகள் அவனுடைய சிறுவயது தொடங்கி பொல்லாததாக இருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி அனைத்து உயிரினங்களையும் அழிப்பதில்லை.
22 Hễ đất còn thì mùa gieo và mùa gặt, tiết trời lạnh và nóng, mùa hè và mùa đông, ngày và đêm sẽ không bao giờ chấm dứt.”
௨௨பூமி இருக்கும்வரைக்கும் விதைப்பும் அறுப்பும், குளிர்ச்சியும் வெப்பமும், கோடைக்காலமும் மழைக்காலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை” என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

< Sáng Thế 8 >

A Dove is Sent Forth from the Ark
A Dove is Sent Forth from the Ark