< Sáng Thế 36 >
1 Đây là dòng dõi của Ê-sau (tức Ê-đôm):
௧ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்சவரலாறு:
2 Ê-sau cưới ba vợ, đều là người Ca-na-an: A-đa, con gái của Ê-lôn người Hê-tít; Ô-hô-li-ba-ma, con gái của A-na, cháu của Xi-bê-ôn, người Hê-vi;
௨ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் மகளாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமாகிய அகோலிபாமாளையும்,
3 và Bách-mát, con gái của Ích-ma-ên, em của Nê-ba-giốt.
௩இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் திருமணம் செய்திருந்தான்.
4 A-đa sinh Ê-li-pha cho Ê-sau. Bách-mát sinh Rê-u-ên.
௪ஆதாள் ஏசாவுக்கு எலிப்பாசைப் பெற்றெடுத்தாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றெடுத்தாள்.
5 Ô-hô-li-ba-ma sinh Giê-úc, Gia-lam, và Cô-ra. Tất cả con trai của Ê-sau ấy đều sinh tại xứ Ca-na-an.
௫அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றெடுத்தாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான் தேசத்திலே பிறந்த மகன்கள்.
6 Ê-sau đưa vợ con, gia nhân, cùng đem các bầy súc vật—tất cả tài sản gây dựng tại xứ Ca-na-an—cách xa gia đình Gia-cốp,
௬ஏசா தன்னுடைய மனைவிகளையும், மகன்களையும், மகள்களையும், வீட்டிலுள்ள அனைவரையும், ஆடுமாடுகளையும், மற்ற உயிரினங்கள் அனைத்தையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த சொத்து முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபைவிட்டுப் பிரிந்து வேறு தேசத்திற்குப் போனான்.
7 vì cả hai anh em đều có quá nhiều tài sản nên không thể sống chung được nữa; và xứ họ đang cư ngụ cũng không cung ứng nỗi các nhu cầu của hai gia đình đông đúc ấy.
௭அவர்களுடைய சம்பத்து அதிகமாக இருந்ததால் அவர்கள் ஒன்றாக இணைந்து குடியிருக்க முடியாமற்போனது; அவர்களுடைய மந்தைகளின் காரணமாக அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்க முடியாததாயிருந்தது.
8 Vậy, Ê-sau (tức là Ê-đôm) ở trên núi Sê-i-rơ.
௮ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பெயர்.
9 Đây là hậu tự của Ê-sau, tức là người Ê-đôm, sinh tại núi Sê-i-rơ:
௯சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியர்களுடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும்,
10 Các con trai Ê-sau: Ê-li-pha con trai của A-đa; và Rê-u-ên con trai của Bách-mát.
௧0ஏசாவின் மகன்களுடைய பெயர்களாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய மகனுக்கு எலிப்பாஸ் என்று பெயர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய மகனுக்கு ரெகுவேல் என்று பெயர்.
11 Con trai của Ê-li-pha là Thê-man, Ô-ma, Xê-phô, Ga-tam, và Kê-na.
௧௧எலிப்பாசின் மகன்கள் தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள்.
12 Thim-na, vợ lẽ của Ê-li-pha sinh A-ma-léc. Đó là các cháu của A-đa, vợ Ê-sau.
௧௨திம்னாள் ஏசாவின் மகனாகிய எலிப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய மகன்கள்.
13 Gia tộc Rê-u-ên, con trai của Bách-mát gồm có Na-hát, Xê-rách, Sam-ma, và Mích-xa. Ấy là các cháu của Bách-mát, cũng là vợ Ê-sau.
௧௩ரெகுவேலுடைய மகன்கள், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்கள்.
14 Ê-sau cũng còn những người con trai sinh bởi Ô-hô-li-ba-ma, vợ của Ê-sau, con gái A-na, cháu ngoại Xi-bê-ôn. Tên của các con là Giê-úc, Gia-lam, và Cô-ra.
௧௪சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் மகன்களையும் ஏசாவுக்குப் பெற்றெடுத்தாள்.
15 Đây là các cháu nội của Ê-sau trở thành đại tộc trưởng: Các đại tộc là hậu tự của Ê-li-pha, con trưởng nam của Ê-sau và A-đa: Đại tộc Thê-man, đại tộc Ô-ma, đại tộc Xê-phô, đại tộc Kê-na,
௧௫ஏசாவின் மகன்களில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலிப்பாசுடைய மகன்களில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு,
16 đại tộc Cô-ra, đại tộc Ga-tam, và đại tộc A-ma-léc.
௧௬கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலிப்பாசின் சந்ததியும் ஆதாளின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள்.
17 Các đại tộc do Rê-u-ên, thứ nam của Ê-sau và Bách-mát, sinh ra trong xứ Ca-na-an: Đại tộc Na-hát, đại tộc Xê-rách, đại tộc Sam-ma, và đại tộc Mích-xa.
௧௭ஏசாவின் மகனாகிய ரெகுவேலின் மகன்களில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள்.
18 Các đại tộc thuộc dòng thứ ba, là các con trai của Ê-sau và Ô-hô-li-ba-ma, con gái A-na: Đại tộc Giê-úc, đại tộc Gia-lam, và đại tộc Cô-ra.
௧௮ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் மகன்கள் எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் மகளும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
19 Ấy là các con trai của Ê-sau, tức là Ê-đôm, và đó là các đại tộc của họ.
௧௯இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களிலிருந்த பிரபுக்கள்.
20 Các sắc tộc bản xứ, là hậu tự của Sê-i-rơ, người Hô-rít gồm Lô-than, Sô-banh, Xi-bê-ôn, A-na,
௨0அந்த தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,
21 Đi-sôn, Ét-xe, và Đi-san. Đó là các con trai của Sê-i-rơ, trưởng gia tộc người Hô-rít, trong đất Ê-đôm.
௨௧திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் மகன்களுமாகிய ஓரியர்களுடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
22 Con của Lô-than là Hô-ri và Hê-man. Em gái của Lô-than là Thim-na.
௨௨லோத்தானுடைய மகன்கள் ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
23 Con của Sô-banh là Anh-van, Ma-na-hát, Ê-banh, Sê-phô, và Ô-nam.
௨௩சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்.
24 Con của Xi-bê-ôn là Ai-gia và A-na. (Cậu này đã tìm thấy các suối nước nóng giữa hoang mạc trong lúc chăn lừa cho cha mình.)
௨௪சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்திரத்திலே தன் தகப்பனாகிய சீபெயோனின் கழுதைகளை மேய்க்கும்போது, சூடான தண்ணிரைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான்.
25 Con của A-na là Đi-sôn và Ô-hô-li-ba-ma.
௨௫ஆனாகின் பிள்ளைகள் திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் மகள்.
26 Con của Đi-sôn là Hem-đan, Ếch-ban, Ích-ran, và Kê-ran.
௨௬திஷோனுடைய மகன்கள் எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
27 Con của Ét-xe là Binh-han, Xa-van, và A-can.
௨௭ஏத்சேருடைய மகன்கள் பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.
28 Con của Đi-san là U-xơ và A-ran.
௨௮திஷானுடைய மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
29 Còn đây là các trưởng tộc người Hô-rít: Lô-than, Sô-banh, Xi-bê-ôn, A-na,
௨௯ஓரியரின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள் லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு,
30 Đi-sôn, Ét-xe, Đi-san. Đó là các trưởng tộc của người Hô-rít, ở tại xứ Sê-i-rơ.
௩0திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள்.
31 Đây là tên các vua đã cai trị xứ Ê-đôm, trước thời vương quốc Ít-ra-ên được thành lập:
௩௧இஸ்ரவேல் வம்சத்தார்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களாவன:
32 Bê-la, con Bê-ô, đặt ngai vua tại thủ đô Đin-ha-ba.
௩௨பேயோருடைய மகனாகிய பேலா ஏதோமிலே ஆட்சிசெய்தான்; அவனுடைய பட்டணத்திற்குத் தின்காபா என்று பெயர்.
33 Sau khi Bê-la chết, Giô-báp, con Xê-rách, người Bốt-ra lên kế vị.
௩௩பேலா இறந்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய மகனாகிய யோபாப் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
34 Sau khi Giô-báp chết, Hu-sam, người Thê-man lên kế vị.
௩௪யோபாப் இறந்தபின், தேமானிய தேசத்தானாகிய ஊஷாம் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
35 Sau khi Hu-sam chết, Ha-đát, con Bê-đa lên kế vị. Vua này là người chỉ huy quân đội đánh bại quân Ma-đi-an tại xứ Mô-áp và dời đô về A-vít.
௩௫ஊஷாம் இறந்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியர்களை முறியடித்த பேதாதின் மகனாகிய ஆதாத் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்திற்கு ஆவீத் என்று பெயர்.
36 Sau khi Ha-đát chết, Sam-la, ở xứ Ma-rê-ca lên kế vị.
௩௬ஆதாத் இறந்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
37 Sau khi Sam-la chết, Sau-lơ, ở xứ Rê-hô-bốt, gần Sông Cái lên kế vị.
௩௭சம்லா இறந்தபின், அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
38 Sau khi Sau-lơ chết, Ba-anh Ha-nan, con Ách-bô lên kế vị.
௩௮சவுல் இறந்தபின், அக்போருடைய மகனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
39 Sau khi Ba-anh Ha-nan chết, Ha-đát lên kế vị. Tên thành người là Ba-u; hoàng hậu là Mê-hê-ta-bê-ên, con Mát-rết, cháu Mê-sa-háp.
௩௯அக்போருடைய மகனாகிய பாகால்கானான் இறந்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அவனுடைய பட்டணத்திற்குப் பாகு என்று பெயர்; அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய மகளும் மேசகாவின் மகளுமாக இருந்தாள்.
40 Đây là tên các đại tộc của Ê-sau và xứ họ ở, được gọi theo tên từng đại tộc: Thim-na, Anh-va, Giê-hết,
௪0தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும், குடியிருப்புகளின்படியேயும், பெயர்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய பெயர்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,
41 Ô-hô-li-ba-ma, Ê-la, Phi-nôn,
௪௧அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
42 Kê-na, Thê-man, Míp-xa,
௪௨கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
43 Mác-đi-ên, và Y-ram. Tất cả các đại tộc ấy đều là dòng dõi của Ê-sau, tổ phụ của người Ê-đôm.
௪௩மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.