< Ê-xơ-ra 3 >
1 Đến tháng bảy, người Ít-ra-ên vừa hồi hương từ các nơi kéo về Giê-ru-sa-lem.
௧இஸ்ரவேல் வம்சத்தார் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்து பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமானபோது, மக்கள் ஒரேமனதுடன் எருசலேமிலே கூடினார்கள்.
2 Thầy Tế lễ Giê-sua, con Giô-xa-đác, các thầy tế lễ khác, Xô-rô-ba-bên, con Sa-anh-thi-ên, và các anh em ông cùng nhau xây lại bàn thờ cho Đức Chúa Trời của Ít-ra-ên. Họ dâng lễ thiêu trên ấy, đúng theo Luật Môi-se, người của Đức Chúa Trời quy định.
௨அப்பொழுது யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும், அவன் சகோதரர்களாகிய ஆசாரியர்களும், செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், அவனுடைய சகோதரர்களும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறமுறையில் சர்வாங்கதகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.
3 Họ dựng bàn thờ đúng vào vị trí cũ, dâng lễ thiêu buổi sáng và buổi chiều cho Chúa Hằng Hữu. Tuy nhiên họ cũng lo ngại các dân tộc khác đến quấy nhiễu.
௩அவர்கள் அந்த தேசத்தின் மக்களுக்கு பயந்ததால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்களுடைய யெகோவாவுக்கு காலை மாலை சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.
4 Họ cử hành lễ Lều Tạm như sách Luật dạy, dâng đúng số lễ thiêu phải dâng mỗi ngày.
௪எழுதியிருக்கிறமுறையில் அவர்கள் கூடாரப்பண்டிகையை அனுசரித்து, நித்திய நியமத்தின்முறையிலும் அன்றாடகக் கணக்கு வரிசையில் ஒவ்வொரு நாளிலும் பலியிட்டார்கள்.
5 Sau đó, họ dâng lễ thiêu thường lệ, lễ vật ngày trăng non và các ngày lễ khác của Chúa Hằng Hữu. Lễ vật tự nguyện của toàn dân cũng được dâng lên Chúa Hằng Hữu.
௫அதற்குப்பின்பு அனுதினமும், மாதப்பிறப்புகளிலும், யெகோவாவுடைய அனைத்து பரிசுத்த பண்டிகைகளிலும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும், யெகோவாவுக்கு அவரவர் செலுத்தும் உற்சாகபலியையும் செலுத்தினார்கள்.
6 Như thế họ bắt đầu dâng lễ thiêu lên Chúa Hằng Hữu, mặc dù lúc ấy nền đền thờ chưa đặt.
௬ஏழாம் மாதம் முதல் தேதியில் யெகோவாவுக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத் துவங்கினார்கள்; ஆனாலும் யெகோவாவுடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை.
7 Họ dùng tiền mướn thợ nề, thợ mộc; dùng thức ăn, thức uống, và dầu trả cho người Si-đôn và Ty-rơ, để những người này chở gỗ bá hương từ Li-ban đến cảng Gióp-ba, như được quy định trong sắc lệnh của Si-ru, hoàng đế Ba Tư.
௭அப்பொழுது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் தங்களுக்குப் பிறப்பித்த உத்திரவின்படியே அவர்கள் கல்தச்சர்களுக்கும் தச்சருக்கும் பணத்தையும், லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் மத்திய தரைக் கடல்வழியாக யோப்பாவரை கொண்டுவரச் சீதோனியர்களுக்கும் தீரியர்களுக்கும் உணவையும் தண்ணீரையும் எண்ணெயையும் கொடுத்தார்கள்.
8 Công cuộc kiến trúc Đền Thờ của Đức Chúa Trời thực sự bắt đầu vào tháng hai, hai năm sau khi họ trở về Giê-ru-sa-lem. Mọi người đều bắt tay vào việc, từ Xô-rô-ba-bên, con Sa-anh-thi-ên, Giê-sua, con Giô-xa-đác, với các anh em thầy tế lễ, và người Lê-vi, cùng tất cả những người Ít-ra-ên đã hồi hương. Những người Lê-vi từ hai mươi tuổi trở lên được chỉ định trông coi thợ làm việc.
௮அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதத்திலே, செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும், மற்றும் அவர்களுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களும் லேவியர்களும், சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பம்செய்து, இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்களைக் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.
9 Còn Giê-sua với các con và anh em ông, Cát-mi-ên và các con, con cháu Giu-đa, con cháu Hê-na-đát và bà con ông là người Lê-vi đều cùng chịu trách nhiệm tổng quát điều hành công cuộc tái thiết đền thờ của Đức Chúa Trời.
௯அப்படியே தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்துவதற்காக யெசுவாவும் அவனுடைய மகன்களும், சகோதரர்களும், கத்மியேலும் அவனுடைய மகன்களும், யூதாவின் மகன்களும், எனாதாதின் மகன்களும், அவர்களுடைய சகோதரர்களாகிய லேவியர்களும் ஒருமனப்பட்டு நின்றார்கள்.
10 Khi đặt nền Đền Thờ của Đức Chúa Trời, các thầy tế lễ mặc lễ phục đứng thổi kèn; người Lê-vi thuộc dòng A-sáp đánh chập chõa tôn vinh Chúa Hằng Hữu theo nghi thức đã được Vua Đa-vít quy định.
௧0சிற்ப ஆசாரிகள் யெகோவாவுடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, யெகோவாவை துதிப்பதற்கு, ஆடைகளை அணிந்து, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்களையும், தாளங்களைத் தட்டுகிற ஆசாபின் மகனாகிய லேவியர்களையும் நிறுத்தினார்கள்.
11 Họ hát đối đáp để tôn vinh, cảm tạ Chúa Hằng Hữu: “Chúa là thiện mỹ! Ngài thương yêu Ít-ra-ên đến muôn đời!” Rồi toàn dân đồng thanh reo lớn lên, tôn vinh Chúa Hằng Hữu vì nền móng Đền Thờ Chúa Hằng Hữu đã đặt.
௧௧யெகோவா நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கும்போது, மாறிமாறிப் பாடினார்கள்; யெகோவாவை துதிக்கும்போது, மக்கள் எல்லோரும் யெகோவாவுடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுவதினால் மகா கெம்பீரமாக ஆர்ப்பரித்தார்கள்.
12 Nhưng có nhiều thầy tế lễ, người Lê-vi, trưởng tộc, và những bậc lão thành đã từng thấy Đền Thờ trước kia trên nền cũ, đó mới chính thật là Đền Thờ theo mắt họ, khóc lớn tiếng, trong khi nhiều người khác reo lớn tiếng vui mừng.
௧௨முந்தின ஆலயத்தைப் பார்த்திருந்த முதிர்வயதான ஆசாரியர்களிலும், லேவியர்களிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவர்களிலும் அநேகர் இந்த ஆலயத்திற்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாக ஆர்ப்பரித்தார்கள்.
13 Cho nên người ta không thể phân biệt tiếng reo vui với tiếng khóc, vì dân chúng kêu lớn tiếng, từ xa vẫn nghe được.
௧௩மக்கள் மகா கெம்பீரமாக ஆர்ப்பரிக்கிறதினால் அவர்களுடைய சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், மக்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறிய முடியாதிருந்தது.