< Xuất Hành 26 >

1 “Hãy dùng mười tấm màn vải gai mịn làm Đền Tạm. Trên màn có thêu hình thiên thần bằng chỉ xanh, tím, và đỏ một cách tinh vi khéo léo.
“மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும், இளநீலநூலினாலும், இரத்தாம்பரநூலினாலும், சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் ஆசரிப்பு கூடாரத்தை உண்டாக்கு; அவைகளில் விசித்திர பின்னல்வேலையாகக் கேருபீன்களைச் செய்.
2 Mỗi tấm màn dài 12,9 mét, rộng 1,8 mét.
ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும், நான்கு முழ அகலமுமாக இருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாக இருக்கவேண்டும்.
3 Nối năm tấm màn lại với nhau thành một tấm lớn. Vậy, trại gồm hai tấm lớn, mỗi tấm một bên.
ஐந்து மூடுதிரைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
4 Kết vòng chỉ xanh dọc theo đường biên của hai tấm lớn,
இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைசி ஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டாக்கு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரைகளின் ஓரத்திலும் அப்படியே செய்.
5 mỗi bên năm mươi vòng, đối diện nhau.
காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கு.
6 Làm năm mươi cái móc bằng vàng để cài vào các vòng. Như vậy, hai tấm lớn được kết lại thành một cái trại làm Đền Tạm.
ஐம்பது பொன் கொக்கிகளை செய்து, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைக்கப்படவேண்டும். அப்பொழுது ஆசரிப்பு கூடாரம் ஒன்றாகும்.
7 Dệt mười một bức màn bằng lông dê để phủ lên trên nóc Đền Tạm.
“ஆசரிப்பு கூடாரத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டு ரோமத்தால் பதினொரு மூடுதிரைகளை உண்டாக்கு.
8 Mỗi tấm dài 13,8 mét, rộng 1,8 mét.
ஒவ்வொரு மூடுதிரைகளும் முப்பது முழ நீளமும், நான்கு முழ அகலமாக இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாக இருக்கவேண்டும்.
9 Nối năm tấm màn lông dê lại với nhau, còn lại sáu tấm cũng nối lại. Riêng tấm thứ sáu được gập đôi lại, phân nửa cho phủ xuống trước Đền.
ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடவேண்டும்.
10 Kết năm mươi vòng dọc theo đường biên của hai tấm lông dê lớn.
௧0இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைசி ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
11 Nối hai tấm này lại với nhau bằng năm mươi móc đồng.
௧௧ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்துவிடவேண்டும்.
12 Nửa tấm màn lông dê còn dư lại sẽ cho phủ xuống phía sau Đền Tạm.
௧௨கூடாரத்தின் மூடுதிரைகளில் மீதமான பாதிமூடுதிரை ஆசரிப்பு கூடாரத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.
13 Chiều dài dư ra của các tấm màn lông dê sẽ phủ xuống hai bên hông đền, mỗi bên 0,46 mét.
௧௩கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்தில் மீதியானதில், இந்தப்பக்கத்தில் ஒரு முழமும் அந்தப்பக்கத்தில் ஒரு முழமும் ஆசரிப்பு கூடாரத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.
14 Phủ lên trên nóc trại một lớp da chiên nhuộm đỏ. Bên trên lớp này lại có một lớp da dê.
௧௪சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத் தோலால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் மெல்லிய தோலால் ஒரு மூடியையும் உண்டாக்கவேண்டும்.
15 Vách Đền Tạm làm bằng ván cây keo.
௧௫“ஆசரிப்பு கூடாரத்திற்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கவேண்டும்.
16 Mỗi tấm ván dài 4,6 mét, rộng 0,69 mét, dựng thẳng đứng.
௧௬ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக இருக்கவேண்டும்.
17 Mỗi tấm sẽ có hai cái mộng để ghép vào các lỗ mộng.
௧௭ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் இரண்டு பொருந்தும் முனை இருக்கவேண்டும்; ஆசரிப்புக் கூடாரங்களில் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்யவேண்டும்.
18 Dùng hai mươi tấm ván làm vách phía nam Đền Tạm.
௧௮ஆசரிப்புக் கூடாரத்திற்காக செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகைகள் தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கட்டும்.
19 Dưới mỗi tấm ván, làm hai lỗ mộng bằng bạc. Vậy, phía nam có bốn mươi lỗ mộng.
௧௯அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டாக்கவேண்டும்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
20 Vách phía bắc cũng gồm hai mươi tấm ván.
௨0ஆசரிப்பு கூடாரத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,
21 Dưới mỗi tấm có hai lỗ mộng bạc, cộng bốn mươi lỗ mộng.
௨௧அவைகளின் கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டாக்கவேண்டும்; ஒரு பலகையின் கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
22 Vách phía tây cũng gồm sáu tấm ván.
௨௨ஆசரிப்பு கூடாரத்தின் மேற்குப்பக்கத்திற்கு ஆறு பலகைகளையும்,
23 Tại góc của vách phía sau này, dựng thêm hai tấm ván nữa.
௨௩ஆசரிப்பு கூடாரத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டாக்கவேண்டும்.
24 Hai tấm này sẽ được ghép vào nhau bằng móc cài ở dưới và ở trên.
௨௪அவைகள் கீழே சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்கு ஆகும்.
25 Vậy, vách phía sau có tất cả tám tấm ván và mười sáu lỗ mộng bạc, mỗi tấm hai lỗ.
௨௫அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.
26 Làm thanh ngang cho vách Đền Tạm cũng bằng gỗ keo,
௨௬“சீத்திம் மரத்தால் ஆசரிப்பு கூடாரத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
27 mỗi phía có năm thanh ngang; phía sau, về hướng tây cũng có năm thanh ngang.
௨௭ஆசரிப்பு கூடாரத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், ஆசரிப்பு கூடாரத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் செய்.
28 Thanh chính giữa nằm ngay giữa vách, chạy dài từ đầu này đến đầu kia của Đền Tạm.
௨௮நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைவரை பலகைகளின் மையத்தில் ஊடுருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
29 Bọc vàng các tấm ván vách và các thanh ngang. Làm các vòng vàng để xỏ thanh ngang.
௨௯பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் செய்து, தாழ்ப்பாள்களைப் பொன் தகட்டால் மூடவேண்டும்.
30 Vậy, con hãy theo kiểu mẫu Ta cho xem trên núi này mà dựng Đền Tạm.
௩0இப்படியாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி ஆசரிப்பு கூடாரத்தை அமைக்கவேண்டும்.
31 May một bức màn bằng vải gai mịn. Dùng chỉ xanh, tím, và đỏ thêu hình chê-ru-bim trên màn một cách tinh vi khéo léo.
௩௧“இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு மூடுதிரையைச் செய்யவேண்டும்; அதிலே வேலைப்பாடு செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.
32 Treo màn này trong đền. Trên bốn trụ gỗ keo bọc vàng có bốn móc vàng. Trụ được dựng trên bốn lỗ trụ bằng bạc.
௩௨சீத்திம் மரத்தால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நான்கு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நான்கு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.
33 Màn được móc vào các móc vàng. Phía trong màn là nơi đặt Hòm Giao Ước. Màn sẽ phân chia Nơi Thánh và Nơi Chí Thánh.
௩௩கொக்கிகளின்கீழே அந்த மூடுதிரையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே மூடுதிரைக்குள்ளாக வைக்கவேண்டும்; அந்த மூடுதிரை பரிசுத்த இடத்திற்கும் மகா பரிசுத்த இடத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.
34 Hòm Giao Ước có nắp chuộc tội đậy bên trên được đặt ở Nơi Chí Thánh.
௩௪மகா பரிசுத்த இடத்திலே சாட்சிப்பெட்டியின்மேல் கிருபாசனத்தை வைப்பாயாக;
35 Bên ngoài màn, đặt cái bàn và chân đèn đối diện nhau, bàn về phía bắc, chân đèn về phía nam.
௩௫மூடுதிரைக்கு வெளியே மேஜையையும், மேஜைக்கு எதிரே ஆசரிப்பு கூடாரத்தின் தென்பக்கமாகக் குத்துவிளக்கை வைத்து, மேஜையை வடபக்கமாக வைப்பாயாக.
36 Bức màn cửa đền may bằng vải gai mịn, dùng chỉ xanh, tím, và đỏ thêu tinh vi khéo léo.
௩௬இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்கு திரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,
37 Màn được treo bằng năm móc vàng trên năm trụ cây keo bọc vàng, trụ được dựng trên lỗ trụ bằng đồng.”
௩௭அந்தத் தொங்கு திரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப்பாதங்களை வார்க்கவேண்டும்.

< Xuất Hành 26 >