< Phục Truyền Luật Lệ 21 >
1 “Khi sống trong đất nơi Chúa Hằng Hữu, Đức Chúa Trời của anh em ban cho anh em, nếu anh em thấy xác một người bị giết nằm ngoài đồng, nhưng không biết ai là thủ phạm,
௧“உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில், கொலை செய்யப்பட்டுக்கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் யார் என்று தெரியாதிருந்தால்,
2 thì các trưởng lão và phán quan sẽ đo đạc để tìm một thành gần tử thi nhất.
௨உன் மூப்பர்களும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலை செய்யப் பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள்வரை அளப்பார்களாக.
3 Các trưởng lão của thành này sẽ bắt một con bò cái tơ chưa hề làm việc, chưa mang ách,
௩கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர்கள், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஒரு கிடாரியைப் பிடித்து,
4 dẫn nó xuống một thung lũng không ai cày cấy, tại nơi có dòng nước chảy, vặn cổ con bò.
௪உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடவேண்டும்.
5 Sau đó, các thầy tế lễ sẽ đến, vì Chúa đã chọn con cháu Lê-vi để họ phục vụ Ngài, nhân danh Ngài chúc phước lành cho dân, và xét xử dân trong các vụ tranh tụng, nhất là các vụ gây thương tích, thiệt mạng.
௫உன் தேவனாகிய யெகோவா தமக்கு ஆராதனை செய்யவும் யெகோவாவுடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் மகன்களாகிய ஆசாரியர்களைத் தெரிந்துகொண்டதால், அவர்களும் அச்சமயத்தில் வந்திருக்கவேண்டும்; அவர்கள் வாக்கின்படியே எல்லா வழக்கும் எல்லாக் காய பாதிப்புகளும் தீர்மானிக்கப்படவேண்டும்.
6 Các trưởng lão trong thành gần tử thi này sẽ rửa tay mình trên xác con bò cái tơ
௬கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் மூப்பர்கள் எல்லோரும் பள்ளத்தாக்கிலே தலை வெட்டப்பட்ட கிடாரியின்மேல் தங்கள் கைகளைக் கழுவி:
7 và nói: ‘Tay chúng con không làm đổ máu người ấy, mắt chúng con không thấy án mạng này.
௭எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தினதும் இல்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதும் இல்லை;
8 Xin Chúa Hằng Hữu tha tội cho Ít-ra-ên, dân Ngài đã chuộc. Xin đừng buộc Ít-ra-ên tội giết người lành. Xin miễn xá tội này cho họ.’
௮யெகோவாவே, நீர் மீட்டுக்கொண்ட உமது மக்களாகிய இஸ்ரவேலின்மேல் குற்றமில்லாத இரத்தப்பழியைச் சுமத்தாமல், உமது மக்களாகிய இஸ்ரவேலின்மேல் கிருபையுள்ளவராயிரும் என்று சொல்வார்களாக; அப்பொழுது இரத்தப்பழி அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
9 Nếu làm đúng theo ý Chúa Hằng Hữu như thế, tội này sẽ được giải trừ.”
௯இப்படிக் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.
10 “Khi tranh chiến với quân thù, được Chúa Hằng Hữu, Đức Chúa Trời của anh em, cho chiến thắng, và anh em bắt giữ nhiều tù binh,
௧0“நீ உன் எதிரிகளுக்கு எதிராக போர்செய்யப் புறப்பட்டு, உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,
11 nếu có ai thấy trong số người bị bắt giữ có một thiếu nữ xinh đẹp, muốn lấy làm vợ,
௧௧சிறைகளில் அழகான ஒரு பெண்ணைக்கண்டு, அவளை திருமணம்செய்ய விரும்பி,
12 thì người ấy được phép đem thiếu nữ về nhà. Thiếu nữ phải cạo đầu, cắt móng tay,
௧௨அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களை வெட்டி,
13 thay áo tù. Khóc cha mẹ mình một tháng tròn. Sau đó, người ấy được lấy thiếu nữ làm vợ.
௧௩தன் சிறையிருப்பின் ஆடையையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதம்வரை தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கம்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளுடன் சேர்ந்து, அவளுக்குக் கணவனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.
14 Tuy nhiên, sau khi cưới, nếu người này không yêu nàng nữa, thì phải để nàng ra đi tự do. Cấm không được bán hay đãi nàng như nô lệ, vì người ấy đã làm nhục nàng.”
௧௪அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் விருப்பப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினதினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.
15 “Nếu một người có hai vợ, nhưng chỉ yêu một, dù cả hai đều sinh con. Người vợ không được yêu lại sinh con trưởng nam.
௧௫“இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பமாகவும் மற்றவள்மேல் வெறுப்பாகவும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் மகனானாலும்,
16 Khi chia gia tài, người ấy không có quyền đặt con của vợ mình yêu lên trên con của vợ mình không yêu.
௧௬தகப்பன் தனக்கு உண்டான சொத்தைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு மூத்தமகனின் உரிமையைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கக்கூடாது.
17 Nhưng phải tôn trọng quyền trưởng nam của con người vợ không được yêu mến. Phải cho người con trưởng nam này gấp đôi phần của những con khác như thường lệ, vì trưởng nam là kết quả đầu tiên của sức mạnh người làm cha.”
௧௭வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை மூத்தமகனாக அங்கீகரித்து, தனக்கு உண்டான சொத்துக்களிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பெலன், மூத்தமகனின் உரிமை அவனுக்கே உரியது.
18 “Nếu ai có một người con cứng đầu, ngỗ nghịch, không vâng lời cha mẹ, không nghe lời răn dạy;
௧௮“தன் தகப்பனுடைய சொல்லையும், தாயினுடைய சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும், அடங்காமலும் போகிற மகன் ஒருவனுக்கு இருந்தால்,
19 thì cha mẹ nó phải dẫn nó đến trước các trưởng lão họp tại cổng thành,
௧௯அவனுடைய தகப்பனும் தாயும் அவனைப் பிடித்து, அப்பட்டணத்தின் மூப்பர்களிடத்திற்கும், அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்:
20 trình rằng: ‘Chúng tôi có đứa con cứng đầu ngỗ nghịch, không nghe lời răn dạy, chỉ ăn uống say sưa.’
௨0எங்கள் மகனாகிய இவன் அடங்காதவனாக இருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளாமலும்; பெருந்தீனிக்காரனும் குடிகாரனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பர்களோடு சொல்லுவார்களாக.
21 Dân thành sẽ ném đá nó cho đến chết. Như thế anh em mới trừ được người ác trong dân, toàn dân Ít-ra-ên nghe tin này sẽ khiếp sợ.”
௨௧அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிவார்களாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைக் கேட்டு பயப்படுவார்கள்.
22 “Khi một người phạm trọng tội, bị xử tử và bị treo trên cây,
௨௨“கொலைசெய்யப்பட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால்,
23 không được để xác người ấy trên cây suốt đêm, phải đem chôn ngay hôm ấy, vì Đức Chúa Trời rủa sả người bị treo. Đừng làm ô uế đất mà Chúa Hằng Hữu, Đức Chúa Trời của anh em đã ban cho anh em.”
௨௩இரவிலே அவன் உடலை மரத்திலே தொங்கவிடக்கூடாது; அந்த நாளிலேயே அதை அடக்கம் செய்யவேண்டும்; தூக்கில் போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தைக் கறைப்படுத்தாதே.