< II Các Vua 17 >

1 Vào năm thứ mười hai đời A-cha, vua Giu-đa, Ô-sê, con Ê-la lên làm vua Ít-ra-ên, cai trị chín năm tại Sa-ma-ri.
யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருட ஆட்சியில், ஏலாவின் மகனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருடங்கள் அரசாட்சிசெய்து,
2 Ô-sê làm điều ác trước mặt Chúa Hằng Hữu nhưng không đến nỗi như các vua Ít-ra-ên trước.
யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களைப்போல் செய்யவில்லை.
3 Sanh-ma-na-sa, vua A-sy-ri đem quân đánh Ít-ra-ên. Ô-sê thua, phải thần phục và nạp cống lễ cho A-sy-ri.
அவனுக்கு விரோதமாக அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் வந்தான்; அப்பொழுது ஓசெயா அவனுக்குக் கீழிருந்து, அவனுக்கு வரி செலுத்தினான்.
4 Nhưng Ô-sê mưu phản, sai sứ giả đi Ai Cập nhờ vua Sô giúp đỡ. Hành động này không qua khỏi mắt vua A-sy-ri. Ngoài ra, Ô-sê bắt đầu ngưng nạp cống thuế hằng năm cho A-sy-ri, nên vua A-sy-ri bắt Ô-sê xiềng lại, đem bỏ tù.
ஓசெயா எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பினதும், தனக்கு வருடந்தோறும் செய்ததுபோல், வரி செலுத்தாமல் போனதுமான கலக யோசனையை அசீரியாவின் ராஜா ஓசெயாவினிடத்திலே கண்டு, அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைச்சாலையிலே வைத்தான்.
5 Quân A-sy-ri đánh phá khắp nơi và vây Sa-ma-ri suốt ba năm.
அசீரியா ராஜா தேசம் எங்கும் போய், சமாரியாவுக்கும் வந்து அதை மூன்றுவருடங்கள் முற்றுகையிட்டிருந்தான்.
6 Vào năm thứ chín đời Ô-sê, Sa-ma-ri thất thủ. Người Ít-ra-ên bị bắt đày qua A-sy-ri, bị tập trung tại Cha-la, và trên bờ Sông Cha-bo ở Gô-xan, và các thành trong nước Mê-đi.
ஓசெயாவின் ஒன்பதாம் வருட ஆட்சியில் அசீரியா ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோய் அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும், ஆபோரிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.
7 Những việc này xảy ra vì người Ít-ra-ên phạm tội với Chúa Hằng Hữu, Đức Chúa Trời của họ, Đấng đã đem họ ra khỏi Ai Cập, đã cứu họ khỏi quyền lực của Pha-ra-ôn. Họ đi thờ các thần khác,
எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த தங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக இஸ்ரவேல் மக்கள் பாவம்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து,
8 theo thói tục xấu xa của các thổ dân bị Chúa Hằng Hữu đuổi đi để lấy đất cho họ ở, và theo quy lệ sai lầm của các vua Ít-ra-ên mới lập ra.
யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களின் வழிபாடுகளிலும் இஸ்ரவேல் ராஜாக்களின் வழிபாடுகளிலும் நடந்துகொண்டிருந்தார்கள்.
9 Dân chúng lén lút làm những việc bất chính và việc không đẹp lòng Chúa Hằng Hữu Đức Chúa Trời của họ; xây miếu thờ tà thần trên các chỗ cao khắp nơi, ngay cả trên vọng canh, thành lũy;
செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் மக்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக இரகசியத்தில் செய்ததுமன்றி, காவல்காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான பட்டணங்கள்வரையுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையும் கட்டி,
10 dựng trụ thờ, tượng nữ thần A-sê-ra trên đồi núi, dưới cây xanh;
௧0உயரமான சகல மேட்டின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் தங்களுக்குச் சிலைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் நிறுத்தி,
11 đốt hương trong các miếu trên đồi giống như các dân đã bị Chúa Hằng Hữu đuổi đi. Các hành động gian ác này đã làm Chúa nổi giận.
௧௧யெகோவா தங்களை விட்டுக் குடிவிலக்கின மக்களைப்போல, சகல மேடைகளிலும் தூபம்காட்டி, யெகோவாவுக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து,
12 Họ thờ thần tượng, mặc dù Chúa Hằng Hữu đã ngăn cấm.
௧௨இப்படிச் செய்யத்தகாது என்று யெகோவா தங்களுக்குச் சொல்லியிருந்தும், அருவருப்பான விக்கிரகங்களை வழிபட்டு வந்தார்கள்.
13 Chúa Hằng Hữu sai các tiên tri cảnh cáo Ít-ra-ên và Giu-đa để họ bỏ đường tội ác, tuân giữ điều răn, luật lệ Ngài đã dùng các tiên tri truyền cho tổ tiên họ thuở xưa.
௧௩நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பி, நான் உங்கள் முன்னோர்களுக்குக் கட்டளையிட்டதும், என் ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பினதுமான நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள் என்று யெகோவா தீர்க்கதரிசிகள், தரிசனம் காண்கிறவர்கள் எல்லோரையும்கொண்டு இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் மிக உறுதியாக எச்சரித்துக்கொண்டிருந்தும்,
14 Nhưng họ nào có nghe, lại cứ ngoan cố chẳng kém gì tổ tiên, không tin Chúa Hằng Hữu, Đức Chúa Trời mình.
௧௪அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய யெகோவாமேல் விசுவாசிக்காமலிருந்த கடினக் கழுத்துள்ள தங்கள் முன்னோர்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி,
15 Họ coi thường luật lệ và giao ước Ngài đã kết với tổ tiên họ, và những lời cảnh cáo của Ngài. Họ theo các thần nhảm nhí, và chính họ trở nên người xằng bậy. Mặc dù Chúa cấm đoán, họ vẫn bắt chước những dân tộc sống chung quanh.
௧௫அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் முன்னோர்களோடுசெய்த அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்கு மிக உறுதியாகக் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்துவிட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த மக்களுக்குப் பின்சென்று,
16 Họ khước từ tất cả các điều răn của Chúa Hằng Hữu, Đức Chúa Trời mình, đúc hai tượng bò con, tượng A-sê-ra, thờ lạy Ba-anh, và các tinh tú trên trời.
௧௬தங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலை வணங்கினார்கள்.
17 Họ đem con trai, con gái thiêu sống để tế thần. Họ tin bói toán, phù thủy, và chuyên làm điều ác trước mặt Chúa Hằng Hữu, khiến Ngài giận vô cùng.
௧௭அவர்கள் தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் அக்கினியில் சுட்டெரித்துப்போட்டு, குறிகேட்டு சகுனங்கள் பார்த்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள்.
18 Ngài đuổi họ đi nơi khác, chỉ để cho đại tộc Giu-đa ở lại.
௧௮ஆகையால் யெகோவா இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதா வம்சம் மாத்திரமே மீதியானது.
19 Giu-đa cũng chẳng tuân giữ các điều răn của Chúa Hằng Hữu, Đức Chúa Trời mình, nhưng theo gương Ít-ra-ên.
௧௯யூதா மக்களும் தங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள்.
20 Vì thế, Chúa Hằng Hữu từ bỏ tất cả con cháu Gia-cốp, trừng phạt họ, và để cho kẻ thù bóc lột họ. Cuối cùng Ngài đuổi họ đi nơi khác.
௨0ஆகையால் யெகோவா இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளும்வரை ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
21 Khi Ít-ra-ên tách ra khỏi chủ quyền nhà Đa-vít, họ tôn Giê-rô-bô-am, con Nê-bát, làm vua. Giê-rô-bô-am khiến Ít-ra-ên bỏ Chúa Hằng Hữu, phạm tội nặng nề.
௨௧இஸ்ரவேலர்கள் தாவீது வம்சத்தைவிட்டுப் பிரிந்து, நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் யெகோவாவைவிட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும் செய்தான்.
22 Người Ít-ra-ên phạm tất cả tội Giê-rô-bô-am phạm. Họ không từ một tội nào,
௨௨அப்படியே இஸ்ரவேல் மக்கள் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து,
23 cho đến khi Chúa Hằng Hữu đuổi họ đi, như Ngài đã bảo đầy tớ Ngài là các tiên tri cảnh cáo họ trước. Như vậy, người Ít-ra-ên bị đày qua A-sy-ri, và họ ở đó cho đến ngày nay.
௨௩யெகோவா தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்கள் எல்லோரையும் கொண்டு சொல்லியிருந்தபடி. அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிறவரைக்கும், அவைகளைவிட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்திலிருந்து அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.
24 Vua A-sy-ri đem dân ở Ba-by-lôn, Cư-tha, A-va, Ha-mát, và Sê-phạt-va-im đến định cư ở trong các thành của Sa-ma-ri và các thành khác của Ít-ra-ên.
௨௪அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்வாயிமிலும் இருந்து மனிதர்களை வரச்செய்து, அவர்களை இஸ்ரவேல் மக்களுக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாகக் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள்.
25 Khi mới đến đất Ít-ra-ên, những người này không kính sợ Chúa Hằng Hữu, nên Ngài cho sư tử đến giết một số.
௨௫அவர்கள் அங்கே குடியேறினது முதல், யெகோவாவுக்குப் பயப்படாததால், யெகோவா அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டது.
26 Khi vua A-sy-ri nhận được phúc trình: “Những người được đem qua Sa-ma-ri không biết luật của Thần địa phương, nên Thần ấy sai sư tử vồ họ chết.”
௨௬அப்பொழுது மக்கள் அசீரியா ராஜாவை நோக்கி: நீர் இங்கேயிருந்து அனுப்பி, சமாரியாவின் பட்டணங்களிலே குடியேறச்செய்த மக்கள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாததால், அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாததால், அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகிறது என்று சொன்னார்கள்.
27 Vua ra lệnh đem một thầy tế lễ Ít-ra-ên đã bị đày trở về Sa-ma-ri, để dạy những người định cư luật lệ của Thần địa phương.
௨௭அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படி, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான்.
28 Vậy, một thầy tế lễ từ Sa-ma-ri được đưa về Bê-tên, dạy những người mới đến cách phụng thờ Chúa Hằng Hữu.
௨௮அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, யெகோவாவுக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான்.
29 Tuy nhiên, những người này vẫn thờ thần của nước họ. Họ để tượng thần trong miếu trên đồi gần thành mình ở. Các miếu này đã được người Ít-ra-ên xây cất trước kia.
௨௯ஆனாலும் அந்தந்த மக்கள் தங்கள் தங்கள் தேவர்களைத் தங்களுக்கு உண்டாக்கி, அந்தந்த மக்கள் குடியேறின தங்கள் தங்கள் பட்டணங்களில் சமாரியர்கள் உண்டாக்கிய மேடைகளின் கோவில்களில் வைத்தார்கள்.
30 Người Ba-by-lôn thờ thần Su-cốt Bê-nốt; người Cúc thờ Nẹt-ganh; người Ha-mát thờ A-si-ma;
௩0பாபிலோனின் மனிதர்கள் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனிதர்கள் நேர்காலையும், ஆமாத்தின் மனிதர்கள் அசிமாவையும்,
31 người A-va thờ Nếp-hát và Tạt-tác; người Sê-phạt-va-im thiêu con tế thần A-tra-mê-léc và A-na-mê-léc.
௩௧ஆவியர்கள் நிபேகாசையும் தர்தாக்கையும் உண்டாக்கினார்கள், செப்பர்வியர்கள் செப்பர்வாயிமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில் சுட்டெரித்து வந்தார்கள்.
32 Tuy kính sợ Chúa Hằng Hữu, họ vẫn chỉ định người của mình làm chức tế lễ tại các miếu trên đồi để dâng lễ vật cho thần mình.
௩௨அவர்கள் யெகோவாவுக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் இழிவானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள்.
33 Như thế, họ vừa kính sợ Chúa, vừa thờ thần mình theo nghi thức cúng thờ của dân tộc mình.
௩௩அப்படியே யெகோவாவுக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த மக்களுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களை வணங்கியும் வந்தார்கள்.
34 Cho đến nay họ vẫn theo nghi thức cũ chứ không thật sự thờ phụng Chúa Hằng Hữu vì họ không theo đúng chỉ thị, luật lệ, điều răn của Chúa truyền cho con cháu Gia-cốp, người được Ngài đổi tên là Ít-ra-ên.
௩௪இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முந்தின முறைகளின்படியே செய்து வருகிறார்கள்; அவர்கள் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறதுமில்லை, தங்கள் சுய திட்டங்கள் முறைமைகளின்படியாகிலும், யெகோவா இஸ்ரவேல் என்று பெயரிட்ட யாக்கோபின் மக்களுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் ஒத்தவிதமாகிலும் செய்கிறதுமில்லை.
35 Chúa Hằng Hữu đã kết ước với Ít-ra-ên, theo đó họ không được thờ phụng, phục vụ, cúng tế các thần khác,
௩௫யெகோவா இவர்களோடு உடன்படிக்கைசெய்து, இவர்களுக்குக் கற்பித்தது என்னவென்றால்: நீங்கள் அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், அவர்களைப் பணிந்துகொள்ளாமலும், வணங்காமலும், அவர்களுக்குப் பலியிடாமலும்,
36 Nhưng chỉ phụng sự thờ lạy và dâng lễ vật lên Chúa Hằng Hữu, Đấng đã đem họ ra khỏi Ai Cập với quyền năng và phép lạ.
௩௬உங்களை மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த யெகோவாவுக்கே பயந்து, அவரையே பணிந்துகொண்டு, அவருக்கே பலியிட்டு,
37 Họ phải tuân giữ điều răn, luật lệ, và quy tắc của chính Ngài truyền cho. Họ không được thờ thần khác.
௩௭அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்கள், முறைமைகள், நியாயப்பிரமாணம், கற்பனைகள் ஆகியவற்றை நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
38 Chúa Hằng Hữu đã cảnh cáo họ không được quên lãng giao ước này, không được thờ thần nào khác.
௩௮நான் உங்களோடே செய்த உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும்,
39 Họ chỉ thờ một mình Chúa Hằng Hữu là Chân Thần mình. Chỉ như thế, họ mới được Chúa cứu khỏi quyền lực kẻ thù.
௩௯உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது அவர் உங்களுடைய எல்லா எதிரிகளின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தார்.
40 Nhưng những người ấy không nghe, cứ thờ lạy theo lối cũ.
௪0ஆனாலும் அவர்கள் அவைகளைக் கேட்காமல் தங்கள் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள்.
41 Họ kính sợ Chúa Hằng Hữu, đồng thời cũng thờ thần tượng mình. Và cứ thế, đến nay con cháu họ vẫn theo đường lối ấy.
௪௧அப்படியே அந்த மக்கள் யெகோவாவுக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்; அவர்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் தங்கள் முன்னோர்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்து வருகிறார்கள்.

< II Các Vua 17 >