< II Các Vua 11 >
1 Khi A-tha-li, mẹ Vua A-cha-xia, thấy con mình đã chết, vội ra tay giết hết các hoàng tử.
௧அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் மகன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சத்தார்கள் அனைவரையும் கொலைசெய்தாள்.
2 Nhưng chị của A-cha-xia là Giô-sê-ba, con gái vua Giô-ram, đem giấu Giô-ách, con A-cha-xia, và cứu cậu thoát khỏi số phận dành cho các hoàng tử. Nàng giấu Giô-ách và người vú nuôi vào trong phòng ngủ. Bằng cách này, Giô-sê-bết, vợ Thầy Tế lễ Giê-hô-gia-đa và là chị của A-cha-xia giấu được Giô-ách, nên đứa trẻ không bị giết.
௨ராஜாவாகிய யோராமின் மகளும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலைசெய்யப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசை யாருக்கும் தெரியாமல் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் வளர்ப்புத் தாயையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் படுக்கையறையில் ஒளித்துவைத்தார்கள்.
3 Giô-ách trốn trong đền thờ Chúa sáu năm trong khi A-tha-li cai trị Giu-đa.
௩இவளோடேகூட அவன் ஆறுவருடங்கள் யெகோவாவுடைய ஆலயத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் அரசாட்சிசெய்தாள்.
4 Qua năm thứ bảy, Thầy Tế lễ Giê-hô-gia-đa mời các tướng chỉ huy, quân đội Ca-rít và các cận vệ vào gặp mình trong Đền Thờ Chúa Hằng Hữu, bắt họ thề giữ bí mật, rồi cho họ gặp con của vua.
௪ஏழாம் வருடத்திலே யோய்தா நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவர்களையும் காவலாளர்களையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் யெகோவாவுடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைசெய்து, அவர்களைக் யெகோவாவுடைய ஆலயத்திலே உடன்படிக்கை செய்துகொண்டு, அவர்களுக்கு ராஜாவின் மகனைக் காண்பித்து,
5 Giê-hô-gia-đa truyền chỉ thị cho các quan: “Một phần ba của lính cận vệ không có phận sự trong ngày Sa-bát sẽ đi gác cung vua,
௫அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒரு பங்கு ராஜாவின் அரண்மனையைக் காவல் காக்கவேண்டும்.
6 một phần ba sẽ canh cổng Su-rơ, và một phần ba sẽ giữ cổng ở phía sau trụ sở cận vệ. Như vậy cung vua sẽ được canh gác cẩn mật.
௬மூன்றில் ஒரு பங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒரு பங்கு காவலாளர்களின் காவலின் பின்னே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாகக் காக்கவேண்டும்.
7 Còn hai đội cận vệ có nhiệm vụ túc trực trong ngày Sa-bát sẽ canh gác Đền Thờ Chúa Hằng Hữu, vây chung quanh vua,
௭இப்படியே ஓய்வு நாளில் முறைப்படியே உங்களில் இரண்டு பங்குபேர், ராஜாவினிடத்தில் யெகோவாவுடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும்.
8 vũ khí cầm tay, sẵn sàng giết chết những ai muốn xông vào. Họ phải theo sát vua.”
௮நீங்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்தவர்களாக, ராஜாவைச் சுற்றிலும் வரிசையாக நிற்கவேண்டும்; வரிசைகளுக்குள் புகுந்துவருகிறவன் கொலை செய்யப்படவேண்டும்; ராஜா வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.
9 Các tướng chỉ huy làm theo chỉ thị của Thầy Tế lễ Giê-hô-gia-đa. Họ dẫn lính đến trước thầy tế lễ, cả lính không có phận sự trong ngày Sa-bát, cũng như lính trực trong ngày ấy.
௯ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் போகிறவர்களுமாகிய தங்கள் மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள்.
10 Thầy tế lễ lấy vũ khí trong kho Đền Thờ Chúa Hằng Hữu phát cho họ, gồm những giáo và khiên từ đời Vua Đa-vít.
௧0ஆசாரியன் யெகோவாவின் ஆலயத்தில் தாவீதுராஜா வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான்.
11 Các cận vệ cầm vũ khí đứng dài từ góc phải sang góc trái Đền Thờ, và chung quanh bàn thờ.
௧௧காவலாளர்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைப் பிடித்தவர்களாக, ஆலயத்தின் வலப்பக்கம் தொடங்கி அதன் இடப்பக்கம்வரை, பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள்.
12 Giê-hô-gia-đa rước Giô-ách, con vua ra, đội vương miện lên đầu, và trao bộ luật của Đức Chúa Trời cho người. Họ xức dầu cho người và tuyên bố người là vua, mọi người vỗ tay và cùng tung hô: “Vua vạn tuế!”
௧௨அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம் செய்து: ராஜா வாழ்க என்று சொல்லி கரங்களைத் தட்டினார்கள்.
13 Nghe tiếng huyên náo của quân lính, A-tha-li chạy vào Đền Thờ Chúa Hằng Hữu xem việc gì đang xảy ra.
௧௩ஓடிவருகிற மக்களின் ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது: அவள் யெகோவாவுடைய ஆலயத்திலுள்ள மக்களிடம் வந்து,
14 Khi bà đến, thấy vua đứng bên cột trụ theo nghi thức đăng quang. Các tướng và những người thổi kèn đứng quanh đó, mọi người hân hoan, trổi nhạc. A-tha-li xé áo, la lên: “Phản loạn! Phản loạn!”
௧௪இதோ, முறைமையின்படியே ராஜா தூண் அருகில் நிற்கிறதையும், ராஜாவின் அருகில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று சத்தமிட்டாள்.
15 Thầy Tế lễ Giê-hô-gia-đa ra lệnh cho các tướng chỉ huy quân đội: “Hãy giải bà ấy đến những người lính phía ngoài Đền Thờ, và giết ai muốn cứu bà ấy.” Vì thầy tế lễ có nói: “Không thể giết bà ấy trong Đền Thờ của Chúa Hằng Hữu.”
௧௫ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவர்களாகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்கு வெளியே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். யெகோவாவுடைய ஆலயத்தில் அவளைக் கொல்லக்கூடாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.
16 Người ta lôi bà trở về cung vua theo lối đi của ngựa và giết bà tại đó.
௧௬அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரண்மனைக்குள் குதிரைகள் நுழைகிற வழியிலே அவள் போகும்போது, அவளைக் கொன்றுபோட்டார்கள்.
17 Giê-hô-gia-đa lập giao ước giữa Chúa Hằng Hữu, vua và toàn dân, quy định họ là dân của Chúa Hằng Hữu. Ông cũng lập quy ước cho vua với dân.
௧௭அப்பொழுது யோய்தா, அவர்கள் யெகோவாவுடைய மக்களாயிருக்கும்படிக்கு, ராஜாவும் மக்களும் கர்த்தரோடே உடன்படிக்கைசெய்யவும், ராஜாவும் மக்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைசெய்யவும் செய்து,
18 Sau đó, mọi người kéo đến đền Ba-anh, phá đổ đền, đập nát tượng và bàn thờ, giết tế sư của Ba-anh là Ma-than ngay trước bàn thờ. Sau khi đặt lính canh Đền Thờ Chúa Hằng Hữu,
௧௮பின்பு தேசத்தின் மக்கள் எல்லோரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் சிலைகளையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் யெகோவாவுடைய ஆலயத்தை விசாரிக்கும் அதிகாரிகளை ஏற்படுத்தினான்.
19 Giê-hô-gia-đa cùng các tướng chỉ huy, lính Ca-rít, cận vệ và cả dân chúng rước vua từ Đền Thờ của Chúa Hằng Hữu qua cổng của cận vệ để vào cung vua. Giô-ách lên ngồi trên ngai.
௧௯நூறுபேருக்கு அதிபதிகளையும், தலைவர்களையும், காவலாளர்களையும் தேசத்தின் மக்களையும் கூட்டி, ராஜாவைக் யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து இறங்கச்செய்து, அவனைக் காவலாளர்களின் வாசல் வழியாக ராஜஅரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான்.
20 Dân chúng khắp nơi đều vui mừng, và thành phố trở lại yên tĩnh sau cái chết của A-tha-li.
௨0தேசத்தின் மக்கள் எல்லோரும் மகிழ்ந்து, நகரம் அமைதலானது. அத்தாலியாளையோ ராஜாவின் அரண்மனை அருகில் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.
21 Lúc lên làm vua, Giô-ách mới được bảy tuổi.
௨௧யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.