< Әзакиял 6 >

1 Пәрвәрдигарниң сөзи маңа келип мундақ дейилди: —
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 И инсан оғли, Исраилниң тағлириға йүзүңни қаритип уларни әйипләп мундақ дәп бешарәт бәргин: —
மனிதகுமாரனே, நீ இஸ்ரவேலின் மலைகளுக்கு நேராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லிச் சொல்லவேண்டியது என்னவென்றால்,
3 «Исраилниң тағлири, Рәб Пәрвәрдигарниң сөзини аңлап қоюңлар: Рәб Пәрвәрдигар тағлар вә егизликләргә, вадилар вә җилғиларға мундақ дәйду: — Мана, Мән үстүңларға бир қилични чүшүрүп, «жуқури җай»лириңларни вәйран қилимән.
இஸ்ரவேலின் மலைகளே, யெகோவாகிய ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்; யெகோவாகிய ஆண்டவர் மலைகளையும், குன்றுகளையும், ஓடைகளையும், பள்ளத்தாக்குகளையும், நோக்கி: இதோ, உங்கள்மேல் நான், நானே வாளை வரச்செய்து, உங்களுடைய மேடைகளை அழித்துப்போடுவேன்.
4 Шуниң билән силәрниң қурбангаһлириңлар вәйранә болиду, «күн түврүк»лириңлар бузулиду; силәрдин өлтүрүлгәнләрни бутлириңларниң алдиға ташлаймән.
உங்களுடைய பலிபீடங்கள் பாழாக்கப்பட்டு, உங்களுடைய சிலைகள் தகர்க்கப்படும்; உங்களில் கொலைசெய்யப்படுகிறவர்களை உங்களுடைய அசுத்தமான சிலைகளுக்கு முன்பாக விழச்செய்வேன்.
5 Исраиллардин болған өлүкләрни өз бутлири алдиға ятқузимән; қурбангаһлириңлар әтрапиға устиханлирини чечиветимән.
நான் இஸ்ரவேல் மக்களுடைய பிரேதங்களை அவர்களுடைய அசுத்தமான சிலைகளின் முன்னே கிடக்கச்செய்து, உங்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும் உங்களுடைய எலும்புகளைச் சிதறச்செய்வேன்.
6 Силәр турған барлиқ җайларда шәһәрләр йәр билән йәксан қилиниду, «жуқури җайлар» вәйранә болиду; шуниң билән қурбангаһлириңлар һалак болиду, бутлириңлар чеқилип йоқилиду, «күн түврүк»лириңлар кесилип ғулитилиду, вә һәммә ясиғиниңлар йоқ қиливетилиду;
உங்கள் பலிபீடங்கள் அழிவும் பாழுமாகும்படிக்கும், உங்களுடைய அசுத்தமான சிலைகள் தகர்க்கப்பட்டு, ஓய்ந்து, உங்களுடைய சிலைகள் வெட்டப்பட்டு, உங்களுடைய செயல்கள் குலைந்துபோகும்படிக்கும், உங்களுடைய எல்லா குடியிருப்புகளிலுமுள்ள பட்டணங்கள் அழிவும் உங்களுடைய மேடைகள் பாழுமாகும்.
7 Вә өлтүрүлгәнләр араңларда жиқилиши билән, силәр Мениң Пәрвәрдигар екәнлигимни тонуп йетисиләр.
கொலைசெய்யப்பட்டவர்கள் உங்களுடைய நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
8 Бирақ Мән силәрдин бир қалдини қалдуримән; чүнки ят мәмликәтләргә тарқитиветилгиниңларда, силәрдин әлләр арисида қиличтин қутулуп қалғанлар болиду.
நீங்கள் தேசங்களில் சிதறடிக்கப்படும்போது, அந்நியஜாதிகளுக்குள்ளே பட்டயத்திற்குத் தப்புவோரை உங்களுக்கு மீதியாக வைப்பேன்.
9 Вә силәрдин [қиличтин] қутулуп қалғанлар сүргүн қилинған мәмликәтләрдә Мәндин янған вапасиз қәлблири вә бутлириға паһишивазлардәк һәвәс қилған көзлири билән бағримни парә-парә қилғанлиғини есигә кәлтүриду; шуниң билән улар қилған рәзилликлири һәм жиркиничлик қилмишлири түпәйлидин өз-өзлиридин нәпрәтлиниду.
என்னை விட்டு கெட்டுபோகிற இருதயத்தைக்குறித்தும், தங்களுடைய அசுத்தமான சிலைகளின் பின்னே கெட்டு போகிற தங்களுடைய கண்களைக்குறித்தும் மனவேதனையடைந்தேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் அந்நியஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய எல்லா அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளுக்காக தங்களையே வெறுத்து,
10 Вә улар Мениң Пәрвәрдигар екәнлигимни тонуп йетиду; Мән мошу күлпәтни силәрниң бешиңларға чүшүримән дегәнлигим бекардин-бекар әмәс».
௧0இந்தத் தீங்குகளையெல்லாம் தங்களுக்கு சம்பவிக்கச்செய்வேன் என்று யெகோவாகிய நான் வீணாகச் சொன்னதில்லையென்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
11 Рәб Пәрвәрдигар мундақ дәйду: — «Алиқиниңни-алиқиниңға уруп, путуң билән йәрни тәпкин: «Исраил җәмәтиниң барлиқ қәбиһ, жиркиничлик қилмишлири үчүн вай! Чүнки улар қилич, ачарчилиқ вә ваба кесили билән жиқилиду» — дегин!
௧௧யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன்னுடைய கையில் அடித்து, உன்னுடைய காலால் தட்டி, இஸ்ரவேல் வம்சத்தாருடைய எல்லா பொல்லாத அருவருப்புகளுக்காகவும் ஐயோ, என்று சொல்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் விழுவார்கள்.
12 Жирақта турған вабадин өлиду; йеқинда турған қилич билән жиқилиду; һәм тирик қалған, йәни муһасиригә чүшкән киши ачарчилиқтин өлиду; шуниң билән мениң уларға болған қәһримни чүшүрүп пиғандин чиқимән.
௧௨தூரத்தில் இருக்கிறவன் கொள்ளைநோயால் மரிப்பான்; அருகில் இருக்கிறவன் வாளால் விழுவான்; மீதியாக இருந்து, முற்றுகைபோடப்பட்டவன் பஞ்சத்தால் மரிப்பான்; இப்படி அவர்களில் என்னுடைய கடுங்கோபத்தை தீர்த்துக்கொள்ளுவேன்.
13 Әнди улардин өлтүрүлгәнләр өз бутлири арисида, уларниң қурбангаһлири әтрапида, өз бутлириға хушбуй яққан һәр бир егиз дөң үстидә, тағ чоққилирида, барлиқ йешил дәрәқ вә барақсан дуб астида ятқан чағда, улар Мениң Пәрвәрдигар екәнлигимни тонуп йетиду.
௧௩அவர்கள் தங்களுடைய அசுத்தமான எல்லா சிலைகளுக்கும் இனியவாசனையான தூபத்தைக் காட்டின இடங்களாகிய உயர்ந்த எல்லா மேடுகளிலும், மலைகளுடைய எல்லா சிகரங்களிலும், பச்சையான எல்லா மரங்களின்கீழும், தழைத்திருக்கிற சகல கர்வாலி மரங்களின்கீழும், அவர்களுடைய அசுத்தமான சிலைகளின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும், அவர்களில் கொலைசெய்யப்பட்டவர்கள் கிடக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
14 Вә Мән Өз қолумни уларниң үстигә созимән, улар һәр турған җайлирида зиминни Диблаттики чөл-баявандин бәттәр вәйран қиливетимән. Андин улар Мениң Пәрвәрдигар екәнлигимни тонуп йетиду».
௧௪நான் என்னுடைய கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வீடுகளுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத்தின் வனாந்திரத்தைவிட அதிகமாகப் பாழாக்குவேன், அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

< Әзакиял 6 >