< Қанун шәрһи 28 >

1 Әгәр сән Пәрвәрдигар Худайиңниң сөзини аңлап, Униң мән бүгүн саңа тапшуридиған әмирлиригә әмәл қилишқа көңүл бөлсәң, Худайиң Пәрвәрдигар сени йәр йүзидики һәммә әлләрниң үстигә чоң қилиду;
“இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருப்பதற்கு, அவருடைய சத்தத்திற்கு உண்மையாகச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய யெகோவா பூமியிலுள்ள அனைத்து மக்களிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
2 Пәрвәрдигар Худайиңниң сөзини аңлисаң бу һәммә бәхит-бәрикәтләр саңа әгишип үстүңгә чүшиду: —
நீ உன் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
3 Сән шәһәрдә бәхит-бәрикәтлик болисән, сәһрадиму бәхит-бәрикәтлик болисән.
நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வயல்வெளிகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
4 Балиятқуңниң мевиси билән йериңниң мевиси, чарпайлириңниң мевиси, йәни калаңниң нәсиллири вә қой падилириң туққини болса, бәхит-бәрикәтлик болиду.
உன் கர்ப்பத்தின் பிறப்புகளும், உன் நிலத்தின் பலனும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
5 Севитиң бәхит-бәрикәтлик болиду, тәңнәңму бәхит-бәрикәтлик болиду.
உன் பழ கூடையும், மாவு பிசைகிற உன் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
6 Сән кирсәңму бәхит-бәрикәтлик болисән, чиқсаңму бәхит-бәрикәтлик болисән.
நீ வரும்போதும் போகும்போதும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
7 Саңа қарши чиққан дүшмәнлириңни Пәрвәрдигар алдиңда мәғлуп қилиду; улар бир йол билән саңа һуҗумға келип, йәттә йол билән алдиңдин қачиду.
“உனக்கு விரோதமாக எழும்பும் உன் எதிரிகளைக் யெகோவா உனக்கு முன்பாக தோற்கடிக்கப்பட ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாக உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாக உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
8 Сениң амбарлириңда вә қолуң билән қилидиған барлиқ ишлириңда Пәрвәрдигар үстүңгә бәхит-бәрикәт буйруйду; Пәрвәрдигар Худайиң саңа беридиған зиминда У сени бәрикәтләйду.
யெகோவா உன் பண்டகசாலைகளிலும், நீ செய்யும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
9 Әгәр сән Пәрвәрдигар Худайиңниң әмирлирини тутуп йоллирида маңсаң, Өзи қәсәм билән саңа вәдә қилғандәк Пәрвәрдигар сени тикләп Өзигә муқәддәс бир хәлиқ қилиду.
நீ உன் தேவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவருடைய வழிகளில் நடக்கும்போது, யெகோவா உனக்கு வாக்களித்தபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த மக்களாக நிலைப்படுத்துவார்.
10 Шуниң билән йәр йүзидики һәммә хәлиқләр сениң Пәрвәрдигарниң нами билән аталғиниңни көрүп сәндин қорқиду.
௧0அப்பொழுது யெகோவாவுடைய நாமம் உனக்குச் சூட்டப்பட்டது என்று பூமியின் மக்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.
11 Пәрвәрдигар сени яшнитиду; саңа беришкә ата-бовилириңға қәсәм билән вәдә қилған зиминда сени өз бәдиниңниң мевиси билән чарпайлириңниң мевиси вә йериңниң мевисини мол вә бәркәтлик қилиду.
௧௧உனக்குக் கொடுப்பேன் என்று யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில், யெகோவா உன் கர்ப்பப்பிறப்பிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் பலனிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
12 Пәрвәрдигар сениң зиминиңға өз вақтида ямғур берип қоллириңниң һәммә ишлирини бәрикәтләш үчүн өз ғәзниси болған асманни саңа ачиду; өзүң һеч кимдин қәриз алмайсән, бәлки көп әлләргә қәриз берисән.
௧௨ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், யெகோவா உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் மக்களுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.
13 Пәрвәрдигар сени қуйруқ әмәс, баш қилиду; сән пәқәт үсти болуп, асти болмайсән. Әгәр мән силәргә бүгүн тапилиған Пәрвәрдигар Худайиңниң әмирлиригә қулақ селип, уларни тутуп әмәл қилсаң,
௧௩இன்று நான் உங்களுக்கு கொடுக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டுவிலகி வேறே தெய்வங்களை வணங்குவதற்கு, நீ வலதுபுறமோ, இடதுபுறமோ சாயாமல்,
14 шундақла мән бүгүн силәргә буйруған һәммә сөзләрниң һеч биридин оң яки солға чәтнәп кәтмисәң, башқа илаһларға әгишип қуллуғиға кирмисәң, шундақ болиду.
௧௪இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், யெகோவா உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.
15 Лекин шундақ болидуки, әгәр Пәрвәрдигар Худайиңниң авазиға қулақ салмай, мән бүгүн силәргә тапилиған униң барлиқ әмирлири билән бәлгүлимилирини тутмисаңлар һәм уларға әмәл қилмисаңлар, бу ләнәтләрниң һәммиси саңа әгишип үстүңгә чүшиду: —
௧௫“இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவுடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவருடைய சத்தத்தை கேட்காவிட்டால், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.
16 Сән шәһәрдә ләнәткә қалисән, сәһрадиму ләнәткә қалисән.
௧௬நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சபிக்கப்பட்டிருப்பாய்.
17 Севитиң ләнәткә қалиду, тәңнәңму ләнәткә қалиду.
௧௭உன் கூடையும், மாவு பிசைகிற உன் பாத்திரமும் சபிக்கப்பட்டிருக்கும்.
18 Балиятқуңниң мевиси, йериңниң мевиси, калаңниң нәсиллири вә қой падилириңниң туққини ләнәткә қалиду.
௧௮உன் கர்ப்பத்தின் பிறப்பும், உன் நிலத்தின் பலனும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும்.
19 Сән кирсәңму ләнәткә қалисән, чиқсаңму ләнәткә қалисән.
௧௯நீ வரும்போதும் போகும்போதும் சபிக்கப்பட்டிருப்பாய்.
20 Сениң Пәрвәрдигарни ташлиған рәзил қилмишлириң үчүн у сән йоқ қилинғичә, тездин һалак қилинғичә, қолуң қилған барлиқ ишлириңда сениң үстүңгә ләнәт, паракәндилик вә дәшнәм чүшүриду.
௨0“என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் தீயசெயல்களின் காரணமாக சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியும்வரை, நீ கையிட்டுச் செய்கிற எல்லாவற்றிலும் யெகோவா உனக்கு சாபத்தையும், குழப்பத்தையும், அழிவையும் வரச்செய்வார்.
21 Пәрвәрдигар сән егиләшкә киридиған зиминдин сени йоқатқичә саңа ваба чаплаштуриду.
௨௧நீ சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்தில் யெகோவா நீ அழிந்துபோகும்வரை கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளச்செய்வார்.
22 Пәрвәрдигар сени сил-ваба кесили, кезик кесили, яллуғлуқ кесили вә бәзгәк кесилигә гириптар қилип, қурғақчилиқ, чавириш апити вә һал апитигә муптила қилиду. Бу апәтләр сән йоқ қилинғичә сени қоғлайду.
௨௨யெகோவா உன்னை நோயினாலும், காய்ச்சலினாலும், வெப்பத்தினாலும், எரிகொப்பளத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியும்வரை இவைகள் உன்னைப் பின்தொடரும்.
23 Бешиңниң үстидики асман мистәк, айиғиңниң астидики йәр төмүрдәк болиду.
௨௩உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாக இருக்கும்.
24 Пәрвәрдигар сениң зиминиңда яғидиған ямғурни топа-чаң вә қум қилиду; улар таки сән һалак болғичә асмандин үстүңгә чүшиду.
௨௪உன் தேசத்தின் மழையை யெகோவா புழுதியும் மண்ணுமாக பெய்யச்செய்வார்; நீ அழியும்வரை அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும்.
25 Пәрвәрдигар Өзи сени дүшмәнлириңниң алдида мәғлуп қилиду. Сән уларға қарши бир йол билән берип, уларниң алдидин йәттә йол билән қачисән; йәр йүзидики һәммә әлләрни дәккә-дүккигә салидиған объект болуп қалисиләр.
௨௫“உன் எதிரிகளுக்கு முன்பாக நீ தோற்கடிக்கப்படும்படி யெகோவா செய்வார்; ஒரு வழியாக அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாக அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்ஜியங்களிலும் சிதறிப்போவாய்.
26 Өлүклириңлар асмандики барлиқ учар-қанатлар билән йәр йүзидики һайванларға йәм болиду; уларни һайдиветидиған һеч ким чиқмайду.
௨௬உன் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை விரட்டுபவர்கள் இல்லாதிருப்பார்கள்.
27 Пәрвәрдигар сени Мисирдики сақаймас яра-чақилири, чиқан-һүррәкләр, тәмрәткә, қичишқақ билән уриду.
௨௭நீ குணமாகாதபடி யெகோவா உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
28 Пәрвәрдигар сени сараңлиқ, корлуқ вә паракәндилик билән уриду.
௨௮யெகோவா உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.
29 Сән күпкүндүздә кор киши қараңғуда тәмтилигәндәк тәмтиләп жүрисән, барлиқ йоллириң ақмайду; сән күндин-күнгә пәқәт зулум билән булаңчилиққа учриғучи болисән, сени қутқузидиған һеч ким чиқмайду.
௨௯குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோகும்; உதவி செய்பவர் இல்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாக இருப்பாய்.
30 Сән бир хотун билән вәдиләшсәң башқа бир адәм униң билән ятиду; өйни салсаң униңда олтиралмайсән, тәк тиккән болсаң мевисини йейәлмәйсән.
௩0பெண்ணை உனக்கு நிச்சயம் செய்வாய், வேறொருவன் அவளுடன் உறவுகொள்வான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சைத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.
31 Калаң көзлириңниң алдида союлиду, лекин гөшидин йейәлмәйсән; қарап туруп ешигиң сәндин булап кетилиду, саңа йенип кәлмәйду. Қойлириң дүшмәнлириңниң қолиға чүшүп кетиду, уларни яндуруп келишкә ярдәмгә һеч ким чиқмайду.
௩௧உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் சாப்பிடுவதில்லை; உன்னுடைய கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப கிடைக்காமற்போகும்; உன்னுடைய ஆடுகள் உன் எதிரிகளுக்குக் கொடுக்கப்படும். விடுவிப்பவர் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.
32 Оғул билән қизлириң башқа бир әлниң қолиға чүшүп, көзлириң пүтүн күн уларға тәлмүрүш билән чарчайду; лекин қолуң уларни қутқузушқа амалсиз қалиду.
௩௨உன்னுடைய மகன்களும் மகள்களும் அந்நிய மக்களுக்கு ஒப்புக் கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாள்தோறும் பார்த்துப் பார்த்துப் பூத்துப்போகும்; உன் கையில் பெலனில்லாதிருக்கும்.
33 Йериңниң мәһсулатлири билән әмгигиңниң барлиқ мевисини сән тонумайдиған бир әл йәп кетиду; сән барлиқ күнлириңдә езилип зулум тартисән;
௩௩உன் நிலத்தின் பலனையும், உன் உழைப்பின் எல்லாப் பலனையும் நீ அறியாத மக்கள் சாப்பிடுவார்கள்; நீ சகல நாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.
34 Көзлириң көргән ишлардин сән сараң болуп кетисән.
௩௪உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய்.
35 Пәрвәрдигар сени тапиниңдин чоққаңғичә, тизиң билән пачақ-путлириңғичә сақаймас дәһшәтлик яра-чақилар билән уриду.
௩௫உன் உள்ளங்கால் துவங்கி உன் உச்சந்தலைவரை குணமாகாதபடி, யெகோவா உன்னை முழங்கால்களிலும், தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.
36 Пәрвәрдигар сени өз үстүңгә тиклигән падишасиңға қошуп өзүң вә ата-бовилириң тонумиған бир әлгә тутуп бериду. Сән шу йәрдә туруп яғач вә таштин ясалған башқа илаһларға чоқунисән.
௩௬“யெகோவா உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் முற்பிதாக்களும் அறியாத மக்களிடத்திற்குப் போகச்செய்வார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தெய்வங்களை வணங்குவாய்.
37 Сән Пәрвәрдигар сени елип баридиған һәммә әлләр арисида вәһимә, сөз-чөчәк вә тапа-тәниниң объекти болуп қалисән.
௩௭யெகோவா உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா மக்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் கேலிச் சொல்லுமாவாய்.
38 Сән етизлиққа берип көп уруқ чачисән, лекин чекәткиләр уларни йәп кетип, униңдин аз жиғип келисән.
௩௮மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதை அழித்துப்போடும்.
39 Талларни тикип пәрвиш қилсаңму, уларни қурутлар йәп кетип, нә мевисини жиғалмайсән, нә шарап ичәлмәйсән.
௩௯திராட்சைத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சைரசம் குடிப்பதும் இல்லை, திராட்சைப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்றுவிடும்.
40 Зиминиңниң һәр йеридә зәйтун бағлириң болсиму, униң мейи билән бәдиниңни мәсиһләп майлалмайсән; чүнки дәрәқләрдики мевиләр пишмайла чүшүп кетиду.
௪0ஒலிவமரங்கள் உன்னுடைய எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோகும்.
41 Оғул вә қиз пәрзәнт көрсәңму, лекин улар йениңда турмайду; чүнки улар сүргүн болуп кетиду.
௪௧நீ மகன்களையும் மகள்களையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடுகூட இருக்கமாட்டார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.
42 Сениң һәр бир дәриғиң билән йериңниң барлиқ мәһсулатлирини чекәткиләр өзиниң қилиду.
௪௨உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் பலன்களையும் வெட்டுக்கிளி அழித்துப்போடும்.
43 Араңларда туруватқан мусапир сәндин барғансери үстүн болуп, сән барғансери төвән болуп қалисән.
௪௩உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேலாக மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய்.
44 У саңа қәриз бәргүчи болиду, амма сән униңға қәриз берәлмәйсән. У баш болиду, сән қуйруқ болисән.
௪௪அவன் உன்னிடத்தில் கடன்படமாட்டான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் உனக்குத் தலைவனாயிருப்பான், நீ அவனுக்குக் கீழாயிருப்பாய்.
45 Сән Пәрвәрдигар Худайиңниң авазиға қулақ салмай, У саңа тапилиған әмир вә бәлгүлимиләрни тутмиғиниң үчүн бу ләнәтләрниң һәммиси сән һалак қилинғичә сени қоғлап йетип, үстүңгә чүшиду.
௪௫உன் தேவனாகிய யெகோவா உனக்கு கொடுத்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்தை கேட்காதால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியும்வரை உன்னைத் தொடர்ந்து பிடித்து,
46 Бу ләнәтләр өзүң вә нәслиңниң үстигә мәңгүлүк чүшидиған мөҗизилик аламәт вә карамәт болуп қалиду.
௪௬உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும்.
47 Сән кәңричиликтә шатлиқ вә көңүл хушлуғи билән Пәрвәрдигар Худайиңниң қуллуғида болмиғачқа,
௪௭“சகலமும் நிறைவாக இருக்கும்போது, நீ மனமகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் உன் தேவனாகிய யெகோவாவை வணங்காததால்,
48 буниң орниға сән ачлиқ вә уссузлуқ, ялаңачлиқ вә һәр нәрсиниң кәмчилигидә болуп Пәрвәрдигар саңа қарши әвәтидиған дүшмәнлириңниң қуллуғида болуп қалисән; У сени һалак қилғичә бойнуңға төмүр боюнтуруқни салиду.
௪௮சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும், தாகத்தோடும், நிர்வாணத்தோடும், யெகோவா உனக்கு விரோதமாக அனுப்பும் எதிரிகளுக்கு வேலைசெய்வாய்; அவர்கள் உன்னை முற்றிலும் அழிக்கும்வரை, இரும்பு நுகத்தை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.
49 Пәрвәрдигар жирақтин, йәни йәр йүзиниң четидин сән тилини билмәйдиған, бүркүттәк шуңғуп келидиған бир әлни саңа қарши әвәтиду.
௪௯முதியவன் என்று பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும்,
50 У әлпази әшәддий, қериларға йүз-хатирә қилмайдиған вә яшларға меһир көрсәтмәйдиған бир әл болиду.
௫0உனக்குத் தெரியாத மொழியைப் பேசுகிறதுமான மக்களை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடைசியிலிருந்து யெகோவா உன்மேல் கழுகைப்போல வேகமாக வரச்செய்வார்.
51 У сән һалак болғичә, чарвилириңниң нәсли билән йериңниң мәһсулатлирини йәп кетиду; чүнки у сени йоқитип болмиғичә саңа нә ашлиқ, нә йеңи шарап, нә зәйтун мейи, нә калаңниң мозайлири нә қой падилириңниң қозилиридин бир немини қоймайду.
௫௧நீ அழியும்வரை அந்த மனிதன் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் பலனையும் சாப்பிடுவான்; அவன் உன்னை முற்றிலும் அழிக்கும்வரை உன் தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாக வைக்கமாட்டான்.
52 Сән таянған пүткүл зиминиңдики һәммә егиз, мәһкәм сепиллириң өрүлүп чүшкичә, у пүткүл зиминиңдики барлиқ дәрвазилириң алдиға келип, сени қоршивалиду; у Пәрвәрдигар Худайиң саңа бәргән зиминиңниң һәр йеридики һәммә дәрвазилириң алдиға келип, сени қоршивалиду.
௫௨உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் பாதுகாப்புமான உன் மதில்கள் விழும்வரை, அவன் உன்னுடைய வாசல்களிலெங்கும் உன்னை முற்றுகையிடுவான்; உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய ஒவ்வொரு வாசல்களிலும் உன்னை முற்றுகையிடுவான்.
53 Шу вақитта дүшмәнлириңниң қистап келишлири билән болған қамал-қистаңниң азап-оқубәтлири ичидә, Пәрвәрдигар Худайиң саңа ата қилған, өз тениңниң мевиси болған оғуллириңниң гөшини вә қизлириңниң гөшини йәйсән.
௫௩உன்னுடைய எதிரிகள் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த உன் கர்ப்பப்பிறப்பான உன்னுடைய மகன்கள் மற்றும் மகள்களின் மாம்சத்தை சாப்பிடுவாய்.
54 Вә шундақ болидуки, араңлардики назук, интайин силиқ-сипайә бир адәм қериндиши, қучиғидики аяли, шундақла техи тирик балилиридин қизғинип, уларға яман көзи билән қарайду;
௫௪உன் எதிரிகள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, உன்னிடத்தில் கர்வமும் செல்வச்செழிப்புமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையினாலே தான் உண்ணும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே,
55 шуңа, дүшмәнлириңниң қамал-искәнҗисидә сән өз дәрвазилириң ичидә қийналғиниңда һеч немә қалмиғанлиғи үчүн, у өзи йәватқан балилириниң гөшидин уларниң һеч қайсисиға азрақму бәрмәйду.
௫௫தன் சகோதரனுக்காவது, தன் மனைவிக்காவது, தனக்கு மீதியாயிருக்கிற தன் மக்களின் ஒருவனுக்காவது கொஞ்சமும் கொடுக்காமல் அவர்கள்மேல் கொடுமையுள்ளவனாக இருப்பான்.
56 Араңлардики әслидә назук вә силиқ-сипайә болған, силиқ-сипайилиги вә назуклуғидин пути билән йәргә дәссәшниму халимайдиған аял қучиғидики ери, оғул-қиз пәрзәнтлиридин қизғинип, уларға яман көзи билән қарайду; чүнки дүшмәнлириңниң қамал-искәнҗиси билән сән өз дәрвазилириң ичидә қийналғиниңда һеч нәрсә қалмиғачқа, у өз пути арилиғидин чиққан бала һәмраһи билән өзи туққан балилирини йошурунчә йәйду.
௫௬உன்னிடத்தில் செல்வச்செழிப்பினாலும் கர்வத்தினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க பயப்பட்ட பெண் தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன்னுடைய கணவன், மகன் மற்றும் மகளின் மேலும் கொடுமையுள்ளவளாக இருப்பாள்;
௫௭உன் எதிரிகள் உன் வாசல்களில் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, சகலமும் குறைவுபடுவதால், அவைகளை இரகசியமாக சாப்பிடுவான்.
58 Сән бу китапта пүтүлгән бу қанунниң барлиқ сөзлиригә әмәл қилишқа көңүл бөлмисәң, Пәрвәрдигар Худайиңниң улуқ вә һәйвәтлик намидин қорқмисаң,
௫௮“உன் தேவனாகிய யெகோவா என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படி, நீ இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாக இருக்காவிட்டால்,
59 Пәрвәрдигар сениң үстүңгә чүшүридиған вабалар һәм нәслиңниң үстигә чүшүридиған вабаларни әҗайип қилиду; У дәһшәтлик, узаққа созулидиған вабаларни вә еғир, узаққа созулидиған кесәлләрни үстүңгә вә нәслиңгә чүшүриду;
௫௯யெகோவா நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய வியாதிகளாலும் உன்னையும் உன் சந்ததியையும் கடுமையாக வாதித்து,
60 Пәрвәрдигар сән қорқидиған, Мисирдики барлиқ кесәлләрни үстүңгә чүшүрүп, саңа чаплаштуриду.
௬0நீ கண்டு பயந்த எகிப்தின் வியாதிகளெல்லாம் உன்மேல் வரச்செய்வார்; அவைகள் உன்னைப் பிடித்துக்கொள்ளும்.
61 Шуниңдәк бу қануний китапта пүтүлмигән һәммә кесәл вә һәммә вабаниму Пәрвәрдигар таки сән һалак болғичә үстүңгә чүшүриду.
௬௧இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிராத எல்லா வியாதியையும் வாதையையும் நீ அழியும்வரை யெகோவா உன்மேல் வரச்செய்வார்.
62 Шуниң билән әслидә асмандики юлтузлардәк нурғун болсаңларму, әндиликтә аз бир түркүм кишиләр болуп қалисиләр; чүнки силәр Пәрвәрдигар Худайиңларниң авазиға қулақ салмидиңлар.
௬௨எண்ணிக்கையிலே வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால், எண்ணிக்கையில் குறைந்துபோவீர்கள்.
63 Вә шундақ болидуки, Пәрвәрдигар илгири силәргә яхшилиқ қилип, силәрни авутқинидин сөйүнгәндәк, У әнди силәрни йоқитип һалак қилидиғинидин сөйүниду; шуниң билән силәр егиләшкә киридиған зиминдин жулуп ташлинисиләр.
௬௩யெகோவா உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகச்செய்யவும் எப்படி உங்கள்மேல் விருப்பமாயிருந்தாரோ, அப்படியே யெகோவா உங்களை அழிக்கவும் விருப்பமாயிருப்பார்; நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப் போடப்படுவீர்கள்.
64 Пәрвәрдигар силәрни йәр йүзиниң бу четидин у четигичә болған һәммә әлләрниң арисиға тарқитиду; силәр өзүңлар яки ата-бовилириңлар тонумиған яғач билән таштин ясалған илаһларниң қуллуғида болисиләр;
௬௪யெகோவா உன்னைப் பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைவரை இருக்கிற எல்லா மக்களுக்குள்ளும் சிதறடிப்பார்; அங்கே நீயும் உன் முற்பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தெய்வங்களை வணங்குவாய்.
65 Силәр у әлләрниң арисида нә арам тапалмайсиләр, нә тапиниңлар тирәп турғидәк һеч мәзмут җай болмайду; Пәрвәрдигар бәлки шу йәрдә силәрниң көңлүңларни ғувалаштуруп титритип, көзүңларни қараңғулаштуруп җениңларни солаштуриду.
௬௫அந்த மக்களுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இருக்காது, உன் உள்ளங்கால்கள் ஊன்றி நிற்க இடமும் இருக்காது; அங்கே யெகோவா உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனவேதனையையும் கொடுப்பார்.
66 Силәр қарап туруп җениңлар қилда есиқлиқтәк туриду; силәр кечә-күндүз дәккә-дүккидә болуп җенимдин айрилип қалармәнму? — дәп қорқисиләр;
௬௬உன் வாழ்க்கை உனக்கு முன்பாகச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் வாழ்க்கையைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் மிகுந்த பயத்தோடிருப்பாய்.
67 көңлүңни басқан вәһимә вә паракәндичилик вә көзлириң көргән көрүнүшләр түпәйлидин әтигини: «Кашки кәч болсиди!», кәчтә болса: «Кашки әтигән болсиди!» дәйсән.
௬௭உன் இருதயத்தின் பயத்தினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.
68 Пәрвәрдигар силәргә вәдә қилип: «Силәр бу йолни иккинчи йәнә көрмәйсиләр» дегән шу йол билән силәрни кемигә чүшүрүп Мисирға яндуриду. Силәр шу йәрдә дүшмәнлириңларға қул-дедәк болушқа өзүңларни сатисиләр, лекин силәрни алғили адәм чиқмайду.
௬௮இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாக, யெகோவா உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகச்செய்வார்; அங்கே உங்கள் எதிரிகளுக்கு வேலைக்காரர்களாகவும், வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் வாங்குபவரும் இல்லாதிருப்பார்கள்” என்றான்.

< Қанун шәрһи 28 >