< 1 तवा 7 >

1 और बनी इश्कार यह हैं: तोला' और फ़ुव्वा और यसूब और सिमरोन, यह चारों।
இசக்காரின் மகன்கள்: தோலா, பூவா, யாசுப், சிம்ரோன் ஆகிய நால்வர்.
2 और बनी तोला':'उज़्ज़ी और रिफ़ायाह और यरीएल और यहमी और इबसाम और समुएल, जो तोला' या'नी अपने आबाई ख़ानदानों के सरदार थे। वह अपने ज़माने में ताक़तवर सूर्मा थे और दाऊद के दिनों में उनका शुमार बाइस हज़ार छ: सौ था।
தோலாவின் மகன்கள்: ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுயேல் என்பவர்கள். இவர்கள் தங்கள் குடும்பங்களுக்குத் தலைவர்கள். தாவீதின் ஆட்சிக்காலத்தில் தோலாவின் வழித்தோன்றலில் கணக்கிடப்பட்ட இராணுவவீரர்கள் 22,600 பேராயிருந்தனர்.
3 और 'उज़्ज़ी का बेटा इज़राख़ियाह और इज़राख़ियाह के बेटे यह हैं: मीकाएल और 'अबदियाह और यूएल और यसय्याह यह पाँचों यह सब के सब सरदार थे।
ஊசியின் மகன்: இஸ்ரகியா. இஸ்ரகியாவின் மகன்கள்: மிகாயேல், ஒபதியா, யோயேல், இஷியா. இவர்கள் ஐந்துபேரும் தலைவர்களாயிருந்தனர்.
4 और उनके साथ अपनी अपनी पुश्त और अपने अपने आबाई ख़ानदान के मुताबिक़ जंगी लश्कर के दल थे जिन में छत्तीस हज़ार जवान थे क्यूँकि उनके यहाँ बहुत सी बीवियाँ और बेटे थे।
இவர்களில் குடும்ப வம்சாவழியில் போருக்கு ஆயத்தமாக இருந்த மனிதர்கள் 36,000 பேர். இவர்களுக்கு அநேகம் மனைவிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.
5 और उनके भाई इश्कार के सब घरानों में ताक़तवर सूर्मा थे और नसब नामे के हिसाब के मुताबिक़ कुल सत्तासी हज़ार थे।
இசக்காருடைய எல்லா வம்சங்களையும் சேர்ந்த இராணுவவீரர்களான உறவினர்கள் அவர்களுடைய வம்சாவழியின்படி 87,000 பேராயிருந்தார்கள்.
6 और बनी बिनयमीन यह हैं: बाला' और बक्र और यदा'एल, यह तीनों
பென்யமீனின் மகன்கள்: பேலா, பெகேர், யெதியாயேல் என மூன்றுபேர் இருந்தனர்.
7 और बनी बाला': इसबून और 'उज़्ज़ी और 'उज़्ज़ीएल और यरीमोत और 'ईरी, यह पाँचों। यह अपने आबाई ख़ानदानों के सरदार और ताक़तवर सूर्मा थे और नसब नामे के हिसाब के मुताबिक़ बाइस हज़ार चौंतीस थे।
பேலாவின் மகன்கள்: எஸ்போன், ஊசி, ஊசியேல், எரிமோத், இரி. இவர்கள் ஐந்துபேரும் குடும்பங்களின் தலைவர்களாயிருந்தனர். அவர்களின் வம்சாவழியின்படி இராணுவவீரர்களின் எண்ணிக்கையாக 22,034 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
8 और बनी बक्र यह हैं: ज़मीरा और यूआस और एलियाज़र और इलीयू'ऐनी और 'उमरी और यरीमोत और अबियाह और 'अन्तोत और 'अलामत यह सब बक्र के बेटे थे।
பெகேரின் மகன்கள்: செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, எரேமோத், அபியா, ஆனதோத், அலமேத். இவர்கள் எல்லோரும் பெகேரின் மகன்கள்.
9 इनकी नसल के लोग नसबनामे के मुताबिक़ बीस हज़ार दो सौ ताक़तवर सूर्मा और अपने आबाई ख़ानदानों के सरदार थे।
வம்சாவழியின்படி குடும்பத்தலைவர்களும், 20,200 இராணுவ வீரர்களும் பதிவு செய்யப்பட்டிருந்தார்கள்.
10 और यदा'एल का बेटा: बिलहान था। और बनी बिलहाँ यह हैं: य'ओस और बिनयमीन और अहूद और कना'ना और ज़ैतान और तरसीस और अख़ीसहर।
யெதியாயேலின் மகன்: பில்கான். பில்கானின் மகன்கள்: எயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிசாகார்.
11 यह सब यदा'एल के बेटे जो अपने आबाई ख़ानदानों के सरदार और ताक़तवर सूर्मा थे, सत्तरह हज़ार दो सौ थे जो लश्कर के साथ जंग पर जाने के लायक़ थे।
யெதியாயேலின் ஆண் பிள்ளைகளான இவர்கள் எல்லோரும் குடும்பங்களின் தலைவர்கள். இவர்களில் யுத்தத்திற்குச் செல்ல ஆயத்தமாயிருந்த வீரர்கள் 17,200 பேர்.
12 और सुफ़्फ़ीम और हुफ़्फ़ीम 'ईर के बेटे, और हाशीम इहीर का बेटा।
சுப்பீமியரும், உப்பீமியரும் ஈரின் வழித்தோன்றல்கள். ஊசிமியர் ஆகேரின் வழித்தோன்றல்கள்.
13 बनी नफ़्ताली यह हैं: यहसीएल और जूनी और यिस्र और सलूम बनी बिल्हा।
நப்தலியின் மகன்கள்: யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம். இவர்கள் பில்காளின் பேரப்பிள்ளைகள்.
14 बनी मनस्सी यह हैं: असरीएल और उसकी बीवी के बत्न से था उसकी अरामी हरम से जिल'आद का बाप मकीर पैदा हुआ।
மனாசேயின் சந்ததிகள்: அரமேய மறுமனையாட்டியினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவள் கீலேயாத்தின் தகப்பனான மாகீரையும் பெற்றாள்.
15 और मकीर ने हफ़्फ़ीम और सुफ़्फ़ीम की बहन जिसका नाम मा'का था ब्याह लिया और दूसरे का नाम सिलाफ़हाद था, और सिलाफ़ हाद के पास बेटियां थीं।
மாகீர் உப்பீமியர், சுப்பீமியரின் சகோதரியாகிய மாக்காள் என்பவளை மணந்தான். மனாசேயின் இரண்டாம் மகன் செலொப்பியாத்; அவனுக்கு மகள்கள் மட்டுமே இருந்தனர்.
16 और मकीर की बीवी मा'का के एक बेटा पैदा हुआ उसने उसका नाम फ़रस रख्खा और उसके भाई का नाम शरस था, और उसके बेटे औलाम रक़म थे।
மாகீரின் மனைவி மாக்காள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு பேரேஸ் என்று பெயரிட்டாள். அவனுடைய சகோதரன் சேரேஸ் என்று பெயரிடப்பட்டான். அவனுடைய மகன்கள் ஊலாம், ரேகேம்.
17 और औलाम का बेटा बिदान था, यह जिल'आद बिन मकीर बिन मनस्सी के बेटे थे।
ஊலாமின் மகன்: பேதான். இவர்களே மனாசேயின் மகன் மாகீரின் மகனான கீலேயாத்தின் மகன்கள்.
18 और उसकी बहन हम्मोलिकत से इशहूद और अबी'अएज़र और महला पैदा हुआ।
அவனுடைய சகோதரி அம்மொளெகேத் என்பவள் இஸ்கோத், அபியேசர், மாகலா ஆகியோரை பெற்றாள்.
19 बनी समीदा यह हैं: अख़ियान और सिकम और लिक़ही और अनि'आम।
செமிதாவின் மகன்கள்: அகியான், செகெம், லிக்கி, அனியாம்.
20 और बनी इफ़्राईम यह हैं: सुतलह, सुतलाह का बेटा बरद, बरद का बेटा तहत, तहत का बेटा इली'अदा, इली'अदा का बेटा तहत,
எப்பிராயீமின் சந்ததிகள்: சுத்தெலா, அவனுடைய மகன் பேரேத், அவனுடைய மகன் தாகாத், அவனுடைய மகன் எலாதா, அவனுடைய மகன் தாகாத்,
21 तहत का बेटा ज़बद, ज़बद का बेटा सूतलाह था और 'अज़र और इली'अद भी, जिनको जात के लोगों ने, जो उस मुल्क में पैदा हुए थे, मार डाला क्यूँकि वह उनकी मवैशी ले जाने को उतर आये थे।
அவனுடைய மகன் சாபாத், அவனுடைய மகன் சுத்தெலாக். எப்பிராயீமின் மகன்கள் எத்சேர், எலியாத் என்பவர்கள் காத் ஊரைச் சேர்ந்தவர்களின் வளர்ப்பு மிருகங்களைப் பிடிக்கச் சென்றபோது, அவர்கள் இவர்களை கொலைசெய்தார்கள்.
22 और उनका बाप इफ़्राईम बहुत दिनों तक मातम करता रहा, और उसके भाई तसल्ली देने को आये।
ஆகையால் இவர்களுடைய தகப்பன் எப்பிராயீம் அவர்களுக்காக அநேக நாட்கள் துக்கங்கொண்டாடினான். அவனுடைய உறவினர்கள் வந்து அவனை ஆறுதல்படுத்தினர்.
23 और वह अपनी बीवी के पास गया और वह हामला हुई और उसके एक बेटा पैदा हुआ और इफ़्राईम ने उसका नाम बरि'आ रख्खा क्यूँकि उसके घर पर आफ़त आई थी।
பின்பு எப்பிராயீம் தனது மனைவியுடன் உறவுகொண்டதால், அவள் கருவுற்று அவனுக்கு வேறு ஒரு மகனைப் பெற்றாள். அந்தக் குடும்பத்தில் பெருந்துன்பம் ஏற்பட்டிருந்ததால் அவனுக்குப் பெரீயா என்று பெயரிட்டனர்.
24 और उसकी बेटी सराह थी, जिसने नशेब और फ़राज़ के बैतहोरून और ऊज़िन सराह को बनाया।
எப்பிராயீமின் மகள் ஷேராள். இவள்மேல் பெத் ஓரோனின் கீழ்ப்புறத்தையும் மேற்புறத்தையும், ஊசேன்சேராவையும் கட்டினாள்.
25 और उसका बेटा रफ़ाह और रसफ़ भी और उसका बेटा तलाह, और तलाह का बेटा तहन,
பெரீயாவின் மகன் ரேப்பாக், அவனுடைய மகன் ரேசேப், அவனுடைய மகன் தேலாக், அவனுடைய மகன் தாகான்,
26 तहन का बेटा ला'दान, ला'दान का बेटा 'अम्मीहूद, 'अम्मीहूद का बेटा इलीसमा'अ,
அவனுடைய மகன் லாதான், அவனுடைய மகன் அம்மியூத், அவனுடைய மகன் எலிஷாமா.
27 इलीसमा'अ का बेटा नून, नून का बेटा यहूसू'अ।
அவனுடைய மகன் நூன், அவனுடைய மகன் யோசுவா.
28 और उनकी मिल्कियत और बस्तियां यह हैं: बैतएल और उसके देहात, और मशरिक़ की तरफ़ ना'रान, और मग़रिब की तरफ़ जज़र और उसके देहात, और सिकम भी और उसके देहात, 'अय्याह और उसके देहात तक;
பெத்தேலையும் அதைச் சுற்றியிருந்த கிராமங்களும் அவர்களுடைய நிலங்களும், குடியிருப்புகளும் உள்ளடக்கியிருந்தன. கிழக்கே நாரானும், மேற்கே கேசேரும் அதன் கிராமங்களும், ஆயாவும் அதன் கிராமங்களும் வழிநெடுகிலுமுள்ள சீகேமும் அதன் கிராமங்களுமாக இருந்தன. அவை அவர்களுடைய நிலமும் குடியிருப்புமாயிருந்தன.
29 और बनी मनस्सी की हुदूद के पास बैतशान और उसके देहात, ता'नक और उसके देहात, मजिद्दो और उसके देहात, दोर और उसके देहात थे। इनमें यूसुफ़ बिन इस्राईल के बेटे रहते थे।
அதோடு மனாசேயின் எல்லையிலிருந்து பெத்ஷான் முழுவதும் தானாகு, மெகிதோ, தோர் ஆகிய இடங்களும், அவற்றுடன் அவற்றின் கிராமங்களும் அவர்களின் குடியிருப்பாயிருந்தன. இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் சந்ததிகள் இந்தப் பட்டணங்களில் வாழ்ந்துவந்தார்கள்.
30 बनी आशर यह हैं: यिमना और इस्वाह और इसवी और बरि'आ, और उनकी बहन सिरह।
ஆசேரின் மகன்கள்: இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா. இவர்களின் சகோதரி செராக்கு.
31 और बरि'आ के बेटे: हिबर बिरज़ावीत का बाप मलकिएल थे।
பெரீயாவின் மகன்கள்: ஏபேர், மல்கியேல்; இவன் பிர்ஸாவித்தின் தகப்பன்.
32 और हिबर से यफ़लीत और सोमिर और ख़ूताम, और उनकी बहन सू'अ पैदा हुए।
ஏபேர் என்பவன் யப்லேத், சோமேர், ஒத்தாம் மற்றும் இவர்களுடைய சகோதரி சூகாளுடைய தகப்பன்.
33 और बनी यफ़लीत: फ़ासाक और और बिमहाल और 'असवात; यह बनी यफ़लीत हैं।
யப்லேத்தின் மகன்கள்: பாசாக், பிம்கால், அஸ்வாத். இவர்களே யப்லேத்தின் மகன்கள்.
34 और बनी सामिर: अख़ी और रूहजा और यहुब्बा और आराम थे।
சோமேரின் மகன்கள்: அகி, ரோகா, எகூபா, ஆராம்.
35 और उसके भाई हीलम के बेटे: सूफ़ह और इमना' और सलस और 'अमल थे।
அவனுடைய சகோதரன் ஏலேமின் மகன்கள்: சோபாக், இம்னா, சேலேஸ், ஆமல்.
36 और बनी सूफ़ह: सूह और हरनफ़र और सू'अल और बेरी और इमराह,
சோபாக்கின் மகன்கள்: சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,
37 बसर और हुद और सम्मा और सिलसा और इतरान और बैरा थे।
பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா.
38 और बनी यतर: युफ़न्ना और फ़िसफ़ाह और अरा थे।
யெத்தேரின் மகன்கள்: எப்புனே, பிஸ்பா, ஆரா.
39 और बनी 'उल्ला: अरख़ और हनीएल और रिज़ियाह थे।
உல்லாவின் மகன்கள்: ஆராக், அன்னியேல், ரித்சியா.
40 यह सब बनी आशार, अपने आबाई ख़ानदानों के, चुने हुए रईस और ताक़तवर सूर्मा और अमीरों के सरदार थे। उन में से जो अपने नसबनामे के मुताबिक़ जंग करने के लायक़ थे वह शुमार में छब्बीस हज़ार जवान थे।
ஆசேரின் வழித்தோன்றலாகிய இவர்கள் எல்லோரும் குடும்பங்களின் தலைவர்களும், சிறந்த மனிதர்களும், தைரியமிக்க இராணுவ வீரர்களும், புகழ்பெற்ற தலைவர்களுமாயிருந்தனர். போருக்கு ஆயத்தமாக இருந்தவர்கள் அவர்களுடைய வம்சங்களின்படி கணக்கிடப்பட்டபோது 26,000 பேராயிருந்தனர்.

< 1 तवा 7 >