< Рут 3 >

1 І сказала їй свекруха її Ноомі: „До́чко моя, ось я пошукаю для тебе місця спочи́нку, що буде добре тобі.
பின்பு அவள் மாமியாராகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாக வாழ்ந்திருக்கும்படி நான் உனக்கு சவுக்கியத்தைத் தேடாமல் இருப்பேனோ?
2 А тепер ось Бо́аз, наш ро́дич, що була ти з його служницями, ось він цієї ночі буде ві́яти ячмінь на току́.
நீ போவாசின் வேலைக்காரிகளோடு இருந்தாயே, அவன் நம்முடைய உறவினன் அல்லவா? இதோ, அவன் இன்று இரவு களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.
3 А ти вмийся, і намасти́ся, і надягни на себе кращу одежу свою, та й зійди на тік. Але не показуйся на очі тому чоловікові, аж поки він не скінчи́ть їсти та пити.
நீ குளித்து, எண்ணெய் பூசி, உன்னுடைய ஆடைகளை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப்போ; அந்த மனிதன் சாப்பிட்டுக் குடித்து முடிக்கும்வரைக்கும் அவனுடைய கண்களுக்கு எதிர்ப்படாமல் இரு.
4 І станеться, коли він ляже, то ти зауваж те місце, де він лежить. І ти при́йдеш, і відкриєш прині́жжя його та й ляжеш, а він скаже тобі, що маєш робити“.
அவன் படுத்துக்கொண்டபின்பு, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்து போய், அவனுடைய கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை விலக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது என்னவென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.
5 А та відказала до неї: „Усе, що ти кажеш мені, я зроблю́“.
இதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.
6 І зійшла вона на тік, і зробила все, як наказала їй свекруха її.
அவள் களத்திற்குப்போய், தன் மாமியார் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்தாள்.
7 А Бо́аз з'їв та випив, та й стало ве́село йому на серці, і прийшов він покластися біля копи́ці. А вона тихо прийшла, і відкрила його прині́жжя та й лягла.
போவாஸ் சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இருந்து, ஒரு அம்பாரத்தின் அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெதுவாகச்சென்று, அவனுடைய கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை விலக்கிப் படுத்துக்கொண்டாள்.
8 І сталося опі́вночі, і затремтів той чоловік, та й звівся, — аж ось жінка лежить у прині́жжі його!
நடுஇரவிலே, அந்த மனிதன் திடுக்கிட்டுத் திரும்பி, ஒரு பெண் தன்னுடைய பாதத்தின் அருகிலே படுத்திருக்கிறதைக் கண்டு,
9 І він сказав: „Хто ти?“А вона відказала: „Я невільниця твоя Рут. Простягни ж крило над своєю невільницею, бо ти мій родич“.
நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாளின்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் உறவினன் என்றாள்.
10 А він сказав: „Благословенна ти в Господа, до́чко моя! Твоя остання ласка до мене ліпша від першої, — що не пішла ти за юнака́ми, чи вони бідні, чи вони багаті.
௧0அதற்கு அவன்: மகளே, நீ யெகோவாவால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ ஏழைகளும் பணக்காரர்களுமான வாலிபர்களின் பின்னே போகாததினால், உன்னுடைய முந்தின நற்குணத்தைவிட உன்னுடைய பிந்தின நற்குணம் உத்தமமாக இருக்கிறது.
11 А тепер, до́чко моя, не бійся! Усе, що скажеш, я зроблю́ тобі, — бо все місто народу мого знає, що ти жінка чесно́тна!
௧௧இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் மக்களாகிய ஊரார் எல்லோரும் அறிவார்கள்.
12 А тепер справді, що я родич, — та є родич ще, ближчий від мене.
௧௨நான் உறவினன் என்பது உண்மைதான்; ஆனாலும் என்னைவிட நெருங்கின உறவினன் ஒருவன் இருக்கிறான்.
13 Ночуй цю ніч, а ра́нком, — якщо він викупить тебе — добре, нехай викупить. А якщо він не схоче викупити тебе, то викуплю тебе я, — як живий Господь! Лежи тут аж до ра́нку“.
௧௩இன்று இரவு தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னை உறவின்முறைப்படித் திருமணம்செய்யச் சம்மதித்தால் நல்லது, அவன் திருமணம் செய்யட்டும்; அவன் உன்னைத் திருமணம்செய்ய விருப்பமில்லாதிருந்தால் நான் உன்னை உறவின்முறைப்படித் திருமணம்செய்வேன் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலம்வரை படுத்துக்கொண்டிரு என்றான்.
14 І лежала вона у прині́жжі його аж до ранку, і встала, перше ніж можна розпізнати один о́дного. А він сказав: „Нехай не пізнають, що жінка прихо́дила на тік“.
௧௪அவள் விடியற்காலம்வரைக்கும் அவனுடைய பாதத்தின் அருகே படுத்திருந்து, களத்திற்கு ஒரு பெண் வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரிவதற்கு முன்னே எழுந்திருந்தாள்.
15 І він сказав: „Дай хустку, що на тобі, і подерж її“. І держала вона її, а він відмі́ряв шість мір ячме́ню, і поклав на неї, та й пішов до міста.
௧௫அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.
16 А вона прийшла до своєї свекрухи. А та сказала: „Як спра́ва, до́чко моя?“А вона розповіла́ їй усе, що зробив їй той чоловік.
௧௬அவள் தன் மாமியாரிடம் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனிதன் தனக்குச் செய்தவைகளையெல்லாம் அவளுக்கு விவரித்துச் சொன்னாள்.
17 І сказала: „Ці шість мір ячме́ню він дав мені, бо сказав: Не приходь по́рожньо до своєї свекрухи“.
௧௭மேலும் அவர், நீ உன் மாமியாரிடத்திற்கு வெறுமையாகப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.
18 А та сказала: „Почекай, моя до́чко, аж поки довідаєшся, як ви́паде справа, бо той чоловік не заспоко́їться, доки не викінчить цієї справи сьогодні“.
௧௮அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னவாக முடியும் என்று நீ அறியும்வரை பொறுமையாக இரு; அந்த மனிதன் இன்றைக்கு இந்தக் காரியத்தைச் செய்து முடிக்கும்முன் ஓயமாட்டான் என்றாள்.

< Рут 3 >