< Псалми 98 >

1 Псалом.
சங்கீதம். யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஏனெனில் அவர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமுமே இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறது.
2 Спасі́ння Своє Господь ви́явив, перед очима наро́дів відкрив Свою правду.
யெகோவா தமது இரட்சிப்பைத் தெரியப்படுத்தி, தமது நீதியைப் பிறநாடுகளின் கண்முன்னே வெளிப்படுத்தினார்.
3 Пам'ятає Він Якову милість Свою, й Свою вірність для дому Ізра́їля. Бачать всі кі́нці землі те спасі́ння, що чинить наш Бог.
அவர் இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் கொண்டிருந்த தமது அன்பையும் உண்மையையும் நினைவில்கொண்டார்; பூமியின் எல்லைகள் எல்லாம் நமது இறைவனுடைய இரட்சிப்பைக் கண்டன.
4 Уся зе́мле, викли́куйте Господу, покли́куйте радісно, і співайте та грайте!
பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் யெகோவாவை மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டு களிப்புடன் இசையோடு பாடுங்கள்.
5 Грайте Господе́ві на гу́слах, на гу́слах і піснопі́нням,
யாழோடு யெகோவாவுக்கு இசை பாடுங்கள்; யாழோடும், கீதசத்தத்தோடும்,
6 на су́рмах і голосом рогу викликуйте перед обличчям Царя Цього й Господа!
எக்காளங்களோடும், கொம்பு வாத்திய முழக்கங்களோடும் யெகோவாவாகிய அரசரின்முன் மகிழ்ந்து பாடுங்கள்.
7 Нехай шумить море й усе, що у ньому, вселе́нна й мешка́нці її,
கடலும் அதிலுள்ள அனைத்தும், உலகமும் அதிலுள்ள அனைவரும் ஆர்ப்பரிப்பார்களாக.
8 ріки хай плещуть в долоні, ра́зом радіють хай го́ри
ஆறுகள் தங்கள் கைகளைத் தட்டட்டும்; மலைகள் மகிழ்ச்சியுடன் ஒன்றுசேர்ந்து பாடட்டும்.
9 перед обличчям Господнім, бо Він землю судити гряде́: Він за справедливістю буде судити вселе́нну, і народи по правді!
அவை யெகோவாவுக்கு முன்பாகப் பாடட்டும்; ஏனெனில், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியுடனும், நாடுகளை நேர்மையுடனும் நியாயந்தீர்ப்பார்.

< Псалми 98 >