< Приповісті 15 >
1 Ла́гідна відповідь гнів відверта́є, а слово вра́зливе гнів підійма́є.
௧சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
2 Язик мудрих — то добре знання́, а уста́ нерозумних глупо́ту висло́влюють.
௨ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
3 Очі Господні на кожному місці, — позира́ють на злих та на добрих.
௩யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது.
4 Язик ла́гідний — то дерево життя, а лука́вство його — залама́ння на дусі.
௪ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
5 Зневажає безумний напучення ба́тькове, а хто береже осторо́гу, стає розумніший.
௫மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
6 Дім праведного — скарб великий, а в пло́ді безбожного — бе́злад.
௬நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு.
7 Уста мудрих знання́ розсівають, а серце безглу́здих не так.
௭ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; மூடர்களின் இருதயமோ அப்படியல்ல.
8 Жертва безбожних — оги́да для Господа, а молитва невинних — Його уподо́ба.
௮துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
9 Господе́ві огида — дорога безбожного, а того, хто женеться за праведністю, Він кохає.
௯துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
10 Люта кара на то́го, хто путь оставляє, а хто осторо́гу нена́видить, той умирає.
௧0வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
11 Шео́л й Аваддо́н перед Господом, — тим більше серця́ синів лю́дських! (Sheol )
௧௧பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? (Sheol )
12 Насмі́шник не любить карта́ння собі, — він до мудрих не пі́де.
௧௨பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
13 Ра́дісне серце лице весели́ть, а при сму́тку серде́чному дух приголо́мшений.
௧௩மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
14 Серце розумне шукає знання́, а уста безумних глупо́ту пасу́ть.
௧௪புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும்.
15 Нужде́нному всі́ дні лихі, кому ж добре на серці, у того гости́на постійно.
௧௫சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நிரந்தர விருந்து.
16 Ліпше мале у Господньому стра́ху, ані ж скарб великий, та триво́га при то́му.
௧௬சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
17 Ліпша пожи́ва яри́нна, і при тому любов, аніж тучний віл, та нена́висть при то́му.
௧௭பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது.
18 Гнівли́ва люди́на роздра́жнює сварку, терпели́ва ж у гніві вспоко́ює за́колот.
௧௮கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
19 Дорога лінивого — то тернови́ння, а путь щирих — дорога гладка́.
௧௯சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
20 Мудрий син тішить ба́тька свого́, а люди́на безумна пого́рджує матір'ю своєю́.
௨0ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான்.
21 Глупо́та — то радість для нерозумного, а люди́на розумна дорогою про́стою ходить.
௨௧மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான்.
22 Ламаються за́думи з бра́ку пора́ди, при числе́нності ж ра́дників спо́вняться.
௨௨ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
23 Радість люди́ні — у відповіді його уст, а слово на ча́сі своєму — яке воно добре!
௨௩மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
24 Путь життя для премудрого — уго́ру, щоб відда́люватись від шео́лу внизу́. (Sheol )
௨௪கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். (Sheol )
25 Дім пишних руйнує Госпо́дь, але ста́вить межу́ для вдови.
௨௫அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.
26 Думки злого — оги́да для Господа, але чисті для Нього приє́мні слова́.
௨௬துன்மார்க்கர்களுடைய நினைவுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
27 Заже́рливий робить нещасним свій дім, хто ж дарунки нена́видить, той буде жити.
௨௭பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
28 Серце праведного розмірко́вує про відповідь, а у́ста безбожних вибри́зкують зло.
௨௮நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
29 Далекий Господь від безбожних, але́ справедливих молитву Він чує.
௨௯துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
30 Світло оче́й тішить серце, добра звістка підкрі́плює ко́сті.
௩0கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.
31 Ухо, що навча́ння життя вислухо́вує, буде перебува́ти між мудрими.
௩௧வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்திலே தங்கும்.
32 Хто напу́чування не приймає, той не дбає про душу свою, а хто слухається осторо́ги, здобуде той розум.
௩௨புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
33 Страх Господній — навча́ння премудрости, а перед славою — скромність іде́.
௩௩யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.