< Числа 33 >
1 Оце походи Ізраїлевих синів, що вийшли з єгипетського кра́ю за своїми військо́вими відділами під рукою Мойсея та Аарона.
இஸ்ரயேலர், மோசே ஆரோன் என்பவர்களின் தலைமையின்கீழ் தங்கள் பிரிவுகளின்படியே எகிப்தைவிட்டு வெளியேறியபோது, அவர்கள் பயணத்தில் தரித்துநின்ற இடங்களாவன.
2 А Мойсей написав їхні ви́ходи з їхніми похо́дами за Господнім наказом, і оце їхні похо́ди за їхніми ви́ходами.
யெகோவாவின் கட்டளைப்படியே, இஸ்ரயேலர் பயணித்த பயணங்களை, மோசே எழுதிவைத்தான். அவர்கள் பயணித்த பயணங்களின் விவரங்கள்:
3 І рушили вони з Рамесесу першого місяця, п'ятнадцятого дня першого місяця, другого дня по Пасці вийшли Ізраїлеві сини сильною рукою на оча́х усього Єгипту.
பஸ்காவுக்கு அடுத்தநாளான முதலாம் மாதத்தின் பதினைந்தாம் நாளில் இஸ்ரயேலர் ராமசேஸ் நகரத்தை விட்டுப் புறப்பட்டார்கள். எல்லா எகிப்தியர்களும் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் துணிச்சலுடன் அணிவகுத்து வெளியே போனார்கள்.
4 А Єгипет ховав, кого побив Господь серед них, — кожного перворідного, а над їхніми богами зробив Господь суди́.
எகிப்தியர்களோ தங்களுக்குள்ளே யெகோவா சாகடித்த முதற்பேறானவர்களையெல்லாம் அடக்கம் செய்துகொண்டிருந்தார்கள். ஏனெனில், யெகோவா அவர்களுடைய தெய்வங்களின்மேல் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவந்திருந்தார்.
5 І рушили Ізраїлеві сини з Рамесесу, і таборува́ли в Суккоті.
இஸ்ரயேலர் ராமசேஸை விட்டுப் புறப்பட்டு, சுக்கோத்தில் முகாமிட்டார்கள்.
6 І рушили з Суккоту й таборува́ли в Етамі, що на краю́ пустині.
சுக்கோத்திலிருந்து புறப்பட்டு, பாலைவனத்தின் ஓரமாயுள்ள ஏத்தாமில் முகாமிட்டார்கள்.
7 І рушили з Етаму, а вернулися до Пі-Хіроту, що перед Баал-Цефоном, і таборува́ли перед Міґдолом.
ஏத்தாமிலிருந்து புறப்பட்டு, பாகால் செபோனுக்கு கிழக்கேயுள்ள பிகாஈரோத் பள்ளத்தாக்கிற்குத் திரும்பி, மிக்தோலுக்கு அருகே முகாமிட்டார்கள்.
8 І рушили з-перед Хіроту, і перейшли́ серед моря до пустині, і йшли триде́нною дорогою в Етамській пустині, і таборува́ли в Марі.
ஈரோத் பள்ளத்தாக்கிலிருந்து புறப்பட்டு, கடலைக் கடந்து பாலைவனத்திற்குப் போய், ஏத்தாம் பாலைவனத்தில் மூன்றுநாள் பயணம்பண்ணி மாராவில் முகாமிட்டார்கள்.
9 І рушили з Мари й увійшли до Еліму, — а в Елімі — дванадцять джере́л води та сімдеся́т пальм, — і таборува́ли там.
மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்கு வந்தார்கள். அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும், எழுபது பேரீச்சமரங்களும் இருந்தன. அங்கே அவர்கள் முகாமிட்டார்கள்.
10 І рушили з Еліму й таборува́ли над Червоним морем.
ஏலிமிலிருந்து புறப்பட்டு, செங்கடலுக்கு அருகே முகாமிட்டார்கள்.
11 І рушили з-над Червоного моря й таборува́ли в пустині Сін.
செங்கடலில் இருந்து புறப்பட்டு, சீன் பாலைவனத்தில் முகாமிட்டார்கள்.
12 І рушили з пустині Сін і таборува́ли в Дофці.
சீன் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, தொப்காவில் முகாமிட்டார்கள்.
13 І рушили з Дофки й таборували в Алуші.
தொப்காவிலிருந்து புறப்பட்டு, ஆலூசில் முகாமிட்டார்கள்.
14 І рушили з Алушу й таборували в Ріфідімі, — і не було там води на пиття для народу.
ஆலூசிலிருந்து புறப்பட்டு, ரெவிதீமில் முகாமிட்டார்கள். அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இருக்கவில்லை.
15 І рушили з Ріфідіму й таборували в пустині Сіна́й.
ரெவிதீமிலிருந்து புறப்பட்டு, சீனாய் பாலைவனத்தில் முகாமிட்டார்கள்.
16 І рушили з пустині Сінай і таборували в Ківрот-Гаттааві.
சீனாய் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, கிப்ரோத் அத்தாவில் முகாமிட்டார்கள்.
17 І рушили з Ківрот-Гаттаави й таборували в Хацероті.
கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டு, ஆஸ்ரோத்தில் முகாமிட்டார்கள்.
18 І рушили з Хацероту й таборували в Рітмі.
ஆஸ்ரோத்திலிருந்து புறப்பட்டு, ரித்மாவில் முகாமிட்டார்கள்.
19 І рушили з Рітми й таборували в Ріммоні Переца.
ரித்மாவிலிருந்து புறப்பட்டு, ரிம்மோன் பேரேசில் முகாமிட்டார்கள்.
20 І рушили з Ріммону Переца й таборували в Лівні.
ரிம்மோன் பேரேசிலிருந்து புறப்பட்டு, லிப்னாவில் முகாமிட்டார்கள்.
21 І рушили з Лівни й таборували в Ріссі.
லிப்னாவிலிருந்து புறப்பட்டு, ரீசாவில் முகாமிட்டார்கள்.
22 І рушили з Рісси й таборували в Кегелаті.
ரீசாவிலிருந்து புறப்பட்டு, கேலத்தாவில் முகாமிட்டார்கள்.
23 І рушили з Кегелати й таборували на горі Шефер.
கேலத்தாவிலிருந்து புறப்பட்டு, சாப்பேர் மலையில் முகாமிட்டார்கள்.
24 І рушили з гори Шефер і таборували в Хараді.
சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டு, ஆரதாவில் முகாமிட்டார்கள்.
25 І рушили з Харади й таборували в Макгелоті.
ஆரதாவிலிருந்து புறப்பட்டு, மக்கெலோத்தில் முகாமிட்டார்கள்.
26 І рушили з Макгелоту й таборували в Тахаті.
மக்கெலோத்திலிருந்து புறப்பட்டு, தாகாத்தில் முகாமிட்டார்கள்.
27 І рушили з Тахату й таборували в Тераху.
தாகாத்திலிருந்து புறப்பட்டு, தாராகில் முகாமிட்டார்கள்.
28 І рушили з Тераху й таборували в Мітці.
தாராகிலிருந்து புறப்பட்டு, மித்காவில் முகாமிட்டார்கள்.
29 І рушили з Мітки й таборували в Хашмоні.
மித்காவிலிருந்து புறப்பட்டு, அஸ்மோனாவில் முகாமிட்டார்கள்.
30 І рушили з Хашмони й таборували в Мосероті.
அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டு, மோசெரோத்தில் முகாமிட்டார்கள்.
31 І рушили з Мосероту й таборували в Бене-Яакані.
மோசெரோத்திலிருந்து புறப்பட்டு, பெனெயாக்கானில் முகாமிட்டார்கள்.
32 І рушили з Бене-Яакану й таборували в Хорі Ґідґаду.
பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டு கித்காத்தில் முகாமிட்டார்கள்.
33 І рушили з Хору Гідґаду й таборували в Йотваті.
கித்காத்திலிருந்து புறப்பட்டு, யோத்பாத்தாவில் முகாமிட்டார்கள்.
34 І рушили з Йотвати й таборували в Авроні.
யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டு, எப்ரோனாவில் முகாமிட்டார்கள்.
35 І рушили з Аврони й таборували в Ецйон-Ґевері.
எப்ரோனாவிலிருந்து புறப்பட்டு, எசியோன் கேபேரில் முகாமிட்டார்கள்.
36 І рушили з Ецйон-Ґеверу й таборува́ли в пустині Цін, це — Кадеш.
எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டு, சீன் பாலைவனத்திலுள்ள காதேசில் முகாமிட்டார்கள்.
37 І рушили з Кадешу й таборува́ли на Гор-горі, на краю́ едомської землі.
காதேசிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் எல்லையிலுள்ள ஓர் மலையில் முகாமிட்டார்கள்.
38 І зійшов священик Ааро́н на Гор-го́ру з Господнього наказу, та й помер там сорокового року ви́ходу Ізраїлевих синів з єгипетського кра́ю, п'ятого місяця, першого дня місяця.
யெகோவாவின் கட்டளைப்படி ஆசாரியன் ஆரோன், “ஓர்” என்னும் மலையில் ஏறிப்போய், இஸ்ரயேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருடம் ஐந்தாம் மாதம், முதலாம் நாளில் அங்கே இறந்தான்.
39 А Ааро́н був віку ста й двадцяти й трьох літ, коли помер він на Гор-горі.
“ஓர்” என்னும் மலையில் ஆரோன் இறந்தபோது அவனுக்கு வயது நூற்று இருபத்துமூன்று.
40 І почув ханаанеянин, цар Араду, — а він сидів на півдні в краї ханаанськім, — що йдуть Ізраїлеві сини.
கானானின் தெற்கு பகுதியில் வாழ்ந்த கானானிய அரசன் ஆராத், இஸ்ரயேலர் வருவதைப்பற்றிக் கேள்விப்பட்டான்.
41 І рушили від Гор-гори Й таборува́ли в Цалмоні.
அவர்கள் ஓர் மலையில் இருந்து புறப்பட்டு, சல்மோனாவில் முகாமிட்டார்கள்.
42 І рушили з Цалмони й таборували в Пуноні.
சல்மோனாவில் இருந்து புறப்பட்டு, பூனோனில் முகாமிட்டார்கள்;
43 І рушили з Пунону й таборували в Овоті.
பூனோனில் இருந்து புறப்பட்டு, ஒபோத்தில் முகாமிட்டார்கள்.
44 І рушили з Овоту й таборували в Ійє-Гааварімі, на моавській границі.
ஒபோத்தில் இருந்து புறப்பட்டு மோவாபின் எல்லையிலுள்ள அபாரீமின் மேடுகளில் முகாமிட்டார்கள்.
45 І рушили з Ійїму й таборували в Дівоні Ґаду.
அந்த இய்யாபாரீம் மேடுகளிலிருந்து புறப்பட்டு, தீபோன்காத்தில் முகாமிட்டார்கள்.
46 І рушили з Дівону Ґаду й таборува́ли в Алмон-Дівлатаймі.
தீபோன்காத்திலிருந்து புறப்பட்டு, அல்மோன் திப்லதாயில் முகாமிட்டார்கள்.
47 І рушили з Алмон-Дівлатайми й таборува́ли в гора́х Аварім перед Нево.
அல்மோன் திப்லதாயில் இருந்து புறப்பட்டு, நேபோவுக்கு அருகேயுள்ள அபாரீம் மலைகளில் முகாமிட்டார்கள்.
48 І рушили з гір Аварім, і таборували в моавських степа́х.
அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டு, எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அண்மையில் மோவாப் சமவெளிகளில் முகாமிட்டார்கள்.
49 І таборува́ли вони над Йорда́ном від Бет-Єшмоту аж до Авел-Шіттіму в Моавських степа́х.
மோவாப் சமவெளிகளில் யோர்தான் ஒரம் நெடுகிலும் பெத்யெசிமோத் தொடங்கி ஆபேல் சித்தீம்வரை முகாமிட்டார்கள்.
50 І Господь промовляв до Мойсея в моавських степах над приєрихо́нським Йорда́ном, говорячи:
எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அருகேயுள்ள மோவாபின் சமவெளிகளில் யெகோவா மோசேயுடன் பேசினார்.
51 „Промовляй до Ізраїлевих синів та й скажеш до них: Коли ви пере́йдете Йорда́н до ханаа́нського кра́ю,
அவர் அவனிடம், “நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் நாட்டிற்குப் போகும்போது,
52 то проженете всіх ме́шканців того Кра́ю перед собою, і понищите всі їхні зобра́ження, і всіх литих ідолів їхніх понищите, і всі їхні висо́ти поруйнуєте.
அங்கே உங்களுக்கு முன்பாக அந்நாட்டில் குடியிருக்கிறவர்களை எல்லாம் வெளியே துரத்திவிடுங்கள். அத்துடன் அவர்களுடைய செதுக்கப்பட்ட எல்லா சிலைகளையும், வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களையும் அழித்து, உயர்ந்த மேடைகளையெல்லாம் உடைத்துவிடுங்கள்.
53 І ви заволодієте тим Кра́єм, і осядете в ньому, бо Я дав вам той Край на власність.
நீங்கள் அந்நாட்டை உங்கள் உரிமையாக்கி அங்கே குடியேறுங்கள். ஏனெனில் அந்நாட்டை நீங்கள் உரிமையாக்கும்படி நான் அதை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.
54 І ви заволодієте тим Краєм жеребко́м за вашими родами: числе́нному збі́льшите власність його, а малому зме́ншите власність його, — де вийде йому жеребо́к, туди йому буде, за племенами ваших батьків бу́дете володіти собі.
நீங்கள் அந்நாட்டை உங்கள் வம்சங்களின் எண்ணிக்கையின்படியே பங்கிடுங்கள். பெரிய குழுவினருக்கு பெரிய உரிமைச்சொத்தையும், சிறிய குழுவினருக்குச் சிறிய உரிமைச்சொத்தையும் கொடுங்கள். சீட்டின்படி எது எவர்களுக்கு விழுகிறதோ அதுவே அவர்களுக்குரியதாகும். உங்கள் முற்பிதாக்களின் கோத்திரங்களின்படியே அதைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்.
55 А якщо ви не виженете ме́шканців того Кра́ю від себе, то будуть ті, кого позоставите з них, колючка́ми в ваших оча́х та те́рнями в ваших бока́х. І будуть вас утискати на тій землі, що на ній ви сидітимете.
“‘ஆனால் அந்நாட்டில் குடியிருப்பவர்களை நீங்கள் வெளியே துரத்திவிடாவிட்டால், நீங்கள் அங்கு விட்டுவிட்டவர்கள், உங்கள் கண்களுக்குக் கூரிய கருக்குகளாகவும், உங்கள் விலாக்களுக்கு முட்களாகவும் இருப்பார்கள். நீங்கள் வாழப்போகும் நாட்டில், அவர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள்.
56 І станеться, — як Я ду́мав був учинити їм, учиню́ те вам“.
அப்பொழுது நான் அவர்களுக்குச் செய்யத் திட்டமிட்டதை உங்களுக்கே செய்வேன் என்றார்.’”