< Наум 2 >
1 На тебе йде розпоро́шувач, — тверди́ні свої стережи́, вигляда́й на дорогу, зміцня́й свої сте́гна, мі́цно скріпи свою поту́гу,
௧சிதறடிக்கிறவன் உன் முகத்திற்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் செய், இடுப்பைக் கெட்டியாகக் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் உறுதிப்படுத்து.
2 бо ве́рне Господь ве́лич Якова, як ве́лич Ізраїля, що їхні спустоши́телі поруйнува́ли, і понищили їхні виноградні галу́зки.
௨வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சைக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், யெகோவா யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரச் செய்வதுபோல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரச் செய்வார்.
3 Щит хоробрих його зачерво́нений, вояки́ в кармази́ні; блищить сталь у день зброє́ння їхнього на колесни́цях, хвилю́ються ра́тища.
௩அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய போர்வீரர்கள் இரத்தாம்பரம் அணிந்து கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்செய்யும் நாளிலே இரதங்கள் மின்னுகிற சக்கரங்களை உடையதாக இருக்கும்; ஈட்டிகள் குலுங்கும்.
4 Колесни́ці шалено по вулицях мчать, по майда́нах гурко́чуть, їхній вид — немов по́лум'я те смолоски́пів, літають вони, як ті бли́скавки.
௪இரதங்கள் தெருக்களில் கடகட என்று ஓடி, வீதிகளில் இடதுபக்கமும் வலதுபக்கமும் வரும்; அவைகள் தீப்பந்தங்களைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாகப் பறக்கும்.
5 Він згадає шляхе́тних своїх, та спіткну́ться вони у ході́ своїй; вони поспішають на мури її, і поста́влена міцно буді́вля обло́ги.
௫அவன் தன் பிரபலமானவர்களை நினைவுகூருவான்; அவர்கள் தங்கள் நடைகளில் இடறி, கோட்டை சுவருக்கு விரைந்து ஓடுவார்கள்; மறைவிடம் ஆயத்தப்படுத்தப்படும்.
6 Брами річо́к відчиня́ються, а пала́та руйнується.
௬ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரண்மனை கரைந்துபோகும்.
7 І постано́влено: буде ого́лена, відведе́ться в поло́н, а рабині її голоси́тимуть, мов ті голу́бки, що ворку́ють на пе́рсах своїх.
௭அவள் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்கள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு, புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள்.
8 І Ніневі́я — як са́джавка во́дна, що во́ди її відплива́ють. „Стійте, стійте!“Та немає ніко́го, хто б їх заверну́в!
௮நினிவே ஆரம்பகாலமுதல் தண்ணீர் நிறைந்த குளம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை.
9 Розграбо́вуйте срі́бло, розграбо́вуйте золото, — немає кінця нагото́вленому, багатству кошто́вних рече́й.
௯வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; செல்வத்திற்கு முடிவில்லை; விரும்பப்படத்தக்க சகலவித பொருட்களும் இருக்கிறது.
10 Зни́щення та зруйнува́ння й спусто́шення буде. І серце розто́питься, і но́ги дрижа́тимуть, і ко́рчі по кри́жах усіх, а обличчя їх всіх на черво́но розпа́ляться.
௧0அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லோருடைய முகங்களும் கருகிப்போகிறது.
11 Де лего́вище ле́вів, і для левчукі́в пасови́ще, що там ходив лев та леви́ця, та левеня́, — і ніхто не лякав?
௧௧சிங்கங்களின் குடியிருப்பு எங்கே? பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே? கிழச்சிங்கமாகிய சிங்கமும், சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் வசிக்கிற இடம் எங்கே?
12 Лев грабував для своїх молодят і душив для леви́ць своїх він, і пече́ри свої перепо́внював здо́биччю, а лі́гва свої — награбо́ваним.
௧௨சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைக் கொன்று, தன் பெண் சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று, இரைகளினால் தன் கெபிகளையும், கொன்றுபோட்டவைகளினால் தன் இருப்பிடங்களையும் நிரப்பிற்று.
13 Ось Я проти тебе, — говорить Господь Савао́т, — і попалю́ серед диму твої коле́сни́ці, а твоїх левчукі́в поїсть меч, і повитина́ю з землі грабува́ння твої, і вже не почується голос твого посла.
௧௩இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களை எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களை அழிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையை தேசத்தில் இல்லாமல்போகச் செய்வேன்; உன் பிரதிநிதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.