< Ісус Навин 8 >

1 І сказав Господь до Ісуса: „Не бійся й не лякайся, — візьми з собою ввесь військо́вий люд, та й устань, піди на Ай. Подивися: ось дав Я в руку твою айського царя, і наро́д його, і місто його, і край його.
அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த மக்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயீ பட்டணம்வரைக்கும் போ, இதோ, ஆயீயின் ராஜாவையும். அவனுடைய மக்களையும் அவனுடைய பட்டணத்தையும் அவனுடைய நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
2 І зробиш Аєві, і цареві його, як ти зробив Єрихонові та цареві його, — тільки здо́бич його та худобу його заберете собі. Постав собі за́сідку на місто позад нього“.
நீ எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததுபோல, ஆயீக்கும் அதின் ராஜாவுக்கும் செய்யக்கடவாய்; அதில் கொள்ளையிட்டப் பொருட்களையும் மிருகஜீவன்களையும் உங்களுக்குக் கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம், பட்டணத்திற்குப் பின்புறத்திலே இரகசியப்படையை வை என்றார்.
3 І встав Ісус та ввесь військо́вий люд, щоб іти на Ай. І вибрав Ісус тридцять тисяч чоловіка сильних воякі́в, та й послав їх уночі.
அப்பொழுது ஆயீயின் மீது படையெடுத்துப் போக, யோசுவாவும் எல்லா யுத்தமனிதர்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரர்களான முப்பதாயிரம்பேரைத் தேர்ந்தெடுத்து, இரவிலே அவர்களை அனுப்பி,
4 І він наказав їм, говорячи: „Глядіть, чатуйте на Ай з-позад міста, — не віддаляйтеся дуже від міста, і будьте всі готові.
அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: நீங்கள் பட்டணத்தின் பின்புறத்திலே ஒளிந்திருக்கவேண்டும்; பட்டணத்தைவிட்டு வெகுதூரம் போகாமல், எல்லோரும் ஆயத்தமாக இருங்கள்.
5 А я та ввесь народ, що зо мною, при́йдемо до міста. І станеться, коли вийдуть навпере́йми нам, як перше, то ми втечемо перед ними.
நானும் என்னோடு இருக்கிற எல்லா மக்களும் பட்டணத்திற்கு அருகில் நெருங்கி வருவோம்; அவர்கள் முன்புபோல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்.
6 І вийдуть вони за нами, а ми відтя́гнемо їх від міста, бо скажуть: Вони втікають перед нами, як перше. І ми втечемо перед ними.
அப்பொழுது அவர்கள்; முன்பு போலவே நமக்கு முன்பாக தோற்று ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி, எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு வெளியே வரப்பண்ணும்வரைக்கும், அவர்களுக்கு முன்பாக ஓடுவோம்.
7 А ви встанете з за́сідки, і здобудете те місто, і Господь, Бог ваш, дасть його вам у вашу руку.
அப்பொழுது நீங்கள் மறைவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்களுடைய தேவனாகிய யெகோவா அதை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்.
8 І станеться, як ви ві́зьмете місто, то підпа́лите місто огнем, — зробите за Господнім словом. Глядіть, — я вам наказав“.
நீங்கள் பட்டணத்தைப் பிடிக்கும்போது, அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள்; யெகோவாவுடைய சொற்படி செய்யுங்கள்; இதோ, நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் என்று சொல்லி,
9 І послав їх Ісус, і пішли вони на за́сідку, та й засіли між Бет-Елом та між Аєм, із за́ходу від Аю. А Ісус ночував тієї ночі серед наро́ду.
அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவே, ஆயீக்கு மேற்கில் ஒளிந்திருந்தார்கள்; யோசுவா அன்று இரவு மக்களுடன் தங்கினான்.
10 І встав Ісус рано вранці, і перегля́нув наро́д, і пішов він та Ізраїлеві старші́ перед наро́дом до Аю.
௧0அதிகாலையில் யோசுவா எழுந்திருந்து, மக்களை எண்ணிப்பார்த்து, இஸ்ரவேலின் மூப்பர்களோடு மக்களுக்கு முன்பே நடந்து, ஆயீயின் மேல் படையெடுத்தான்.
11 А всі вояки́, що були з ним, пішли під го́ру, і підійшли, і прийшли навпроти того міста, і таборува́ли з пі́вночі Аю, а між ним та між Аєм була долина.
௧௧அவனோடு இருந்த யுத்த மக்கள் எல்லோரும் நடந்து, பட்டணத்திற்கு அருகே வந்துசேர்ந்து, ஆயீக்கு வடக்கே முகாமிட்டார்கள்; அவர்களுக்கும் ஆயீக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
12 І взяв він коло п'яти тисяч чоловіка, і поставив їх як за́сідку між Бет-Елом та між Аєм з за́ходу міста.
௧௨அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களை பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவே பட்டணத்திற்குமேலே இரகசியப்படையாக வைத்தான்.
13 І розклав народ, увесь та́бір, що з пі́вночі міста, а задню частину його з за́ходу міста. І прийшов Ісус тієї ночі на сере́дину долини.
௧௩பட்டணத்திற்கு வடக்கே இருந்த எல்லா சேனையையும் பட்டணத்திற்கு மேற்கே ஒளிந்திருக்கிறவர்களையும் ஒழுங்குசெய்தபின்பு, யோசுவா அன்று இரவு பள்ளத்தாக்கிற்குப் போயிருந்தான்.
14 І сталося, як побачив це айський цар, то люди того міста поспішили, і встали рано, і вийшли навпере́йми Ізраїля на бій, він та ввесь його наро́д, на озна́чений час перед стен. А він не знав, що є за́сідка на нього з-позад міста.
௧௪ஆயீயின் ராஜா அதைக் கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனிதர்களாகிய அவனுடைய எல்லா மக்களும் துரிதப்பட்டு, அதிகாலையிலே குறித்த வேளையில் இஸ்ரவேலர்களுக்கு எதிரே யுத்தம்செய்ய சமவெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்திற்குப் பின்னாலே தன்னைத் தாக்குவதற்காக இரகசியப்படை வைக்கப்பட்டிருக்கிறதை அவன் அறியாமலிருந்தான்.
15 А Ісус та ввесь Ізраїль удавали, ніби побиті перед ними, і втікали дорогою на пустиню.
௧௫யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்திரத்திற்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள்.
16 А ті скликали ввесь народ, що в місті, щоб гнатися за ними. І гналися вони за Ісусом, і віддали́лися від міста.
௧௬அப்பொழுது பட்டணத்திற்குள் இருந்த மக்கள் எல்லோரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தை விட்டுப் புறப்பட்டார்கள்.
17 І не полишився ніхто в Аї та в Бет-Елі, хто не погнався б за Ізраїлем. І позоста́вили вони місто відчи́неним, та й гналися за Ізраїлем.
௧௭ஆயீயிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலர்களைப் பின்தொடராத மனிதன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.
18 І сказав Господь до Ісуса: „Простягни́ списа, що в руці твоїй, до Аю, бо в руку твою його віддам“. І простягну́в Ісус списа́, що в руці його, до міста.
௧௮அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயீக்கு நேராக நீட்டு; பட்டணத்தை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்; அப்படியே யோசுவா தன் கையில் இருந்த ஈட்டியைப் பட்டணத்திற்கு நேராக நீட்டினான்.
19 А за́сідка швидко встала зо свого місця, та й побігли, як він простягну́в свою руку. І ввійшли вони до міста, і здобули́ його, і поква́пилися та й підпалили те місто огнем.
௧௯அவன் தன் கையை நீட்டினவுடனே, ஒளிந்திருந்தவர்கள் வேகமாகத் தாங்கள் இருந்த இடத்திலிருந்து எழும்பி ஓடி, பட்டணத்திற்கு வந்து, அதைப் பிடித்து, தீவிரத்தோடு பட்டணத்தைத் தீக்கொளுத்தினார்கள்.
20 І оберну́лися айські люди позад себе, та й побачили, аж ось знявся дим міста до неба! І не було в них сили, щоб утікати ані сюди, ані туди... А народ, що втікав до пустині, обернувся на тих, хто гнався за ним.
௨0ஆயீயின் மனிதர்கள் பின்நோக்கிப் பார்த்தபோது, இதோ, பட்டணத்தின் புகை ஆகாயத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமல்போனது; வனாந்திரத்திற்கு ஓடின மக்கள் தங்களைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கித் திரும்பினார்கள்.
21 А Ісус та ввесь Ізраїль, як побачили, що за́сідка здобула́ те місто, і що знявся дим із міста, то вернулися, та й повбивали айських людей.
௨௧ஒளிந்திருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலர்களும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயீயின் மனிதர்களை முறியடித்தார்கள்.
22 А ті повихо́дили з міста навпере́йми них, і опинилися серед Ізраїля: ті з цього боку, а ті з того. І повбивали їх, так що не позоста́лося з них нікого, хто врятувався б чи втік.
௨௨பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இந்தப்பக்கத்திலும் சிலர் அந்தப்பக்கத்திலும் இருந்த இஸ்ரவேலர்களின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகவே, அவர்களில் ஒருவரும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு,
23 А айського царя вони схопи́ли живого, і привели́ його до Ісуса.
௨௩ஆயீயின் ராஜாவை உயிரோடு பிடித்து, யோசுவாவிடம் கொண்டுவந்தார்கள்.
24 І сталося, як покінчи́в Ізраїль забивати всіх айських ме́шканців на полі, у пустині, що гнали їх по ній, і попа́дали вони від ві́стря меча аж до останнього, то вернувся ввесь Ізраїль до Аю, і перебили його ві́стрям меча.
௨௪இஸ்ரவேலர்கள் வனாந்திரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயீயின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் அழியும்வரை பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் ஆயீக்குத் திரும்பி, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்.
25 І було всіх, що впали того дня, від чоловіка й аж до жінки, дванадцять тисяч, усі айські ме́шканці.
௨௫அந்த நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயீயின் மனிதர்கள் எல்லோரும் 12,000 பேர் மரித்தார்கள்.
26 А Ісус не опуска́в своєї руки, що витягнув зо списом, аж поки не вчинив закля́ттям усіх айських ме́шканців.
௨௬ஆயீயின் குடிகளையெல்லாம் அழித்துத் தீரும்வரைக்கும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.
27 Тільки худобу та здобич того міста позабирав собі Ізра́їль за словом Господа, що наказав був Ісусові.
௨௭யெகோவா யோசுவாவிற்குக் கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தில் கொள்ளையிட்டவைகளையும் மட்டும் இஸ்ரவேலர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
28 І спалив Ісус Ай, і поклав його вічною руїною, пусткою, і так є аж до цього дня.
௨௮யோசுவா ஆயீயைச் சுட்டெரித்து, அதை இந்த நாள்வரைக்கும் இருக்கிறபடி என்றைக்கும் பாழாய்க்கிடக்கும் மண்மேடாக்கி,
29 А айського царя повісив на дереві аж до вечі́рнього ча́су. А коли сонце захо́дило, Ісус наказав, і зняли його трупа з того дерева та й кинули його до входу брами міста. І наки́дали над ним велику камінну могилу, що стоїть аж до цього дня.
௨௯ஆயீயின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கி, மாலைநேரம்வரைக்கும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் மறைந்தபின்பு யோசுவா அவனுடைய உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணத்தின் வாசலில் போட்டு, இந்த நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.
30 Тоді Ісус збудував жертівника для Господа, Бога Ізраїлевого, на горі Ева́л,
௩0அப்பொழுது யோசுவா: யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிட்டபடியும், மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியும், ஏபால் மலையில் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு இரும்பு ஆயுதம் படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
31 як наказав був Мойсей, раб Господній, Ізраїлевим синам, як написано в книзі Мойсеєвого Зако́ну, — же́ртівника з ці́лого каміння, що над ними не підіймали заліза. І прине́сли на ньому цілопа́лення для Господа, і прино́сили мирні жертви.
௩௧அதின்மேல் யெகோவாவுக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
32 І він написав там на тих каміннях ві́дписа Мойсеєвого Зако́ну, що той написав перед Ізраїлевими синами.
௩௨இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் எழுதினான்.
33 А ввесь Ізраїль, і старші́ його, і урядники, і су́дді його, стояли з цього й з того боку ковчегу навпроти священиків-Левитів, що носять ковчега Господнього заповіту, як прихо́дько, так і тубі́лець, — половина його навпроти гори Ґарізі́м, а половина його навпроти гори Ева́л, як наказав був Мойсей, раб Господній, благословляти Ізраїлів народ найперше.
௩௩இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிப்பதற்காக யெகோவாவின் தாசனாகிய மோசே முதலில் கட்டளையிட்டிருந்தபடியே, இஸ்ரவேலர்கள் எல்லோரும், அவர்களுடைய மூப்பர்களும், அதிகாரிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்தவர்களும் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களான ஆசாரியர்களுக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிப்பேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிப்பேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்.
34 А по́тім він читав усі слова́ того Зако́ну, благослове́ння та прокля́ття, усе так, як написано в Зако́ні.
௩௪அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய எல்லா வார்த்தைகளையும் வாசித்தான்.
35 Не було сло́ва зо всього, що наказав був Мойсей, чого не читав би Ісус перед усіма́ зборами Ізраїля, і жіно́к, і дітей, і прихо́дька, що ходить серед них.
௩௫மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா இஸ்ரவேலின் முழுச்சபைக்கும், பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் வாழ்ந்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையையும் விடாமல் வாசித்தான்.

< Ісус Навин 8 >