< Єремія 45 >
1 Слово, що говорив пророк Єремія до Баруха, Нерійїного сина, коли той писав ці слова́ в книзі з Єреміїних уст, за четвертого року Єгоякима, сина Йосіїного, царя Юдиного, кажучи:
௧யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் அரசாட்சியின் நான்காம் வருடத்தில் நேரியாவின் மகனாகிய பாருக் இந்த வசனங்களை எரேமியாவின் வாய் சொல்ல ஒரு புத்தகத்தில் எழுதும்போது, எரேமியா தீர்க்கதரிசி அவனிடத்தில் பேசி,
2 „Так говорить Господь, Бог Ізраїлів, про тебе, Бару́ху:
௨பாருக்கே, உன்னைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்,
3 Ти сказав був: „Ой горе мені, бо додав Господь сму́тку до бо́лю мого! Я змучивсь зідха́нням своїм, і не знайшов відпочинку“!
௩நீ: இப்பொழுது எனக்கு ஐயோ, யெகோவா என் வியாதியை சஞ்சலத்தால் பெருகச்செய்தார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதேபோனேன் என்று சொன்னாய் என்கிறார்.
4 Так скажеш йому: Так говорить Господь: Ось Я поруйную, що Я збудував, а що Я насади́в, те Я вирву, також усю землю Свою.
௪இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழு தேசத்திற்கும் இப்படியே நடக்கும்.
5 А ти ось шукаєш для себе великого. Не шукай, бо ось Я наведу́ зло на кожне тіло, — говорить Господь, — а тобі дам душу твою за здо́бич на всіх тих місцях, де́ ти будеш ходити!“
௫நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ, மாம்சமான அனைவர்மேலும் தீங்கை வரச்செய்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்; ஆனாலும், நீ போகும் எல்லா இடங்களிலும் உன் உயிரை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று அவனுடன் சொல் என்றார்.