< Ісая 21 >

1 Пророцтво про пустиню надмо́рську. Як но́сяться бурі на пі́вдні, так ворог іде із пустині, із кра́ю страшно́го.
கடல் வனாந்திரத்தைக்குறித்த செய்தி. சுழல் காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்து வருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்திரத்திலிருந்து அது வருகிறது.
2 Виді́ння грізне́ мені явлене: Грабує грабіжник, пусто́шник пусто́шить. Прийди, о Еламе, Мадай обложи, — усяким зідха́нням зробив Я кінець“.
பயங்கரமான காட்சி எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம்செய்து, பாழாக்குகிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றுகைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியச்செய்தேன்.
3 Тому́ то напо́внилися мої сте́гна тремті́нням, і болі схопи́ли мене, немов породі́льні ті болі. Я скривився від того, що чув, я від ба́ченого перестра́шивсь.
ஆகையால், என் இடுப்பு மகாவேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளைபெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைச்சல்கொண்டு, கண்டதினால் கலங்கினேன்.
4 Забилося серце моє, тремті́ння напало мене несподі́вано; вечір розкоші моєї змінився мені на страхі́ття.
என் இருதயம் திகைத்தது; பயம் என்னை அதிர்ச்சியடையச் செய்தது; எனக்கு இன்பம் தந்த இரவு பயங்கரமானது.
5 Поставлений стіл, килима́ми накрито, їсться та п'ється. Уставайте, прави́телі, щити́ намасті́ть!
பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், காவலாளியை அமர்த்துங்கள், சாப்பிடுங்கள், குடியுங்கள், பிரபுக்களே, எழுந்து கேடயங்களுக்கு எண்ணெய் பூசுங்கள்.
6 Бо до мене сказав Господь так: „Іди, вартово́го постав, — що́ побачить, нехай донесе́“.
ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிப்பதற்காக காவலாளியை வை என்றார்.
7 І коли він похо́да побачив, по парі їздці́в, поїзд ослів, поїзд верблю́дів, — і прислу́хується він з увагою, із увагою пильною.
அவன் ஒரு இரதத்தையும், ஜோடி ஜோடியாகக் குதிரைவீரனையும், ஜோடி ஜோடியாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு, மிகுந்த கவனமாகக் கவனித்துக்கொண்டே இருந்து:
8 І він крикнув, як лев: „Я за́вжди стою́ вдень на ва́рті, о Господи, і стою на сторо́жі своїй усі но́чі!“
ஆண்டவரே, நான் பகல்முழுவதும் என் காவலிலே நின்று, இரவுமுழுவதும் நான் என் காவலிடத்திலே தங்கியிருக்கிறேன் என்று சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான்.
9 Аж ось іще по́хід мужів, по двоє їздці́в. І він відповів та сказав: „Упав, упав Вавило́н, а всі ста́туї бо́гів його порозбивані о́б землю!“
இதோ, ஒரு ஜோடி குதிரை பூட்டப்பட்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற ஒரு மனிதன் வருகிறான்; பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் தெய்வங்களுடைய சிலைகளையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார் என்று மறுமொழி சொல்கிறான்.
10 О мій помоло́чений ти, сину то́ку мого! Я звістив вам, що чув був від Господа Саваота, Бога Ізраїлевого.
௧0என் போரடிப்பின் தானியமே, என் களத்தின் கோதுமையே, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரால் நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவித்தேன்.
11 Пророцтво про Думу. До мене кричить із Сеїру: „Сто́роже, яка пора ночі? Сто́роже, яка пора ночі?“
௧௧தூமாவுக்கு செய்தி. சேயீரிலிருந்து என்னை நோக்கி: காவலாளியே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக்கேட்க;
12 А сторож сказав: „Настав ра́нок, а все ж іще ніч. Якщо ви пита́тимете, то питайте та зно́ву прийдіть!“
௧௨அதற்கு காவலாளி: விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதிருந்தால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்கிறான்.
13 Пророцтво про Арабію. У лісі в степу́ ночува́ти, ви будете карава́ни деданів.
௧௩அரேபியாவுக்குச் செய்தி. திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரேபியாவின் காடுகளில் இரவுதங்குவீர்கள்.
14 Мешканці Теманського кра́ю, винесіть воду назу́стріч для спра́гненого, втікача́ зустрічайте із хлібом!
௧௪தேமா தேசத்தின் குடிமக்களே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள்.
15 Бо втекли́ вони перед меча́ми, перед голим мече́м, і перед натя́гненим луком, і перед тягото́ю війни.
௧௫அவர்கள், பட்டயங்களுக்கும், உருவின பட்டயத்திற்கும், நாணேற்றின வில்லுக்கும், போரின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள்.
16 Бо до мене Господь сказав так: Ще за рік, як рік на́ймита, і вся слава Кедару покі́нчиться.
௧௬ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருடங்களுக்கு இணையான ஒரே வருடத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் விட்டுப்போகும்.
17 А понадто полишиться невелике число лу́чників з ли́царів кеда́рських синів, бо Господь, Бог Ізраїлів, це говорив.
௧௭கேதார் மக்களாகிய பராக்கிரம வில்வீரரின் எண்ணிக்கையில் மீதியானவர்கள் கொஞ்சப் பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா இதை உரைத்தார்.

< Ісая 21 >